About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 1 August 2024

திவ்ய ப்ரபந்தம் - 119 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 119 - பார்த்தன் தேர்மேல் நின்ற கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

மலை புரை தோள் மன்னவரும்* மாரதரும் மற்றும்* 
பலர் குலைய* நூற்று வரும் பட்டு அழியப்* 
பார்த்தன் சிலை வளையத்* திண் தேர் மேல் முன் நின்ற* 
செம் கண் அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)

  • மலை புரை - மலையை ஒத்த
  • தோள் - தோள்களை உடைய
  • மன்னவர் - அரசர்களான
  • மாரதரும் - மஹா ரதரும் (பீஷ்மாதிகள்- ஆத்மாநம் -அஸ்வங்களை ரக்ஷித்து போர் செய்வார்)
  • மற்றும் பலரும் - மற்றும் பலவகை அரசர்களும்
  • குலைய - அழியவும்
  • நூற்றுவரும் - (துர்யோதநாதிகள்) நூறு பேரும்
  • பட்டு - மரணமடைந்து
  • அழிய - வேர் அற்ற மரம் போல் உருவம் இழிந்து போகவும்
  • பார்த்தன் - அர்ஜுனனுடைய
  • சிலை - காண்டீவமென்னும் வில்
  • வளைய - வளையவும் (நூற்றுவரை வெல்வதை விட ஐவரை வேள்வித்ததே பெரிய விஷயம்)
  • திண் தேர் மேல் - அந்த அர்ஜுனனுடைய வலிய தேரின் மேல் (பார்த்த சாரதி இருப்பதாலேயே வந்த திண்மை உண்டே)
  • முன் நின்ற - (ஸாரதியாய்) முன் புறத்தில் நின்ற
  • செம் கண் - (வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை உடையனாய்
  • அல வலை - புகழ்பவனான கண்ணன் (அர்ஜுநனுடைய வெற்றியைப் பிதற்றுவது போல் ஜயத்தையே சொல்லி புகழுமவன் வெல்ல வைக்க ஸ்ரீ கீதையை வெளியிட்டு அருளினவன்)
  • வந்து அப் பூச்சி காட்டுகின்றான்- அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்;
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

மலைக்கு சமமான புஜ பலத்தையுடைய மஹாரதர் என்ற அரசனையும் மற்றும் பல அரசர்களைக் கொன்றும், துர்யோதனாதிகள் நூறு போரையும் உரு தெரியாமல் அழித்தும், அர்ஜுனனுடைய காண்டீவமென்னும் வில் வளைய அவனுடைய வலிமையான தேரில் முன்புறம் தேரோட்டியாக நின்றும் அர்ஜுனனைப் புகழ்பவனான சிவந்த கண்களையுடைய கண்ணன், ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment