||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
027. திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 1298 - 1307 - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
செப்பென் மனிதருக்கு என் செஞ்சொல் தமிழ் மாலை
கைப்பேன் பிற தெய்வம் காண்பாரை எப்போதும்
காவளம் பாடித் திருமால் கால் தாமரை தொழுது
நா வளம் பாடித் திரிவேன் நான்
- எப்போதும் – நான் எக்காலத்திலும்
- என் நெஞ் சொல் தமிழ் மாலை – இன்சொற்கள் நிறைந்த எனது தமிழ்ப் பாமாலையை
- மனிதருக்கு – மனிதரைப் பற்றி
- செப்பேன் – ஒரு போதும் பாட மாட்டேன்
- பிற தெய்வம் காண்பாரை – தேவதாந்தரங்களைத் தரிசிக்கின்ற அவைஷ்ணவரை
- கைப்பேன் – வெறுப்பேன்
- காவளம்பாடி திருமால் – திருக்காவளம்பாடி என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள திருமாலினது
- கால் தாமரை – திருவடித் தாமரைகளை
- தொழுது – வணங்கி
- நா – எனது நாவினால்
- வளம் பாடி – வளமாகக் கவி பாடிக் கொண்டு
- திரிவேன் – யாதொரு கவலையுமின்றி இனிது காலம் கழிப்பேன்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment