||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 122 - கடை தாம்புக்கு ஆப்புண்டவன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
சேப்பூண்ட* சாடு சிதறித் திருடி*
நெய்க்கு ஆப்பூண்டு*
நந்தன் மனைவி கடை தாம்பால்*
சோப்பூண்டு துள்ளித்* துடிக்கத் துடிக்க*
அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)
- சேபூண்ட - எருதுகள் கட்டுதற்கு உரிய
- காடு – சகடம் (அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை)
- சிதறி - உருக்குலையும்படி உதைத்து
- நெய்க்கு - நெய்க்கு ஆசைப்பட்டு
- திருடி - களவு செய்து
- ஆப்பூண்டு - உடைமைக்கு உரியவர் கையில் அகப்பட்டுக் கொண்டு
- அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க
- நந்தன் மனைவி - நந்தகோபன் தேவியான அவ் யசோதை
- கடை தாம்பால் - தயிரைக் கடையும் தாம்பாலே அடிக்க
- துள்ளித் துடிக்க - துடிக்க துடிக்க
- சோப்பூண்டு - அள்ளி மிகவும் துடிக்கும் படி அடி யுண்டு
- அதனோடு நில்லாமல்
- அன்று - அக்காலத்தில்
- ஆப்பூண்டாள் - எங்கும் சலிக்க முடியாதபடி உரலில் கட்டுண்டவனுமாகிய கண்ணன்
- அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
- அம்மனே - அம்மா!
- அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்
மிக வேகமாக சகட உருவில் வந்த அசுரனை தன் சிறிய திருவடிகளைக் கொண்டு உதைத்து சிதறும்படி செய்தவனும், நெய்யைத் திருடியதற்காக இடையர்களிடம் பிடிபட்டு, நந்த கோபனின் மனைவி யசோதையிடம் தயிர் கடையும் மத்தினால் உதை வாங்கி வலியால் துடித்தவனும், ஒருசமயம் உரலில் கட்டுண்டவனாயும் திகழ்ந்த கண்ணன் ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment