About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 1 பொது தனியன்கள். Show all posts
Showing posts with label 1 பொது தனியன்கள். Show all posts

Tuesday, 8 August 2023

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பொது தனியன் 5

ஆழ்வார்கள் உடையவர் தனியன்
(ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது)

பூ⁴தம் ஸரஸ்²ச மஹதா³ஹ்வய ப⁴ட்ட நாத²*
ஸ்ரீ ப⁴க்தி ஸார குலஸே²க²ர யோகி³ வாஹாந்*
பக்⁴தாங்க்⁴ரி ரேணு பரகால யதீந்த்³ர மிஸ்²ராந்*
ஸ்ரீ மத் பராங்குஸ² முநிம் ப்ரதோஸ்மி நித்யம்||

  • பூ⁴தம் - பூதத்தாழ்வார்
  • ஸரஸ்²ச - பொற்றாமரைப் பூவில் அவதரித்த பொய்கையார் (ஸரஸ் என்றால் பொய்கை, குளம்)
  • மஹதா³ஹ்வய - செவ்வல்லிப் பூவிலே அவதரித்த பேயாழ்வார் (மஹத் என்னும் பெயருடையவர்)
  • ப⁴ட்ட நாத² - வித்துவக் கோஷ்டியிலே சென்று அவர்களை வென்று பரத்வ நிர்ணய முகேன பட்டர் பிரான் பெரியாழ்வார், விஷ்ணுசித்தர் 
  • ஸ்ரீ ப⁴க்தி ஸார - திருமழிசை ஆழ்வார்
  • குலஸே²க²ர - பெரிய பெருமாள் விஷயத்தில் நிரவதிக பிரேமத்தையுடைய குலசேகர ஆழ்வார்
  • யோகி³ வாஹாந் - யோகி வாஹர் ஆகிறார் முனி வாஹரான பாண் பெருமாள் திருப்பாணாழ்வார் (முனி வாஹனர்)
  • பக்⁴தாங்க்⁴ரி ரேணு - தொண்டரடிப்பொடி ஆழ்வார் (பக்தர்களின் அடிப் பொடி)
  • பரகால - வாள் வீசும் பரகாலன் திருமங்கையாழ்வார்
  • யதீந்த்³ர - மதுரகவி யாழ்வார் எதிராசராம் இவர்கள் சேர்த்தி இருப்பது. உடையவர், ஸ்ரீ ராமானுஜர் (துறவிகளின் வேந்தர்)
  • மிஸ்²ராந் - மற்றும் முதலானோரை (இவர்கள் அனைவரையும்)
  • ஸ்ரீமத் - கல்யாண குணங்கள் நிறைந்த
  • பராங்குஸ² முநிம் - எல்லாரையும் அவயவ பூதராய் உடையரான நம்மாழ்வாரை, பராங்குச முனியை 
  • ப்ரதோஸ்மி - வணங்குகிறேன், நமஸ்கரிக்கிறேன்
  • நித்யம் - நாள்தோறும், எப்போதும்

நம்மாழ்வாரே முழு பகவத் ஸ்வரூபம், மற்ற ஆழ்வார்கள் அவருக்கு அவயங்கள். பூதத்தாழ்வாரே திருமுடி, பொய்கையாழ்வார், பேயாழ்வார் இரு கண்கள், முகமே பெரியாழ்வார், கழுத்து திருமழிசையாழ்வார், இரு கைகளோ குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் தான் திருமார்பு, திருமங்கையாழ்வார் நாபி, யதிராஜரே நம்மாழ்வாரின் திருவடி. ஆழ்வார்களையும், எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் உள்ளிட்ட ஆச்சாரியர்களையும் நான் தினமும் தலை வணங்கி போற்றுகிறேன். 
 
இத்தனியன் ஸ்ரீ நஞ்ஜீயரின் தூண்டுதலின் பேரில் ஸ்ரீ பராசர பட்டரால் அருளிச் செய்யப்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Monday, 7 August 2023

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பொது தனியன் 4

நம்மாழ்வார் தனியன்
(ஆளவந்தார் அருளிச் செய்தது)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ⁴தி:*
ஸர்வம் யதே³வ நியமேந மத³ந்வயாநாம்* 
ஆத்³யஸ்ய ந: குலபதேர் வகுளா பி⁴ராமம்* 
ஸ்ரீமத் தத³ங்க்⁴ரி யுக³ளம் ப்ரணமாமி மூர்த்⁴நா||

  • மாதா - பிரியத்தையே வேண்டி இருக்கும் மாதாவைப் போலே உபகாரராய் இருக்கை
  • பிதா - பாத்ரமாத்ரம் என்னும்படி உத்பாதகனாய் பிதா பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
  • யுவதயஸ் - இவ்விருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை
  • தநயா - அவர்களுடைய யௌவனத்தை அழிய மாறி பெற்றவராய் புத்ரர் பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
  • விபூ⁴திஹி - ஐஸ்வர்யம் போலே உத்தேச்யராய் இருக்குமவர் என்கை
  • ஸர்வம் - சர்வ ஐஹிகங்களுமாய் இருக்கை
  • யதே³வ - அவதாரணத்தால் 
  • நியமேந - அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய ப்ராமாதிகமாகவும் புறம்பு போகக் கடவது அன்றிக்கே இருக்கை
  • மத்³ அந்வயாநாம் - என்ற உபய சந்தான ஜாதர்க்கு
  • ஆத்³யஸ்ய நஹ் - ஸ்ரீ வைஷ்ணவ சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யர் என்கை 
  • குலபதேர் - ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே கோத்ர ரிஷியும் அவரே 
  • வகுளா பி⁴ராமம் - திருத் துழாயால் அலங்க்ருதமான பகவத் சரணார விந்தங்களை வ்யாவர்த்திக்கிறது
  • ஸ்ரீ மத் - ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயுடன் நித்ய சம்யுக்தமாயிருக்கை
  • தத்³ அங்க்⁴ரி யுகளம் - அது என்னுமது ஒழிய பேசி முடிய ஒண்ணாது என்கை
  • யுக³ளம் - சேர்த்தியால் வந்த அழகை யுடைத்தாய் இருக்கை
  • ப்ரணமாமி மூர்த்⁴நா - ஆழ்வார் உடைய படிகளை நினைத்தவாறே நம-என்று நிற்க மாட்டாதே அவர் திருவடிகளில் தலையை சேர்க்கிறார்

இதுவரை பெறு மதிப்புடன் கருதி வந்த என்னுடய தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் சம்பத்துக்கள் யாவும் இனி நம்மாழ்வார் திருவடியல்லாது மற்றொன்றாகாது. வகுளாபரண மாலை சூடப்பட்டவரும், எல்லோராலும் போற்றப் படுபவருமான நம்மாழ்வானின் திருவடிகளை என் தலையால் வணங்குகின்றேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பொது தனியன்  3

எம்பெருமானார் தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)

யோ நித்ய மச்யுத பதா³ம் பு³ஜ யுக்³ம ருக்ம*
வ்யாமோ ஹதஸ் ததி³தராணி த்ருணாய மேநே*
அஸ்மத்³ கு³ரோர் ப⁴க³வ தோஸ்ய த³யைக ஸிந்தோ⁴:*
ராமாநுஜஸ்ய சரணௌ ஸ²ரணம் ப்ரபத்³யே||

  • யோ – யார் ஒருவர், ஸ்ரீ ராமானுஜராகிய எவர் 
  • நித்யம் – எப்போதும், எக்காலத்திலும் இடைவிடாமல் 
  • அச்யுத – அச்யுதனுடைய (தன்னை அடைந்தவர்களை என்றும் கைவிடாத எம்பெருமான் ஸ்ரீமந் நாரணனுடைய)
  • பதா³ம் பு³ஜ – தாமரை மலர் போன்ற திருவடிகள்
  • யுக்³ம – ஜோடி, இரு திருவடிகள்
  • ருக்ம – தங்கம் போன்ற பிரகாசமான, அந்த திருவடிகளின் அழகில் 
  • வ்யாமோ ஹதஸ் – பேரன்பினால், மிகுந்த மோகத்தினால், ஈடுபாட்டினால்
  • தத்³ இதராணி – அந்த திருவடிகளைத் தவிர மற்ற எல்லா உலக விஷயங்களையும் (செல்வம், பதவி, பந்தம்)
  • த்ருணாய – ஒரு சாதாரண புல்லுக்குச் சமமாக
  • மேநே – கருதினாரோ, மதித்தாரோ 
  • அஸ்மத்³ கு³ரோர் – நம்முடைய ஆச்சாரியனும் 
  • ப⁴க³வதோ அஸ்ய – அனைத்து கல்யாண குணங்களும் நிறைந்த பகவானின் அம்சம் போன்றவரும்
  • த³யா ஏக – கருணை ஒன்றையே வடிவாகக் கொண்ட
  • ஸிந்தோ⁴: – கடலாக விளங்குபவருமான
  • ராமாநுஜஸ்ய – ஸ்ரீ ராமானுஜருடைய
  • சரணௌ – இரண்டு திருவடிகளை
  • ஸ²ரணம் – புகலிடமாக, தஞ்சமாக
  • ப்ரபத்³யே – சரணடைகிறேன், பற்றிக் கொள்கிறேன் 

என்றும் அழியாத எம்பெருமானின் தாமரை மலர் போன்ற திருவடி இணைகளின் மீது கொண்ட அளவற்ற பக்தியினால், ஸ்ரீ ராமாநுஜர் உலகத்திலுள்ள பொருட்களையும் ஆசைகளையும் ஒரு புல்லுக்கு சமானமாகவே கருதினார். கல்யாண குணங்களை கொண்ட வரும், தயையின் கடலுமான அவரே நமக்கெல்லாம் குரு. அவர் திருவடிகளுக்குச் சரணம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பொது தனியன் 2

குருபரம்பரை தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)

லஷ்மீ நாத² ஸமாரம்பா⁴ம்* 
நாத² யாமுந மத்⁴யமாம்*
அஸ்மதா³சார்ய பர்யந்தாம்* 
வந்தே³ கு³ரு பரம்பராம்||

  • லஷ்மீ நாத²: லட்சுமியின் கணவனான ஸ்ரீமன் நாராயணனை
  • ஸமாரம்பா⁴ம்: முதன்மையாகக் கொண்டு தொடங்கியதும்
  • நாத²: நாதமுனிகளையும்
  • யாமுந: ஆளவந்தார் (யாமுனாச்சாரியார்) ஆகியோரையும்
  • மத்⁴யமாம்: நடுவில் (இடைக்கால குருக்களாகக்) கொண்டதும்
  • அஸ்மத்³: என்னுடைய
  • ஆசார்ய: குருவை (ஆசாரியனை)
  • பர்யந்தாம்: எல்லையாகக் (முடிவாகக்) கொண்டதுமான
  • வந்தே³: வணங்குகிறேன்
  • கு³ரு பரம்பராம்: இந்த ஆச்சாரியர்களின் வரிசையை

லட்சுமி தேவியின் மணாளனாகிய ஸ்ரீமன் நாராயணனை முதற் கடவுளாகக் கொண்டு தொடங்கி, நடுவிலுள்ள நாதமுனிகளையும் ஆளவந்தாரையும் ஆச்சாரியர்களாகப் பெற்று, என்னுடைய ஆச்சாரியனை இறுதி எல்லையாகக் கொண்டு விளங்கும் இந்த உன்னதமான குருபரம்பரையை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பொது தனியன் 1

ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன்
(அழகிய மணவாளன் அருளிச் செய்தது)

ஸ்ரீ ஸை²லேஸ² த³யாபாத்ரம்* 
தீ⁴ப⁴க்த்யாதி³ கு³ணார்ணவம்*
யதீந்த்³ர ப்ரவணம் வந்தே³* 
ரம்ய ஜாமாதரம் முநிம்||

  • ஸ்ரீ ஸை²லேஸ² - ஸ்ரீ சைலேசர் என்ற திருவாய்மொழிப் பிள்ளை என்று அழைக்கப்படும் ஆசாரியரின் எல்லையற்ற
  • த³யா பாத்ரம் - கருணைக்கு இருப்பிடமானவரை / அருள் பாத்திரமாய் விளங்குபவரை
  • தீ⁴ - சிறந்த ஞானம் (அறிவு)
  • ப⁴க்தி - இறைவனிடம் கொண்ட பக்தி.
  • ஆதி³ - முதலிய
  • கு³ணார்ணவம் - நற்குணங்களின் கடலாக விளங்குபவரை
  • யதீந்த்³ர - யதிகளின், துறவிகளின் தலைவரான ஸ்ரீ ராமானுஜரிடம்
  • ப்ரவணம் - மிகுந்த ஈடுபாடு, பக்தி கொண்டவரை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன், நமஸ்கரிக்கிறேன்
  • ரம்ய ஜாமாதரம் - அழகிய மணவாளன் என்னும் திருநாமம் கொண்ட
  • முநிம் - முனிவரை, மணவாள மாமுனிகளை 

ஸ்ரீ சைலேசர் என்ற திருவாய்மொழிப்பிள்ளை, ஆசார்யரின் எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும், பக்தி, ஞானம், வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்று இருப்பவரும், யதிராஜரான ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன். 

தனியனைப் பாடியவர்: ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த, சாட்சாத் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளே.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்