About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 August 2026

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 8

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

8. வித³க்³த⁴ கோ³பிகா மனோ
மனோஜ்ஞ தல்ப ஸா²யினம்
நமாமி குஞ்ஜ கானனே 
ப்ரவ்ரத்³த⁴ வன்ஹி பாயினம்|
கிஸோ²ர காந்தி ரஞ்ஜிதம்
த்³ருக³ஞ்ஜனம் ஸுஸோ²பி⁴தம்
க³ஜேந்த்³ர மோக்ஷ காரிணம்
நமாமி ஸ்ரீ விஹாரிணம்||

  • வித³க்³த⁴ - புத்திசாலியான, சாமர்த்தியமுள்ள
  • கோ³பிகா - கோபியர்களின்
  • மனோ - மனதைக் கவர்ந்தவனே! 
  • மனோஜ்ஞ - அழகான, மனதிற்கு இனிய
  • தல்ப - படுக்கையில், இங்கு இலைகள் அல்லது மலர் படுக்கை 
  • ஸா²யினம் - பள்ளிகொண்டிருப்பவனே, துயில்பவனே!
  • நமாமி - நான் வணங்குகிறேன்  
  • குஞ்ஜ - கொடிகள் சூழ்ந்த, புதர்கள் நிறைந்த
  • கானனே - காட்டில், பிருந்தாவனத்தில் 
  • ப்ரவ்ரத்³த⁴ - பெருகி வளர்ந்த, வேகமாகப் பரவிய
  • வன்ஹி - காட்டுத்தீயை
  • பாயினம் - குடித்தவனே, காட்டுத் தீயை விழுங்கி கோபியர்களைக் காத்தவனே! 
  • கிஸோ²ர - இளமைப் பருவத்தின், சிறுவனுடைய
  • காந்தி - ஒளியால், தேஜஸால் 
  • ரஞ்ஜிதம் - பிரகாசிப்பவனே, அழகு செய்பவனே!  
  • த்³ருக்³ - கண்களில்
  • அஞ்ஜனம் - மை தீட்டப் பெற்று 
  • ஸுஸோ²பி⁴தம் - மிக அழகாகக் காட்சியளிப்பவனே! 
  • க³ஜேந்த்³ர - கஜேந்திரன் என்ற யானைக்கு
  • மோக்ஷ - முக்தியை, விடுதலையை 
  • காரிணம் - அளித்தவனே! 
  • நமாமி - நான் வணங்குகிறேன் 
  • ஸ்ரீ - லக்ஷ்மி தேவியுடன், ராதையுடன்  கூடி, மங்களகரமாக
  • விஹாரிணம் - லீலைகள் புரிந்து விளையாடுபவனே! 

நின்னை எக்கணமும் நினைத்து உருகும் சாதுர்யமான (புத்திசாலித்தனமான) கோபிகைகளின் மனதின் மென்மையான படுக்கையின் மீது உறங்குபவனே, பிருந்தாவனத்தில் (குஞ்ச்வன் - கொடிகளும், மரங்களும் நிறைந்த தோப்பு) கொழுந்து விட்டெரியும் அக்னியை (தாவானல்) விழுங்கி கோபர்களை காப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். பிள்ளைப்பருவ கவர்ச்சிகரமான தோற்றத்தில் ஜொலிக்கும் ஒளி நிரம்பிய விழிகளை உடையவனே, அந்த விழிகளுக்கு மை (அஞ்சனம்) மேலும் அழகு ஊட்டுகிறது. கஜேந்திரன் என்னும் கஜராஜனை முதலையின் பிடியில் இருந்து விடுவித்ததோடு மோட்சமும் அளித்தவனே, ஸ்ரீ என்னும் மஹாலட்சுமியின் மணாளா, கிருஷ்ணசந்த்ரா, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment