About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 23 November 2025

திவ்ய ப்ரபந்தம் - 129 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 129 - முத்தனைய புன்முறுவல்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்||

வைத்த நெய்யும் காய்ந்த பாலும்* 
வடி தயிரும் நறு வெண்ணெயும்* 
இத்தனையும் பெற்று அறியேன்* 
எம்பிரான்! நீ பிறந்த பின்னை*
எத்தனையும் செய்யப் பெற்றாய்;* 
ஏதும் செய்யேன் கதம் படாதே* 
முத்து அனைய முறுவல் செய்து* 
மூக்கு உறிஞ்சி முலை உணாயே|

  • எம்பிரான்! - என் பிள்ளாய்!
  • வைத்த நெய்யும் - உருக்கி வைத்த நெய்யும்
  • காய்ந்த பாலும் - ஏடு மிகுதியாகப் படியும்படி காய்ச்சிய பாலும்
  • வடி தயிரும் - உள்ள நீரை வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
  • நறு வெண்ணெயும் - நறுமணம் மிக்க வெண்ணெயும்
  • இத்தனையும் - ஆகிய இவை எல்லாவற்றையும்
  • நீ பிறந்த பின்னை - நீ பிறந்த பிறகு
  • பெற்று அறியேன் - நான் கண்டதில்லை
  • எத்தனையும் - எல்லாவற்றையும் நீ வேண்டின படி எல்லாம்
  • செய்யப் பெற்றாய் - செய்தாய். உனக்குத் தரப்பட்டது
  • ஏதும் செய்யேன் - அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்
  • கதம் படாதே - நீ கோபித்துக் கொள்ளாதே
  • முத்து அனைய - முத்தைப் போல் வெண்ணிறமாக
  • முறுவல் செய்து - புன்முறுவல் செய்து
  • மூக்கு உறிஞ்சி - மூக்கை முத்தைப் போல் வெண்ணிறமாக
  • முலை உணாயே - என்னிடம் பால் உண்பாயாக

கண்ணன் அவதரித்த பின், சேமித்து வைத்திருந்த நல்ல காய்ச்சின பால், கட்டி தயிர், நறுமணமுள்ள வெண்ணை, உருக்கின நெய் இவற்றையெல்லாம் அவன் ஒன்று விடாமல் திருடி உண்டு விடுவதால், நான் இவற்றைக் கண்டதில்லை என்கிறாள் யசோதை. கண்ணா! நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்! உன்னை கோபிக்க மாட்டேன்! மோகனப் புன்னைகையுடன், மூக்கை உறிஞ்சியவாறே என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment