||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 9
ஈஸ்²வரோ விக்ரமீ தந்⁴வீ
மேதா⁴வீ விக்ரம: க்ரம:|
அநுத்தமோ து³ராத⁴ர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிர் ஆத்மவாந்:||
- 75. ஈஸ்²வரோ - அனைத்துக்கும் தலைவர். சர்வ வல்லமை படைத்தவர்.
- 76. விக்ரமீ - மிக்க வலிமை உடையவர். தைரியமானவர்.
- 77. தந்⁴வீ - சாரங்கம் என்னும் வில்லை உடையவர்.
- 78. மேதா⁴வீ - அனைத்தும் அறிந்தவர். சிறந்த புத்திசாலி.
- 79. விக்ரமஹ் - கருட வாகனன். முன்னேற்றங்களைக் கொண்டவர்.
- 80. க்ரமஹ - அளவற்ற ஐஸ்வர்யங்களால் செழிப்புற்றவர். பிரபஞ்சத்தில் ஒழுங்கை பராமரிக்கிறார்.
- 81. அநுத்தமோ - தனக்கு மேம்பட்டவர் இல்லாதவர்.
- 82. து³ராத⁴ர்ஷஹ் - கலக்க முடியாதவர். வெல்ல முடியாதவர்.
- 83. க்ருதஜ்ஞஹ் - சேதநர்களால் செய்யப்படும் புண்ணிய பாபரூபமான செயல்கள் அனைத்தையும் அறிபவர். தனது பக்தர்களுக்கு நன்றியுள்ளவர்.
- 84. க்ருதிர் - செய்விப்பவர். அனைத்து செயல்களுக்கும் பின்னால் உள்ள சக்தி.
- 85. ஆத்மவாந்நு - எல்லா ஆன்மாக்களையும் தன்னுடைய ஆன்மாவாக உடையவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment