About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 12 December 2025

சித்திரை - சித்திரை - ஸ்ரீ அநந்தாழ்வான்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சித்திரை நக்ஷத்திரம்

ஸ்ரீ அநந்தாழ்வான்

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் - சித்திரை 
  • அவதார ஸ்தலம் - சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு - மைசூர் வழித்தடத்தில்)
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவேங்கடம்
  • ஆசார்யன் - அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
  • அருளிச் செய்தவை - வேங்கடேச இதிகாச மாலை, கோதா சதுஸ் ச்லோகி, ராமானுஜ சதுஸ் ச்லோகி

தனியன்
1. மேஷே சித்தா ஸமுத்பூதம் யதிநாத பதாஸ்ரிதம் ஸ்ரீ| 
வேங்கடேஸ ஸத் பக்த மநந்தார்ய மஹம் பஜே||

2. அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்|
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

3. ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீ பாத அம்போருஹத்வயம்| 
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்யம் அஹம் பஜே||

4. யதீந்திர பாதாம் புஜ சஞ்சரீகம் 
ஸ்ரீமத் தயா பால தயைக பாத்ரம்| 
ஸ்ரீ வேங்கடே ஸாங்க்ரி யுகாந்தரங்கம் நமாம் 
யநந்தார்யம் அநந்த க்ருதவ:||

வாழித் திருநாமம்
மலையில் வேங்கடவர்க்கு மாமனார் வாழியே| 
மணிச்சுடர் கோன் அநந்தன் என வந்துதித்தான் வாழியே|
உலகக்கோர் தஞ்சமென உதித்து அருள்வோன் வாழியே| 
உலகம் உண்ட மாலடியை உகந்து உய்ந்தான் வாழியே| 
இலகு சித்திரைத் தன்னில் சித்திரையோன் வாழியே| 
எந்தை எதிராசர் இணை அடியோன் வாழியே| 
அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே|
அநந்தாழ்வான் திருவடிகள் அந வரதம் வாழியே||

திருநாள் பாட்டு
திருவாளர் வேங்கட மாமலையாருக்கு சிறுதொழில் செய்தவர் நாள்| 
தேவி தனக்கருள் வேங்கட மன்னவன் மட்புட்டில் சுமப்பவர் நாள்| 
மருமலர் சோலை மகிழ்ந்திட அம்மலை மன்னி அமர்ந்தவர் நாள்| 
மன்னரவின் பூதூரவன் மாமலர் மெல்லடி ஆயவர் நாள்| 
வருபொழில் பணி தீண்டிடவும் வாடுதல் இன்றி இருந்தவர் நாள்| 
வாரி தரு சூழ் வைணவர் ஆரியர் மத்தியில் ஆண் மகன் ஆயவர் நாள்| 
அருமறை உட்பொருள் ஆழ்ந்திடு வைணவ இலக்கணம் சொன்னவர் நாள்| 
அனைவர்களும் புகழ் சித்திரையில் கிளர் சித்திரை எனும் நாளே||

மங்கள ஸ்லோகம் 
ஸ்ரீ   வேங்கடாத்திரி கமிது: 
கைங்கர்யேஷ ந்யயுங்க்த் யம்| 
ராமாநுஜார்யஸ் தஸ்மை ஸ்யாத் 
ஆநந்தார்யாய மங்களம்||

ராமானுஜரின் ஆணைப்படி, திருமலையில் உள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டார். இவரது இயற்பெயர் அனந்தன். ராமானுஜரின் சீடரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடம் கல்வி பயின்றார். இவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடம் தீட்சை பெற்று, திருமலையில் நந்தவனம் அமைத்து வாழ்ந்தவர். பகவான் மற்றும் பாகவதர்களிடம் அதீத பக்தி கொண்டவர். 

அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர். எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி  ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார். எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார். அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார். எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக் கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - சித்திரை - ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சித்திரை நக்ஷத்திரம்

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் 


பன்னிரு ஆழ்வார்கள் வரிசையில் ஆறாவதாக மதுரகவி கருதப்படுகிறார். பன்னிரண்டு ஆழ்வார்களில் தலை சிறந்தவராகக் கருதப்படும் நம்மாழ்வாரின் சீடரான இவர், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள 4000 ஸ்லோகங்களில் 11 பாடல்கள். மதுரகவி நம்மாழ்வாரின் திருவாய்மொழி (1102 செய்யுள்கள்) ஆகிய நூல்களை பதிவு செய்து தொகுத்ததாக நம்பப்படுகிறது.

இவர் தமிழ் மொழியிலும், வடமொழியிலும் சிறந்த புலமை பெற்று, சிறந்த ஒழுக்கம், திருமாலிடம் அன்பு, அருள் முதலியன தம்மிடம் வாய்க்கப்பெற்றவராயிருந்தார். தமிழ் மொழியில் மதுரமான கவிதைகளைப் பாடிய காரணம்பற்றி இவருக்கு மதுரகவிராயர் என்னும் பெயர் அமைந்துள்ளது.

மதுரகவியாழ்வார், புண்ணியப் பதிகள் என வழங்கும் 1. அயோத்தி, 2. மதுரை, 3. கயை, 4. காசி, 5. காஞ்சி, 6. அவந்தி, 7. துவாரகை என்னும் ஏழையும் சென்று சேவித்து, மறுபடியும் அயோத்தியை அடைந்து, அங்கு அர்ச்சாவதார வடிவாய் எழுந்தருளியிருக்கின்ற இராமபிரானையும், பிராட்டியையும் சேவித்துத் திருவடி தொழுதுகொண்டு அங்கு வசிக்கலானார்.

ஒரு நாளிரவில் இவர் திருக்கோரூர் எம்பெருமானைத் திசை நோக்கித் தொழக் கருதித் தென்திசையில் கண் செலுத்திய பொழுது, அப்பாக்கத்திலே வானுற வளர்ந்து விளங்கிய ஒரு திவ்யமான பேரொளியைக் காணுற்று, அஃது இன்னதென்றறியாமல், 'கிராம நகரங்கள் வேகின்றனவோ? காட்டுத் தீயோ?'என ஐயுற்றுத் திகைத்து நின்றார். இங்ஙனமே அடுத்த இரண்டு மூன்று நாட்களிலும் கண்டு, அச்சுடர்த்திரள் முச்சுடரொளியிலும் மிக்கு விளங்கியதானால் பெருவியப்புற்ற அவர், அதனைக் காணும் அவாவினராய்ப் புறப்பட்டு அச்சோலையைக் குறியாகக் கொண்டு நெடுவழி கடந்து நடந்து திருக்குருகூரை அடைந்தார். அவ்வொளி அப்பகுதியில் பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலுக்குட்புக்கு மறைந்துவிட்டது. மதுரகவியார் அவ்வூரிலுள்ளாரைப் பார்த்து, 'இங்கு ஏதேனும் சிறந்த செய்தி உண்டா?'என வினவ அவர்கள் ஆழ்வாரது வரலாற்றைக் கூறினார்கள். மதுரகவியார் அவ்வரலாற்றைக் கேட்டுக் கோயிலினுள்ளே சென்று முன் நம்மாழ்வார் வரலாற்றிற் கூறியபடி, ஆழ்வார் அருளைப் பெற்று, அவர் அருளிச் செயல்களைப் பட்டோலையில் எழுதினார். மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது. மதுரகவியார் நம்மாழ்வாரையே பதினாரு பாசுரங்களால் ஆன பாமாலை ஒன்றாற் பாடினார். அப்பாமாலையின் முதற்பா 'கண்ணிநுண் சிறுத்தாம்பு'என்பது பெயராயிற்று. நம்மாழ்வார் திருநாட்டை அலங்கரித்தபின்னர், அவர்அர்ச்சை வடிவினரான ஆழ்வாரின் உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்தார்.

மதுரகவியார் ஆழ்வாருக்கு நித்யம் நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திருவிழாக்களில் 'வேதந்தமிழ் செய்த மாறர் வந்தார்', திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்' 'அளவிலா ஞானத்து ஆரியர் வந்தார்'என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார். இதனைக் கேள்வியேற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரிட்டு, 'உங்கள் ஆழ்வார் பக்தரேயன்றிப் பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதந்தமிழ் செய்தவரென்று புகழ்வது தகுதியோ?'என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்திட்டனர். அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி, 'இவர்கட்கு கர்வபங்கமாகும்படி தேவரீர் செய்தருளவேண்டும்'என்று துதித்தார். சடகோபர் ஒரு கிழப் பார்ப்பனர் வடிவத்தோடு வந்து "திருவாய்மொழியில் 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்!எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே'என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று, சங்கப் பலகையின்கண் வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும்"என்று கூறியருளினார். அங்ஙனமே மதுரகவி ஆழ்வார் கண்ணன் சுழலிணையை எழுதிய ஏட்டை எடுத்துப் பலகை பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக்கொண்டு மிதந்தது.

அப்பொழுது நீரில் விழுந்து அமிழ்ந்து தடுமாறியெழுந்து மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள் வேதம், வேதத்தின் முடிவுப் பொருள்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய வித்தகத் திறனைத் தெரிந்துகொண்டு செருக்கொழிந்தனர். மதுரகவி ஆழ்வார் தமது ஆசிரியராகிய நம்மாழ்வாருக்குப் பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருள்களைப் பலரும் உணரும்படி உரைத்துச் சிலகாலம் எழுந்தருளியிருந்து, பின்பு சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தான பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - ஹஸ்தம் - கிடாம்பி ஆச்சான்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஹஸ்தம் நக்ஷத்திரம்

1. ஸ்ரீ தேவப் பெருமாள்
----
2. கிடாம்பி ஆச்சான் 
(பிராணார்த்திஹரன்)

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் -  ஹஸ்தம்
  • அவதார ஸ்தலம் – காஞ்சிபுரம்
  • ஆசார்யன் - எம்பெருமானார்


தனியன்
1. ராமாநுஜ  பதாம் போஜ  யுகளீயஸ்ய தீமத:|
ப்ராப்யம்  சப்ராபகம் வந்தே ப்ரணதார்த்தி ஹரம் குரும்:|| 

2. ஆஸ்தி காக்ரே ஸரம் வந்தே பரிவ்ராட் குரு பாசகம்| 
யாசிதம்  குரு கேஸன ப்ரணதார்த்தி ஹரம் குரும்:||

வாழித் திருநாமம் 
அந்தமில் சீர் எதிராசர் அடி தொழுதோன் வாழியே| 
ஆதரம் கொள் சித்திரையில் அத்தத்தான் வாழியே| 
இங்கு இதனாய் த்ரிகுலத்து அழகமர்ந்தான் வாழியே| 
எதிராசர் மகாநத்தே ஏற்றம் உற்றான் வாழியே| 
செந்தமிழும் வடகலையும் திகழ் நாவான் வாழியே| 
சீரணி இராமாநுசன் புகழ்வோன் வாழியே| 
சந்ததிக்குத் தவம் பலிக்கச் சதுர்த்தெழுந்தோன் வாழியே| 
சார்வாம் கிடாம்பி ஆச்சான் தாள் இணைகள் வாழியே||

இவர் எம்பெருமானார் ஏற்படுத்திய 74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர் ஆவார்.  எம்பெருமானருக்கு மாமாவான பெரிய திருமலை நம்பி கிடாம்பியாச்சானுடைய அத்தையின் கணவர் ஆவார். பெரிய திருமலை நம்பியால் ராமானுஜரிடம் அறிமுகப்படுத்தப்பட்டவர். எம்பெருமானார் சிஷ்யர்களுக்குள்ளே அவருடைய திருமேனியில் மிகவும் பிரியம் உடையவர் இவரே என்று திருக்கோஷ்டியூர் நம்பியால்  பரீட்சை செய்ய பெற்று எம்பெருமானாருக்கு மடைப்பள்ளி கைங்கரியம் செய்யும்படி நியமிக்கப் பெற்றார். ராமானுஜரின் சீடத்துவத்தைப் பற்றிப் பல கதைகள் இவருடன் தொடர்புடையவை. ராமானுஜரின் வாழ்விலும் போதனைகளிலும் முக்கியப் பங்காற்றிய ஒரு புகழ்பெற்ற சீடர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - ஆயில்யம் - கோயில் கந்தாடை கொமாண்டூர் இளையவல்லி ஆச்சான்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆயில்யம் நக்ஷத்திரம்

கோயில் கந்தாடை கொமாண்டூர் இளையவல்லி ஆச்சான்
(பாலதந்வி, 74 ஸிம்ஹாஸநாதிபதிகளுள் ஒருவர்)

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் - ஆயில்யம்
  • அவதார ஸ்தலம் - கொமாண்டூர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருப்பேரூர்
  • ஆசார்யன் - எம்பெருமானார்

தனியன்
1. ஸ்ரீ கௌஸிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்|
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநூஜம்||

2. ஸ்ரீ ஸைல பூர்ண பத பங்கஜ ஸக்த சித்தம்|
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி||

3. ஸ்ரீ யதீந்த்ர மாத்ரு ஸ்வஸ் ரீய: ப்ரதி தார்ய பதே ஸ்தித:|
மூலபூத: கௌசிகாநாம் தம் வந்தே பாலதந் விநம்||

4. கௌசி காபி ஜநாநேக காலார்ஜித தப: பலம்|
ராமாநுஜ குரும் வந்தே பாலதந்வி வரா பிதம்||

வாழித் திருநாமம் 
1. சீராரும் திருப்பதியில் திகழ்ந்து இருந்தான் வாழியே| 
வேங்கடவர் தாள் இணையை விரும்பும் அவன் வாழியே| 
ஏராரும் எதிராசன் இணை அடியோன் வாழியே| 
சீராரும் அவர் தாய்க்கு பின்னவள் தநயன் வாழியே| 
பக்தியுடன் பாடியதைச் செப்பும் அவன் வாழியே| 
எழில் சித்திரை ஆயில்யம் வந்து உதித்தான் வாழியே| 
பார் விளங்கும் கொமாண்டூரில் அவதரித்தான் வாழியே| 
அந்தமில் சீர் இளைய வல்லிப் பரன் அடிகள் வாழியே||

2. பக்தியுடன் பதின்மர் கலை பகரும் அவன் வாழியே| 
பண்டரங்கர் பதம் நெஞ்சில் பற்றி நின்றான் வாழியே| 
எதிராசர் இணை அடியே தஞ்சம் என்றான் வாழியே| 
எழில் மறையின் ஏரிக்கோர் மதகானான் வாழியே| 
முக்தி தரும் நெறி தன்னை மொழிந்து அருள்வோன் வாழியே| 
மூது திருமலை நம்பிக்கு ஆட்செய்தான் வாழியே| 
சித்திரையில் ஆயில்யம் சிறக்க வந்தோன் வாழியே| 
சீர் பால தந்வி குரு திருத்தாள்கள் வாழியே||

கோயில் கந்தாடை கொமாண்டூர் இளையவல்லி ஆச்சான் என்பவர், எம்பார் போல, வைணவ ஆச்சார்யரான எம்பெருமானாருக்கு தாய்வழி சகோதரர், ஸ்ரீராமர் அவதாரத்தில் இலட்சுமணருக்கு (இளையவில்லி) சமமானவர். இவர் ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். இவர் வைணவ மரபில், ராமானுஜரின் நெருங்கிய சீடராகவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் விளங்கியவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - புனர்பூசம் - ஸ்ரீ முதலியாண்டான்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

புனர்பூசம் நக்ஷத்திரம்

ஸ்ரீ முதலியாண்டான் 
(தாசரதி - எம்பெருமானாரின் மருமான்)

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் - புனர்பூசம்
  • அவதார ஸ்தலம் -  பேட்டை
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • ஆசார்யன் - எம்பெருமானார்
  • அருளிச்செய்தவை - முதல் திருவந்தாதி தனியன், தாடீ பஞ்சகம், ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை)

தனியன்
1. பாதுகே யதி ராஜஸ்ய கதயந்தி யதாக்யயா|
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம் யஹம்||

2. மேஷே புநர் வஸூதிநே பாஞ்ச ஜன்யாம்ச சம்பவம்|
யதீந்த்ர பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும்||

வாழி திருநாமம்
1. அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே|
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே|
சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்தோன் வாழியே|
சீபாடியம் ஈடு முதல் சீர் பெறுவோன் வாழியே|
உத்தமமாம் வாதூலம் உயர வந்தோன் வாழியே|
ஊர் திருந்தச் சீர் பாதம் ஊன்றினான் வாழியே|
முத்திரையும் செங்கோலும் முடி பெறுவோன் வாழியே|
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே||

2. அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே| 
அநவரதம் எதிராசர் அடி தொழுவோன் வாழியே| 
சித்திரையில் புணர்வசு நாள் சிறக்க வந்தோன் வாழியே| 
ஸ்ரீ பாஷ்யச் செழும் பொருளை செப்பும் அவன் வாழியே| 
பச்சை வாரணம் விளங்க பார்வை செய்தோன் வாழியே|
பரகாலன் அடி இணைகள் பரவும் அவன் வாழியே| 
உத்தம வாதூல குலம் உகந்து உதித்தான் வாழியே| 
உய்துணை முதலியாண்டான் ஒண் பதம் இரண்டும் வாழியே|| 

3. சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்தோன் வாழியே|
ஸ்ரீ ரங்கராஜர் அடி சிந்தை செய்வோன் வாழியே| 
பக்தியுடன் பதின்மர் கலை பரிந்து அளிப்போன் வாழியே| 
பாதுகையாய் அதிபதி தாள் பதிக்கும் அவன் வாழியே| 
முக்தி வரும் எட்டு எழுத்தை மொழிந்து அருள்வோன் வாழியே| 
முக்கோல் என்று எதிராசர் மொழி பெற்றோன் வாழியே| 
தத்துவ நூல் பாஷியத்தை தரித்து உரைப்போன் வாழியே| 
தாசரதி நளின மலர்த் தாள் இணைகள் வாழியே||

முக்த ஸ்லோகங்கள்
1. ய: பூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீ பாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாஸரத்யாஹ்வய:|
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ஸ்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹநி நோ தைவம் குலஸ்யோத்தமம்||

2. ஸ்ரீவைஷ்ணவ ஸிரோபூஷோ ஸ்ரீ ராமானுஜ பாதுகா|
ஸ்ரீ வாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீ தாசரதி ரேததாம்||

3. ஸ்ரீ ராமாம்ஸ ஸமாஸ்லிஷ்டம் பாஞ்சஜன்யாம்ஸ ஸம்பவம்|
பஞ்ச நாராயணஸ்தாந ஸ்தாபகம் குருமாஸ்ரயே||

4. யஸ்சக்ரே பக்தநகரே தாடீபஞ்சக முத்தமம்|
ராமனுஜார்ய ஸச்சாத்ரம் வந்தே தாசரதிம் குரும்||

திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம்
வித்யா விமுக்திஜநநீ விநயாதி கத்வம்
ஆசாரஸம்பத் அநுவேலவிகாஸசீலம்|
ஸ்ரீ லக்ஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்
சித்ரம் ந தாசரதி வம்ஸ ஸமுத்பவாநாம்||

திருநாள் பாட்டு
எட்டும் இரண்டுடன் ஏதமில் வேதமும் ஓதி உணர்ந்திடு நாள்| 
எங்கும் இடர் கெட அங்கம் உபாங்கமும் ஓங்கி உயர்ந்திடு நாள்| 
மட்டவிழும் பொழில் மன்னும் அரங்கர் தம் செங்கோல் சிறந்திடு நாள்| 
மாகுடபால் ஐந்து நாரணனார் பதி வாழ்வு பொலிந்திடு நாள்| 
இட்டம் உயர்ந்து எதிராசருடன் மறை முப்புரி ஊட்டிய நாள்| 
என் மருமான் என்று இவர் பதமும் தண்டமும் ஆக்கிக் கொண்டு அருள் நாள்| 
சித்தர் மகிழ்ந்திட தாசரதிக்கு குரு போந்து பிறந்தருள் நாள்| 
சித்திரையில் புனர்பூசம் அதாகிய செல்வம் மகிழ்ந்திடு நாளே||

ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்துப் பத்து வருடங்களுக்குப் பின், சுவாமி முதலியாண்டான் கி.பி 1027 ஆம் ஆண்டு தொண்டை மண்டலத்தில் உள்ள பச்சைப் பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புருஷமங்கலத்தில்/வரதராஜபுரத்தில் (இன்று "நாசரேத் பேட்டை" என்று குறிப்பிடப்படுகிறது) ஆனந்தநாராயண தீக்ஷிதருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாரராய், எம்பெருமானாருக்கு மருமகனாகவும், பரதனின் அம்சமாகவும் “தாசரதி” என்னும் திருநாமத்தோடு அவதரித்தவர் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி. ஆனந்தநாராயண தீக்ஷிதருக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. திருவேங்கடமுடையனை வணங்கி குழந்தை வேண்டி திருவேங்கடத்திற்கு யாத்திரை மேற்கொண்டார். திருநின்றவூர் செல்லும் வழியில், ஏரி காத்த ராமரின் சன்னதியில் இரவு தங்கிய ஸ்ரீராமர் (ஆனந்தநாராயண தீக்ஷிதரின் திருவரதனப் பெருமாள்) அவரது கனவில் தோன்றி, திருவேங்கடத்திற்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், திருஆனந்தழ்வான் (ஆதி சேஷர், ஐந்து தலை நாகம், இறைவன் சயனிக்கிறார்) ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜராகப் பிறந்து, ஸ்ரீ ராமானுஜருக்கு சேவை செய்ய அவரது மகனாகப் பிறப்பார் என்றும் அறிவுறுத்தினார்.

ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் முதலியாண்டான் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார். ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைவர். மற்றும்  எம்பெருமானாரின் திருவடித் தாமரை (யதிராஜ பாதுகா), எம்பெருமானாரின்  த்ரிதண்டம் என இவர் அறியப்படுகிறார். ஆழ்வானும் ஆண்டானும் எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கம் டையவர்கள், பிரிக்க முடியாதவர்கள். எம்பெருமானாரின் த்ரிதண்டம்  முதலியாண்டானும்,  ஜல பவித்ரம் (த்ரிதண்டதில் இணைக்கப்பட்டுள்ள கொடி) கூரத்தாழ்வானும் ஆவார்கள்.

எம்பெருமானாருடைய திருவடி ஸ்தானமாயிருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால் எம்பெருமானாருடைய திருவடி நிலை இன்றளவும் “முதலியாண்டான்” என்றே அழைக்கப்படுகிறது.

ஸ்வாமி எம்பெருமானார் நியமனத்தாலே, பெரிய நம்பிகள் திருக்குமாரத்தியான அத்துழாய்க்குச் சீதன வெள்ளாட்டியாகி தாஸவ்ருத்திகள் செய்த பெரியவர் இவர்.

எம்பெருமானார் இவரைத் தமது த்ரிதண்டாமாக அபிமானித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - புனர்பூசம் - ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

புனர்பூசம் நக்ஷத்திரம்

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் 
(ஸ்ரீராமர்)
ஸ்ரீராம நவமி பண்டிகை

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் - புனர்பூசம்
  • அவதார ஸ்தலம் -  அயோத்தி

ராம மூல மந்திரம் 
ஓம் ஸ்ரீ ராமாய நம:||

ராம தாரக மந்திரம் 
ஸ்ரீ ராம ஜெய ராமா, ஜெய ஜெய ராமா||

ராம காயத்ரி மந்திரம் 
ஓம் தஸரதாய வித்மஹே, சீதா வல்லபாய தீமஹி|
தந்நோ ராமஹ் ப்ரசோதயாத்||
 
ராம தியான மந்திரம் 
ஆபாதாம் அபஹர்த்தாரம், தாதாரம் ஸர்வ ஸம்பதாம்|
லோகா பிராமம் ஸ்ரீராமம், பூயோ பூயோ நமாம்யஹம்|| 
துன்பங்களை நீக்குபவர், அனைத்து செல்வங்களையும் தருபவர், உலகை மகிழ்விப்பவர் ஸ்ரீராமர் - அவரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்

ராம நாம மகிமை 
ராம ராம ராமேதி, ரமே ரமே மனோரமே| 
சகஸ்ர நாம தத்துல்யம், ராம நாம வரானனே|| 
மனதை மகிழ்விக்கும் ராம நாமத்தை உச்சரித்தால், அது ஆயிரம் நாமங்களுக்கு சமமானது 

அஷ்டாக்ஷர மந்திரம் 
ராமாய ராமபத்ராய, ராமச்சந்திராய வேதசே|
ரகுநாதாய நாதாய, சீதாயா பதயே நம:||
ராமன், ராமபத்ரன், ராமசந்திரன், வேதங்களை அறிந்தவர், ரகுவின் தலைவன், சீதையின் பதிக்கு நமஸ்காரம்

இந்த ஸ்லோகங்களை உச்சரிப்பதன் மூலம் ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, வாழ்வில் நன்மைகளும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||