||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்|
அர்ஜுனன் ஆச்சரியத்தோடு பார்த்தான். ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு ஸ்ரீமகாவிஷ்ணு சயனித்திருந்தார். அவருடைய உடல் பிரகாசித்தது. அவர் நீல நிறமாக இருந்தார். மஞ்சள் பட்டாடை அணிந்திருந்தார். அவருடைய முகம் பிரசன்னமாக இருந்தது. அவருக்கு அழகிய நீண்ட கண்கள் இருந்தன. கிருஷ்ணர் மகாவிஷ்ணுவை மிக்க மரியாதையுடன் வணங்கினார். அர்ஜுனனும் அவர்முன் கீழே விழுந்து வணங்கினான்.
இருவரும் கைகளைக் கூப்பியபடி மகாவிஷ்ணுவின் முன்னால் நின்றார்கள். முகத்தில் புன்முறுவல் தவழ, மகாவிஷ்ணு அவர்களைப் பார்த்து, "அர்ஜுனா! நீங்கள் என் தேகத்தின் அம்சங்கள். கிருஷ்ணா! நீ ஏன் மறு உருவமே. நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் உலகில் பிறந்து இருக்கிறீர்கள். உங்கள் இருவரையும் இங்கே கொண்டு வருவதற்காகத் தான் நான் இப்படிச் செய்தேன். அந்தணரின் குழந்தைகள் இங்கேதான் உள்ளன. எடுத்துச் செல்லுங்கள்" என்றார்.
மகாவிஷ்ணுவின் வார்த்தைகளைக் கேட்ட இருவரும் அவரைத் திரும்பத் திரும்ப வணங்கினார்கள். அந்தணரின் குழந்தைகளை விஷ்ணு கொடுக்க, குழந்தைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் பூலோகம் திரும்பினார்கள்.
குழந்தைகளைத் திரும்பப் பெற்றதும் அந்தணர் அடைந்த சந்தோஷம் சொல்ல முடியாது. அர்ஜுனன் தன்னுடைய பராக்கிரமம், காண்டீவம், பாணங்கள் ஆகியவை எல்லாம் கிருஷ்ணரின் அருள் இல்லாவிட்டால் ஒன்றும் இல்லை என்று அறிந்து கொண்டார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment