||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.5
த்³ருஷ்ட் வாநு யாந்தம் ருஷி மாத்மஜம் அப்ய நக்³நம்
தே³வ்யோ ஹ்ரியா பரித³ து⁴ர்ந ஸுதஸ்ய சித்ரம்|
தத்³ வீக்ஷ்ய ப்ருச்ச²தி முநௌ ஜக³ து³ஸ்த வாஸ்தி
ஸ்த்ரீ பும்பி⁴தா³ ந து ஸுதஸ்ய விவிக்க த்³ருஷ்டே:||
- ஆத்மஜம் - பிள்ளையை
- அநு யாந்தம் - பின்தொடர்ந்து செல்லுகின்ற
- ருஷிம் த்³ருஷ்ட் வா - வியாஸ மஹரிஷியைப் பார்த்து
- அக்³நம் அபி - வியாஸர் ஆடையை உடுத்தியவராய் இருந்த போதிலும்
- தே³வ்யோ - நீராடும் அப்ஸர ஸ்திரீகள்
- ஹ்ரியா - வெட்கத்தால் ஆடைகளை
- பரித³து⁴ர் - உடுத்திக் கொண்டனர்
- ஸுதஸ்ய ந - அம்மணமாக உள்ள ஸுகர் சென்ற போது அவ்வாறு உடுத்திக் கொள்ளவில்லை
- சித்ரம் தத்³ - அந்த வேடிக்கையைப்
- வீக்ஷ்ய - பார்த்து
- முநௌ ப்ருச்ச²தி - வியாஸர் கேட்ட போது
- ஜக³து³ஸ் - சொன்னார்கள்
- தவ - மிகவும் வயதான தங்களுக்கு
- ஸ்த்ரீ பும்பி⁴தா³ அஸ்தி - ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடுகள் உள்ளது
- விவிக்த த்³ருஷ்டேஹே - ஒரே மனப்பான்மை உடைய
- ஸுதஸ்ய து - உமது பிள்ளைக்கோ
- ந - அந்த பேதமானது ஒரு சிறிதும் இல்லை
எல்லாவற்றையும் துறந்து பற்றற்ற நிலையில் செல்கின்ற மகனான ஸ்ரீ ஸுகரை, அவரது தந்தையும் மரவுரி தரித்திருந்த வயோதிகருமான வியாஸ மகரிஷி மகன் மேல் கொண்ட பாசத்தால் பின்தொடர்ந்து செல்ல, வழியில் நீர்விளையாடல் புரிந்து கொண்டிருந்த அப்சர மகளிர், வியாஸர் ஆடை உடுத்தி இருப்பினும் வெட்கமுற்று தங்களது ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டார்கள். ஆடையின்றி திகம்பரராகச் செல்லும் இளைஞரான ஸ்ரீஸுகரைக் கண்டு அவர்கள் வெட்கப்படவில்லை. இந்த ஆச்சரியத்தைக் கண்ட வியாஸ முனிவர், அவர்களது செய்கைக்குக் காரணம் கேட்க, அந்த அப்சரப் பெண்கள், 'முனிவரே! தங்களுக்கு ஆண், பெண் என்கிற வேறுபாடு காணும் புத்தி உள்ளது. பரிசுத்த வஸ்துவில் பகவானிடம் மட்டுமே நாட்டமுள்ள தங்களது குமாரர் ஸுகருக்கு, எல்லாம் பிரும்ம ஸ்வரூபமாகவே காட்சி தருகிறது' என்று விடையளித்தார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment