About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 29 January 2024

108 திவ்ய தேசங்கள் - 022 - திருவெள்ளியங்குடி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

022. திருவெள்ளியங்குடி (கும்பகோணம்)
இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 1338 - 1347  - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

கால் அளவும் போதாக் கடல் ஞாலத் தோர் கற்ற*
நூல் அளவே அன்றி நுவல்வார் ஆர் கோலப்*
பரு வெள்ளி அம் குடியான் பாதக ஊண் மாய்த்த*
திரு வெள்ளியங் குடியான் சீர்*

  • கோலம் பரு வெள்ளி அம் குடியான் - அழகிய பெரிய கைலாசம் என்னும் வெள்ளி மலையை வாழும் இடமாக உடையனான சிவபிரானது
  • பாதகம் ஊண் - பிரமஹத்தியாகிய பாவத்தினால் நேர்ந்த இரந்துண்ணுதலை
  • மாய்த்த - ஒழித்தருளிய
  • திருவெள்ளியங்குடியான் - திருவெள்ளியங்குடி என்னும் தலத்தில் எழுந்தருளிய எம்பெருமானது
  • சீர் - சிறப்பை
  • கால் அளவும் போதா கடல் ஞாலத்தோர் - திரிவிக்கிரம அவதார காலத்தில் எம்பெருமானது ஒரு திருவடியினால் அளவிடுதற்கும் போதாத கடல் சூழ்ந்த நில உலகத்தில் உள்ளவர்களில்
  • நூல் அளவே அன்றி - கற்ற தாம் படித்தறிந்த நூல்களின் அளவாகக் கூறுவதே அல்லாமல்
  • நுவல்வார் - முழுதும் உணர்ந்து சொல்ல வல்லவர்
  • ஆர் - யாவருளர்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment