About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 29 January 2024

திவ்ய ப்ரபந்தம் - 79 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 79 - பத்மநாபா! சப்பாணி கொட்டு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

புட்டியிற் சேறும்* புழுதியும் கொண்டு வந்து* 
அட்டி அமுக்கி* அகம் புக்கு அறியாமே* 
சட்டித் தயிரும்* தடாவினில் வெண்ணெயும் உண்* 
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி
பற்பநாபா! கொட்டாய் சப்பாணி|

  • புட்டியில் - இடுப்பில் படிந்திருக்கும் 
  • சேறும் - சேற்றையும் 
  • புழுதியும் - புழுதி மண்ணையும் 
  • கொண்டு வந்து - கொண்டு வந்து 
  • அட்டி - என் மேல் இட்டு
  • அமுக்கி - அழுத்தி உறைக்கப் பூசி
  • அகம் புக்கு - வீட்டினுள் புகுந்து 
  • அறியாமே - யாருக்கும் தெரியாமல் 
  • சட்டித் தயிரும் - சட்டியில் வைத்திருக்கும் தயிரையும் 
  • தடாவினில் - பானைகளிலிருக்கிற 
  • வெண்ணெயும் - வெண்ணெயையும் 
  • உண் - உண்ணுகின்ற 
  • பட்டி - மாட்டுத் தொழுவத்தில் மேய்ந்து திரியும் 
  • கன்றே! - கன்று போன்றவனே! 
  • கொட்டாய் சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • பற்பனாபா! - ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக் கொண்ட நாபியை உடையவனே! 
  • கொட்டாய் சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

விளையாடுவதால் ஏற்பட்ட, உடம்பிலேறிய சேறும், மண் புழுதியும் என் மேல் அப்பி விட்டு, எனக்குத் தெரியாமல் தப்பி உள்ளே சென்று சட்டியிலுள்ள தயிரையும், பானையிலுள்ள வெண்ணையையும் உண்டு மாட்டுத் தொழுவத்தில் மேயும் கன்னுகுட்டியைப் போன்றவனே, கைகளைக் கொட்டவும். தாமிரைப் பூவை நாபியிலுடையவனே (பற்பநாபா), உன் திருக்கைகளைக் கொட்ட வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment