About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 April 2024

திவ்ய ப்ரபந்தம் - 110 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 110 - கொத்துத் தலைவனை அழித்த அச்சுதன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

கத்தக் கதித்துக்* கிடந்த பெருஞ் செல்வம்* 
ஒத்துப் பொருந்திக் கொண்டு* உண்ணாது மண் ஆள்வான்*
கொத்துத் தலைவன்* குடி கெடத் தோன்றிய* 
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்* 
ஆயர்கள் ஏறு என் புறம் புல்குவான்|

  • கத்தக் கதித்து கிடந்த - மிகவும் திரண்டு கிடந்த
  • பெருஞ்செல்வம் - அளவற்ற ஐஸ்வர்யத்தை
  • ஒத்து - தன் பந்துக்களான பாண்டவர்களோடு ஒத்து
  • பொதிந்து கொண்டு - மனம் பொருந்தி இருக்க
  • உடலால் ஒத்து- மனசால் ஏற்றுக் கொண்டு
  • உண்ணாது - அனுபவித்து உண்ணாமல்
  • மண் - பூமியை
  • ஆள்வான் - தான் அத்விதீயனாய் ஆள வேணுமென்று நினைத்தவனான
  • கொத்து தலைவன் - தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன்
  • குடி கெட - தன் குடும்பத்தோடு அழியும் படி
  • தோன்றிய - திருவவதரித்த
  • அத்தன் - என் பெருமான்
  • வந்து - ஓடி வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • ஆயர்கள் ஏறு - இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான்
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

மிகுந்த செல்வமுடையவனாக இருந்தும், தன் பந்துக்களுடன் கூடி அச் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், பூமி உள்பட, எல்லாவற்றையும் தானே ஆள நினைத்த துர்யோதனனை குடும்பத்தோடு அழிப்பதற்காக திருவவதரித்த கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! இடயர்களின் தலைவன், என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment