ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
பலச்ருதி
9. அச்யுதஸ் யாஷ்டகம்
ய: படே² தி³ஷ்டத³ம்
ப்ரேமத: ப்ரத் யஹம்
பூருஷ: ஸஸ் ப்ருஹம்|
வ்ருத்தத: ஸுந்த³ரம்
கர்த்ரு விஸ்²வம் ப⁴ரம்
தஸ்ய வஸ்²யோ ஹரிர்
ஜாயதே ஸத்வரம்||
- அச்யுதஸ்ய - அச்யுதனுடைய, அழிவில்லாத இறைவனுடைய
- அஷ்டகம் - எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தத் துதியை
- யஃ - எவன் ஒருவன்
- படே²த் - படிக்கிறானோ, பாராயணம் செய்கிறானோ
- தி³ஷ்டத³ம் - விரும்பிய நன்மைகளை, பலன்களைக் கொடுக்கக்கூடிய இந்த ஸ்தோத்திரத்தை
- ப்ரேமதஃ - அன்போடு, பக்தியோடு
- ப்ரத் யஹம் - தினமும், நாள்தோறும்
- பூருஷஸ் - மனிதன்
- ஸஸ் ப்ருஹம் - ஆவலோடு, ஈடுபாட்டோடு
- வ்ருத்ததஸ் - அமைப்பிலும் சந்தத்திலும்
- ஸுந்த³ரம் - அழகியதாக இருக்கும், இந்த அஷ்டகத்தை
- கர்த்ரு - உலகைப் படைத்தவனும்
- விஸ்²வம் ப⁴ரம் - அகிலத்தைத் தாங்குபவனுமாகிய, இறைவனைப் பற்றிய துதி
- தஸ்ய - அவனுக்கு, அந்தப் பக்தனுக்கு
- வஸ்²யோ - வசம் உடையவனாக, கட்டுப்பட்டவனாக
- ஹரிர் - ஸ்ரீ ஹரி, மகாவிஷ்ணு
- ஜாயதே - ஆகிறான்
- ஸத்வரம் - மிக விரைவில், உடனடியாக
இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரம் வேண்டிய வற்றை வேண்டியபடியே கொடுக்கும் மகிமை வாய்ந்தது. அழகிய விருத்தம் கொண்டது. உலக த்தையே காக்கும் வல்லமை படைத்தது. இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் யார் தினமும் படிக்கிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீமன்நாராயணன் விரைவில் திருவருள் புரிந்து சகல மங்களங்களையும் அருள்வார்.
||இதி ஸ்ரீ அச்யுதாஷ்டகம் ஸம்பூரணம்||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
