About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 28 November 2025

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 1

கௌசல்யா ஸுப்ரஜா இராம
பூர்வா ஸந்த்⁴யா ப்ரவர்த்ததே|
உத்திஷ்ட² நர ஸார்தூ³ல
கர்த்தவ்யம் தெ³ய்வம் ஆஹ்நிகம்|| (2) 


கோஸலையின் நற்புதல்வனே! மாந்தர்களில் உயர்ந்தவனே! இராமபிரானே! ஸூரியன் கிழக்குத் திக்கிலே எழுகின்ற காலைப் பொழுது ஆரம்பம் ஆகிறது. தேவர்கள் முதலானவர்களைக் குறித்துச் செய்ய வேண்டிய நித்ய கருமங்கள் அனுஷ்டாநங்கள் செய்யப்பட வேண்டும். ஆதலால் நீ உன் தம்பியுடன் துயில் எழுந்து அருள்வாயாக. வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ முகுந்த மாலா - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலா – 1

ஸ்ரீ வல்லபே⁴தி வரதே³தி த³யா பரேதி 
ப⁴க்தி ப்ரியேதி ப⁴வலுண்ட²ன கோவிதே³தி| 
நாதே²ததி நாக³ ஸ²யநேதி ஜகந்நிவாசே 
த்யாளா பநம் பிரதிபத³ம் குரு மே முகுந்த³:|| 


முகுந்தா! (முக்தியை அளிப்பவனே) ஸ்ரீ வல்லபா! (லக்ஷ்மி நாயகா) வரமளிக்கும் வரதா! தயாபரா! (பெரும் கருணையுடையவனே) பக்தப்ரியா! (அடியார்களுக்கு ப்ரியமானவனே) பிறவித் துன்பத்தை நீக்கும் பரந்தாமா! என்னை ஆளும் நாதா! ஆதிசேஷனாகிய மஞ்சத்தில் சயனித்து இருப்பவனே! இப்பிரபஞ்சத்தில் எங்கும் பரந்து விரிந்து உறைந்திருக்கும் ஜகந்நிவாசா! என்றெல்லாம், எப்போதும் உன் திவ்ய நாமங்களையே பாடுபவனாக (ஜபிப்பவனாக) என்னை வைப்பாயாக! 

நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளையும், பகவானுடைய நாமங்களின் மகிமைகளையும் எடுத்துக் கூறுவதற்காகவே பாடப்பட்டது 'முகுந்தா மாலா' ஸ்தோத்திரம் ஆகும். இந்த 40 சுலோகங்களும் முகுந்தனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாமாலை ஆகும். இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் கண்ணனின் அழகு, கல்யாண குணங்கள், சம்சாரக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் ஜீவர்களுக்கு கண்ணனே கரை சேர்க்கும் தோணி, பிறவிப் பிணிக்கு முகுந்தனே மருந்து என பல உயர்ந்த கருத்துக்களைப் பற்றி பக்தி மணம் கமழ உரைக்கின்றன. இந்த முதல் ஸ்லோகத்தில் பல நாமங்களை எடுத்துக்கூறியுள்ளார் குலசேகரப் பெருமாள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருவேங்கட மஹாத்மியம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்வேத வராஹம்||

||ஓம் நமோ நாராயணா||

ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு பகல்
ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு இரவு

பிரமனின் ஒரு நாள் பொழுது நீளும் நமக்கு
இரண்டாயிரம் சதுர் யுகங்களாக பூவுலகில்

ஒரு நாள் முடிந்ததும் எரிப்பான் சூரியன்
ஒரு துளி மழை விழாது பூமியின் பரப்பில்

முன்னமேயே இதை அறிந்த முனிவர்கள்
சென்று அடைக்கலம் புகுவர் ஞானவுலகில்

மரம் செடி கொடி ஜீவராசிகள் அனைத்தும்
எரிந்து சாம்பலாகி விடும் அதீத உஷ்ணத்தில்

தொடர்ந்து வீசும் காற்று பல ஆண்டுகளுக்கு
அடர்ந்த மேகத்திறள் உருவாகும் வானில்

கொட்டும் கன மழை பூமியின் மேற்பரப்பு அதிர
கெட்டிப் பட்டு பூமி பதிந்து விடும் பாதாளத்தில்

பொங்கி எழுகின்ற ஜலப் பிரவாகத்தால்
தாங்கும் நீர் மகர லோகம் வரையிலும்

வடியாது நீர் பிரமனின் இரவு முடியும் வரை
படைப்பைத் தொடங்க வேண்டும் மீண்டும்

வெள்ளைப் பன்றி உருவெடுப்பார் விஷ்ணு
வெள்ளத்தில் தேடிச் செல்வார் பூவுலகினை

பாய் போலச் சுருட்டி ஒளித்து வைத்திருப்பான்
பாதாளத்தில் பூமியை அரக்கன் ஹிரண்யாக்ஷன்

தரணியை வெளிக் கொணரும் முன்பு வராஹம்
ஹிரண்யாக்ஷனை வெற்றி கொள்ள வேண்டும்

தொடங்கும் துவந்த யுத்தம் இருவரிடையே
தொடரும் துவந்த யுத்தம் வெகு நீண்டகாலம்

கூரிய நகங்களாலும் கோரைப் பற்களாலும்
கிழித்து அரக்கனை அழித்து விடும் வராஹம்

ஜலத்தில் கலந்து விடும் பெருகும் குருதி நதி
ஜல ப்ரவாஹம் ஆகி விடும் செந்நீராக அப்போது

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 158

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 158||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 20||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

ஏகோ விஷ்ணுர் மஹத்³ பூ⁴தம் 
ப்ருத²க்³ பூ⁴தாந் யநேகஸ²꞉|
த்ரீந் லோகாந் வ்யாப்ய பூ⁴தாத்மா 
பு⁴ங்க்தே விஸ்²வ பு⁴க³வ்யய꞉|| 

  • ஏகோ - எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்த தெய்வமாக இருப்பது 
  • வியாப்ய - எல்லா உயிரினங்களின் உள் ஆன்மாவாகவும், கட்டுப்படுத்துபவராகவும், எஜமானராகவும் இருப்பதன் மூலம் 
  • அநேகஸ²ஹ ப்ருத²க்³ பூ⁴தாநி – எண்ணற்ற வடிவங்கள், நடத்தைகள், பிறழ்வுகள் மற்றும் பயன்கள் கொண்ட பெரிய கூறுகள், அவை வேறுபட்டவை மற்றும் வேறுபட்டவை 
  • த்ரீந் லோகாந் ச – மேலும் மூன்று ஆன்மாக்களின் உலகங்கள், அதாவது, பிணைக்கப்பட்ட ஆன்மாக்கள், விடுவிக்கப்பட்ட ஆன்மாக்கள் மற்றும் நித்திய தேவதைகள் 
  • விஸ்²வ பு⁴க்³ - மேலும் அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்தையும் ஒரே பாதுகாவலராகக் கொண்டிருப்பதன் மூலம் 
  • ததாபி - அப்படியிருந்தும் 
  • அவ்யயஹ - அந்தர்யாமியாக இருக்கும் எந்த ஆத்மாவின் குறைகளாலும் தீண்டப்படாமல் இருப்பது 
  • மஹத்³ பூ⁴தம் - வார்த்தைகள் மூலமாகவோ அல்லது மனதின் கற்பனை மூலமாகவோ அவரது மகத்துவம் விவரிக்க முடியாதது 
  • பு⁴ங்க்தே - மேலும் அவர் தெய்வீக விளையாட்டு மற்றும் தெய்வீக பேரின்பத்தின் இன்பத்தை அனுபவிக்கிறார் 

ஸ்ரீ மகாவிஷ்ணு ஒருவரே, மகத்தான வடிவத்தைக் கொண்டவர். ஆனாலும் அவரே பல பல விதங்களாக தன்னைப் பிரித்துக் கொண்டு எல்லா உயிரினங்களிலும் பல வழிகளில் இருக்கிறார். ஐம்பெரும் பூதங்கள், பக்தர் முக்தர் நித்யர் என்ற மூன்று வித செயதனர்கள்,  மூன்று உலகங்களிலும் வியாபித்து அனைத்தையும் ஆள்கிறார். அவர் அவற்றை அனுபவித்து அவற்றை நுகருகிறார். அவருக்கு மரணமோ சிதைவோ இல்லை. பகவான் விஷ்ணு மட்டுமே எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்பதையும், அவர் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு இருந்தாலும், அதன் அடிப்படை ஒன்று தான் என்பதையும் விளக்குகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.22 

ந மே பார்தா²ஸ்தி கர்தவ்யம் 
த்ரிஷு லோகேஷு கிஞ்சந|
நாந வாப்த மவாப் தவ்யம் 
வர்த ஏவ ச கர்மணி||

  • ந - ஏதுமில்லை 
  • மே - எனது 
  • பார்த² - பிருதாவின் மகனே 
  • அஸ்தி - இருக்கிறது 
  • கர்தவ்யம் - விதிக்கப்பட்ட கடமை 
  • த்ரிஷு - மூன்று 
  • லோகேஷு- உலகங்களிலும்  
  • கிஞ்சந - எதுவும் 
  • ந - இல்லை  
  • அநவாப்தம் - தேவையானது  
  • அவாப்தவ்யம் - அடைய வேண்டியது 
  • வர்தே - ஈடுபட்டுள்ளேன்  
  • ஏவ - நிச்சயமாக  
  • ச - மேலும்  
  • கர்மணி - விதிக்கப்பட்ட கடமையில்

பார்த்தா! மூன்று உலகங்களிலும் எனது விதிக்கப்பட்ட கடமைகள் ஏதுமில்லை. எனக்கு, தேவையானதும் அடைய வேண்டியதும் எதுவும் இல்லை. இருப்பினும் நான் கடமையில் ஈடுபட்டுள்ளேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.15

ஜுகு³ப் ஸிதம் த⁴ர்ம க்ருதே நுஸா² ஸத:
ஸ்வபா⁴வ ரக் தஸ்ய மஹாந் வ்யதிக்ரம:|
யத்³ வாக்யதோ த⁴ர்ம இதீதர: ஸ்தி²தோ
ந மந்யதே தஸ்ய நிவாரணம் ஜந:||

  • ஸ்வபா⁴வ ரக் தஸ்ய - இயற்கையிலேயே விஷயாதிகளில் பற்று கொண்ட மனிதனுக்கு
  • த⁴ர்ம க்ருதே - தர்மத்தின் பொருட்டு
  • ஜுகு³ப் ஸிதம் - நிந்திக்க தகுந்தவைகளான காம்ய கர்மாக்களை
  • அநுஸா² ஸதஹ - உபதேசம் செய்கின்ற தங்களுக்கே
  • மஹாந் வ்யதிக்ரமஹ - பெரிய தப்பிதம் ஏற்பட்டிருக்கிறது
  • யத்³ வாக்யதோ - தங்களின் வாக்கியத்தில் இருந்து
  • த⁴ர்ம இதி - இது தான் முக்கிய தர்மம் என்று
  • இதரஸ் ஜநஹ - சாதாரண மனிதன் ஒருவன்
  • ஸ்தி²தோ - நம்பி விடுகிறான்
  • தஸ்ய - அவனுக்கு
  • நிவாரணம் - காம்ய கர்மாக்களில் இருந்து உம்மாலோ மற்றவர்களாலோ செய்யப்படும் தடையை
  • ந மந்யதே - அவன் உண்மை என்று எண்ணுவதில்லை

விலக்கத்தக்க கர்மாக்களைச் செய்வதில், மனிதனின் மனம் இயல்பாகவே ஈடுபடுகிறது. தாங்கள், தர்ம காரியம் என்ற பெயரில் விலங்குகளைப் பலியிடுதல் போன்ற வெறுக்கத்தக்க சில காம்ய கர்மாக்களைச் செய்ய அனுமதித்தீர்கள். ஆனால், நிலைமை முற்றிலும் எதிராக மாறி விட்டது. மந்த புத்தியாளர்கள், தாங்கள் முன்னர் கூறிய தர்மங்களையே உறுதியாகப் பற்றிக் கொண்டுவிட்டார்கள். அது தவறு என்று யார் சொன்னாலும் ஏற்க மறுக்கிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.93

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.93

ந சாபி க்ஷுத்³ ப⁴யம் தத்ர
ந தஸ்கர ப⁴யம் ததா²|
நக³ராணி ச ராஷ்ட்ராணி
த⁴நதா⁴ந்ய யுதாநி ச|| 

  • தத்ர - அங்கு
  • க்ஷுத்³ ப⁴யம் அபி - பசியால் உண்டாகிற பயமும்
  • ந - இல்லை
  • ததா² - அப்படியே
  • தஸ்கர ப⁴யம் ச - திருடர்களுடைய பயமும்
  • ந - இல்லை
  • நக³ராணி ச - பட்டணங்களும்
  • ராஷ்ட் ராணி ச - தேசங்களும்
  • த⁴ந தா⁴ந்ய - தன தானியங்களோடு
  • யுதாநி - கூடினவைகளாக ஆயின
பசி பயமோ, கள்வர் பயமோ ஒரு போதும் இருக்காது. நகரங்களிலும், ராஷ்டிரங்களிலும், மாநிலங்களிலும் தனமும், செல்வமும், தானியங்களும் பெருகியிருக்கும்.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 133 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 133 - யான்நோற்ற நோன்பின் பயன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்||

மின் அனைய நுண் இடையார்* 
விரி குழல் மேல் நுழைந்த வண்டு* 
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்* 
இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்*
என்ன நோன்பு நோற்றாள் கொலோ* 
இவனைப் பெற்ற வயிறு உடையாள்* 
என்னும் வார்த்தை எய்து வித்த* 
இருடிகேசா! முலை உணாயே|

  • மின் அனைய - மின்னலைப் போன்ற
  • நுண் - நுட்பமாக உள்ள
  • இடையார் - இடுப்பை உடைய பெண்களின்
  • விரி குழல் மேல் - விரிந்து பரந்த கூந்தலின் மேல்
  • நுழைந்த - தேனை உண்ணப் புகுந்த
  • வண்டு - வண்டுகள் தேனை உண்டு களித்து
  • இன் இசைக்கும் - இனிதாக ரீங்காரம் செய்யும்
  • வில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்திலே
  • இனிது - மன நிறைவாய் 
  • அமர்ந்தாய் - எழுந்தருளி இருப்பவனே!
  • உன்னைக் கண்டார் - உன்னைப் பார்ப்பவர்
  • என்ன நோன்பு - என்ன தவம்
  • நோற்றாள் கொலோ - செய்தாளோ
  • இவனைப் பெற்ற - இவனை பிள்ளயாகப் பெற்ற
  • வயிறு உடையாள் - வயிற்றை யுடையவள்
  • என்னும் - என்று கொண்டாடிச் சொல்லுகிற
  • வார்த்தை - வார்த்தையை
  • எய்துவித்த - எனக்கு உண்டாகும் படி செய்த
  • இருடீகேசா! - ஹ்ருஷீகேசனே!
  • முலை உணாயே - தாய்ப் பாலை உண்ணாயோ!

மின்னல் கொடி போன்ற இடையையுடைய பெண்களின் விரிந்து பரந்த கூந்தலின் மேல் தேனை குடிக்க நுழைந்த வண்டுகள் இன்னிசை பாடி நிற்க, ஸ்ரீவில்லிபுத்தூரில் அழகாகத் தோன்றியவனே! உன்னைப் பார்த்தவர்கள் இவனைப் பெற்றெடுத்தவள் என்ன தவம் செய்தாளோ! என்று சொல்லும் புகழ்ச் சொல்லுக்கு உரியவளாக என்னை ஆக்கின ஹ்ருஷீகேசனே! என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 041 - திருவஹீந்திரபுரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||041. திருவஹீந்திரபுரம்|| 
||திரு அயிந்தை - திருவந்திபுரம் - கடலூர்||
||நாற்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ தெய்வ நாயகன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ தெய்வ நாயகன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - தெய்வ நாயகன்
  • பெருமாள் உற்சவர் - அச்சுதன், மூவராகிய ஒருவன்
  • தாயார் மூலவர் - ஹேமாம்புஜவல்லி
  • தாயார் உற்சவர் - வைகுந்தவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - சேஷ, கருட நதி
  • விமானம் - சுத்த ஸத்வ, சந்திர
  • ஸ்தல விருக்ஷம் - வில்வம்
  • ப்ரத்யக்ஷம் - சந்திரன், கருடன்
  • ஆகமம் - பாஞ்சராத்திரம்
  • ஸம்ப்ரதாயம் - வட கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10 

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. கருடன் கொண்டு வந்த நதி, கருட நதி என்று அழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் உண்டாகும். ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக் காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது. பொதுவாக பெருமாள் கோயில்களில் லக்ஷ்மி நரஸிம்ஹர் சந்நதியில் நரஸிம்ஹர் லக்ஷ்மியை இடது மடியில் அமர வைத்திருப்பார். ஆனால் இத்தலத்தில் நரஸிம்ஹர் தனது வலது தொடையின் மீது அமர வைத்து அருள் பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். இலங்கைக்கு சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச் சென்ற போது அநுமானின் கையில் இருந்த சஞ்சீவி மலையிலிருந்து சிறிதளவு சரிந்து இந்த மலையில் விழுந்ததனால் இது ஒளஷாதாசலம் என்ற பெயரை உறுதிப்படுத்திக் கொண்டதாம். உடற் பிணிகளை போக்கும் ஒளஷதிகள் இங்கே காணப்படுகின்றன. அந்த மலையில் லக்ஷ்மி ஹயக்ரீவர் எழுந்தருளி உள்ளார். வேதாந்த தேசிகன் இங்குள்ள ஒளஷதாசலத்தில் தவம் புரிந்து ஹயக்ரீவனையும் கருடனையும் கண்டு வரம் பெற்றார். ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில் தான் முதன் முதலில் கோயில் ஏற்பட்டது.

பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்ட போது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்லி தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோயிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு மிளகு வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி, பால் உண்ணி ஆகியவை மறையும். ஸர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஸர்ப்பத்தை வழிபட்டால் தோஷம் நீங்கும்.

பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு, மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம். வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் ஸ்ரீ தேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது. வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம். தேசிகன் பெருமாளை நாயகா நாயகி பாவத்தில் (பெருமாள் - நாயகன் தேசிகன் - நாயகி) அநுபவித்து வழிபட்டுள்ளார். தன் விக்ரத்தை தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது. யுகம் கண்ட பெருமாள் என்று போற்றப்படுகின்றார்.

ஒரு காலத்தில் அகம்பாவம் பிடித்த தேவர்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப் பட்டார்கள். அவர்கள் ஒளஷதா சலத்துக்கு வந்து வணங்க நாரயணன் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். அசுரர்கள் பிரம்மனிடம் முறையிட பரமனை துணை கொண்டு யுத்தம் செய்யுங்கள் என்று கூறியனுப்பினார். அசுரர்களுக்கு பக்கபலமாக சிவன் நின்றார். சிவனால் தேவர்கள் தாக்கப்பட்டு அல்லலுறுவதைக் கண்ட நாராயணன் சக்ராயுதத்தை ஏவினார். அசுரர்களை விரட்டிச் சென்று கொன்று குவித்தது. இறுதியில் எல்லோரும் நாராயணனிடம் சரண் அடைந்தனர். எல்லாரையும் பகவான் அரவணைத்தார். தாமே மும்மூர்த்தியாகக் காட்சி அளிப்பதாகக் கூறிய பகவான் தமது திருமேனியில் பிரமனையும் சிவனையும் காட்டி அனைவரையும் மகிழ்வித்தார்.தேவர்களுக்கு தலைவனாக இருந்தது கொண்டு தேவநாதன் என்ற திருநாமம் பெற்றார். அங்கேயே ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேஷன் அங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அது தான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 101

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 46||

||ஸ்கந்தம் 04||

மனுவின் வம்சத்தைத் தொடர்ந்து கூறினார் மைத்ரேயர்.

ப்ரும்ம தேவரின் மகன் தக்ஷன் ஸ்வாயம்புவ மனுவின் மகள் ப்ரஸூதியை மணந்தான் என்று பார்த்தோம்.

அவர்களுக்கு கண்ணழகிகளாக பதினாறு மகள்கள் பிறந்தனர்.

தக்ஷன் தன் பதிமூன்று பெண்களை தர்ம தேவதைக்கும், அக்னிக்கு ஒரு பெண்ணையும், பித்ரு கணங்களுக்கு ஒரு பெண்ணையும், ஸம்சார பந்தத்தைப் போக்கும் சிவனுக்கு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொடுத்தான்.

ச்ரத்தை, மைத்ரி, தயை, சாந்தி, துஷ்டி, புஷ்டி, கிரியை, உன்னதி, புத்தி, மேதை, திதிக்ஷை, ஹ்ரீ, மூர்த்தி ஆகிய பதிமூன்று பேரும் தர்மதேவனின்‌ மனைவிகள்.

ச்ரத்தை சுபனையும், மைத்ரீ ப்ரஸாதனையும், தயை அபயனையும், சாந்தி சுகனையும், துஷ்டி முதனையும், புஷ்டி செருக்கையும் (அஸூய:) பெற்றார்கள்.

எல்லா நற்குணங்களையும் கொண்ட மூர்த்தி என்பவள் நர, நாராயணன் என்னும் ரிஷிகளைப் பெற்றாள்.

இவ்விருவரும்‌ பிறந்த போது, உலகெங்கும்‌ செழித்து மகிழ்ந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்து துதி செய்தனர். அவர்களது துதியைக்‌ கேட்டு மகிழ்ந்த நர நாராயணர்கள் கந்தமாதன மலை நோக்கிச் சென்றனர்.


விதுரா! பகவானின் அம்சமான அவர்களே பூபாரம் தீர்க்கவேண்டி இப்போது யது வம்சம், குரு வம்சம் இரண்டிலுமாக ஸ்ரீ க்ருஷ்ணனாகவும், அர்ஜுனனாகவும் அவதாரம்‌ செய்துள்ளார்கள்.

அக்னி தேவனின் மனைவியான ஸ்வாஹா என்பவள் பாவகன், பவமானன், சுசி என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் வேள்விகளில் ஹோமம் செய்யப்படும் பொருள்களை மட்டுமே புசிப்பார்கள். இந்த மூவரிடமிருந்து 45 விதமான அக்னிகள்‌ தோன்றின.

தாத்தாவான அக்னி தேவன், மகன்களான மூன்று பேர், அவர்களின் மகன்களான 45 பேர், ஆகிய நாற்பத்தொன்பது பேரும் அக்னிகளே. வே‌தம் ஓதும் அறிஞர்கள் இவர்களின் திருப்பெயர்களைச் சொல்லியே இஷ்டிகளைச் செய்கின்றனர்.

அக்னிஷ்வர்த்தாக்கள், பர்ஹிஷதர்கள், ஸோமபர்கள், ஆஜ்யபர்கள் என்று நால்வகை பித்ருதேவதைகள் உளர்.

அவியுணவை உண்பவர்கள் அக்னிகள் என்றும், அந்தணர்களின் திருக்கரங்களில் இடுபவற்றை உண்பவர் அனக்னிகள் என்றும் அறியப்படுவர்.

இந்த பித்ருதேவதைகளின் ஸ்வரூபத்தின் மனைவி ஸ்வதா என்பவள்.

இவர்களது குழந்தைகள் வயுனா, தாரினி என்ற இரு பெண்கள். இவர்கள் வேதம் ஓதியவர்கள். இவர்களுக்கு சந்ததி இல்லை.

பரமேஸ்வரனின் மனைவியான ஸதி பெரும் குணவதி. அவள் எப்போதும் அவருக்குத் தொண்டு செய்வதிலேயே அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தாள். அவளுக்கும் புத்ரன் இல்லை.

குற்றத்தையும் கூட குணமாக ஏற்கும் பரமசிவனிடம் தன் தந்தை தக்ஷன் வீண் பகை பாராட்டியதால் அவள் தன் இளம் பருவத்திலேயே யோகத் தீயினால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம்

பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரர் காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாகக் கருதப்படுகிறார். இவர் பல கடும் தவங்களையும், யாகங்களையும் புரிந்து வந்தார்.

இவர் வேள்வி நடத்தும் போது தாடகை உள்ளிட்ட அரக்கர்கள் அவரின் வேள்விக்கு இடையூறு செய்து வந்தனர். இதனால் கலங்கிய விஸ்வாமித்திரர் ஒரு முறை அயோத்தியை ஆண்டு வந்த தசரதனின் அரசவைக்கு வந்து அரக்கர்களிடமிருந்து தங்களின் வேள்வியைக் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வேள்வியைக் காக்க ராமனை அனுப்பி வைக்க வேண்டினார். அதன் படி ராமனையும், லட்சுமணனையும் அனுப்பி வைக்கப்பட்டார்.


வெகுதூரம் விசுவாமித்திரருடன் வனத்தில் நடந்து சென்றனர். நீண்ட நேரம் கால்நடையாகச் சென்றதால் கங்கைக்கரையில் ஓய்வெடுக்க முடிவெடுத்தனர். அரசகுமாரர்களாக இருதாலும் அதிக கலைப்பு காரணமாக ராம லட்சுணர்கள் வனத்தில் தங்களை மறந்து நன்றாக உறங்கினர்.

நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அவர்களை அதிகாலையில் விஸ்வாமித்திரர் எழுப்ப முற்பட்டார். ஆனால் எழுந்திருக்காததால், அவர் கங்கை நதிக்கு சென்று நீராடி, ஜப தபங்களை எல்லாம் செய்து முடித்துவிட்டும் திரும்பி வந்தார்.

அப்போதும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். ராம- லட்சுணர்களை எழுப்பத் தொடங்கிய அவர் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருந்தாராம். இருப்பினும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது உருவானது தான் “கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா” எனும் சுப்ரபாதம். தனக்கு தெய்வக் குழந்தையான ராம - லட்சுமணனை எழுப்பும் பாக்கியம் கிடைத்ததே என எண்ணி ஆனந்தம் கொண்டார். ஆனால் அவர்கள் எழுந்திருக்காத நிலையில் தினமும் ராமனை எழுப்பக்கூடிய கெளசல்யா எத்தனை பேறு பெற்றிருப்பார் என நினைத்துக் கொண்டார்.

அதனால் ராமனை தினமும் எழுப்பக் கூடிய ‘கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா…’ என சுப்ரபாதத்தைப் பாடி எழுப்பத் தொடங்கினார்.

விசுவாமித்திரர் அவர்களை கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலி போல் மனிதா செய்திடுவாய் இறைகடமை! என கெளசல்யா சுப்ரஜா என்ற அவர்களை எழுப்பக் கூடிய பாடலை விசுவாமித்திரரின் வார்த்தைகளை கொண்டே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி என்பவர் எழுதினார்.

ராமனை மட்டும் இந்த சுப்ரபாதத்தில் குறிப்பிடப்படுகின்றதே ஏன் லட்சுமணனை குறிப்பிடப்படவில்லை என நம்மில் பலருக்கு கேள்வி எழும். அதற்கு காரணம் திருமாலின் படுக்கையான ஆதிசேஷனின் அவதாரம் தான் லட்சுமணன். மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமனை எழுப்பிய அவர், விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷனை எழுப்பவில்லை. அவரை எழுப்பவும் முடியாது. திருமாலை எழுப்பினால் ஆதிசேஷனும் எழும்பி விடுவார். 
அதனால் தான் லட்சுமணனை இதில் சேர்க்கவில்லை.

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் என்பது திருமலை வேங்கடேஸ்வரப் பெருமானை அதிகாலையில் எழுப்பி, தெய்வீக அருளையும், நல்ல தொடக்கத்தையும் வேண்டிப் பாடப்படும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தோத்திரத் தொகுப்பாகும். இது "சுப்ரபாதம்" எனப்படும் காலைப் பிரார்த்தனை வகையைச் சார்ந்தது. 29 ஸ்தோத்திரங்கள் கொண்ட சுப்ரபாதம் மற்றும் 11 ஸ்தோத்திரங்கள் கொண்ட ஸ்தோத்ரம் என நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. ஸ்ரீ பிரதிவாதி பயங்கர ஸ்ரீ அனந்தாச்சாரியார் இயற்றினார். இதை தினமும் காலையில் பாராயணம் செய்வது பக்தியை வளர்க்கிறது, எதிர்மறை ஆற்றல்களை விரட்டுகிறது மற்றும் ஆன்மாவை விஷ்ணுவின் அருளுடன் இணைக்கிறது. சமஸ்கிருதத்தில் "சுப்ரபாதம்" என்றால் "சுபமான விடியல்" என்று பொருள். 


ஹஸ்திகிரிநாத அண்ணன் (14 ஆம் நூற்றாண்டு) காஞ்சிபுரத்தில் வசிக்கும் ஒரு ஸ்ரீ வைணவ குடும்பத்தில் பிறந்தார், அவருடைய சந்ததியினர் ஸ்ரீ ராமானுஜச்சாரியாரின் சீடர்கள். அண்ணன் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் மகனான நயன வரதாச்சாரியாரின் சீடர். காலப்போக்கில் அவர் அனைத்து அறிவுப் பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்று ஒரு திறமையான அறிஞரானார். இந்த நேரத்தில், சிறந்த அறிஞரும் வேதாந்தத்தின் நிபுணருமான நரசிம்ம மிஸ்ரா காஞ்சிபுரத்திற்கு வந்து நாயன வரதாச்சாரியாரை ஒரு விவாதத்திற்கு சவால் விடுத்தார். ஆச்சார்யர் விவாதத்தில் பங்கேற்க விரும்பவில்லை; ஆனால் போகாமல் இருப்பது தோல்வியை ஏற்றுக்கொள்வதாகும். என்ன செய்வது என்று தெரியாமல், ஆச்சார்யர் ஒரு குழப்பத்தில் இருந்தார். தனது குருவை ஏதோ தொந்தரவு செய்வதை அண்ணன் கவனித்தார். அவர் தனது குருவை அணுகி அதற்கான காரணத்தைக் கேட்டார். வரதாச்சாரியார் அவரிடம் எல்லாவற்றையும் கூறினார். அண்ணன் தனது குருவை பணிவுடன் வணங்கி, தனக்காக விவாதத்தில் பங்கேற்க அனுமதி கேட்டார். ஆச்சார்யர் சம்மதித்தார். தனது ஆழ்ந்த அறிவு மற்றும் தொடர்புத் திறனால், அண்ணன் எளிதாக விவாதத்தில் வெற்றி பெற்றார். குரு நாயன வரதாச்சாரியார் தனது சீடரின் அற்புதமான நடிப்பைப் பற்றி கேள்விப்பட்டார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த ஆச்சார்யர், அவருக்கு "பிரதிவாதி பயங்கரர்" (எதிரியை அச்சுறுத்துதல்) என்ற பட்டத்தை வழங்கினார்! 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமானுக்கு அண்ணன் தொடர்ந்து சேவை செய்து வந்தார். திருமலை வெங்கடேசப் பெருமானின் மகிமைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அண்ணன், திருமலைக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்ய முடிவு செய்தார். தனது மனைவியுடன் திருமலையை அடைந்தார். அனந்தாழ்வாரின் சந்ததியினருடன் தன்னை இணைத்துக் கொண்டு, வெங்கடேசப் பெருமானின் "அபிஷேக கைங்கர்யத்தில்" ஈடுபட்டார். தினமும் ஆகாச கங்கையிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து, வழக்கம் மற்றும் பாரம்பரியத்தின் படி தண்ணீரில் நறுமணப் பொருட்களைச் சேர்த்து, பின்னர் அபிஷேகத்திற்காக புரோஹித்தரிடம் தண்ணீரைக் கொடுத்தார். ஒரு நாள், கோயிலுக்கு நீரை எடுத்துச் செல்லும்போது, ​​ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்த ஒரு பக்தரை சந்தித்தார். பக்தர் ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் மகா துறவி மணவாள மாமுனிகளின் மகிமைகளை விரிவாகக் கூறினார். அண்ணன் மிகவும் மனமுடைந்து, துறவியைப் பற்றி மேலும் கேட்க விரும்பினார். அவர் நேர உணர்வை இழந்தார், மேலும் இறைவனின் அபிஷேகத்திற்காக அவர் எடுத்துச் செல்லும் தண்ணீரைப் பற்றியும் மறந்துவிட்டார். மறுபுறம், அண்ணனுக்காக வீணாகக் காத்திருந்த புரோஹிதர் அவரைத் தேடி வந்தார். அண்ணன் சத்சங்கத்தில் மூழ்கியிருப்பதைக் கண்ட புரோஹிதர், அண்ணனிடமிருந்து தண்ணீர் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சடங்குகளை முடிக்க அவசரமாக கோவிலுக்குச் சென்றார். திடீரென்று, மணம் மிக்க பொருட்கள் தண்ணீரில் வழக்கமாகச் சேர்க்கப்படவில்லை என்பதை அண்ணன் உணர்ந்தார். அவர் புரோஹித்தின் பின்னால் ஓடினார், ஆனால் அவர் கருவறையை அடைந்த நேரத்தில், புரோஹிதர் அபிஷேகத்தைத் தொடங்கினார். அண்ணன் தனது சொந்த அலட்சியத்தால் மிகவும் வருத்தப்பட்டார். அவர் அமைதியாக இறைவனிடம் பிரார்த்தனை செய்து, தவறுக்கு மன்னிப்பு கேட்டார். அபிஷேக நீர் விதிவிலக்காக மணம் மிக்கது, உண்மையில் அவை தெய்வீக "சத்சங்கத்தின் நறுமணத்தைக்" கொண்டு வந்ததால் மற்ற நாட்களை விட மணம் மிக்கது என்று அண்ணன் ஒரு தெய்வீகக் குரலைக் கேட்டார்! உண்மையில், அண்ணனின் சேவைகளால் இறைவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 

இது எல்லாம் மகா மணவாள மாமுனிவரின் மகிமையால்தான் என்பதை அண்ணன் உணர்ந்தார். துறவியின் தரிசனத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற ஏங்கி, ஸ்ரீ ரங்கத்திற்குச் சென்றார். அவர் மாமுனிகளின் சீடரானார், மேலும் அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவ தாசன் என்ற தீக்ஷைப் பெயர் வழங்கப்பட்டது. ஸ்ரீ வைஷ்ணவ தாசன் தனது குருவிடமிருந்து ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் கோட்பாடுகளைக் கற்றுக்கொண்டு, ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தைப் பரப்புவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பல அறிவார்ந்த படைப்புகள் ஸ்ரீ வைஷ்ணவ தாசனுக்குச் சொந்தமானவை. அவர் ஸ்ரீ பாஷ்யத்தின் சிறந்த விளக்கவுரையாளராக இருந்ததால், அவர் ஸ்ரீ பாஷ்யச்சாரியார் என்றும் அறியப்பட்டார். 

ஸ்ரீ வைஷ்ணவ தாசனும் மாமுனிகளும் ஒரு யாத்திரையை மேற்கொண்டு இறுதியாக திருமலையை அடைந்தனர். மாமுனிகள் தனது சீடரிடம் வெங்கடேஸ்வரருக்கு ஒரு சுப்ரபாதம் இயற்றச் சொன்னார். ஸ்ரீ வைஷ்ணவ தாசன் புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தை இயற்றினார், இது நான்கு பிரிவுகளைக் கொண்டது: சுப்ரபாதம் (29 பாடல்கள்), ஸ்தோத்திரம் (11 பாடல்கள்), பிரபத்தி (16 பாடல்கள்) மற்றும் மங்கலம் (14 பாடல்கள்). ஆச்சார்யர் தனது சீடரின் இசையமைப்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும் ஆண்டு முழுவதும் (ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை பாடப்படும் மார்கழி மாதம் தவிர), ஒவ்வொரு நாளும், அதிகாலையில், சுப்ரபாதம் கருவறையில் ஓதப்படும் என்று கட்டளையிட்டார். ஸ்ரீ வைஷ்ணவ தாசனால் இயற்றப்பட்ட வெங்கடேஸ்வரரின் மகிமைகளைக் கொண்ட அழகான சுப்ரபாதம் இன்றுவரை கருவறை திறக்கும் போது பாடப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ முகுந்த மாலா அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலை

ஸ்ரீ வைஷ்ணவ பாரம்பரியத்தின் ஒரு பகுதியான முகுந்த மாலை என்பது ஸ்ரீ வைஷ்ணவ பாரம்பரியத்தைச் சேர்ந்த ஏழாவது ஆழ்வாரான, சேர மன்னர் குலசேகர ஆழ்வாரால் இயற்றப்பட்ட ஒரு சமஸ்கிருதப் பாடல் ஆகும். இதில் கிருஷ்ணரை போற்றி 40 ஸ்லோகங்கள் உள்ளன. இந்த நூல், மன்னர் பதவியில் இருந்தும், புலமை இருந்தும், உலகப் பற்றின்றி பகவானுக்கு சேவை செய்த குலசேகர ஆழ்வாரின் பக்தியைப் பிரதிபலிக்கிறது. குலசேகர ஆழ்வார், சேர மன்னராக இருந்தும், தன் ராஜ வாழ்க்கையில் இருந்த பற்றை நீக்கி, மாலவனின் (பகவானின்) சேவையில் ஈடுபட்டார். 


குலசேகர மன்னரின் பாரம்பரிய வரலாறு ஒன்று, ஒரு முறை, அவர் தனது அரண்மனை அறையில் தூங்கிக் கொண்டு இருந்த போது, ​​பகவான் கிருஷ்ணரைப் பற்றிய ஒரு அற்புதமான மற்றும் தனித்துவமான காட்சியைக் கண்டதாகக் கூறுகிறது. விழித்து எழுந்தவுடன் அவர் பக்தி மயக்கத்தில் விழுந்தார். விடியற் காலையை கவனிக்கத் தவறி விட்டார். அரச இசைக் கலைஞர்களும் அமைச்சர்களும் வழக்கம் போல் அவரை எழுப்ப அவரது வாசலுக்கு வந்தனர், ஆனால் அவர் பதில் அளிப்பதைக் கேட்காமல் சிறிது நேரம் காத்திருந்த பிறகு, அவர்கள் தயக்கத்துடன் அவரது அறைக்குள் நுழைய சுதந்திரம் பெற்றனர். மன்னர் தனது மயக்கத்தில் இருந்து வெளியே வந்து தனது காட்சியை அவர்களிடம் விவரித்தார், அன்றிலிருந்து அவர் ஆட்சி செய்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவர் தனது பெரும்பாலான பொறுப்புகளை தனது அமைச்சர்களிடம் ஒப்படைத்து, இறைவனுக்கு பக்தி சேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அரியணையைத் துறந்து ஸ்ரீ ரங்கத்திற்குச் சென்றார், அங்கு அவர் ஸ்ரீ ரங்கநாதரின் கிருஷ்ண தெய்வத்துடனும் அவரது பல உயர்ந்த பக்தர்களுடனும் இணைந்தார். ஸ்ரீரங்கத்தில் குலசேகரர் தனது இரண்டு சிறந்த படைப்புகளை இயற்றியதாகக் கூறப்படுகிறது: சமஸ்கிருதத்தில் முகுந்த மாலா ஸ்தோத்திரம்; மற்றும் 105 தமிழ் பாடல்கள், பின்னர் திருவாய்மொழியில் பெருமாள் திருமொழி என்ற தலைப்பில் இணைக்கப்பட்டன.

கு⁴ஷ்யதே யஸ்ய நக³ரே ரங்க³ யாத்ரா தி³நே தி³நே| 
தமஹம் ஸி²ரஸா வந்தே³ ராஜாநம் குலஸே²க²ரம்|| 


வந்தே³ முகுந்த³ம்  ரவிந்த³ த³லாய தாக்ஷம்
குந்தே³ந்து³ ஸ²ங்க² த³ஸ²னம் ஸி²ஸு²கோ³ப வேஷம்| 
இந்த்³ராதி³ தே³வ க³ணவந்தி³த பாத³ பீட²ம்
வ்ருந்தா³ வனாலய மஹம் வஸுதே³வ ஸூனும்||

தாமரை போன்ற நீண்ட கண்களையும், சந்திரனைப் போன்ற வெண்மையான பற்களையும், மல்லிகை மற்றும் சங்கையும் கொண்ட, எப்போதும் வணங்கப்படும் பாதங்களைக் கொண்ட, இந்திரன் மற்றும் பிற தேவர்களால், பிருந்தாவனத்தில் வசிக்கும், வாசுதேவரின் மகன் ஆகியோருக்கு வணக்கங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்