About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 August 2026

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 4

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

4. ஸதை³வ பாத³ பங்கஜம்
மதீ³ய மானஸே நிஜம்
த³தா⁴ன முக்த மாலகம்
நமாமி நந்த³ பா³லகம்|
ஸமஸ்ததோ³ஷஸோ²ஷணம்
ஸமஸ்த லோக போஷணம்
ஸமஸ்த கோ³ப மானஸம்
நமாமி நந்த³லாலஸம்||

  • ஸதை³வ - எப்போதும், எக்காலத்திலும்
  • பாத³ - திருவடிகளை, பாதங்களை
  • பங்கஜம் - தாமரை போன்ற பாத பங்கஜம் என்றால் தாமரைத் திருவடிகளை
  • மதீ³ய - என்னுடைய
  • மானஸே - மனதிலே
  • நிஜம் - நிலையாக, உண்மையாக
  • த³தா⁴ன - வைத்திருப்பவனும்
  • முக்த மாலகம் - முத்தாரங்களை, முத்து மாலைகளை  அணிந்திருப்பவனுமான
  • நமாமி - வணங்குகிறேன்
  • நந்த³ பா³லகம் - நந்தகோபனின் பாலனை, குழந்தையான கிருஷ்ணனை 
  • ஸமஸ்த - அனைத்து, எல்லா
  • தோஷ - குற்றங்களையும், பாவங்களையும், குறைகளையும்
  • ஸோஷணம் - வற்றச் செய்பவனை, அழிப்பவனை 
  • ஸமஸ்த - உலகிலுள்ள அனைத்து
  • லோக - உலகங்களையும், உயிர்களையும்
  • போஷணம் - காப்பவனை, ஊட்டி வளர்ப்பவனை 
  • ஸமஸ்த - எல்லா 
  • கோ³ப - கோபியர்களின், ஆயர்பாடி மக்களின்
  • மானஸம் - மனதைக் கவர்ந்தவனை, மனதில் வாழ்பவனை 
  • நமாமி - வணங்குகிறேன்
  • நந்த³ லாலஸம் - நந்தகோபனின் அன்பிற்குரியவனும், விளையாட்டுகளில் பிரியமுள்ளவனுமான கிருஷ்ணனை

தன் கமல பாதங்களை பக்தர்களின் சித்தத்தில் (மனஸ் என்னும் சரோவரில்) ஸ்தாபிதம் செய்பவனே, அழகிய சுருண்ட கேசத்தைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். சகல தோஷங்களையும் நீக்குபவனே, அனைத்து லோகங்களையும் காத்து ரட்சிப்பவனே, கோகுலத்தின் கோபர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவனே, நந்தகோபனின் மைந்தனான சிவப்பு நிற திருமேனியையுடைய ஸ்ரீ கிருஷ்ண சந்த்ரா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment