About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 23 November 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 155

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 155||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 17||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

ஸர்வாக மாநா மாசார:
ப்ரத²மம் ‌பரி கல்பத꞉|
ஆசார ப்ரபவோ தர்மோ
தர்மஸ்ய ப்ரபு ரச்யுத:||


சாத்திரங்களில் உள்ள காரியங்கள் அனைத்திலும் (நடைமுறைகள் உள்ளடங்கிய) அகத் தூய்மையும் புறத்தூய்மையும் தரும் ஆச்சார அனுஷ்டானங்களே முக்கியம். இவை தர்மத்தை காப்பதற்காகவே பெருமானால் நியமிக்கப்பட்டுள்ளன. இவைகளின் அனுஷ்டானத்தினால் தர்மத்தின் அதிபதியான, மங்கா புகழ் கொண்ட வாசுதேவன்  திருப்தி அடைவான்.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.19 

தஸ்மாத³ ஸக்த: ஸததம் 
கார்யம் கர்ம ஸமாசர|
அஸக்தோ ஹ்யா சரந் கர்ம 
பரமாப்நோதி பூருஷ:||

  • தஸ்மாத் - எனவே 
  • அஸக்தஸ் - பற்றின்றி 
  • ஸததம் - எப்போதும்  
  • கார்யம் - கடமையாக 
  • கர்ம - செயலை 
  • ஸமாசர - செய்வாயாக  
  • அஸக்தோ - பற்றின்மையோடு 
  • ஹி - நிச்சயமாக 
  • ஆசரந் - செய்வதால்  
  • கர்ம - செயல் 
  • பரம் - பரத்தை  
  • ஆப்நோதி - அடைகிறான் 
  • பூருஷஹ - மனிதன்

எனவே, பற்றின்றி எப்போதும் கடமையாக செயலை செய்வாயாக. பற்றின்மையோடு செயலை செய்வதால் மனிதன் பரம்பொருளை அடைகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.12

நைஷ் கர்ம்யம் அபி அச்யுத பா⁴வ வர்ஜிதம்
ந ஸோ²ப⁴தே ஜ்ஞாநம் அலம் நிரஞ்ஜநம்|
குத: புந: ஸ²ஸ்²வத³ ப⁴த்³ரம் ஈஸ்²வரே
ந சார்பிதம் கர்ம யத்³ அப்ய காரணம்||

  • நைஷ் கர்ம்யம் - நிஷகர்ம ரூபம் ஆனதும்
  • நிரஞ்ஜநம் - உபாதி ரஹிதமானதுமான
  • ஜ்ஞாநம் அபி - ஞானமும் கூட
  • அச்யுத பா⁴வ வர்ஜிதம் - ஸ்ரீ வாசுதேவனது பக்தி இல்லாது இருக்குமானால்
  • அலம் - போதுமான அளவு
  • ந ஸோ²ப⁴தே - சோபிப்பதில்லை
  • ஸ²ஸ்²வத்³ - அனுஷ்டிக்கும் பொழுதும் பலத்தை கொடுக்கும் பொழுதும்
  • ப⁴த்³ரம் - மங்கலம் இல்லாததான
  • யத்³ கர்ம - யாதொரு காம்ய கர்மா உண்டோ
  • அகாரணம் அபி - யாதொரு நிஷ்காம கர்மம் உண்டோ அதுவும்
  • ஈஸ்²வரே - ஈஸ்வரன் இடத்தில்
  • அர்பிதம் நச - அர்பிக்கப்படாத வரையில்
  • குதஃ புநஸ் - எவ்வாறு சோபையை உடையதாக ஆகக்கூடும் (ஈஸ்வர பரமாக இருப்பின் சோபிக்கும்)

நிர்மலமான ஞானம், பகவத் பக்தியுடன் கூடியதாக இல்லையேல், அந்த ஞானத்தால் ஜீவனுக்கு எந்தப் பயனும் இல்லை. தொட்ட இடமிருந்து விட்ட இடம் வரை (ஆரம்பம் முதல் முடிவு வரை) துன்பமே நிறைந்த காம்ய கர்மங்களால் தான் என்ன பயன்? பயன் கருதாமல் செய்யப்படுகின்ற நிஷ்காம கர்மங்களும் பகவத் அர்ப்பணம் செய்யப் படாவிடில் பயனற்றனவே தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.90

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.90

ப்ரஹ்ருஷ்ட முதி³தோ லோகஸ் துஷ்ட: 
புஷ்ட: ஸுதா⁴ர்மிக:|
நிராமயோ ஹ்யரோக³ஸ்²ச 
து³ர்பி⁴ க்ஷப⁴ய வர்ஜித:|| 

  • லோகஸ் - ஜன ஸமூஹமானது
  • ப்ரஹ்ருஷ்ட முதி³தோ - மயிர் கூச்சல் அடைந்து களித்ததாக ஆனது
  • துஷ்டஸ் - ஸந்தோஷித்ததாக ஆனது
  • புஷ்டஸ் - போஷிக்கப்பட்டதாக ஆனது
  • ஸுதா⁴ர் மிகஹ - நல்ல தர்மங்களை உடையதாக ஆனது
  • நிராமயோ - சரீர பீடை அற்றதாக ஆனது
  • அரோக³ஸ்² - மனோ வ்யாதி அற்றதாக ஆனது
  • து³ர்பி⁴ க்ஷப⁴ய வர்ஜித ச - க்ஷாம பயம் இல்லாததாகவும் ஆனது
  • ஹி - ஸத்யம் 

அந்த இராம இராஜ்யத்தில் இனி இந்த உலகம், பெரும் மகிழ்ச்சியுடன் இன்புற்று, நிறைவுடனும், அனைத்தையும் மிகுதியாக அடைந்தும், அறம் வளர்த்து, நலம் விளைவித்து, பிணியற்று, பஞ்சமெனும் அச்சத்தில் இருந்து விடுபட்டிருக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 130 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 130 - வாழ வைக்கும் வாசுதேவன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்||

தம் தம் மக்கள் அழுது சென்றால்* 
தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்* 
வந்து நின் மேல் பூசல் செய்ய* 
வாழ வல்ல வாசுதேவா!*
உந்தையார் உன் திறத்தர் அல்லர்* 
உன்னை நான் ஒன்று உரப்ப மாட்டேன்* 
நந்தகோபன் அணி சிறுவா!* 
நான் சுரந்த முலை உணாயே|

  • தம் தம் மக்கள் - தங்கள் தங்கள் பிள்ளைகள்
  • அழுது - அழுது கொண்டு
  • சென்றால் - தம் தம் வீட்டுக்குப் போனால்
  • தாய்மார் ஆவார் - அக்குழந்தைகளின் தாய்மார்கள்
  • தரிக்க கில்லார் - மனம் பொறுக்க மாட்டார்கள்
  • வந்து - தம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து
  • நின் மேல் - உன் மேல் 
  • பூசல் செய்ய - வாக்குவாதம் செய்வார்கள்
  • வாழ வல்ல - அதை கண்டு சந்தோஷப்படும்
  • வாசுதேவா! - கண்ண பிரானே!
  • உந்தையார் - உன் தகப்பனார்
  • உன் திறத்தர் - உன் நடவடிக்கைகளை
  • அல்லர் - கவனிப்பவர் அல்லர்
  • நான் - அபலையான நானும்
  • உன்னை - உன்னை
  • ஒன்று உரப்ப மாட்டேன் - ஒன்றும் அதட்ட மாட்டேன்
  • நந்தகோபன் - நந்தகோபருடைய
  • அணி சிறுவா! - அழகிய சிறு பிள்ளையே
  • நான் சுரந்த முலை - என்னிடம் சுரக்கும் பாலை
  • உணாயே - பாலை உண்பாயாக

கண்ணன் தன்னுடன் விளையாடும் பிள்ளைகளை அடித்து அழ விட்டு அதைக் கண்டு மகிழ்ந்திருக்கையில், அப்பிள்ளைகளின் தாய்மார்கள் அழுகின்ற தங்கள் பிள்ளைகளோடு வந்து யசோதையிடம் கண்ணனைப் பற்றி புகார் செய்ய, யசோதை கண்ணனின் குரும்பை கண்டிக்க இயலாதவளாய் கண்ணனைப் பார்த்து, கண்ணா! உன் தகப்பனாரும் உன்னை கவனிப்பார் இல்லை! நானும் உன்னை கோபிப்பதில்லை! இதெல்லாம் ஒருபுறமிருக்க, நந்தகோபரின் அழகிய சிறு பிள்ளையான நீ, என் பால் சுரக்கும் முலையை உண்பாயாக!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 040 - திருச்சித்திரகூடம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 32 - 1

குலசேகராழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 741 - பெருமாள் திருமொழி - 10.1
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும்* 
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி* 
விண் முழுதும் உயக் கொண்ட வீரன் தன்னை*
செங்கண் நெடுங்கரு முகிலை இராமன் தன்னைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை* 
என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே|

002. திவ்ய ப்ரபந்தம் - 742 - பெருமாள் திருமொழி - 10.2
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி* 
வரு குருதி பொழி தர வன்கணை ஒன்று ஏவி*
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து* 
வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்*
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த* 
அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே|

003. திவ்ய ப்ரபந்தம் - 743 - பெருமாள் திருமொழி - 10.3
செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்* 
சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி*
வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு* 
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை*
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர்த்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை* 
இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 744 - பெருமாள் திருமொழி - 10.4
தொத்து அலர் பூஞ் சுரிகுழல் கைகேசி சொல்லால்* 
தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னை*
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குப்* 
பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து*
சித்திரகூடத்து இருந்தான் தன்னை* 
இன்று தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எத்தனையும் கண் குளிரக் காணப் பெற்ற* 
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே|

005. திவ்ய ப்ரபந்தம் - 745 - பெருமாள் திருமொழி - 10.5
வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று* 
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி*
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி* 
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி*
சிலை வணக்கி மான் மறிய எய்தான் தன்னைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
தலை வணக்கிக் கை கூப்பி ஏத்த வல்லார்* 
திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 746 - பெருமாள் திருமொழி - 10.6
தனம் மருவு வைதேகி பிரியல் உற்று* 
தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு* 
வாலியைக் கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்*
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
இனிது அமர்ந்த அம்மானை இராமன் தன்னை* 
ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே|

007. திவ்ய ப்ரபந்தம் - 747 - பெருமாள் திருமொழி - 10.7
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து* 
குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்* 
இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து*
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்* 
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 748 - பெருமாள் திருமொழி - 10.8
அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி* 
அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான்*
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி* 
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்*
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம்* 
இன்னமுதம் மதியோமின்றே|

009. திவ்ய ப்ரபந்தம் - 749 - பெருமாள் திருமொழி - 10.9
செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று* 
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த*
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்* 
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட*
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
உறைவானை மறவாத உள்ளம் தன்னை உடையோம்* 
மற்று உறுதுயரம் அடையோம் இன்றே|

010. திவ்ய ப்ரபந்தம் - 750 - பெருமாள் திருமொழி - 10.10
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி* 
அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை வென்று* 
இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற* 
விண் முழுதும் எதிர் வரத் தன் தாமம் மேவி*
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி* 
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே|

011. திவ்ய ப்ரபந்தம் - 751 - பெருமாள் திருமொழி - 10.11
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்* 
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*
எல்லை இல் சீர்த் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று* 
அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா*
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்* 
கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்* 
நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே|

திருமங்கையாழ்வார்
012. திவ்ய ப்ரபந்தம் - 1158 - பெரிய திருமொழி - 3.2.1
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*
தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*
கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்*
தேன் ஆட மாடக் கொடி ஆடு* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1159 - பெரிய திருமொழி - 3.2.2
காயோடு நீடு கனி உண்டு* வீசு கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்* 
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*
திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1160 - பெரிய திருமொழி - 3.2.3
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*
விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த*
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*
அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்*
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*
படை மன்னவன் பல்லவர்க் கோன் பணிந்த*
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1161 - பெரிய திருமொழி - 3.2.4
அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*
பெருமான் திருநாமம் பிதற்றி* 
நும் தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*
கவை நா அரவின்-அணைப் பள்ளியின் மேல்*
திருமால் திருமங்கையொடு ஆடு* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1162 - பெரிய திருமொழி - 3.2.5
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக்*
குல மன்னர் அங்கம் மழுவில் துணிய*
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*
தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப்*
புகழ் மங்கை எங்கும் திகழ* 
புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 98

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 43||

||ஸ்கந்தம் 03||

கபிலர் ஜீவன்களின் கதியைத் தொடர்ந்து கூறியபின் பக்தியின் மேன்மையை தாய்க்கு மனத்தில் படியும்படி அழுத்திச் சொன்னார்.

தாயே! வாசுதேவரது திருவடிகளையே எப்போதும் நினைத்துப் போற்றுங்கள்.  அவரது கல்யாண குணங்களைக் கேட்டதுமே பக்தி பெருகும். பெருகிய பக்தியால் மனம், வாக்கு, காயம் மூன்றையும்‌ அவருக்கே அர்ப்பணம் செய்து பஜனை செய்யுங்கள்.

பக்தி யோகத்திற்கு அடிப்படை வைராக்யம். அது இல்லாமல் பக்தி எப்படி உண்டாகும் என்று கேட்கவேண்டாம்.

பகவான் வாசுதேவனின் குணங்களை ஆசையோடு கேட்க‌ கேட்க பக்தியும், உலக விஷயங்களில் வைராக்யமும் தானே வரும்.

அதனால் ஸாக்ஷாத்காரமான அறிவு தோன்றும். பின்னர் பகவானை நேரில் காணலாம்.

உண்மையில் எல்லாப் பொருள்களும் பகவானின் தோற்றமே. அதனால் சமமானவை. பகவத் பக்தனின் மனம், புலன்களின் செயல்களால் பிரியத்தையோ பிரியமின்மையையோ காண்பதில்லை. புகழ்வதையும், இகழ்வதையும் ஒன்றாகவே எண்ணுகிறான்.

பற்றற்ற சம புத்தியால், ஆத்மாவை ப்ரும்மத்துடன் இணைத்துக் காண்கிறான்.

ப்ரும்மம் ஒன்றே. அது ஞானவடிவானது. குணங்களற்றது. இருப்பினும் பொறி புலன்களுக்கு வசப்படுவோர்க்கு பல்வேறு ரூபங்களாகக் காட்சியளிக்கிறது. பரப்ரும்மம், மஹத் தத்வம், வைகாரிகம், ராஜஸம், தாமஸம், ஐம்பெரும் பூதங்கள், பதினோரு இந்திரியங்கள் அனைத்தும்‌ பகவானே. ஸ்வயம் ப்ரகாசரான பகவான் மஹத் தத்வத்துடன் சேர்ந்து ஜீவன் எனப்படுகிறார்.

ஜீவாத்மாவின் உடலாக இருக்கும் ப்ரும்மாண்டமும் ப்ரும்மமே. அண்டத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்திலும்‌ உண்டு.

போற்றத்தக்கவளே! இதுவரை ப்ரும்ம ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும்‌ முறைகளை விளக்கினேன்.

நிர்குண ப்ரும்மத்தை விளக்கும் ஞான யோகம், என்னையே பற்றி நிற்கும்‌ பக்தி யோகம்‌ இரண்டின் குறிக்கோளும் என்னை அடைவதே அன்னையே!

சாஸ்திரங்களில் பல்வேறு வழிகள் கூறப்படுகின்றன.


ஸகல் ஜீவராசிகளுக்கும் உதவும் குளம், கிணறு வெட்டுதல், ஸ்ம்ருதிகளில் கூறியபடி எல்லா ஜீவராசிகளிலும் என் ஸ்வரூபத்தைக் கண்டு அவர்க்கு உதவி செய்தல், சாந்திராயணம் முதலிய விரதங்கள், பிறர்க்கின்னா செய்யாமை என்னும் தவம், வேதம்‌ ஓதுதல், அதன் திரண்ட பொருளை ஆராய்தல்,
மனத்தையும் பொறி புலன்களையும் தன்வயப்படுத்துதல், செய்யும் செயல்கள் அனைத்தையும் பகவத் அர்ப்பணமாகச் செய்தல், நியமம் முதலிய கட்டுப்பாடுகளுடன் யோகப்பயிற்சி செய்தல், பக்தி யோகம், பயன் கருதிச் செய்யும் இல்லற தர்மம், பயன் ‌கருதாமல் செய்யும் துறவு, ஆன்ம தத்வத்தை அறியச் செய்யும்‌ ஞான யோகம், பற்றற்ற திடமான வைராக்யம் - இவற்றுள் எதைச் செய்தாலும்‌ ஸகுண, நிர்குண ஸ்வயம் ப்ரகாசரான இறைவனை அடையலாம்.

ஞானம் பற்றிய இவ்வுண்மைகளை என்னை அடைய ஈடுபாடில்லாதவர்க்கும், விநயமற்றவர்க்கும், தீய பழக்கமுள்ளவர்க்கும், என் அடியார்களிடம்‌ பகைமை கொண்டவர்க்கும் ஒருபோதும் சொல்லலாகாது.

ஆனால், தாயே! என்னையே மனத்தில் கொண்டு இதை ஈடுபாட்டுடன் எவன்‌ கேட்பானோ, பிறருக்குச் சொல்வானோ அவன் நிச்சயம்‌ எனது பரமபதத்தை அடைவான்.

கபிலரின் ஞானோபதேசத்தைக் கேட்ட தேவஹூதி அஞ்ஞானத் திரை நீங்கப் பெற்றாள்.

கபிலரை வணங்கிப் பலவாறு துதித்தாள். வணங்கினாள்.

பின்னர் கபிலர் தாயிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

தேவஹூதி ஸரஸ்வதி நதிக்கு கிரீடம் வைத்தாற் போல் விளங்கும் பிந்துஸரஸின் கரையிலேயே யோகாப்யாசம் செய்து மனத்தை அடக்கி சமாதியில் இருந்தாள்.

கணவரையும் மகனையும் பிரிந்து முகம் வாடியிருந்தாள். எனினும் தவத்தினால் ஒளிர்ந்தாள்.

கபிலர் சொன்னவாறே பகவானை பாதாதிகேசம் தியானம்‌ செய்தாள்.

சிலநாள்களிலேயே நித்ய முக்தரான பகவானை அடைந்தாள்.

அவள் செய்த யோக சாதனைகளால் அவளது திருமேனி தூய்மை பெற்று நதியாகப் பெருகிற்று.

சித்தர்களால் சூழப்பெற்று விளங்கும் அப்புண்ய நதி அனைத்து சித்திகளையும் வழங்கவல்லது.

பகவான் கபிலர் தாயிடம் விடை பெற்றுக் கொண்ட பின் வடகிழக்கு திசை நோக்கிச் சென்றார்.

சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் அனைவரும்‌ அவரைத் துதித்துக் கொண்டு பின் சென்றனர்.

வடகிழக்கு எல்லையை அடைந்ததும் அவரை ஸமுத்திர ராஜன் வரவேற்று உபசரித்து இடமளித்தார்.

அங்கு அவர் உலக நலனுக்காக யோகம்‌ மேற்கொண்டு விளங்கிவருகிறார்.

கபிலர் வாசம் செய்யும் இடம் தான் கபிலாரணயம் என்றும் தற்போது கலிஃபோர்னியா என்றும் வழங்கிவருவதாகப் பெரியோர் சொல்கின்றனர்.

மூன்றாம் ஸ்கந்தம்‌ முற்றிற்று 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 154

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 154||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 16||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

இந்த்ரியாணி மநோபுத்தி:
ஸத்வம்‌ தேஜோ பலம்‌ த்ருதி:|
வாஸுதேவாத் மகாந் யாஹூ:
க்ஷேத்ரம்‌ க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச||


புலன்கள், மனம், புத்தி, உயிர் {சத்வ குணம்}, சக்தி {வன்மை}, பலம் மற்றும் நினைவு ஆகியன வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. உண்மையில், க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இவ்வுடலும், க்ஷேத்திரத்தை அறிபவன் என்றழைக்கப்படும் புத்தியுடன் கூடிய ஆன்மா ஆகியவையும் வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

||ஸ்லோகம் - 3.18|| 

நைவ தஸ்ய க்ருதே நார்தோ² 
நாக்ரு தேநேஹ கஸ்²சந|
ந சாஸ்ய ஸர்வ பூ⁴தேஷு 
கஸ்²சித³ர் த²வ்ய பாஸ்²ரய:||

  • ந - என்றுமில்லை 
  • ஏவ - நிச்சயமாக 
  • தஸ்ய - அவனது  
  • க்ருதேந - கடமையைச் செய்வதால் 
  • அர்தோ² - நோக்கம் 
  • ந - இல்லை 
  • அக்ருதேந - கடமையைச் செய்யாதிருத்தல் 
  • இஹ - இவ்வுலகில்  
  • கஸ்²சந - ஏதாயினும் 
  • ந- என்றுமில்லை 
  • ச - மேலும் 
  • அஸ்ய - அவனது 
  • ஸர்வ பூ⁴தேஷு - எல்லா உயிர்களிலும் 
  • கஸ்²சித் - ஏதாவது  
  • அர்த² - நோக்கம் 
  • வ்யபாஸ்²ரயஹ - அடைக்கலம் புகுதல்

அவனுக்கு, கடமையை செய்வதால் பயனுமில்லை, . செய்யா விட்டால் தீங்கும் இல்லை. மேலும், ஏதாவது நோக்கத்திற்காக ஏனைய ஜீவன்களை நம்பி இருக்க வேண்டியதுமில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

||ஸ்லோகம் 1.5.11||

தத்³வாக்³ விஸர்கோ³ ஜநதாக⁴ விப்லவோ
யஸ்மிந் ப்ரதி ஸ்²லோகம ப³த்³த⁴வத் யபி|
நாமாந் யநந்தஸ்ய யஸோ²ங்கி தாநி ய
ச்ச்²ருண்வந்தி கா³யந்தி க்³ருணந்தி ஸாத⁴வ:||

  • யத் - எந்த வாஸுதேவனின் பெயர்களை
  • ஸாத⁴வஹ - ஸாதுக்கள்
  • ஸ்²ருண்வந்தி - சொல்பவர்கள் இருந்தால் கேட்பார்கள்
  • க்³ருணந்தி - கேட்பவர்கள் இருந்தால் சொல்லுவார்கள்
  • கா³யந்தி - இரு வகையோறும் இல்லாத போது தாங்களே கானம் செய்வார்கள்
  • யஸ்மிந் - எந்த வாக் பிரயோகமானது
  • அப³த்³த⁴வதி அபி - அப சத்தங்களோடு கூடியதாய் இருந்த போதிலும்
  • ப்ரதி ஸ்²லோகம் - ஒவ்வொரு ஸ்லோகத்திலும்
  • அநந்தஸ்ய - அப்படிப்பட்ட ஸ்ரீ வாஸுதேவனின்
  • யஸோ²ங்கிதாநி - புகழை அடையாளமாகக் கொண்ட
  • நாமாநி - பெயர்கள் இருக்கின்றனவோ
  • தத்³வாக்³ விஸர்கோ³ - அந்த வாக் பிரயோகம் தான்
  • ஜநதாக⁴ விப்லவோ - மக்களின் பாவத்தை போக்க வல்லதாக இருக்கிறது

நாம் கூறும் தோத்திரங்கள் இலக்கண வழுக்கள் உடையனவாக இருக்கலாம். ஆனால், அது இறைவனது புகழ் நிரம்பியதாக இருக்குமேயானால், அதைப் பெரியோர்கள் செவிbசாய்த்துக் கேட்பார்கள். கேட்பவன் இருந்தால்bதானே தோத்திரம் செய்து கூறுவார்கள். சொல்கிறவனோ, கேட்பவனோ இருவரும் இல்லையேயானாலும் தாங்களே சொல்லி, கீர்த்தனம் செய்து, தாங்களே கேட்டு இன்புறுவார்கள். ஏனெனில், அந்தச் சொல் பகவானின் நாமங்கள் மக்களின் பாவக்குவியல்களைப் போக்கவல்லனவன்றோ!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.89

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.89

நந்தி³ க்³ராமே ஜடாம் ஹித்வா 
ப்⁴ராத்ருபி⁴: ஸஹிதோ நக⁴:|
ராம: ஸீதா மநுப்ராப்ய 
ராஜ்யம் புநரவாப் தவாந்|| 

  • அநக⁴ஹ - பாபரஹிதரான
  • ராமஸ் - ஸ்ரீராமர்
  • ப்⁴ராத்ருபி⁴ஸ் -  ப்ரார்த்தாக்களோடு
  • ஸஹித - கூடினவராய்  
  • நந்தி³ க்³ராமே - நந்தி கிராமத்தில்
  • ஜடாம் -  ஜடையை
  • ஹித்வா -  களைந்து
  • ஸீதாம் -  ஸீதையை 
  • அநுப்ராப்ய - கூட வைத்துக் கொண்டு
  • ராஜ்யம் -  இராஜ்ய பரிபாலனத்தை
  • புநர் - மறுபடியும்
  • அவாப் தவாந் - மேற்கொண்டார்

பாவமற்றவரான ஸ்ரீராமர், தன் தம்பிகள் அனைவருடன் கூடியவனாக நந்திக் கிராமத்தில் தன் சடா முடியை நீக்கினார். ஸீதையை மீட்டு வந்த பிறகு, அவர் தன் ராஜ்யத்தை மீண்டும் அடைந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 129 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 129 - முத்தனைய புன்முறுவல்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்||

வைத்த நெய்யும் காய்ந்த பாலும்* 
வடி தயிரும் நறு வெண்ணெயும்* 
இத்தனையும் பெற்று அறியேன்* 
எம்பிரான்! நீ பிறந்த பின்னை*
எத்தனையும் செய்யப் பெற்றாய்;* 
ஏதும் செய்யேன் கதம் படாதே* 
முத்து அனைய முறுவல் செய்து* 
மூக்கு உறிஞ்சி முலை உணாயே|

  • எம்பிரான்! - என் பிள்ளாய்!
  • வைத்த நெய்யும் - உருக்கி வைத்த நெய்யும்
  • காய்ந்த பாலும் - ஏடு மிகுதியாகப் படியும்படி காய்ச்சிய பாலும்
  • வடி தயிரும் - உள்ள நீரை வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
  • நறு வெண்ணெயும் - நறுமணம் மிக்க வெண்ணெயும்
  • இத்தனையும் - ஆகிய இவை எல்லாவற்றையும்
  • நீ பிறந்த பின்னை - நீ பிறந்த பிறகு
  • பெற்று அறியேன் - நான் கண்டதில்லை
  • எத்தனையும் - எல்லாவற்றையும் நீ வேண்டின படி எல்லாம்
  • செய்யப் பெற்றாய் - செய்தாய். உனக்குத் தரப்பட்டது
  • ஏதும் செய்யேன் - அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்
  • கதம் படாதே - நீ கோபித்துக் கொள்ளாதே
  • முத்து அனைய - முத்தைப் போல் வெண்ணிறமாக
  • முறுவல் செய்து - புன்முறுவல் செய்து
  • மூக்கு உறிஞ்சி - மூக்கை முத்தைப் போல் வெண்ணிறமாக
  • முலை உணாயே - என்னிடம் பால் உண்பாயாக

கண்ணன் அவதரித்த பின், சேமித்து வைத்திருந்த நல்ல காய்ச்சின பால், கட்டி தயிர், நறுமணமுள்ள வெண்ணை, உருக்கின நெய் இவற்றையெல்லாம் அவன் ஒன்று விடாமல் திருடி உண்டு விடுவதால், நான் இவற்றைக் கண்டதில்லை என்கிறாள் யசோதை. கண்ணா! நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்! உன்னை கோபிக்க மாட்டேன்! மோகனப் புன்னைகையுடன், மூக்கை உறிஞ்சியவாறே என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 040 - திருச்சித்திரகூடம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் - 32 பாசுரங்கள்

001. குலசேகராழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 741 - 751 - பத்தாம் திருமொழி 
----------

002. திருமங்கையாழ்வார் - 21 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1158 - 1167 - மூன்றாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1168 - 1177 - மூன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள் 

2. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2777 - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (65) 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
அடியால் உலகு எல்லாம் அன்று அளந்து கொண்ட*
நெடியானைக் கூடுதியேல் நெஞ்சே கொடிது ஆய*
குத்திர கூடு அங்கி கொளுந்தா முன் கோவிந்தன்*
சித்திர கூடம் கருதிச் செல்|

  • நெஞ்சே - மனமே! 
  • அடியால் - தனது திருவடிகளினால்
  • உலகு எல்லாம் - எல்லா உலகங்களையும்
  • அன்று - முற்காலத்தில்
  • அளந்து கொண்ட - அளந்து தன்னுடையனவாக்கிக் கொண்ட
  • நெடியானை - திரிவிக்கிரம அவதாரம் செய்த கடவுளை
  • கூடுதி ஏல் - சேர வேண்டுமென்று விரும்பினையானால்
  • கொடிது ஆய - கொடுமை உள்ளதாகிய
  • குத்திரம் - இழி குணத்தைக் கொண்ட
  • கூடு - இந்தச் சரீரத்தை
  • அங்கி - அக்னியானது
  • கொளுந்தா முன் - எரித்து விடுதற்கு முன்னமே
  • கோவிந்தன் - கோவிந்தராஜன் எழுந்தருளி இருக்கின்ற
  • சித்திரகூடம் - திருச்சித்திரகூடம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
  • கருதி - நினைத்து
  • செல் - செல்வாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்