About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 13 August 2026

ஸ்ரீ மதுராஷ்டகம் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

8. கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர் மது⁴ரா ஸ்ருஷ்டிர் மது⁴ரா|
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

  • கோ³பா  - கோபியர்கள், இடையர் குலப் பெண்கள்
  • மது⁴ரா  - இனிமையானவர்கள்
  • கா³வோ  - பசுக்கள்
  • மது⁴ரா  - இனிமையானவை
  • யஷ்டிர்  - மேய்க்கும் கோல், கைத்தடி
  • மது⁴ரா  - இனிமையானது
  • ஸ்ருஷ்டிர்  - பிரபஞ்சப் படைப்பு
  • மது⁴ரா  - இனிமையானது
  • த³லிதம்  - அழித்தல், தீமைகளை அடக்குதல்
  • மது⁴ரம்  - இனிமையானது
  • ப²லிதம்  - பலன் தருதல், வரமருளுதல்
  • மது⁴ரம்  - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

ஆயர் அழகு. பசுக்கள் அழகு, செண்டை அழகு, பிறவி அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.

||இதி ஸ்ரீ மதுராஷ்டகம் சம்பூர்ணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment