||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத:
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம்
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் 1.5.12
நைஷ் கர்ம்யம் அபி அச்யுத பா⁴வ வர்ஜிதம்
ந ஸோ²ப⁴தே ஜ்ஞாநம் அலம் நிரஞ்ஜநம்|
குத: புந: ஸ²ஸ்²வத³ ப⁴த்³ரம் ஈஸ்²வரே
ந சார்பிதம் கர்ம யத்³ அப்ய காரணம்||
- நைஷ் கர்ம்யம் - நிஷகர்ம ரூபம் ஆனதும்
- நிரஞ்ஜநம் - உபாதி ரஹிதமானதுமான
- ஜ்ஞாநம் அபி - ஞானமும் கூட
- அச்யுத பா⁴வ வர்ஜிதம் - ஸ்ரீ வாசுதேவனது பக்தி இல்லாது இருக்குமானால்
- அலம் - போதுமான அளவு
- ந ஸோ²ப⁴தே - சோபிப்பதில்லை
- ஸ²ஸ்²வத்³ - அனுஷ்டிக்கும் பொழுதும் பலத்தை கொடுக்கும் பொழுதும்
- ப⁴த்³ரம் - மங்கலம் இல்லாததான
- யத்³ கர்ம - யாதொரு காம்ய கர்மா உண்டோ
- அகாரணம் அபி - யாதொரு நிஷ்காம கர்மம் உண்டோ அதுவும்
- ஈஸ்²வரே - ஈஸ்வரன் இடத்தில்
- அர்பிதம் நச - அர்பிக்கப்படாத வரையில்
- குதஃ புநஸ் - எவ்வாறு சோபையை உடையதாக ஆகக்கூடும் (ஈஸ்வர பரமாக இருப்பின் சோபிக்கும்)
நிர்மலமான ஞானம், பகவத் பக்தியுடன் கூடியதாக இல்லையேல், அந்த ஞானத்தால் ஜீவனுக்கு எந்தப் பயனும் இல்லை. தொட்ட இடமிருந்து விட்ட இடம் வரை (ஆரம்பம் முதல் முடிவு வரை) துன்பமே நிறைந்த காம்ய கர்மங்களால் தான் என்ன பயன்? பயன் கருதாமல் செய்யப்படுகின்ற நிஷ்காம கர்மங்களும் பகவத் அர்ப்பணம் செய்யப் படாவிடில் பயனற்றனவே தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment