About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 10 March 2024

திவ்ய ப்ரபந்தம் - 98 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 98 - பஞ்சாயுதம் தாங்கியவன் 
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

செங்கமலப் பூவில்* தேன் உண்ணும் வண்டே போல்* 
பங்கிகள் வந்து* உன் பவளவாய் மொய்ப்ப*
சங்கு வில் வாள் தண்டு* சக்கரம் ஏந்திய* 
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ* 
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ!

  • செங்கமலம் - செந்தாமரைப் பூவில்
  • தேன் உண்ணும் - தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
  • வண்டே போல் - வண்டுகளைப் போல
  • பங்கிகள் வந்து - உனது சுருண்ட கூந்தல் மயிர்கள் வந்து
  • உன் பவளம் வாய் – பவளம் போல் செந்நிறமான உனது வாயில்
  • மொய்ப்ப - மொய்த்துக் கொள்ளும்படி
  • வந்து - ஓடி வந்து
  • சங்கு – ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்ம் என்னும் சங்கு
  • வில் – ஸ்ரீ சார்ங்கம் வில்
  • வாள் – ஸ்ரீ நந்தகம் என்னும் வாள்
  • தண்டு – ஸ்ரீ கௌமோதகி என்னும் கதை 
  • சக்கரம் – ஸ்ரீ ஸூதர்சந ஆழ்வானையும்
  • ஏந்திய - பூவேந்தினாற் போல தரித்துக் கொண்டுள்ள
  • அம் கைகளாலே - அழகிய கைகளாலே 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
  • வந்து - ஓடி வந்து
  • ஆர தழுவா - திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

செந்தாமரைப் பூவின் தேனை சுவைக்க கரு வண்டுகள் பூவை மொய்ப்பதைப் போல், கண்ணனே! உன்னுடைய சுருண்ட கூந்தல் உன் பவளம் போலுள்ள வாயில் விழுந்தவாரே, சங்கு, வில், வாள், கதை, சக்கரம் ஏந்திய அக்கைகளால் என்னை அணைக்க வருக! என்னை கட்டியணைக்க ஓடி வர வேண்டும். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment