About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 26 September 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 146

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 146

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 8

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ரோகா³ர்தோ முச்யதே ரோகா³த்³‌
ப³த்³தோ⁴ முச்யேத ப³ந்த⁴நாத்‌|
ப⁴யாந் முச்யேத பீ⁴தஸ்து
முச்யேதாபந்ந ஆபத³:||


ஆபத³: - ஆபத³:ஹ

நோயால் பிடிக்கப்பட்டவன் நோயிலிருந்து வெளிப்படுவான். பந்தங்களில் சிக்கியவன் பந்தங்களில் இருந்தும் விடுபடுவான். பயந்தவன் பயத்தில் இருந்து விடுப்படுவான். ஆபத்தில் அகப்பட்டவன் அந்த ஆபத்திலிருந்து நீங்க பெறுவான். துன்பங்களில் பீடிக்கப்படுபவன் கஷ்டங்கள் நீங்க பெறுவான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.10 

ஸஹ யஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா 
புரோ வாச ப்ரஜாபதி:|
அநேந ப்ரஸ விஷ்யத்⁴வம் 
ஏஷ வோ அஸ்த் விஷ்ட காம து⁴க்||

  • ஸஹ - கூட 
  • யஜ்ஞஃ - யாகங்கள்  
  • ப்ரஜாஸ் - குலங்கள் 
  • ஸ்ருஷ்ட்வா - படைத்து 
  • புரா - பழங்காலத்தில்  
  • உவாச - கூறினார் 
  • ப்ரஜாபதிஹி - உயிர்வாழிகளின் இறைவன்  
  • அநேந - இதனால்  
  • ப்ரஸ விஷ்யத்⁴வம் - மேன்மேலும் செல்வ செழிப்புடன் இருக்க 
  • ஏஷ - இந்த 
  • வோ - உங்களது 
  • அஸ்து - இருக்கட்டும் 
  • இஷ்ட - எல்லா விருப்பங்களையும் 
  • காம து⁴க் - அளிப்பவர்

எல்லா விருப்பங்களையும் அளிப்பவரான, உயிர்வாழிகளின் இறைவன், பழங்காலத்தில், இந்த மனித குலங்களையும் கூடவே யாகங்களையும் படைத்து, இதனால் மேன்மேலும் செல்வச் செழிப்புடன் இருக்க உங்களுடன் இருக்கட்டும் என்று ஆசி வழங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் - 1.5.3

ஜிஜ்ஞாஸிதம் ஸுஸம்பந்நம் 
அபி தே மஹ த³த்³பு⁴தம்| 
க்ருதவாந் பா⁴ரதம் யஸ்த்வம் 
ஸர்வார்த² பரிப்³ரும் ஹிதம்||

  • தே - தங்களுக்கு
  • ஜிஜ்ஞாஸிதம் - அரிய இஷ்டமான தர்மம் முதலானது
  • ஸுஸம்பந்நம் - பரிபூரணமாக ஸித்தித்து விட்டது
  • அபி - அனுஷ்டிக்கவும் செய்யப்பட்டது
  • யஸ்த்வம் - யாதொரு நீர்
  • ஸர்வார்த² பரிப்³ரும் ஹிதம் - எல்லா தருமங்களோடு கூடியதும்
  • மஹத்³ - மிகப் பெரியதும்
  • அத்³பு⁴தம் - அபூர்வமானதுமான
  • பா⁴ரதம் - மஹா பாரதத்தை
  • க்ருதவாந் - செய்துள்ளீர்

உங்கள் விசாரணைகள் நிறைவடைந்தன, உங்கள் படிப்பும் நன்றாக நிறைவேறியது, மேலும் அனைத்து விதமான வேத வரிசைகளும் விரிவாக விளக்கப்பட்ட மகாபாரதம் என்ற ஒரு சிறந்த மற்றும் அற்புதமான படைப்பைத் தயாரித்துள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.81

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.81

தேந க³த்வா புரீம் லங்காம் 
ஹத்வா ராவண மாஹவே|
ராம: ஸீதா மநுப்ராப்ய பராம் 
வ்ரீடா³ முபாக³ மத்|| 

  • ராம: - ஸ்ரீராமர்
  • தேந - அந்த சேது வழியாய்
  • லங்காம் - இலங்கை என்ற
  • புரீம் க³த்வா -  புரியை அடைந்து
  • ஆஹவே - யுத்தத்தில்
  • ராவணம் -  ராவணனை
  • ஹத்வா - வதம் செய்து
  • ஸீதாம் - ஸீதையை
  • ப்ராப்ய மநு - அடைந்து, பிறகு
  • பராம் - தமக்கு இல்லாத
  • வ்ரீடா³ம் - லஜ்ஜையை

  • உபாக³ மத் - அடைந்தார்

அந்தப் பாலத்தின் மூலம் லங்கா புரிக்குச் சென்ற ஸ்ரீராமர், போரில் ராவணனைக் கொன்ற பிறகு, ஸீதையைத் திரும்பி அழைக்க வெட்கி நின்றார், தடுமாற்றம் அடைந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 122 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 122 - கடை தாம்புக்கு ஆப்புண்டவன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

சேப்பூண்ட* சாடு சிதறித் திருடி* 
நெய்க்கு ஆப்பூண்டு* 
நந்தன் மனைவி கடை தாம்பால்*
சோப்பூண்டு துள்ளித்* துடிக்கத் துடிக்க* 
அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)

  • சேபூண்ட - எருதுகள் கட்டுதற்கு உரிய
  • காடு – சகடம் (அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை)
  • சிதறி - உருக்குலையும்படி உதைத்து
  • நெய்க்கு - நெய்க்கு ஆசைப்பட்டு
  • திருடி - களவு செய்து
  • ஆப்பூண்டு - உடைமைக்கு உரியவர் கையில் அகப்பட்டுக் கொண்டு
  • அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க
  • நந்தன் மனைவி - நந்தகோபன் தேவியான அவ் யசோதை
  • கடை தாம்பால் - தயிரைக் கடையும் தாம்பாலே அடிக்க
  • துள்ளித் துடிக்க - துடிக்க துடிக்க
  • சோப்பூண்டு - அள்ளி மிகவும் துடிக்கும் படி அடி யுண்டு
  • அதனோடு நில்லாமல்
  • அன்று - அக்காலத்தில்
  • ஆப்பூண்டாள் - எங்கும் சலிக்க முடியாதபடி உரலில் கட்டுண்டவனுமாகிய கண்ணன்
  • அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

மிக வேகமாக சகட உருவில் வந்த அசுரனை தன் சிறிய திருவடிகளைக் கொண்டு உதைத்து சிதறும்படி செய்தவனும், நெய்யைத் திருடியதற்காக இடையர்களிடம் பிடிபட்டு, நந்த கோபனின் மனைவி யசோதையிடம் தயிர் கடையும் மத்தினால் உதை வாங்கி வலியால் துடித்தவனும், ஒருசமயம் உரலில் கட்டுண்டவனாயும் திகழ்ந்த கண்ணன் ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 037 - திருமணிக்கூடம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||037. திருமணிக்கூடம்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1288 - பெரிய திருமொழி - 4.5.1
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி* 
மன்னும் காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ட எங்கும்*
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1289 - பெரிய திருமொழி - 4.5.2
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து* 
இலங்கை வவ்விய இடும்பை தீரக்* கடுங் கணை துரந்த எந்தை* 
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்* குங்குமம் கழுவிப் போந்த*
தெய்வ நீர் கழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1290 - பெரிய திருமொழி - 4.5.3
மாத் தொழில் மடங்கச் செற்று* மருது இற நடந்து* 
வன் தாள் சேத் தொழில் சிதைத்துப்* 
பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*
நாத் தொழில் மறை வல்லார்கள்* நயந்து அறம் பயந்த வண் கைத்*
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1291 - பெரிய திருமொழி - 4.5.4
தாங்கு அரும் சினத்து வன் தாள்* தடக் கை மா மருப்பு வாங்கி*
பூங் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து* எருது அடர்த்த எந்தை*
மாங்கனி நுகர்ந்த மந்தி* வந்து வண்டு இரிய* 
வாழைத் தீங் கனி நுகரும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1292 - பெரிய திருமொழி - 4.5.5
கரு மகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து* 
தன் மேல் வரும் அவள் செவியும் மூக்கும்* வாளினால் தடிந்த எந்தை*
பெரு மகள் பேதை மங்கை* தன்னொடும் பிரிவு இலாத*
திருமகள் மருவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1293 - பெரிய திருமொழி - 4.5.6
கெண்டையும் குறளும் புள்ளும்* கேழலும் அரியும் மாவும்*
அண்டமும் சுடரும் அல்லா* ஆற்றலும் ஆய எந்தை*
ஒண் திறல் தென்னன் ஓட* வட அரசு ஓட்டம் கண்ட*
திண் திறலாளர் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

007 .திவ்ய ப்ரபந்தம் - 1294 - பெரிய திருமொழி - 4.5.7
குன்றமும் வானும் மண்ணும்* குளிர் புனல் திங்களோடு*
நின்ற வெம் சுடரும் அல்லா* நிலைகளும் ஆய எந்தை*
மன்றமும் வயலும் காவும்* மாடமும் மணங் கொண்டு* 
எங்கும் தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1295 - பெரிய திருமொழி - 4.5.8
சங்கையும் துணிவும் பொய்யும்* மெய்யும் இத் தரணி ஓம்பும்*
பொங்கிய முகிலும் அல்லாப்* பொருள்களும் ஆய எந்தை*
பங்கயம் உகுத்த தேறல்* பருகிய வாளை பாய*
செங் கயல் உகளும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1296 - பெரிய திருமொழி - 4.5.9
பாவமும் அறமும் வீடும்* இன்பமும் துன்பம் தானும்*
கோவமும் அருளும் அல்லாக்* குணங்களும் ஆய எந்தை*
மூவரில் எங்கள் மூர்த்தி* இவன் என முனிவரோடு*
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1297 - பெரிய திருமொழி - 4.5.10
திங்கள் தோய் மாட நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானை*
மங்கையர் தலைவன் வண் தார்க்* கலியன் வாய் ஒலிகள் வல்லார்*
பொங்கு நீர் உலகம் ஆண்டு* பொன் உலகு ஆண்டு* 
பின்னும் வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்* விளங்குவாரே|
 
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 90

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 35

ஸ்கந்தம் 03

த்யான யோகம் - 2

த்யான யோகத்தின் எட்டு படிகளை விளக்கிக் கொண்டிருக்கும் கபில பகவான் இப்போது த்யானம் செய்ய வேண்டிய ரூபத்தை வர்ணிக்கிறார்.

மலர்ந்த செந்தாமரை போன்ற முகம், தாமரையிதழ் போல் பிரிந்து செவ்வரியோடிய நீண்ட பெரிய விழிகள். நீலோத்பல (கருநெய்தல்) மலர் போன்ற கருநீலத் திருமேனி, கைகளில் சங்கம், சக்ரம், கதை, அரையில் மலர்ந்த தாமரை மலரின் மகரந்தம் போல் பொன்னிறப் பட்டாடை, திருமார்பில் ஸ்ரீ வத்ஸம் என்ற மரு. கழுத்தில் அழகிய கௌஸ்துப ஹாரம், மார்பில் கொழுத்த வண்டுகள் கூட்டமாய் மொய்க்கும் வனமாலை, விலை உயர்ந்த மாலைகள், கைகளில் கைவளைகள், தலையில் நவரத்ன கிரீடம், தோள்களில் தோள் வளைகள், அரையில் தங்க அரைஞாண் கயிறு, திருவடிகளில் சிலம்புத் தண்டைகள், பக்தர்களின்‌ஹ்ருதய கமலமே அவரது ஆசனம். ஆயிரமாயிரம் கண்கள் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தாலும் தெவிட்டாத சாந்தமான அழகான திருமேனி.

இப்படிப்பட்ட பூரண அழகுடைய பகவானை மனம் ஒரு நிலைப்படும் வரை த்யானிக்க வேண்டும்.

பகவானின் லீலைகள் அனைத்தும் மனத்தைக் கவர்ந்திழுக்கக் கூடியவை. ஆகவே நின்ற திருக்கோலம், உலாவரும் கோலம், அமர்ந்த திருக்கோலம், சயனத் திருக்கோலம், இதயாகாச குகையில் இருக்கும்‌ திருக்கோலம், இன்னும்‌ அவரவர் மனத்திற்கேற்ப பற்பல கோலங்களிலும் த்யானிக்கலாம்.

பின்னர் படிப்படியாக பகவானின் ஏதாவதொரு அங்கத்தில் மனத்தை நிறுத்த வேண்டும்.


பகவானின் திருவடித் தாமரை களை முதலில் த்யானம் செய்ய வேண்டும்.

அத்திருவடிகள் த்வஜம், அங்குசம், வஜ்ரம், தாமரை முதலிய ரேகைகள்‌ கொண்டது. சற்றே எடுப்பான சிவந்த நகங்களின்‌ காந்தி, நிலவு போல் அடியார் மனத்திற்குக் குளுமை தந்து சாந்தி தர வல்லது.

திரிவிக்ரம அவதாரத்தின் போது ஸத்யலோகம் வரை நீண்ட இத்திருவடிகளை ப்ரும்மா கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய அந்த நீரான கங்கையாயிற்று.

அந்த கங்கையைத் தலையில் தரித்தார் சிவன்.

இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பொடிப் பொடியாக்கியது போல், இத்திருவடிகள் பக்தர்களின் மலை போன்ற பாவக் குவியலைப் பொடிப் பொடியாக்குகின்றது. அத்தகைய திருவடிகளை வெகுநேரம் தியானம் செய்ய வேண்டும்.

அதன்பின் அவரது கரங்களால் அடிக்கடி வருடப்படும் முழந்தாள்களை தியானம் செய்தல் வேண்டும். மிகவும் வலுவான பகவானின் தொடைகள் கருடனால் சுமக்கப்படுவது. அவற்றை மனத்தில் நிறுத்த வேண்டும்.

பின் பகவானது தொப்புள் கொடியையும், அதைக்கொண்ட திருவயிற்றையும் தியானம் செய்ய வேண்டும்.


ஸகல உலகங்களுக்கும் தோற்றுவாய் அதுதானே. அதன் மின் முத்துமாலைகள் தவழும் மரகத மலைத்தடம் போன்ற திருமார்பை தியானம் செய்ய வேண்டும்.

அத்திருமார்பில் அல்லவோ மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்? நினைப்பவர்க்கு மனநிறைவை அளிப்பது. கண்களுக்கு விருந்தாவது. கௌஸ்துபமணி திகழும் அத்திருமார்பத்தை வெகுநேரம் தியானிக்க வேண்டும்.

பகவானின் நான்கு நகரங்களும் எண்டிசை லோகபாலர்களின் இருப்பிடம். மந்தர மலையை மத்தாக நிறுத்தி அமுதம் கடைந்தபோது கலகலவென்று உராய்ந்த பளபளக்கும் பொன் வளைகள் மிளிரும் திருக்கரங்களைத் தியானம் செய்ய வேண்டும்.

ஒரு கரத்தில் ஆயிரம் சூரியன்போல் ப்ரகாசிக்கும் சக்கரப்படை. மறுகரத்தில் தாமரைமேல் வீற்றிருக்கும் அன்னம்போல் வெண்சங்கம். இவறரையும் தியானம் செய்தல் வேண்டும்.

பகைவர்க்கு எமனாகும் கதை, வண்டுகள் மொய்க்கும் வனமாலை, ஜீவன்களின் ஆத்ம தத்வமான கௌஸ்துபம் இவற்றை தியானம் செய்ய வேண்டும்.

தன்‌அடியார்களுக்கு அருள் வழங்கவே பகவான் பற்பல அவதாரங்களை மேற்கொள்கிறார்.

காதுகளில் ஊஞ்சலாடும் மகரகுண்டலங்களின் ஒளி கன்னத்தில் எதிரொளிக்கும். அழகு மிகுந்த தோற்றம். எள்ளுப்பூ போன்ற எடுப்பான நாசி. அன்றலர்ந்த தாமரைபோல் விளங்கிம் திருமுகத்தை தியானம் செய்ய வேண்டும்.

முன்நெற்றி முடிகள் சுருண்டு தவழும் திருமுக மண்டலம்.

தாமரைபோன்ற திருக்கண்கள். அசைந்து அசைந்து சுற்றி வரும் வாளைமீன்களாய் விழிகள். உயர்ந்து அழகுற விளங்கும் புருவங்கள்.

பகவானின் பார்வையை ஹ்ருதயத்தில் நிறுத்தி தியானிக்க வேண்டும்.

கருணையும் அன்பும் பெருக்குவது. அருள் மழை பொழிவது.

அதன் பின் பகவானின் புன்னகையை தியானம் செய்தல் வேண்டும்.

தன் திருவடிகளில் அண்டி நிற்கும் அடியார்களின் சோகக் கடலைக் கணத்தில் வற்றச் செய்வது அது.

பகவானின் திருமேனி அழகில் எளிதில் தியானத்தில் நிற்பது அவரது புன்சிரிப்பே ஆகும். சிவந்த இரு உதடுகளின் காந்தி, மல்லிகை மொட்டுக்கள் போல் அழகான சிறு பல்வரிசையில் பட்டு பற்கள் சற்றே சிவந்தது போல் காணப்படுகின்றன.

(புன்னகையொன்றினால் கர்தமரை ஆட்கொண்டார் பகவான். பகவானின் புன்னகை அழகு அவர் முகத்தில் தெரிய, தேவஹூதி மயங்கி அவரைத் திருமணம் செய்தாள். கடைசியாகச் சொல்வதே தியானத்தில் நிற்கும். தேவஹூதி ஏற்கனவே புன்னகை அழகில் ஈடுபட்டவள் என்பதால் அவளுக்கு அது சுலபமான தியானப்பொருளாகும் என்று நினைத்து கடைசியாக அதையே அவளது நினைவில் நிறுத்துகிறார் போலும்).

இவ்வாறு பகவானை தியானம் செய்ய செய்ய அவர்மீது அளவிலாக் காதல் பெருகும்‌. பக்தியினால் உளமுருகும். ஆனந்ததினால் உடல் புல்லரிக்கும். ஆனந்தக் கண்ணீர் பெருகும். இதுவரை புத்தியினால் தியானரூபத்தைப் பிடித்துக் கொண்டவர்க்கு, இனி புத்தியின் செயல்பாடுகளும் நின்றுபோகும். அதாவது மீன் பிடிக்கப் பயன்பட்ட வலை, மீனைப் பிடித்ததும் கைவிடப்படுவது போல்.

அதன்பின் அவன் எங்கும் எதிலும் பகவானையே காண்பான். தனியாக பகவத் தியானம் அவசியமற்றுப் போகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்