About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 001 திருவரங்கம். Show all posts
Showing posts with label 001 திருவரங்கம். Show all posts

Monday, 14 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்தாதி வெண்பா*
தோற்றக் கேடில்லாத தொன் மாலைப் போற்றத்*
திருப்பதியா நூற்று எட்டினையும் சேவிப்போர்*
கருப்பதியா வண்ணம் உண்டாக|

  • திருப்பதி ஆ(ம்) நூற்றெட்டினையும் - நூற்றெட்டு திருப்பதிகளையும்
  • சேவிப்போர் - சேவிப்பவர்கள்
  • கரு பதியா வண்ணம் உண்டாக - தமக்கு மீண்டும் தாயின் கருவில் சேராதபடி செய்ய
  • ஏற்ற மணவாளர் - சிறப்புள்ள அழகிய மணவாள தாசர் என்பவர்
  • தோற்றம் கேடு இல்லாத - பிறப்பும் இறப்பும் இல்லாத
  • தொல் மாலைப் போற்ற - பழமையான திருமாலைத் துதிக்கும்படியாக
  • அந்தாதி வெண்பா - வெண்பாவினால் ஆன இந்த நூற்றியெட்டு திருப்பதி அந்தாதியை
  • இசைத்தார் - பாடி அருளி உள்ளார்

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்

சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40; பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் - 18, மலை நாட்டுத் திருப்பதிகள் (கேரள) - 13, நடு நாட்டுத் திருப்பதிகள் - 2, தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22, வட நாட்டுத் திருப்பதிகள் - 12 பரம பதமான திருநாடு - 1 – என்ற 108 வைணவத் திருப்பதிகளை நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியின் வரிசையில் இனி அனுபவிக்கலாம்

பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்று எட்டும்
துதி செய்ய அந்தாதி சொன்னான் அதிக
குணவாள பட்டர் இரு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் வகுத்து

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ||

அந்தாதி
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என்*
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம்*
ஒருவர் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான்*
திரு அரங்கம் கோயில் சிறப்பு|

  • ஒருவர் – ஒருத்தர்
  • அங்கு அங்கு – அந்த அந்த விஷயங்களில் (பலவகையான உலகப் பற்றுக்களில்)
  • ஆர்வம் ஓயில் – ஆசை ஓழிந்தால்
  • அவரை – அவ்வாறு பற்றற்ற அன்பரை
  • உகந்து – விரும்பி
  • ஆள்வான் – அடிமை கொள்பவனாகிய எம்பெருமானது
  • திருவரங்கம் கோயில் – திருவரங்கம் பெரிய கோயில் என்னும் திருப்பதியின்
  • சிறப்பு – பெருமையானது
  • சீர் வந்த உந்தி திசைமுகனால் அல்லாது – சிறப்புப் பொருந்திய (திருமாலின்) நாபி கமலத்தில் பிறந்த நான்கு திக்கையும் நோக்கிய நான்கு முகங்களை உடைய பிரம்ம தேவனைத் தவிர,
  • என் சோர் வந்த சொல்லில் சுருங்குமோ – எனது குற்றம் பொருந்திய சொற்களில் அடங்குமோ?

பகவானின் நாபிக் கமலத்தில் உதித்த நான்முகனைத் தவிர என்னுடைய புன்மையான சொற்களால், தன்னைச் சரணமென்று சேர்ந்தவரை அன்போடு ஆட்கொள்ளும் திருவரங்கன் கோயிலின் சிறப்பைச் சொல்ல முடியுமோ?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 13

பூதத்தாழ்வார்
224. திவ்ய ப்ரபந்தம் - 2209 - இரண்டாம் திருவந்தாதி - 3.8 (28)
மனத்து உள்ளான் வேங்கடத்தான்* மா கடலான்,* 
மற்றும் நினைப்பு அரிய* நீள் அரங்கத்து உள்ளான்,* 
எனைப் பலரும் தேவாதி தேவன்* எனப்படுவான்,* 
முன் ஒரு நாள் மா வாய் பிளந்த மகன்|

225. திவ்ய ப்ரபந்தம் - 2227 - இரண்டாம் திருவந்தாதி - 5.6 (46)
பயின்றது அரங்கம் திருக்கோட்டி,* 
பல் நாள் பயின்றதுவும்* வேங்கடமே பல் நாள்,* 
பயின்றது அணி திகழும் சோலை* அணி நீர் மலையே* 
மணி திகழும் வண் தடக்கை மால்|

226. திவ்ய ப்ரபந்தம் - 2251 - இரண்டாம் திருவந்தாதி - 7.10 (70)
தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்,* 
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,* 
தமர் உள்ளும் மாமல்லை கோவல்* மதிள் குடந்தை என்பரே,* 
ஏ வல்ல எந்தைக்கு இடம்|

227. திவ்ய ப்ரபந்தம் - 2269 - இரண்டாம் திருவந்தாதி - 9.8 (88)
திறம்பிற்று இனி அறிந்தேன்* தென் அரங்கத்து எந்தை,*
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால்,* 
திறம்பாச் செடி நரகை நீக்கி* தாம் செல்வதன் முன்,* 
வானோர் கடி நகர வாசல் கதவு|

பேயாழ்வார்
228. திவ்ய ப்ரபந்தம் - 2342 - மூன்றாம் திருவந்தாதி - 7.1 (61)
பண்டு எல்லாம் வேங்கடம்* பாற்கடல் வைகுந்தம்,* 
கொண்டுஅங்கு உறைவார்க்கு கோயில் போல்,* 
வண்டு வளம் கிளரும் நீள் சோலை* வண் பூங் கடிகை,* 
இளங்குமரன் தன் விண்ணகர்| (2)

229. திவ்ய ப்ரபந்தம் - 2343 - மூன்றாம் திருவந்தாதி - 7.2 (62)
விண்ணகரம் வெஃகா* விரி திரை நீர் வேங்கடம்,* 
மண் நகரம் மாமாட வேளுக்கை,*
மண்ணகத்த தென்குடந்தை* தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி,* 
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு|

திருமழிசையாழ்வார்
230. திவ்ய ப்ரபந்தம் - 2384 - நான்முகன் திருவந்தாதி - 1.3 (3)
பாலில் கிடந்ததுவும்* பண்டுஅரங்கம் மேயதுவும்* 
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார்*
ஞாலத்து ஒரு பொருளை* வானவர்தம் மெய்ப்பொருளை* 
அப்பில் அரு பொருளை யான் அறிந்த ஆறு?

231. திவ்ய ப்ரபந்தம் - 2411 - நான்முகன் திருவந்தாதி - 3.10 (30)
அவன் என்னை ஆளி* அரங்கத்து அரங்கில்* 
அவன் என்னை எய்தாமல் காப்பான்* 
அவன் என்னது உள்ளத்து* நின்றான் இருந்தான் கிடக்குமே* 
வெள்ளத்து அரவு அணையின் மேல்|

232. திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்முகன் திருவந்தாதி - 4.6 (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்* 
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்* 
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்* 
அணைப்பார் கருத்தன் ஆவான்| (2)

233. திவ்ய ப்ரபந்தம் - 2441 - நான்முகன் திருவந்தாதி - 6.10 (60)
ஆள் பார்த்து உழி தருவாய்* கண்டு கொள் என்றும்* 
நின் தாள் பார்த்து உழி தருவேன்* தன்மையை* 
கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற* அரங்கனே* 
உன்னை விரும்புவதே* விள்ளேன் மனம்|

திருமங்கையாழ்வார்
234. திவ்ய ப்ரபந்தம் – 2706 - சிறிய திருமடல் - 4.4 (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2) 
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| (2)

235. திவ்ய ப்ரபந்தம் – 2773 - பெரிய திருமடல் - 7.1 (61)
மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை* 
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை*
மன்னும் அரங்கத்து எம் மா மணியை|

நம்மாழ்வார்
236. திவ்ய ப்ரபந்தம் - 2505 - திருவிருத்தம் - 3.8 (28)
தண் அம் துழாய்* வளை கொள்வது யாம் இழப்போம்* 
நடுவே வண்ணம் துழாவி* ஓர் வாடை உலாவும்* 
வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா* அருளாய்*
எண்ணம் துழாவுமிடத்து* உளவோ பண்டும் இன்னன்னவே?

237. திவ்ய ப்ரபந்தம் - 3464 - திருவாய்மொழி - 7.2.1 
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்* கண்ண நீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்*
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு? என்னும்* இரு நிலம் கை துழா இருக்கும்*
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்கின்றாயே?

238. திவ்ய ப்ரபந்தம் - 3465 - திருவாய்மொழி - 7.2.2
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா? என்னும்* 
கண்ணீர் மல்க இருக்கும்*
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்? என்னும்* 
வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும்:*
முன் செய்த வினையே! முகப்படாய் என்னும்* 
முகில்வண்ணா! தகுவதோ? என்னும்*
முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்*
என் கொலோ முடிகின்றது இவட்கே?

239. திவ்ய ப்ரபந்தம் - 3466 - திருவாய்மொழி - 7.2.3
வட்கு இலள் இறையும் மணிவண்ணா! என்னும்* 
வானமே நோக்கும் மையாக்கும்*
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள் உருகும்*
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்*
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்திட்டாயே?

240. திவ்ய ப்ரபந்தம் - 3467 - திருவாய்மொழி - 7.2.4 
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்* எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்*
கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்* கடல் வண்ணா! கடியை காண் என்னும்*
வட்ட வாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்று என்றே மயங்கும்*
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய்* இவள் திறத்து என் சிந்தித்தாயே?

241. திவ்ய ப்ரபந்தம் - 3468 - திருவாய்மொழி - 7.2.5
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*
திருவரங்கத்துள்ளாய்! என்னும் வந்திக்கும்* 
ஆங்கே மழைக் கண் நீர் மல்க* வந்திடாய் என்று என்றே மயங்கும்*
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே* அலை கடல் கடைந்த ஆர் அமுதே*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே|

242. திவ்ய ப்ரபந்தம் - 3469 - திருவாய்மொழி - 7.2.6
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,* 
செய்ய வாய் மணியே! என்னும்* 
தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும்* விண்ணோர் முதல்! என்னும்,* 
பை கொள் பாம்பு அணையாய்! இவள் திறத்து அருளாய்* 
பாவியேன் செயற்பால் அதுவே|

243. திவ்ய ப்ரபந்தம் - 3470 - திருவாய்மொழி - 7.2.7
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பற்றிலார் பற்ற நின்றானே* 
கால சக்கரத்தாய்! கடல் இடம் கொண்ட* கடல் வண்ணா! கண்ணனே! என்னும்*
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என்னும்* 
என் தீர்த்தனே என்னும்* 
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும்* 
என்னுடைக் கோமளக் கொழுந்தே|

244. திவ்ய ப்ரபந்தம் - 3471 - திருவாய்மொழி - 7.2.8
கொழுந்து வானவர்கட்கு என்னும்* 
குன்று ஏந்தி கோ நிரை காத்தவன்! என்னும்* 
அழும் தொழும் ஆவி அனல எவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்*
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்* 
எங்ஙனே நோக்குகேன்? என்னும்* 
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்!* என் செய்கேன் என் திருமகட்கே?

245. திவ்ய ப்ரபந்தம் - 3472 - திருவாய்மொழி - 7.2.9
என் திருமகள் சேர் மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே! என்னும்* 
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே! என்னும்*
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்* 
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* 
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே| (2)

246. திவ்ய ப்ரபந்தம் - 3473 - திருவாய்மொழி - 7.2.10
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்* மூவுலகு ஆளியே என்னும்*
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும்* நான்முகக் கடவுளே என்னும்*
வடிவு உடை வானோர் தலைவனே என்னும்* வண் திருவரங்கனே என்னும்*
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள்* 
முகில்வண்ணன் அடியே|

247. திவ்ய ப்ரபந்தம் - 3474 - திருவாய்மொழி - 7.2.11
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்* 
மொய் புனல் பொருநல்*
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன்* 
வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்*
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை* 
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்*
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Sunday, 13 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 12

திருமங்கையாழ்வார் 
210. திவ்ய ப்ரபந்தம் - 2038 - திருக்குறுந்தாண்டகம் - 1.7 (7)
இம்மையை மறுமை தன்னை* எமக்கு வீடு ஆகி நின்ற*
மெய்ம்மையை விரிந்த சோலை* வியன் திரு அரங்கம் மேய*
செம்மையைக் கருமை தன்னைத்* திருமலை ஒருமையானை*
தன்மையை நினைவார் என் தன்* தலைமிசை மன்னுவாரே| 

211. திவ்ய ப்ரபந்தம் - 2043 – திருக்குறுந்தாண்டகம் - 2.2 (12)
ஆவியை அரங்க மாலை* அழுக்கு உடம்பு எச்சில் வாயால்* 
தூய்மை இல் தொண்டனேன் நான்* சொல்லினேன் தொல்லை நாமம்*
பாவியேன் பிழைத்தவாறு என்று* அஞ்சினேற்கு அஞ்சல் என்று* 
காவி போல் வண்ணர் வந்து* என் கண்ணுளே தோன்றினாரே|

212. திவ்ய ப்ரபந்தம் - 2044 – திருக்குறுந்தாண்டகம் - 2.3 (13)
இரும்பு அனன்று உண்ட நீரும்* போதரும் கொள்க,* 
என் தன் அரும்பிணி பாவம் எல்லாம்* அகன்றன என்னை விட்டு,*
சுரும்புஅமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட,* 
கரும்பினைக் கண்டு கொண்டு* என் கண் இணை களிக்குமாறே| 

213. திவ்ய ப்ரபந்தம் - 2050 – திருக்குறுந்தாண்டகம் - 2.9 (19)
பிண்டியார் மண்டை ஏந்திப்* பிறர் மனை திரி தந்து உண்ணும்*
உண்டியான் சாபம் தீர்த்த* ஒருவன் ஊர்*
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம்* 
கச்சி பேர் மல்லை என்று மண்டினார்* 
உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல் ஆமே? (2) 

214. திவ்ய ப்ரபந்தம் - 2062 - திருநெடுந்தாண்டகம் - 2.1 (11)
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்* 
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்* 
எள் துணைப் போது என் குடங்கால் இருக்க கில்லாள்* 
எம் பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்* 
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்* 
மட மானை இது செய்தார் தம்மை* 
மெய்யே கட்டு விச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!*
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே?

215. திவ்ய ப்ரபந்தம் - 2063 - திருநெடுந்தாண்டகம் - 2.2 (12)
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்* 
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* 
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும்* 
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்* 
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்* 
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* 
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்* 
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே|! 

216. திவ்ய ப்ரபந்தம் - 2065 - திருநெடுந்தாண்டகம் - 2.4 (14)
முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை* 
மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற* 
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை* 
அந்தணர் தம் சிந்தையானை* 
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்* 
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு* 
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக! என்று* 
மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே|

217. திவ்ய ப்ரபந்தம் - 2069 - திருநெடுந்தாண்டகம் - 2.8 (18)
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்* 
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்*
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்* 
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்* 
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்* 
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்* 
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்* 
இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?

218. திவ்ய ப்ரபந்தம் - 2070 - திருநெடுந்தாண்டகம் - 2.9 (19)
முற்று ஆரா வன முலையாள் பாவை* 
மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்* 
தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்* 
அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்* 
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்* 
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி* 
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்* 
பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே|

219. திவ்ய ப்ரபந்தம் - 2073 - திருநெடுந்தாண்டகம் - 3.2 (22)
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* 
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்* 
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி*
எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* 
இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்* 
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்* 
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* 
இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே|

220. திவ்ய ப்ரபந்தம் - 2074 - திருநெடுந்தாண்டகம் - 3.3 (23)
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* 
என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்* 
சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன* 
கள் ஊரும் பைந் துழாய் மாலை யானைக்* 
கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது* 
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்* 
என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே?

221. திவ்ய ப்ரபந்தம் - 2075 - திருநெடுந்தாண்டகம் - 3.4 (24)
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்!* 
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட* 
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* 
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* 
உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* 
என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* 
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே|

222. திவ்ய ப்ரபந்தம் - 2076 - திருநெடுந்தாண்டகம் - 3.5 (25)
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்* 
கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்* 
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே* 
தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி* 
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்* 
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு* 
பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே* 
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே|

பொய்கையாழ்வார்
223. திவ்ய ப்ரபந்தம் - 2087 - முதலாம் திருவந்தாதி - 1.6 (1)  
ஒன்றும் மறந்தறியேன்* ஓத நீர் வண்ணனை நான்*
இன்று மறப்பனோ? ஏழைகாள்!* 
அன்று கரு அரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்*
திருவரங்கம் மேயான் திசை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 11

திருமங்கையாழ்வார் 
184. திவ்ய ப்ரபந்தம் - 1408 - பெரிய திருமொழி - 5.7.1
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்* 
பதங்களும் பதங்களின் பொருளும்*
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்* பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்* ஏழு மா மலைகளும் விசும்பும்*
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

185. திவ்ய ப்ரபந்தம் - 1409 - பெரிய திருமொழி - 5.7.2
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்* எண் இல் பல் குணங்களே இயற்ற*
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும்* சுற்றி நின்று அகலாப் பந்தமும்* 
பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும்* பல் உயிர்க்கு எல்லாம்*
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

186. திவ்ய ப்ரபந்தம் - 1410 - பெரிய திருமொழி - 5.7.3
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும்* வானமும் தானவர் உலகும்*
துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கித்* 
தொல்லை நான்மறைகளும் மறைய*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்* பிறங்கு இருள் நிறம் கெட* 
ஒருநாள் அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*
அரங்க மா நகர் அமர்ந்தானே|

187. திவ்ய ப்ரபந்தம் - 1411 - பெரிய திருமொழி - 5.7.4
மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக* மாசுணம் அதனொடும் அளவி*
பா இரும் பௌவம் பகடு விண்டு அலறப்* படு திரை விசும்பிடைப் படர*
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும்* தேவரும் தாம் உடன் திசைப்ப*
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

188. திவ்ய ப்ரபந்தம் - 1412 - பெரிய திருமொழி - 5.7.5
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்?* இரணியன் இலங்கு பூண் அகலம்*
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து* பொழிதரும் அருவி ஒத்து இழிய*
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்* 
விண் உறக் கனல் விழித்து எழுந்தது*
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

189. திவ்ய ப்ரபந்தம் - 1413 - பெரிய திருமொழி - 5.7.6
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய* அடல் புரை எழில் திகழ் திரள் தோள்*
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி* மற்று அவன் அகல் விசும்பு அணைய*
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச* அறிதுயில் அலை கடல் நடுவே*
ஆயிரம் சுடர் வாய் அரவு அணைத் துயின்றான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

190. திவ்ய ப்ரபந்தம் - 1414 - பெரிய திருமொழி - 5.7.7
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* 
கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடி செய்து* 
இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரி சிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட* 
மலையால் அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*
அரங்க மா நகர் அமர்ந்தானே|

191. திவ்ய ப்ரபந்தம் - 1415 - பெரிய திருமொழி - 5.7.8
ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய்* ஒரு கால் உடைய தேர் ஒருவன் ஆய்* 
உலகில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து* 
இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப்* பகலவன் ஒளி கெட* 
பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்* 
அரங்க மா நகர் அமர்ந்தானே|

192. திவ்ய ப்ரபந்தம் - 1416 - பெரிய திருமொழி - 5.7.9
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்* 
ஒரு கால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்* 
மால் ஆய் ஆல் இலை வளர்ந்து* மணி முடி வானவர் தமக்குச் சேயன் ஆய்* 
அடியேர்க்கு அணியன் ஆய் வந்து* என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்*
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

193. திவ்ய ப்ரபந்தம் - 1417 - பெரிய திருமொழி - 5.7.10
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து* பொரு திரை மா நதி புடை சூழ்ந்து*
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த* அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்று அறுப்பாரே|

194. திவ்ய ப்ரபந்தம் - 1418 - பெரிய திருமொழி - 5.8.1
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி* மற்று அவற்கு இன் அருள் சுரந்து*
மாழை மான் மட நோக்கி உன் தோழி* உம்பி எம்பி என்று ஒழிந்திலை* 
உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து* 
அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

195. திவ்ய ப்ரபந்தம் - 1419 - பெரிய திருமொழி - 5.8.2
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு* மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை* 
உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச்* 
செய்த கவினுக்கு இல்லை கைம்மாறு* 
என்று கோது இல் வாய்மையினாயொடும் உடனே*
உண்பன் நான் என்ற ஒண் பொருள்* 
எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

196. திவ்ய ப்ரபந்தம் - 1420 - பெரிய திருமொழி - 5.8.3
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை* வைகு தாமரை வாங்கிய வேழம்*
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற* 
மற்று அது நின் சரண் நினைப்ப*
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்* 
கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து* 
உன் அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

197. திவ்ய ப்ரபந்தம் - 1421 - பெரிய திருமொழி - 5.8.4
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்* 
வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்*
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*
அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர்* கொடிய செய்வன உள* 
அதற்கு அடியேன் அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

198. திவ்ய ப்ரபந்தம் - 1422 - பெரிய திருமொழி - 5.8.5
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்* 
மலர் அடி கண்ட மா மறையாளன்*
தோகை மா மயில் அன்னவர் இன்பம்* துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து*
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே* போதுவாய் என்ற பொன் அருள்* 
எனக்கும்ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

199. திவ்ய ப்ரபந்தம் - 1423 - பெரிய திருமொழி - 5.8.6
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை* 
மதியாத வெம் கூற்றம் தன்னை அஞ்சி* 
நின் சரண் என சரண் ஆய்த்* தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம்* எண்ணிய பேர் அருள்* 
எனக்கும் அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

200. திவ்ய ப்ரபந்தம் - 1424 - பெரிய திருமொழி - 5.8.7
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*
உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்*
காதல் என் மகன் புகல் இடம் காணேன்*
கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

201. திவ்ய ப்ரபந்தம் - 1425 - பெரிய திருமொழி - 5.8.8
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*
எந்தை நின் சரண் என்னுடை மனைவி*
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*
கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச் செய்து*
உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

202. திவ்ய ப்ரபந்தம் - 1426 - பெரிய திருமொழி - 5.8.9
துளங்கு நீள் முடி அரசர் தம் குரிசில்*
தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு*
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து* 
அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்த ஆறு* 
அடியேன் அறிந்து* 
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

203. திவ்ய ப்ரபந்தம் - 1427 - பெரிய திருமொழி - 5.8.10
மாட மாளிகை சூழ் திருமங்கை மன்னன்* ஒன்னலர் தங்களை வெல்லும்*
ஆடல்மா வலவன் கலிகன்றி*அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*எந்தையை நெடுமாலை நினைந்த*
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர் பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே|

204. திவ்ய ப்ரபந்தம் - 1506 - பெரிய திருமொழி - 6.6.9 
தார் ஆளன் தண் அரங்க ஆளன்* 
பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேர் ஆளன்* 
ஆயிரம் பேர் உடைய ஆளன்*
பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்* 
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*
படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த*
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

205. திவ்ய ப்ரபந்தம் - 1571 - பெரிய திருமொழி - 7.3.4
உரங்களால் இயன்ற மன்னர் மாளப்*
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று*
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும் எம்பிரானை* 
வம்பு ஆர் புனல் காவிரி*
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி* ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று*
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி* 
என் மனம் தாழ்ந்து நில்லாதே|

206. திவ்ய ப்ரபந்தம் - 1664 - பெரிய திருமொழி - 8.2.7
தரங்க நீர் பேசினும்* தண் மதி காயினும்*
இரங்குமோ?* எத்தனை நாள் இருந்து எள்கினாள்*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை* 
ஊர் அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே|

207. திவ்ய ப்ரபந்தம் - 1829 - பெரிய திருமொழி - 9.9.2
புனை வளர் பூம் பொழில் ஆர்* பொன்னி சூழ் அரங்க நகருள் முனைவனை* 
மூவுலகும் படைத்த* முதல் மூர்த்தி தன்னை*
சினை வளர் பூம் பொழில் சூழ்* திருமாலிருஞ்சோலை நின்றான்*
கனை கழல் காணும்கொலோ* கயல் கண்ணி எம் காரிகையே?

208. திவ்ய ப்ரபந்தம் - 1978 - பெரிய திருமொழி - 11.3.7
கண்ணன் மனத்துள்ளே* நிற்கவும் கை வளைகள்*
என்னோ கழன்ற?* இவை என்ன மாயங்கள்?*
பெண் ஆனோம்* பெண்மையோம் நிற்க* 
அவன் மேய அண்ணல் மலையும்* அரங்கமும் பாடோமே?

209. திவ்ய ப்ரபந்தம் - 2029 - பெரிய திருமொழி - 11.8.8
அணி ஆர் பொழில் சூழ்* அரங்க நகர் அப்பா!*
துணியேன் இனி* நின் அருள் அல்லது எனக்கு*
மணியே மணி மாணிக்கமே* மதுசூதா!*
பணியாய் எனக்கு உய்யும் வகை* பரஞ்சோதீ|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 10

திருமங்கையாழ்வார் 
167. திவ்ய ப்ரபந்தம் - 1391 - பெரிய திருமொழி - 5.5.4
தாய் வாயில் சொல் கேளாள்* 
தன் ஆயத் தோடு அணையாள் தட மென் கொங்கையே* 
ஆரச் சாந்து அணியாள்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்*
பேசில் நங்காய்*
மா மாயன் என் மகளைச் செய்தனகள்* மங்கைமீர் மதிக்கிலேனே|

168. திவ்ய ப்ரபந்தம் - 1392 - பெரிய திருமொழி - 5.5.5
பூண் முலைமேல் சாந்து அணியாள்* 
பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்*
ஏண் அறியாள் எத்தனையும்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நாள் மலராள் நாயகன்* ஆய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர் அறிகிலேனே|

169. திவ்ய ப்ரபந்தம் - 1393 - பெரிய திருமொழி - 5.5.6
தாது ஆடு வன மாலை* தாரானோ? என்று என்றே தளர்ந்தாள் காண்மின்*
யாதானும் ஒன்று உரைக்கில்* எம் பெருமான் திருவரங்கம் என்னும்*
பூமேல் மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*
மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற தூதாளன்* 
என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சொல்லுகேனே?

170. திவ்ய ப்ரபந்தம் - 1394 - பெரிய திருமொழி - 5.5.7
வார் ஆளும் இளங் கொங்கை* வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்* 
எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள்* 
இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்?*
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்*
ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த தேர் ஆளன்* 
என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் செப்புகேனே?

171. திவ்ய ப்ரபந்தம் - 1395 - பெரிய திருமொழி - 5.5.8
உறவு ஆதும் இலள் என்று என்று* ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால்*
மறவாதே எப்பொழுதும்* மாயவனே மாதவனே என்கின்றாளால்*
பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்* 
விண்ணோர் தங்கள் அறவாளன்* 
என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர் அறிகிலேனே|

172. திவ்ய ப்ரபந்தம் - 1396 - பெரிய திருமொழி - 5.5.9
பந்தோடு கழல் மருவாள்* பைங் கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்*
வந்தானோ திருவரங்கன்?* வாரானோ? என்று என்றே வளையும் சோரும்*
சந்தோகன் பௌழியன்* ஐந் தழல் ஓம்பு தைத்திரியன் சாமவேதி*
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர் அறிகிலேனே|

173. திவ்ய ப்ரபந்தம் - 1397 - பெரிய திருமொழி - 5.5.10
சேல் உகளும் வயல் புடை சூழ்* திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த*
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்* தாய் மொழிந்த அதனை*
நேரார் கால வேல் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்*
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்ப்* 
பொன் உலகில் வாழ்வர் தாமே|

174. திவ்ய ப்ரபந்தம் - 1398 - பெரிய திருமொழி - 5.6.1
கைம் மான மழ களிற்றைக்* கடல் கிடந்த கருமணியை*
மைம் மான மரதகத்தை* மறை உரைத்த திருமாலை*
எம்மானை எனக்கு என்றும் இனியானைப்* பனி காத்த அம்மானை* 
யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே|

175. திவ்ய ப்ரபந்தம் - 1399 - பெரிய திருமொழி - 5.6.2
பேரானைக்* குறுங்குடி எம் பெருமானை* 
திருத்தண்கால் ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை* 
முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும்* மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும்*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது தென் அரங்கத்தே|

176. திவ்ய ப்ரபந்தம் - 1400 - பெரிய திருமொழி - 5.6.3
ஏன் ஆகி உலகு இடந்து* அன்று இரு நிலனும் பெரு விசும்பும்*
தான் ஆய பெருமானை* தன் அடியார் மனத்து என்றும்**
8தேன் ஆகி அமுது ஆகித்* திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்*
ஆன்-ஆயன் ஆனானைக்* கண்டது தென் அரங்கத்தே|

177. திவ்ய ப்ரபந்தம் - 1401 - பெரிய திருமொழி - 5.6.4
வளர்ந்தவனைத் தடங் கடலுள்* வலி உருவில் திரி சகடம்*
தளர்ந்து உதிர உதைத்தவனைத்* 
தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை*
பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்* பண்டு ஒருநாள் அளந்தவனை* 
யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே|

178. திவ்ய ப்ரபந்தம் - 1402 - பெரிய திருமொழி - 5.6.5
நீர் அழல் ஆய்* நெடு நிலன் ஆய் நின்றானை* 
அன்று அரக்கன் ஊர் அழலால் உண்டானைக்* கண்டார் பின் காணாமே**
பேர் அழல் ஆய்ப் பெரு விசும்பு ஆய்ப்* பின் மறையோர் மந்திரத்தின்*
ஆர் அழலால் உண்டானைக்* கண்டது தென் அரங்கத்தே|

179. திவ்ய ப்ரபந்தம் - 1403 - பெரிய திருமொழி - 5.6.6
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்* தவ நெறியை தரியாது*
கஞ்சனைக் கொன்று* அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை**
வெம் சினத்த கொடுந் தொழிலோன்* விசை உருவை அசைவித்த*
அம் சிறைப் புள் பாகனை* யான் கண்டது தென் அரங்கத்தே|

180. திவ்ய ப்ரபந்தம் - 1404 - பெரிய திருமொழி - 5.6.7
சிந்தனையைத் தவநெறியைத்* திருமாலை* 
பிரியாது வந்து எனது மனத்து இருந்த* வடமலையை*
வரி வண்டு ஆர் கொந்து அணைந்த பொழில் கோவல்* 
உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை* 
யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே|

181. திவ்ய ப்ரபந்தம் - 1405 - பெரிய திருமொழி - 5.6.8
துவரித்த உடையவர்க்கும்* தூய்மை இல்லாச் சமணர்க்கும்*
அவர்கட்கு அங்கு அருள் இல்லா* அருளானை*
தன் அடைந்த எமர்கட்கும் அடியேற்கும்* எம்மாற்கும் எம் அனைக்கும்*
அமரர்க்கும் பிரானாரைக்* கண்டது தென் அரங்கத்தே|

182. திவ்ய ப்ரபந்தம் - 1406 - பெரிய திருமொழி - 5.6.9
பொய் வண்ணம் மனத்து அகற்றிப்* புலன் ஐந்தும் செல வைத்து*
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு* மெய்ந் நின்ற வித்தகனை* 
மை வண்ணம் கரு முகில்போல்* திகழ் வண்ணம் மரதகத்தின்*
அவ் வண்ண வண்ணனை* யான் கண்டது தென் அரங்கத்தே|

183. திவ்ய ப்ரபந்தம் - 1407 - பெரிய திருமொழி - 5.6.10
ஆ மருவி நிரை மேய்த்த* அணி அரங்கத்து அம்மானை*
காமரு சீர்க் கலிகன்றி* ஒலிசெய்த மலி புகழ் சேர்*
நா மருவு தமிழ் மாலை* நால் இரண்டோடு இரண்டினையும்*
தாம் மருவி வல்லார் மேல்* சாரா தீவினை தானே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 9

திருப்பாணாழ்வார் 
146. திவ்ய பிரபந்தம் - 931 - அமலனாதிபிரான் - 5
பாரம் ஆய* பழ வினை பற்று அறுத்து* 
என்னைத் தன் வாரம் ஆக்கி வைத்தான்* வைத்தது அன்றி என் உள் புகுந்தான்* 
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்* 
திரு ஆர மார்பு அது அன்றோ* அடியேனை ஆட்கொண்டதே|

147. திவ்ய ப்ரபந்தம் - 932 - அமலனாதிபிரான் - 6
துண்ட வெண் பிறையன்* துயர் தீர்த்தவன்* 
அம் சிறைய வண்டு வாழ் பொழில் சூழ்* அரங்க நகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட‌ பகிர் அண்டத்து* ஒரு மாநிலம் எழு மால் வரை* 
முற்றும் உண்ட கண்டம் கண்டீர்* அடியேனை உய்யக் கொண்டதே|

148. திவ்ய ப்ரபந்தம் - 933 - அமலனாதிபிரான் - 7
கையின் ஆர்* சுரி சங்கு அனல் ஆழியர்* 
நீள் வரை போல் மெய்யனார்* துளப விரையார் கமழ் நீள் முடி எம் ஐயனார்* 
அணி அரங்கனார்* அரவின் அணை மிசை மேய மாயனார்*
செய்ய வாய் ஐயோ!* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே|

149. திவ்ய ப்ரபந்தம் - 934 - அமலனாதிபிரான் - 8
பரியன் ஆகி வந்த* அவுணன் உடல் கீண்ட* 
அமரர்க்கு அரிய ஆதி பிரான்* அரங்கத்து அமலன் முகத்து*
கரிய ஆகிப் புடை பரந்து* மிளிர்ந்து செம் வரி ஓடி* 
நீண்ட அப்‍பெரிய ஆய கண்கள்* என்னைப் பேதமை செய்தனவே|

150. திவ்ய ப்ரபந்தம் - 935 - அமலனாதிபிரான் - 9
ஆல மா மரத்தின் இலை மேல்* ஒரு பாலகனாய்*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்*
கோல மா மணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்*
நீல மேனி ஐயோ!* நிறை கொண்டது என் நெஞ்சினையே| (2)

151. திவ்ய ப்ரபந்தம் - 936 - அமலனாதிபிரான் - 10
கொண்டல் வ‌ண்ணனைக்* கோவலனாய்* 
வெண்ணெய் உண்ட வாயன்* என் உள்ளம் கவர்ந்தானை* 
அண்டர் கோன்* அணி அரங்கன்* 
என் அமுதினைக் கண்ட கண்கள்* மற்று ஒன்றினைக் காணாவே| (2)

திருமங்கையாழ்வார்
152. திவ்ய பிரபந்தம் - 1019 - பெரிய திருமொழி - 1.8.2
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய் முலை* 
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* 
திருவேங்கடம் அடை நெஞ்சமே|(2)

153. திவ்ய ப்ரபந்தம் - 1213 - பெரிய திருமொழி - 3.7.6
என் துணை என்று எடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்* 
தன் துணை ஆய என்தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்* வரம் செற்று அரங்கத்து உறையும்* 
இன் துணைவனொடும் போய்* எழில் ஆலி புகுவர்கொலோ| (2) 

154. திவ்ய ப்ரபந்தம் - 1378 - பெரிய திருமொழி - 5.4.1
உந்தி மேல் நான்முகனைப் படைத்தான்* உலகு உண்டவன் எந்தை பெம்மான்* 
இமையோர்கள்* தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்* புனல் காவிரி* 
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ்* தென் அரங்கமே|

155. திவ்ய ப்ரபந்தம் - 1379 - பெரிய திருமொழி - 5.4.2
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்* மணி நீள் முடி* 
பை கொள் நாகத்து அணையான்* பயிலும் இடம் என்பரால்*
தையல் நல்லார் குழல் மாலையும்* மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்* தென் அரங்கமே|

156. திவ்ய ப்ரபந்தம் - 1380 - பெரிய திருமொழி - 5.4.3
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று* மாவலி கையில் நீர கொண்ட* 
ஆழித் தடக் கைக்* குறளன் இடம் என்பரால்* 
வண்டு பாடும் மது வார் புனல்* வந்து இழி காவிரி* 
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே|

157. திவ்ய ப்ரபந்தம் - 1381 - பெரிய திருமொழி - 5.4.4
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்* நகர் பாழ்பட* 
வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு* இடம் என்பரால்* 
துளைக் கை யானை மருப்பும் அகிலும்* கொணர்ந்து உந்தி* 
முன் திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே|

158. திவ்ய ப்ரபந்தம் - 1382 - பெரிய திருமொழி - 5.4.5
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்* வான் புக* 
அம்பு தன்னால் முனிந்த* அழகன் இடம் என்பரால்* 
உம்பர் கோனும் உலகு ஏழும்* வந்து ஈண்டி வணங்கும்* 
நல செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே|

159. திவ்ய ப்ரபந்தம் - 1383 - பெரிய திருமொழி - 5.4.6
கலை உடுத்த அகல் அல்குல்* வன் பேய் மகள் தாய் என*
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்* வாழும் இடம் என்பரால்*
குலை எடுத்த கதலிப்* பொழிலூடும் வந்து உந்தி* 
முன் அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே|

160. திவ்ய ப்ரபந்தம் - 1384 - பெரிய திருமொழி - 5.4.7
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்* சகடமும் காலினால்*
துஞ்ச வென்ற சுடர் ஆழியான்* வாழ் இடம் என்பரால்*
மஞ்சு சேர் மாளிகை* நீடு அகில் புகையும் மறையோர்*
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்* தென் அரங்கமே|

161. திவ்ய ப்ரபந்தம் - 1385 - பெரிய திருமொழி - 5.4.8
ஏனம் மீன் ஆமையோடு* அரியும் சிறு குறளும் ஆய்*
தானும் ஆய* தரணித் தலைவன் இடம் என்பரால்**
வானும் மண்ணும் நிறையப்* புகுந்து ஈண்டி வணங்கும்* 
நல் தேனும் பாலும் கலந்த* அன்னவர் சேர் தென் அரங்கமே|

162. திவ்ய ப்ரபந்தம் - 1386 - பெரிய திருமொழி - 5.4.9
சேயன் என்றும் மிகப் பெரியன்* நுண் நேர்மையன் ஆய* 
இம் மாயையை ஆரும் அறியா* வகையான் இடம் என்பரால்*
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து* ஆர் புனல் காவிரி*
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே|

163. திவ்ய ப்ரபந்தம் - 1387 - பெரிய திருமொழி - 5.4.10
அல்லி மாதர் அமரும்* திரு மார்வன் அரங்கத்தை*
கல்லின் மன்னு மதிள்* மங்கையர்-கோன் கலிகன்றி சொல்*
நல் இசை மாலைகள்* நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர்-தாம் உலகு ஆண்டு* பின் வான் உலகு ஆள்வரே|

164. திவ்ய ப்ரபந்தம் - 1388 - பெரிய திருமொழி - 5.5.1
வெருவாதாள் வாய் வெருவி* வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்*
மருவாளால் என் குடங்கால்* வாள் நெடும் கண் துயில் மறந்தாள்*
வண்டு ஆர் கொண்டல் உருவாளன் வானவர் தம் உயிராளன்*
ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட திருவாளன்* 
என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே?

165. திவ்ய ப்ரபந்தம் - 1389 - பெரிய திருமொழி - 5.5.2
கலை ஆளா அகல் அல்குல்* கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான்?*
விலை ஆளா அடியேனை* வேண்டுதியோ? வேண்டாயோ? என்னும்*
மெய்ய மலையாளன் வானவர் தம் தலையாளன்*
மராமரம் ஏழ் எய்த வென்றிச் சிலையாளன்* 
என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே?

166. திவ்ய ப்ரபந்தம் - 1390 - பெரிய திருமொழி - 5.5.3
மான் ஆய மென் நோக்கி* வாள் நெடுங் கண் நீர் மல்கும் வளையும் சோரும்*
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்* திறம் பேசி உறங்காள் காண்மின்*
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக* 
நந்தன் பெற்ற ஆன் ஆயன்* 
என் மகளைச் செய்தனகள்*அம்மனைமீர் அறிகிலேனே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்