||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. அந்த வகையில் ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம்.
1. வஸுதே³வ ஸுதம் தே³வம்
கம்ஸ சாணூர மர்த³னம்|
தே³வகீ பரமானந்த³ம்
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||
- வஸுதே³வ ஸுதம் – வசுதேவரின் குமாரனும், மகனும்
- தே³வம் – ஒளிமயமான இறைவனும்
- கம்ஸ சாணூர மர்த³னம் – கம்சன், சாணூரன் ஆகிய அரக்கர்களை அழித்தவரும்
- தே³வகீ பரமானந்த³ம் – தாய் தேவகிக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருபவரும்
- க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாகிய
- வந்தே³ - நான் வணங்குகிறேன்
- ஜக³த்³ - உலகத்திற்கே
- கு³ரும் - குருவாக இருப்பவரை
வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment