||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணர் அர்ஜுனனின் பயணம்|
இனிக் குழந்தை கிடைக்காது என்று தெரிந்ததும், தன் வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தீமூட்டி அதில் குதிக்கத் தயாரானான். அப்பொழுது கிருஷ்ணர் அந்தப் பக்கமாக வந்து, அர்ஜுனனின் காதில் ரகசியமாக, "கவலைப்படாதே அர்ஜுனா! அந்தணரின் எல்லாக் குழந்தைகளும் எங்கே இருக்கின்றன என்று காட்டுகிறேன். இத்தனை நாளும் என்னை வைது கொண்டிருந்த இந்த அந்தணர் சிக்கிரமே என்னை வானளாவ புகழப் போகிறார் பார்" என்றார்.
பிறகு கிருஷ்ணர் அர்ஜுனனைத் தம்முடைய தெய்விக ரதத்தில் ஏற்றிக் கொள்ள அவர்கள் மேற்குத் திசையை நோக்கிச் சென்றார்கள். ஏழு கடல்களையும், ஏழு தீவுகளையும் கடந்தார்கள். கடைசியில் மிகவும் இருட்டான ஒரு பிரதேசத்தை அடைந்தார்கள். அந்த இருட்டில் குதிரைகளால் ரதத்தை இழுக்க முடியவில்லை. உடனே கிருஷ்ணர் தன் கையிலிருந்த சக்கராயுதத்தை எடுத்து விட்டார். அந்தச் சுதர்சன சக்கரம் சூரியனைப் போலப் பிரகாசித்தது. குதிரைகள் திரும்பவும் செல்ல ஆரம்பித்தன.
அந்த ஒளி தாங்காமல் அர்ஜுனன் தன் கண்களை மூடிக் கொண்டான். பிறகு அவன் கண்களைத் திறந்து பார்த்த போது, ரதம் தண்ணீரின் மீது போய்க் கொண்டிருந்ததையும், அலைகள் அடித்துக் கொண்டிருந்ததையும் கண்டான்.
வெகு தூரம் பிரயாணம் செய்தபிறகு, கடலுக்கு அடியில் இருந்த ஒரு நகரை அவர்கள் அடைந்தார்கள். அதன் பெயர் மகாகாலபுரம் என்பது. அங்கே ஒரு பெரிய அரண்மனை இருந்தது. கிருஷ்ணரும் அர்ஜுனனும் அந்த அரண்மனைக்குள் நுழைந்தார்கள். அங்கு இருந்த ஒரு மிகப் பெரிய பயங்கரமான பாம்பைக் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டினார். அது தான் ஆயிரம் தலையுள்ள ஆதிசேஷன்! அதன் தலைகளில் கணக்கற்ற இரத்தின கற்கள் இருந்தன. ஒவ்வொரு கல்லும் ஒரு சூரியனைப் போல் பிரகாசித்தது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment