About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 10 March 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.10

ஸ ஸம்ராட் கஸ்ய வா ஹேதோ: 
பாண்டூ³நாம் மாந வர்த⁴ந:|
ப்ராயோ பவிஷ்டோ க³ங்கா³யாம்
அநாத்³ ருத்யா தி⁴ராட் ஸ்²ரியம்||

  • பாண்டூ³நாம் - பாண்டு வம்சத்திற்கே
  • மாந வர்த⁴நஹ - ஸிரோ பூஷணமாக உள்ளவனும்
  • ஸம்ராட் ஸ - சக்கரவர்த்தியுமான பரீக்ஷித்
  • அதி⁴ராட் ஸ்²ரியம் - பெரும் ராஜ்ஜியத்தையும் ஐஸ்வர்யத்தையும்
  • அநாத்³ ருத்ய -  உதறி தள்ளி விட்டு
  • க³ங்கா³யாம் -  கங்கைக் கரையில்
  • கஸ்ய ஹேதோஹோ வா -என்ன காரணம் கொண்டு
  • ப்ராயோ பவிஷ்டோ - ப்ராயோபவேசம் என்ற விருத்தத்தை தொடங்கினான்

பாண்டுவின் குலத்திற்கே பெருமை சேர்ப்பவனும் அரசருக்கு அரசனுமான பரீக்ஷித், தனது அரசுச் செல்வம் அனைத்தையும் உதறித் தள்ளி, கங்கைக் கரையில் வடக்கிருத்தலை மேற்கொண்டது ஏன்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment