About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 13 August 2026

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. ப⁴ஜே வ்ரஜைக மண்ட³னம்
ஸமஸ்த பாப க²ண்ட³னம் 
ஸ்வ ப⁴க்த சித்த ரஞ்ஜனம்
ஸதை³வ நந்த³ நந்த³னம்|
ஸு பிச்ச² கு³ச்ச² மஸ்தகம்
ஸுநாத³ வேணு ஹஸ்தகம் 
அனங்க³ ரங்க³ ஸாக³ரம்
நமாமி க்ருஷ்ண நாக³ரம்||

  • ப⁴ஜே – வணங்குகிறேன், துதிக்கிறேன்
  • வ்ரஜ ஏக – வ்ரஜ பூமிக்கு, ஆயர்பாடிக்கு ஒப்பற்ற
  • மண்ட³னம் – ஆபரணமாகத் திகழ்பவரை
  • ஸமஸ்த – எல்லாவிதமான, அனைத்து
  • பாப – பாவங்களையும்
  • க²ண்ட³னம் – அழிப்பவரை, தகர்ப்பவரை
  • ஸ்வ – தன்னுடைய
  • ப⁴க்த – பக்தர்களின்
  • சித்த – மனதிற்கு
  • ரஞ்ஜனம் – மகிழ்ச்சியை அளிப்பவரை
  • ஸதை³வ – எப்போதும்
  • நந்த³ – நந்தகோபனின்
  • நந்த³னம் – மகனாக விளங்குபவரை
  • ஸு – அழகான
  • பிச்ச² – மயில் தோகை
  • கு³ச்ச² – கற்றையை
  • மஸ்தகம் – தலையில் சூடியிருப்பவரை
  • ஸுநாத³ – இனிய நாதத்தை, இசையை எழுப்பும்
  • வேணு – புல்லாங்குழலை
  • ஹஸ்தகம் – கைகளில் ஏந்தியிருப்பவரை
  • அனங்க³ – மன்மதனின், காதலின் அழகின்
  • ரங்க³ – லீலைகளுக்கு
  • ஸாக³ரம் – கடல் போன்றவரை
  • நமாமி – வணங்குகிறேன்
  • க்ருஷ்ண – கிருஷ்ணராகிய
  • நாக³ரம் – மிகச் சிறந்த நாயகனை, தலைவனை

கோகுலத்தின் (வ்ரஜ பூமி) (நந்தகுலத்தின்) சர்வ ஆபரணமாக விளங்கும் கிருஷ்ணா, பக்தர்களின் சகல பாபங்களையும் அழித்து ரட்சிப்பவனே, பக்தர்களின் சித்தத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தி மகிழ்விப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். குழல் கற்றைகள் நெற்றியில் நடனமாட, மயிற்பீலி அசையும் கிரீடத்துடன், கைகளில் இனிய நாதம் எழுப்பும் புல்லாங்குழல் ஏந்தி காட்சி அருளுபவனே, ப்ரேமம் என்னும் காதல் சமுத்திரத்தின் (சாகரம்) உருக் கொண்டவனே, லீலா விநோதங்களால் மகிழ்விக்கும் கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பலச்ருதி 

9. க்ருஷ்ணாஷ்டக மித³ம் புண்யம் 
ப்ராத ருத்தா²ய ய: படே²த்|
கோடி ஜன்ம க்ருதம் பாபம் 
ஸ்மரணேன வினஸ்²யதி||

  • க்ருஷ்ணாஷ்டகம் - கிருஷ்ணனைப் போற்றும் இந்த எட்டு ஸ்லோகங்கள் கொண்ட ஸ்லோகத்தை
  • இ³தம் - இந்த 
  • புண்யம் - புண்ணியத்தைத் தரக்கூடிய, தூய்மையான
  • ப்ராதஹ் - அதிகாலை வேளையில்
  • உத்தா²ய - படுக்கையிலிருந்து எழுந்து
  • யஹ் - எவர் ஒருவர்
  • படே²த் - படிக்கிறாரோ, பாராயணம் செய்கிறாரோ
  • கோடி - கோடி
  • ஜன்ம - பிறவிகளில்
  • க்ருதம் - செய்யப்பட்ட
  • பாபம் - பாவங்கள் அனைத்தும்
  • ஸ்மரணேன - இறைவனை நினைப்பதன் மூலமே
  • வினஸ்²யதி - அழிகிறது, நசித்துப் போகிறது

எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!

||இதி ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

8. ஶ்ரீவத் ஸாங்கம் மஹோரஸ்கம் 
வனமாலா விராஜிதம்|
ஸ²ங்க² சக்ர த⁴ரம் தே³வம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • ஶ்ரீ வத்ஸ அங்கம் - ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவை, அடையாளத்தை உடலில் கொண்டவர்
  • மஹா உரஸ்கம் - பரந்த, விசாலமான மார்பை உடையவர்
  • வனமாலா - காட்டு மலர்களால் ஆன மாலையினால், வைஜயந்தி மாலையினால்
  • விராஜிதம் - பிரகாசிப்பவர், அழகுடன் விளங்குபவர்
  • ஸ²ங்க - பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும்
  • சக்ர - சுதர்சனம் என்னும் சக்கரத்தையும்
  • த⁴ரம் - கைகளில் ஏந்தியிருப்பவர்
  • தே³வம் - தெய்வீக ஒளி பொருந்திய இறைவனை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

8. கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர் மது⁴ரா ஸ்ருஷ்டிர் மது⁴ரா|
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

  • கோ³பா  - கோபியர்கள், இடையர் குலப் பெண்கள்
  • மது⁴ரா  - இனிமையானவர்கள்
  • கா³வோ  - பசுக்கள்
  • மது⁴ரா  - இனிமையானவை
  • யஷ்டிர்  - மேய்க்கும் கோல், கைத்தடி
  • மது⁴ரா  - இனிமையானது
  • ஸ்ருஷ்டிர்  - பிரபஞ்சப் படைப்பு
  • மது⁴ரா  - இனிமையானது
  • த³லிதம்  - அழித்தல், தீமைகளை அடக்குதல்
  • மது⁴ரம்  - இனிமையானது
  • ப²லிதம்  - பலன் தருதல், வரமருளுதல்
  • மது⁴ரம்  - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

ஆயர் அழகு. பசுக்கள் அழகு, செண்டை அழகு, பிறவி அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.

||இதி ஸ்ரீ மதுராஷ்டகம் சம்பூர்ணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

7. கோ³பிகானாம் குசத்³ வந்த³ 
குங்குமாங்கித வக்ஷஸம்|
ஶ்ரீநிகேதம் மஹேஷ் வாஸம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • கோ³பிகானாம் - கோபிகைகளின், ஆயர்பாடி பெண்களின்
  • குசத்³ வந்த³ - இரு தனங்களில், மார்பகங்களில் பூசப்பட்ட
  • குங்கும அங்கித - குங்குமக் குழம்பின் சுவடுகள் பதிந்த
  • வக்ஷஸம் - மார்பினை உடையவரை
  • ஶ்ரீநிகேதம் - மஹாலக்ஷ்மி தேவியின் நிரந்தர இருப்பிடமாக விளங்குபவரை
  • மஹேஷ் வாஸம் - சிறந்த வில்லாளியை, மஹா விஷ்ணுவின் பிரகாசமான வடிவத்தைக் கொண்டவரை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

கோபிகை கொங்கைகளின் குங்குமக் குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீ மகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

7. கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம்|
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • கோ³பீ - கோபியர்கள்
  • மது⁴ரா - இனிமையானவர்கள்
  • லீலா - அவருடைய விளையாட்டுகள், லீலைகள்
  • மது⁴ரா - இனிமையானவை
  • யுக்தம் - அவர்களுடன் அவர் கொள்ளும் சேர்க்கை, சேர்க்கை நிலை
  • மது⁴ரம் - இனிமையானது
  • முக்தம் - அவர்களிடமிருந்து அவர் பெறும் பிரிதல், விடுதலை நிலை
  • மது⁴ரம் - இனிமையானது
  • த்³ருஷ்டம் - அவருடைய பார்வை, தரிசனம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஸி²ஷ்டம் - அவருடைய சிஷ்டாச்சாரம், ஒழுக்கம், நற்பண்புகள்
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

தோழியர் அழகு, கொண்டாட்டம் அழகு, கூடல் அழகு, சிஷ்ட பரிபாலனம் அழகு, பார்வை அழகு, பாவனை அழகு, மதுராதிபனே சகலமும் நீயே என்பதால் அகிலமே அழகு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

6. ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் 
பீதாம்ப³ர ஸுஸோ²பி⁴தம்|
அவாப்த துலஸீ க³ந்த⁴ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • ருக்மிணீ - ருக்மிணியுடன்
  • கேளி - லீலைகள், விளையாட்டுகளில்
  • ஸம்யுக்தம் - இணைந்திருப்பவரை
  • பீதாம்ப³ர - மஞ்சள் நிற ஆடையும்
  • ஸுஸோ²பி⁴தம் - மிக அழகாக விளங்குபவரை
  • அவாப்த - பெற்ற, கொண்டிருப்பவரை
  • துலஸீ - துளசியின்
  • க³ந்த⁴ம் - நறுமணத்தை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

6. கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா|
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

  • கு³ஞ்ஜா - குன்றி மணி, கிருஷ்ணர் அணியும் குன்றி மணி மாலை
  • மது⁴ரா - இனிமையானது
  • மாலா - அவர் அணிந்துள்ள பூமாலை
  • மது⁴ரா - இனிமையானது
  • யமுனா - யமுனை நதி
  • மது⁴ரா - இனிமையானது
  • வீசீ - யமுனை நதியின் அலைகள்
  • மது⁴ரா - இனிமையானவை
  • ஸலிலம் - யமுனையின் தண்ணீர்
  • மது⁴ரம் - இனிமையானது
  • கமலம் - தாமரை மலர்
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

கதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. யமுனை நீர் அழகு. தாமரை மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

5. உத்பு²ல்ல பத்³ம பத்ராக்ஷம் 
நீல ஜீமூத ஸன்னிப⁴ம்|
யாத³வானாம் ஸி²ரோரத்னம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • உத்பு²ல்ல – மலர்ந்த, விரிந்த
  • பத்³ம – தாமரை
  • பத்ர – இதழ்
  • அக்ஷம் – கண்களை உடையவரை
  • நீல – நீல நிறமுள்ள
  • ஜீமூத – மேகத்திற்கு
  • ஸன்னிப⁴ம் – ஒப்பானவரை, சமமானவரை
  • யாதவா³னாம் – யாதவ குலத்தில் பிறந்தவர்களுள்
  • ஸி²ரோ ரத்னம் – தலையாய ரத்தினம் போன்றவரை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

கு³ரும் - குருவாக இருப்பவரைமலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

5. கரணம் மது⁴ரம் தரணம் மது⁴ரம்
ஹரணம் மது⁴ரம் ஸ்மரணம் மது⁴ரம்|
வமிதம் மது⁴ரம் ஷமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • கரணம் - செய்கை, செயல்கள்
  • மது⁴ரம் - இனிமையானது
  • தரணம் - கடத்துதல், இரட்சிப்பு
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஹரணம் - கவர்தல், நீக்குதல்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஸ்மரணம் - நினைவு கூறுதல்
  • மது⁴ரம் - இனிமையானது
  • வமிதம் - உமிழ்ந்த பொருள், பேச்சு
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஷமிதம் - அமைதி, குணம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

உனது குறும்பு செயல்கள் அழகு. நீ எதையும் கடந்து நிற்பது அழகு. பக்தர்களின் மனதை அபகரிப்பது அழகு. உன்னைப்பற்றி நினைப்பதே இனிமையானது. அணி அழகு, தோற்றம் அழகு, மதுராபுரியரசே, யாவும் நீயாக இருப்பதால் இவ்வுலகமே அழகானது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

4. மந்தா³ர க³ந்த⁴ ஸம்யுக்தம் 
சாரு ஹாஸம் சதுர் பு⁴ஜம்|
ப³ர்ஹி பிஞ்சா²வ சூடா³ங்க³ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • மந்தா³ர - மந்தாரை மலர்களின்
  • க³ந்த⁴ - நறுமணத்தை
  • ஸம்யுக்தம் - கொண்டிருப்பவரை
  • சாரு - அழகான, கொள்ளை கொள்ளும்
  • ஹாஸம் - புன்னகையை உடையவரை
  • சதுர் - நான்கு
  • பு⁴ஜம் - தோள்களை, கரங்களை உடையவரை
  • ப³ர்ஹி - மயிலின்
  • பிஞ்சா² - தோகையை
  • அவசூடா³ - தலையில் சூடிய முடிக்கு
  • அங்க³ம் - ஆபரணமாகக் கொண்டவரை
  • க்ருஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ணரை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

4. கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம்|
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • கீ³தம் - அவருடைய பாடல், கானம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • பீதம் - அவருடைய பானம், அவர் பருகுவது
  • மது⁴ரம் - இனிமையானது
  • பு⁴க்தம் - அவருடைய உணவு, அவர் உண்பது
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஸுப்தம் - அவருடைய உறக்கம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ரூபம் - அவருடைய அழகு திருவுருவம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • திலகம் - அவருடைய நெற்றித் திலகம், பொட்டு
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

உனது பாடல் அழகு. உன் பட்டாடை அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப் பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு..

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

3. குடிலாலக ஸம்யுக்தம் 
பூர்ண சந்த்³ர நிபா⁴னனம்| 
விலஸத் குண்ட³ல த⁴ரம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • குடில அலக - சுருட்டைத் தலை முடியுடன்
  • ஸம்யுக்தம் - கூடிய அழகு பொருந்தியவனை
  • பூர்ண சந்த்³ர - முழு நிலவைப் போன்ற
  • நிப⁴ ஆநநம் - ஒளிரும் திருமுகத்தை உடையவனை
  • விலஸத் - பளீர் என ஒளி வீசும், பிரகாசிக்கும்
  • குண்ட³ல - காதணிகளை
  • த⁴ரம் - தரித்திருப்பவனை, அணிந்திருப்பவனை
  • க்ருஷ்ணம் - கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

சுருட்டைத் தலை முடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

3. வேணுர் மது⁴ரோ ரேணுர் மது⁴ர꞉
பாணிர் மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ|
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • வேணுர் - புல்லாங்குழல்
  • மது⁴ரோ - இனிமையானது
  • ரேணுர் - அவரது பாதங்கள் பட்ட தூசி, மண்
  • மது⁴ரஃ - இனிமையானது
  • பாணிர் - கைகள்
  • மது⁴ரஃ - இனிமையானவை
  • பாதௌ³ - இரு பாதங்களும்
  • மது⁴ரௌ - இனிமையானவை 
  • ந்ருத்யம் - நடனம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஸக்²யம் - நட்பு, தோழமை
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

உனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

2. அதஸீ புஷ்ப ஸங்காஸ²ம், 
ஹார நூபுர ஸோ²பிதம்|  
ரத்ன கங்கண கேயூரம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • அதஸீ புஷ்ப – காயாம்பூ
  • ஸங்காஸ²ம் – போன்ற நிறம், ஒளி உடையவனை
  • ஹார – முத்து மாலைகள், கழுத்து மாலைகளாலும்
  • நூபுர – காலில் அணியும் சிலம்புகள், தண்டைகளாலும்
  • ஸோ²பிதம்  – அழகாக விளங்குபவனை, பிரகாசிப்பவனை
  • ரத்ன – நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட
  • கங்கண – கைகளில் அணியும் வளையல்களையும், காப்பு
  • கேயூரம் – தோள்களில் அணியும் தோள் வளைகளையும் பூண்டவனை
  • க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

2. வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம்|
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

  • வசனம் – அவருடைய பேச்சும், வார்த்தைகளும்
  • மது⁴ரம் – இனிமையானது
  • சரிதம் – அவருடைய கதைகளும், செயல்களும், குணமும்
  • மது⁴ரம் – இனிமையானது
  • வஸனம் – அவருடைய ஆடைகளும்
  • மது⁴ரம் – இனிமையானது
  • வலிதம் – அவருடைய அழகான உடல் வளைவுகளும், அசைவுகளும் 
  • மது⁴ரம் – இனிமையானது
  • சலிதம் – அவருடைய நடையும்
  • மது⁴ரம் – இனிமையானது
  • ப்⁴ரமிதம் – அவர் சுற்றித் திரிதலும், உலகை மயக்கும் லீலைகளும்
  • மது⁴ரம் – இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் – மதுரையின் அரசனும், இனிமையின் அதிபதியுமாகிய கண்ணனுடைய
  • அகி²லம் – அனைத்தும்
  • மது⁴ரம் – இனிமையானது

உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. அந்த வகையில் ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். 

1. வஸுதே³வ ஸுதம் தே³வம் 
கம்ஸ சாணூர மர்த³னம்|
தே³வகீ பரமானந்த³ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • வஸுதே³வ ஸுதம் – வஸுதேவரின் குமாரனும், மகனும் 
  • தே³வம்  – ஒளிமயமான இறைவனும்
  • கம்ஸ சாணூர மர்த³னம் – கம்சன், சாணூரன் ஆகிய அரக்கர்களை அழித்தவரும்
  • தே³வகீ பரமானந்த³ம் – தாய் தேவகிக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருபவரும்
  • க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாகிய
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

வசுதேவரின் குமாரன்; கம்சன், சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம்|
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • அத⁴ரம் - உதடு
  • மது⁴ரம் - இனிமையானது
  • வத³னம் - முகம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • நயனம் - கண்கள்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஹஸிதம் - சிரிப்பு, புன்னகை
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஹ்ருத³யம் - இதயம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • க³மனம் - நடை, அசைவு
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதே - இனிமைக்கு அதிபதி, மதுராவின் அரசன்
  • அகி²லம் - அனைத்தும், முழுமையும்
  • மது⁴ரம் - இனிமையானது 

மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்|| 

தொடரும்