About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 26 November 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 156

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 156||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 18||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

ருஷய: பிதரோ தேவா:
மஹாபூதாநி  தாதவ:|
ஜங்கமா ஜங்கமம்‌ சேதம்‌
ஜகந் ‌நாராயணோத் பவம்|| 


முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், (அடிப்படை) பெரும்பூதங்கள், உலோகங்கள், உண்மையில், அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும் நாராயணனிலிருந்தே உதித்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.20 

கர்மணைவ ஹி ஸம் ஸித்³தி⁴ம்
ஆஸ்தி²தா ஜநகா த³ய:|
லோக ஸங்க்³ரஹ மேவாபி 
ஸம்பஸ்²யந் கர்து மர்ஹஸி||

  • கர்மணா - செயலால் 
  • ஏவ - கூட 
  • ஹி - நிச்சயமாக 
  • ஸம் ஸித்³திம் - பக்குவத்தில் 
  • ஆஸ்தி²தா - நிலைபெற்றனர் 
  • ஜநகா த³யஹ - ஜனகரைப் போன்ற மன்னர்கள்  
  • லோக ஸங்க்³ரஹம் - பொது மக்கள்  
  • ஏவ அபி - மேலும் 
  • ஸம்பஸ்²யந் - கருதி 
  • கர்தும் - செயல்பட 
  • அர்ஹஸி - வேண்டியவன் நீ

ஜனகரைப் போன்ற மன்னர்களும் கூட செயலால் பக்குவத்தில் சித்தி பெற்றனர். மேலும், உலக நன்மைக்காக கடமையைச் செய்ய வேண்டியன் நீ.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.13

அதோ² மஹாபா⁴க³ ப⁴வாந மோக⁴ த்³ருக்
ஸு²சி ஸ்²ரவா: ஸத்ய ரதோ த்⁴ருத வ்ரத:|
உருக் ரமஸ்யாகி²ல ப³ந்த⁴ முக்தயே
ஸமாதி⁴ நாநுஸ் மர தத்³ விசேஷ்டிதம்||

  • அதோ² - இக்காரணத்தால்
  • மஹாபா⁴க³ - பெரும் பாக்கியம் உடையவரே
  • ப⁴வாந் ந - தாங்கள்
  • அமோக⁴ த்³ருக் - வ்யர்த்தம் இல்லாத திருஷ்டி உடையவர்
  • ஸு²சி ஸ்²ரவாஸ் - நற் கீர்த்தியை உடையவர்
  • ஸத்ய ரதோ - உண்மையில் பற்றுடையவர்
  • த்⁴ருத வ்ரதஹ - விரதங்களை அனுஷ்டித்தவர்
  • அகி²ல ப³ந்த⁴ முக்தயே - ஆகையால் எல்லோருடையவும் மோக்ஷத்தின் பொருட்டும் 
  • உருக் ரமஸ்யா - ஸ்ரீ வாஸுதேவனது
  • தத்³ விசேஷ்டிதம் - அந்த லீலா விநோதங்களை
  • ஸமாதி⁴ நா - ஒன்றுபட்ட மனத்தினால்
  • அநு ஸ்மர - நினைத்து வருணிப்பீராக

தாங்களோ மிகுந்த பாக்கியம் செய்தவர், பிறப்பின் பயனளிக்கும் அறிவு படைத்தவர், சிறந்த புகழ் படைத்தவர், சந்தியத்திலே நிலைநிற்பவர், சதாசார ஸம்பந்நர், விரதங்களை அனுஷ்டிப்பவர். ஆகவே, இவ்வுலகினரின் நலன் கருதி, பகவானுடைய திரு விளையாடல்களை, அவரது திருவடியினையே மனத்திற்கொண்டு விளக்கமுற வர்ணிப்பீராக!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.91

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.91

ந புத்ர மரணம் கிந்சித்³ 
த்³ரக்ஷ்யந்தி புருஷா: க்வசித்|
நார்யஸ்²சாவித⁴வா நித்யம்
ப⁴விஷ்யந்தி பதிவ்ரதா:|| 

  • புருஷாஹ் - புருஷர்கள்
  • க்வசித் - ஓரிடத்திலும்
  • கிந்சித்³ - கொஞ்சம் கூட
  • புத்ர மரணம் - புத்திர மரணத்தை
  • த்³ரக்ஷ்யந்தி ந - காணவில்லை
  • நார்யஸ்² ச - ஸ்த்ரீகளும்
  • அவித⁴வா - விதவைகள் ஆகாதவர்களாக
  • நித்யம் - எப்பொழுதும்
  • பதிவ்ரதாஹ - பதிவ்ரதைகளாக
  • ப⁴விஷ்யந்தி -  இருந்தார்கள்

மனிதர்கள் எங்கும், எப்போதும் தங்கள் வாழ்நாளில் தங்கள் பிள்ளைகளின் மரணத்தைக் காண மாட்டார்கள். பெண்கள், விதவையாகாமல், எப்போதும் பதிவிரதைகளாக கணவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 131 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 131 – அமரர் கோமான் கண்ணன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்||

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட* 
கள்ளச் சகடு கலக்கு அழிய* 
பஞ்சி அன்ன மெல் அடியால்* 
பாய்ந்த போது நொந்திடும் என்று*
அஞ்சினேன் காண் அமரர் கோவே!* 
ஆயர் கூட்டத்து அளவு அன்றாலோ* 
கஞ்சனை உன் வஞ்சனையால்* 
வலைப்படுத்தாய்! முலை உணாயே|

  • அமரர் கோவே - தேவர்களுக்குத் தலைவனே! நீ
  • கஞ்சன் தன்னால் - கம்ஸனால்
  • புணர்க்கப்பட்ட - உன்னைக் கொல்வதற்காக ஏவப்பட்ட
  • கள்ளச் சகடு - வஞ்சனைமிக்க சகடமானது
  • கலக்கு அழிய - கட்டுக் குலைந்து உருமாறி தவிடு பொடியாகும்படி
  • பஞ்சி அன்ன - பஞ்சைப் போன்ற
  • மெல்லடியால் - மிருதுவான உன் பாதங்களினால்
  • பாய்ந்த போது - பாய்ந்து உதைத்த போது
  • நொந்திடும் என்று - உன் பாதங்களுக்கு வலிக்கும் என்று
  • அஞ்சினேன் காண் - அச்சப்பட்டேன் பார் 
  • ஆயர் கூட்டத்து - இடையர் மக்கள் கூட்டம்
  • அளவன்றாலோ! - எதற்கும் பயப்படமாட்டார்கள்
  • கஞ்சனை - உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த கம்ஸனை
  • உன் வஞ்சனையால் - உன்னுடைய சாமர்த்தியத்தால்
  • வலைப் படுத்தாய்! - உன் கையில் சிக்கும்படி வலையில் பிடித்து முடித்தவனே!
  • முலை உணாயே - தாய்ப்பாலை உண்ணாயோ

தேவர்களின் தலைவனே! கம்சனால் ஏவப்பட்ட சகடத்தை, உன்னுடைய பிஞ்சு கால்களால் உதைத்து உரு குலையச் செய்த போது, உன் மிருதுவான கால்களுக்கு வலி ஏற்பட்டிருக்குமோ என ஆயர் கூட்டமே அஞ்சியது, அதைக் காட்டிலும் பெரிய அளவில் அஞ்சியவளாக நான் இருந்த போது, நய வஞ்சகனான கம்சனையும் சூழ்ச்சியால் கொன்ற கண்ணா! என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 040 - திருச்சித்திரகூடம் - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 32 - 2

திருமங்கையாழ்வார்
017. திவ்ய ப்ரபந்தம் - 1163 - பெரிய திருமொழி - 3.2.6
நெய் வாய் அழல் அம்பு துரந்து* 
முந்நீர் துணியப் பணி கொண்டு அணி ஆர்ந்து* 
இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி* 
நும் தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*
அவ் வாய் இள மங்கையர் பேசவும்* 
தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக*
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

018. திவ்ய ப்ரபந்தம் - 1164 - பெரிய திருமொழி - 3.2.7
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*
மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த*
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*
கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்*
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

019. திவ்ய ப்ரபந்தம் - 1165 - பெரிய திருமொழி - 3.2.8
மா வாயின் அங்கம் மதியாது கீறி*
மழை மா முது குன்று எடுத்து* 
ஆயர் தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*
குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*
மூவாயிரம் நான்மறையாளர்* 
நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதி*
தேவாதி தேவன் திகழ்கின்ற* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

020. திவ்ய ப்ரபந்தம் - 1166 - பெரிய திருமொழி - 3.2.9
செரு நீல வேல் கண் மடவார் திறத்துச்*
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்*
அரு நீல பாவம் அகலப் புகழ் சேர்*
அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து* 
எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*
திரு நீலம் நின்று திகழ்கின்ற* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

021. திவ்ய ப்ரபந்தம் - 1167 - பெரிய திருமொழி - 3.2.10
தில்லைத் திருச்சித்ர கூடத்து உறை செங் கண் மாலுக்கு*
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*
அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி* 
குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*
பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே|

022. திவ்ய ப்ரபந்தம் - 1168 - பெரிய திருமொழி - 3.3.1
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்திர கூடத்து உள்ளானே|

023. திவ்ய ப்ரபந்தம் - 1169 - பெரிய திருமொழி - 3.3.2
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட* பிள்ளை பரிசு இது என்றால்*
மா நில மா மகள்* மாதர் கேள்வன் இவன் என்றும்* 
வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்* புலன் கெழு கோவியர் பாடி*
தே மலர் தூவ வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

024. திவ்ய ப்ரபந்தம் - 1170 - பெரிய திருமொழி - 3.3.3
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று* ஆய்ச்சியர் கூடி இழிப்ப*
எண் திசையோரும் வணங்க* இணை மருது ஊடு நடந்திட்டு*
அண்டரும் வானத்தவரும்* ஆயிரம் நாமங்களோடு*
திண் திறல் பாட வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

025. திவ்ய ப்ரபந்தம் - 1171 - பெரிய திருமொழி - 3.3.4
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம் புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாட*
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

026. திவ்ய ப்ரபந்தம் - 1172 - பெரிய திருமொழி - 3.3.5
பருவக் கரு முகில் ஒத்து* முத்து உடை மா கடல் ஒத்து*
அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன்மலை ஒத்து*
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து* இன மால் விடை செற்று*
தெருவில் திளைத்து வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

027. திவ்ய ப்ரபந்தம் - 1173 - பெரிய திருமொழி - 3.3.6
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்*
உய்யப் பரு வரை தாங்கி* ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போல*
தெய்வப் புள் ஏறி வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

028. திவ்ய ப்ரபந்தம் - 1174 - பெரிய திருமொழி - 3.3.7
ஆவர் இவை செய்து அறிவார்?* அஞ்சன மா மலை போல*
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து* 
அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்* கை தொழ வீதி வருவான்* 
தேவர் வணங்கு தண் தில்லைச்* சித்திர கூடத்து உள்ளானே|

029. திவ்ய ப்ரபந்தம் - 1175 - பெரிய திருமொழி - 3.3.8
பொங்கி அமரில் ஒருகால்* பொன் பெயரோனை வெருவ*
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு* ஆயிரம் தோள் எழுந்து ஆட*
பைங் கண் இரண்டு எரி கான்ற* நீண்ட எயிற்றொடு பேழ் வாய்*
சிங்க உருவின் வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

030. திவ்ய ப்ரபந்தம் - 1176 - பெரிய திருமொழி - 3.3.9
கரு முகில் போல்வது ஓர் மேனி* கையன ஆழியும் சங்கும்*
பெரு விறல் வானவர் சூழ* ஏழ் உலகும் தொழுது ஏத்த*
ஒரு மகள் ஆயர் மடந்தை* ஒருத்தி நிலமகள்* 
மற்றைத் திருமகளோடும் வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

031. திவ்ய ப்ரபந்தம் - 1177 - பெரிய திருமொழி - 3.3.10
தேன் அமர் பூம் பொழில் தில்லைச்* சித்திர கூடம் அமர்ந்த*
வானவர் தங்கள் பிரானை* மங்கையர் கோன் மருவார்*
ஊன் அமர் வேல் கலிகன்றி* ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*
தான் இவை கற்று வல்லார் மேல்* சாரா தீவினை தானே|

032. திவ்ய ப்ரபந்தம் - 2777 - பெரிய திருமடல் - 7.5 (65)
அள்ளல் வாய் அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை*
தென் தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 99

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 44||

||ஸ்கந்தம் 04||

மைத்ரேயர் கூறினார்.

மாசற்ற விதுரா! நீ விரும்பிக் கேட்டபடி கபிலருக்கும் தேவஹூதிக்கும் நடந்த உரையாடலை விரித்துக் கூறினேன். ஆன்ம யோகம் பற்றிய கபிலரின் கொள்கைகள் மிகவும் ரகசியமானவை. அவற்றைச் சொல்பவர், கேட்பவர் அனைவர்க்கும் ஸ்ரீ மன் நாராயணனின் பாத தாமரைகளில் பக்தி உண்டாகி அவரையே அடைவர்.

தொடர்ந்து ஸ்வாயம்புவ மனுவின் வம்ச வரலாற்றைக் கூறலானார் மைத்ரேயர்.

ஸ்வாயம்புவ மனுவிற்கு ஆஹூதி, ப்ரஸூதி, தேவஹூதி என்று மூன்று பெண்கள்.

ஆகூதி என்ற பெண்ணை மனு, ருசி என்ற ப்ரஜாபதிக்கு 'புத்ரிகா தர்மம்' என்ற நிபந்தனையின்படி திருமணம் செய்து கொடுத்தார்.

புத்ரிகா தர்மம் எனப்படுவது யாதெனில், புத்ரன் இல்லாமல் பெண்ணை மட்டும் பெற்றவர், பெண்ணுக்குப் பிறக்கும் புத்ரனை தனக்குக் கொடுக்க வேண்டும் என்ற உறுதிமொழியோடு கொடுப்பதாகும்.

ஆகூதிக்கு சகோதரர்கள் இருந்தபோதிலும், மனுவிற்கு பிள்ளைகள் அதிகம் வேண்டும் என்பதால் அப்படிச் செய்தார்.

ருசிக்கும் ஆகூதிக்கும் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.


ஆண் மகவாய்ப் பிறந்தவர் யக்ஞன் என்னும் பெயர் கொண்ட மஹாவிஷ்ணுவின் வேள்வித் திருமேனியே ஆகும். பெண் மகவு மஹாலக்ஷ்மியின் அம்சமாக நாராயணனை விட்டகலாமல் பிறந்த தக்ஷிணை என்பவள்.

மனு மகள் ஆகூதியின் மகனைப் பெருமகிழ்ச்சியோடு எடுத்து வந்து தான் வளர்க்கலானார். ருசி தக்ஷிணையைத் தானே வைத்துக் கொண்டார்.

பின்னர் யக்ஞருக்கும்‌ தக்ஷிணைக்கும் திருமணம் நடந்து பன்னிரண்டு மகன்களைப் பெற்றார்.

ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் அவர்கள் தூஷிதர்கள் என்ற தேவர்களாக இருந்தனர்.

விஷ்ணுவின் அம்சமான யக்ஞன் இந்திரனாக இருந்தார்.

மனுவின் புதல்வர்களான பிரியவிரதன், உத்தானபாதன் இருவரும் மஹாவீரர்கள். அவர்களது வம்சத்தினரே மன்வந்தர அரசர்களாயினர்.

விதுரரே! தேவஹூதியின் கதையைச் சொன்னேன். மனு, தன் இன்னொரு மகளான ப்ரஸூதியை ப்ரும்மாவின் மகனான தக்ஷனுக்கு மணம் முடித்தார்.

அவர்களது வம்ச பரம்பரை தான் மூவுலகும் பரவி நிற்கிறது.

கர்தமரின் ஒன்பது பெண்களும் ஒன்பது ரிஷிகளை மணந்தார்கள் என்று முன்னமே பார்த்தோம். அவர்களின் வம்சத்தைக்‌ கூறுகிறேன் கேளும்.

கலை என்பவள் மரீசியை மணந்தாள். அவள் கச்யபர், பூர்ணிமான் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றாள். பூர்ணிமானுக்கு விரஜன், விச்வகன் என்ற பிள்ளைகளும், தேவகுல்யை என்ற பெண்ணும் தோன்றினர். இந்த தேவகுல்யை தான் தன் அடுத்த பிறவியில் தேவநதியான கங்கையாகத் தோன்றினாள்.

கர்தமரின் பெண்ணான அனஸூயை அத்ரி மஹரிஷியை மணந்தாள். அவர்களது புதல்வர்கள் தத்தர், துர்வாசர், சந்திரன் என்ற மும்மூர்த்திகளின் அம்சங்களாவர்.

விதுரர் உடனே கேட்டார். குருவே, இம்மூன்று மூர்த்திகளும் எதற்காக அத்ரியின் ஆசிரமத்தில் அவதாரம் செய்தனர்?

மைத்ரேயர் பதிலிறுக்கத் துவங்கினார். விதுரா! அத்ரி மஹரிஷி அனஸூயாவுடன் ருக்ஷ பர்வதம் சென்று அங்கு பகவானைக் குறித்து ஒற்றைக் காலில் நின்று நூறு வருடங்கள் தவமியற்றினார்.

தனக்கு இறைவனுக்கொப்பான புதல்வன் வேண்டும் என்பதே அவரது தவத்தின் நோக்கம். அவரது தவத்தில் மகிழ்ந்து பகவான் மும்மூர்த்திகளாய்க் காட்சி அளித்தார்.

ஆச்சர்யமடைந்த அத்ரி, அவர்களை விழுந்து வணங்கிப் பூஜித்தார். பின்னர், நான் குழந்தை வரம் வேண்டி ஒரு பகவானைத் தானே தியானம் செய்தேன்? ஒரே பகவான் தான் உலகைப் படைத்து காத்து அழிக்கும் பொருட்டு மூவராய்ப் பிரித்துக் கொண்டீர்கள். ஆனால், எனக்கு நீங்கள் மூவராய்க் காட்சி தருவதன் நோக்கம் என்ன? என்று வினவினார்.

மும்மூர்த்திகள் அழகாகப் பதில் சொன்னார்கள். நீங்கள் எந்த ஜகதீச்வரனை வேண்டினீர்களோ அவரே தான் நாங்கள். உங்கள் தவத்தில் மகிழ்ந்தோம். எங்கள் மூவரின் அம்சமாகவும் உங்களுக்கு மூன்று புதல்வர்கள் பிறப்பார்கள் என்றனர்.

அதன்படியே அத்ரிக்கு, மஹாவிஷ்ணுவின் அம்சமாக தத்தரும், சிவனின் அம்சமாக துர்வாசரும், ப்ரும்மாவின் அம்சமாக சந்திரனும் தோன்றினார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்