About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 16 December 2023

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 4

திருமங்கையாழ்வார்

076. திவ்ய ப்ரபந்தம் - 1710 - குன்று குடையாக எடுத்தவன் இடம் இது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
புயல் உறு வரை மழை* பொழிதர மணி நிரை*
மயல் உற வரை குடை* எடுவிய நெடியவர்*
முயல் துளர் மிளை முயல் துள* வள விளை வயல்*
கயல் துளு கணபுரம்* அடிகள் தம் இடமே|

077. திவ்ய ப்ரபந்தம் - 1711 - மலர் மகள் மணாளன் மன்னும் இடம் இது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம்
ஏதலர் நகை செய* இளையவர் அளை வெணெய்*
போது செய்து அமரிய* புனிதர் நல் விரை* 
மலர் கோதிய மதுகரம்* குலவிய மலர் மகள்*
காதல் செய் கணபுரம்* அடிகள் தம் இடமே|

078. திவ்ய ப்ரபந்தம் - 1712 - அண்டமெல்லாம் அளந்தவர் உறைவிடம் இது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தொண்டரும் அமரரும்* முனிவரும் தொழுது எழ*
அண்டமொடு அகல் இடம்* அளந்தவர் அமர் செய்து*
விண்டவர் பட* மதிள் இலங்கை முன் எரி எழ*
கண்டவர் கணபுரம்* அடிகள் தம் இடமே|

079. திவ்ய ப்ரபந்தம் - 1713 - இராமபிரான் இருப்பிடம் இது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மழுவு இயல் படை* உடையவன் இடம் மழை முகில்*
தழுவிய உருவினர்* திருமகள் மருவிய*
கொழுவிய செழு மலர்* முழுசிய பறவை பண்*
எழுவிய கணபுரம்* அடிகள் தம் இடமே|

080. திவ்ய ப்ரபந்தம் - 1714 - யாவரும் கருதும் இடம் கண்ணபுரம் தான்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பரிதியொடு அணி மதி* பனி வரை திசை நிலம்*
எரி தியொடு என இன* இயல்வினர் செலவினர்*
சுருதியொடு அரு மறை* முறை சொலும் அடியவர்*
கருதிய கணபுரம்* அடிகள் தம் இடமே|

081. திவ்ய ப்ரபந்தம் - 1715 - மலர் மகளை மார்பில் கொண்டவன் இடம் இது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
படி புல்கும் அடி இணை* பலர் தொழ மலர் வைகு*
கொடி புல்கு தட வரை* அகலம் அது உடையவர்*
முடி புல்கு நெடு வயல்* படை செல அடி மலர்*
கடி புல்கு கணபுரம்* அடிகள் தம் இடமே|

082. திவ்ய ப்ரபந்தம் - 1716 - மலர் மகள் நிலமகள் மணாளனின் இடம் இது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
புல மனும் மலர்மிசை* மலர் மகள் புணரிய*
நிலமகள் என இன* மகளிர்கள் இவரொடும்*
வல மனு படையுடை* மணி வணர் நிதி குவை*
கல மனு கணபுரம்* அடிகள் தம் இடமே|

083. திவ்ய ப்ரபந்தம் - 1717 - துயரம் நீங்குவர் 
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மலி புகழ் கணபுரம் உடைய* எம் அடிகளை*
வலி கெழு மதிள் அயல்* வயல் அணி மங்கையர்*
கலியன தமிழ் இவை* விழுமிய இசையினொடு*
ஒலி சொலும் அடியவர்* உறு துயர் இலரே|

084. திவ்ய ப்ரபந்தம் - 1718 - மத்ஸ்ய அவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வானோர் அளவும் முது முந்நீர்* வளர்ந்த காலம்* 
வலி உருவின் மீன் ஆய் வந்து வியந்து உய்யக் கொண்ட* 
தண் தாமரைக் கண்ணன்*
ஆனா உருவில் ஆன் ஆயன் * அவனை அம்மா விளை வயலுள்*
கான் ஆர் புறவில் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

085. திவ்ய ப்ரபந்தம் - 1719 - கூர்ம அவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக* அங்கு ஓர் வரை நட்டு*
இலங்கு சோதி ஆர் அமுதம்* எய்தும் அளவு ஓர் ஆமை ஆய்*
விலங்கல் திரியத் தடங் கடலுள்* சுமந்து கிடந்த வித்தகனை *
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

086. திவ்ய ப்ரபந்தம் - 1720 - வராக அவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பார் ஆர் அளவும் முது முந்நீர்* பரந்த காலம்* 
வளை மருப்பின் ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய்* 
எடுத்த ஆற்றல் அம்மானை*
கூர் ஆர் ஆரல் இரை கருதிக்* குருகு பாயக் கயல் இரியும்*
கார் ஆர் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே|

087. திவ்ய ப்ரபந்தம் - 1721 - ந்ருஸிம்ஹ அவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
உளைந்த அரியும் மானிடமும்* உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*
விளைந்த சீற்றம் விண் வெதும்ப* வேற்றோன் அகலம் வெம் சமத்து*
பிளந்து வளைந்த உகிரானைப் * பெருந் தண் செந்நெல் குலை தடிந்து*
களம் செய் புறவில் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

088. திவ்ய ப்ரபந்தம் - 1722 - வாமந அவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தொழும் நீர் வடிவின் குறள் உருவு ஆய்* வந்து தோன்றி மாவலிபால்*
முழுநீர் வையம் முன் கொண்ட* மூவா உருவின் அம்மானை *
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப* ஒருபால் முல்லை முகையோடும்*
கழுநீர் மலரும் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

089. திவ்ய ப்ரபந்தம் - 1723 - பரசுராம அவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வடிவாய் மழுவே படை ஆக* வந்து தோன்றி மூவெழுகால்*
படி ஆர் அரசு களைகட்ட* பாழியானை அம்மானை *
குடியா வண்டு கொண்டு உண்ணக்* கோல நீலம் மட்டு உகுக்கும்*
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

090. திவ்ய ப்ரபந்தம் - 1724 - இராம அவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வையம் எல்லாம் உடன் வணங்க* வணங்கா மன்னனாய்த் தோன்றி*
வெய்ய சீற்றக் கடி இலங்கை* குடிகொண்டு ஓட வெம் சமத்து*
செய்த வெம்போர் நம்பரனைச் * செழுந் தண் கானல் மணம் நாறும்*
கைதை வேலிக் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

091. திவ்ய ப்ரபந்தம் - 1725 - பலராம அவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்* ஒருபால் தோன்றத் தான் தோன்றி*
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர்* விண்பால் செல்ல வெம் சமத்து*
செற்ற கொற்றத் தொழிலானைச் * செந்தீ மூன்றும் இல் இருப்ப*
கற்ற மறையோர் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

092. திவ்ய ப்ரபந்தம் - 1726 - கிருஷ்ண அவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
துவரிக் கனிவாய் நில மங்கை* துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்*
இவரித்து அரசர் தடுமாற* இருள் நாள் பிறந்த அம்மானை *
உவரி ஓதம் முத்து உந்த* ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
கவரி வீசும் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

093. திவ்ய ப்ரபந்தம் - 1727 - இவற்றைப் பாடுங்கள்: பாவங்கள் பறக்கும்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய்* முன்னும் இராமன் ஆய்த்தான் ஆய்* 
பின்னும் இராமன் ஆய்த் தாமோதரன் ஆய்க்* கற்கியும் ஆனான் தன்னை* 
கண்ணபுரத்து அடியேன்* கலியன் ஒலிசெய்த*
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை* செப்ப பாவம் நில்லாவே|

094. திவ்ய ப்ரபந்தம் - 1728 - கண்ணபுரப் பெருமானை அடைந்து நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கைம் மான மத யானை* இடர் தீர்த்த கரு முகிலை*
மைம் மான மணியை* அணி கொள் மரதகத்தை*
எம்மானை எம் பிரானை ஈசனை* என் மனத்துள் அம்மானை* 
அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே|

095. திவ்ய ப்ரபந்தம் - 1729 - பள்ளி கொண்டானை அடைந்து பிழைத்தேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தரு மான மழை முகிலைப்* பிரியாது தன் அடைந்தார்*
வரும் மானம் தவிர்க்கும்* மணியை அணி உருவில்*
திருமாலை அம்மானை* அமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை* 
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே|

096. திவ்ய ப்ரபந்தம் - 1730 - ஸௌரி ராஜனுக்கே நான் உரியவன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
விடை ஏழ் அன்று அடர்த்து* வெகுண்டு விலங்கல் உற*
படையால் ஆழி தட்ட* பரமன் பரஞ்சோதி*
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ்* 
கண்ணபுரம் ஒன்று உடையானுக்கு* அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?

097. திவ்ய ப்ரபந்தம் - 1731 - சர்க்கரைக் கனியாம் கண்ணனை நான் அடைந்தேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி -  நான்காம் பாசுரம்
மிக்கானை* மறை ஆய் விரிந்த விளக்கை* 
என்னுள் புக்கானைப்* புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானைக் கடிகைத்* தடங் குன்றின்மிசை இருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே|

098. திவ்ய ப்ரபந்தம் - 1732 - குடந்தையில் கிடந்தவனே! உன்னை மறவேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி -  ஐந்தாம் பாசுரம்
வந்தாய் என் மனத்தே* வந்து நீ புகுந்த பின்னை*
எந்தாய் போய் அறியாய்* இதுவே அமையாதோ?*
கொந்து ஆர் பைம் பொழில் சூழ்* குடந்தைக் கிடந்து உகந்த மைந்தா* 
உன்னை என்றும்* மறவாமைப் பெற்றேனே|

099. திவ்ய ப்ரபந்தம் - 1733 - மனமே! கண்ணபுரத்தானை மறவாதே
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி -  ஆறாம் பாசுரம்
எஞ்சா வெம் நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேல் என்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே நீ நினையாது* இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
மஞ்சு ஆர் மாளிகை சூழ்* வயல் ஆலி மைந்தனையே|

100. திவ்ய ப்ரபந்தம் - 1734 - நான் ஸௌரி ராஜனை எப்படி மறப்பேன்?
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி -  ஏழாம் பாசுரம்
பெற்றார் பெற்று ஒழிந்தார்* பின்னும் நின்று அடியேனுக்கு*
உற்றான் ஆய் வளர்த்து* என் உயிர் ஆகி நின்றானை*
முற்றா மா மதி கோள் விடுத்தானை* எம்மானை*
எத்தால் யான் மறக்கேன்?* இது சொல் என் ஏழை நெஞ்சே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment