ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
2. மனோஜ க³ர்வ மோசனம்
விஸா²ல லோல லோசனம்
விதூ⁴த கோ³ப ஸோ²சனம்
நமாமி பத்³ம லோசனம்|
கரார விந்த³ பூ⁴த⁴ரம்
ஸ்மிதாவ லோக ஸுந்த³ரம்
மஹேந்த்³ரமான தா³ரணம்
நமாமி க்ருஷ்ண வாரணம்||
- மனோஜ - மன்மதனுடைய, காமதேவனுடைய
- க³ர்வ - அகந்தையை, கர்வத்தை
- மோசனம் - அழித்தவரை, நீக்கியவரை
- விஸா²ல - பரந்த, பெரிய
- லோல - சஞ்சலமான, அசைந்து கொண்டிருக்கும், கருணை ததும்பும்
- லோசனம் - கண்களை உடையவரை
- விதூ⁴த - போக்கப்பட்ட, துடைத்தெறியப்பட்ட
- கோ³ப - கோபியர்களின், ஆயர்பாடி மக்களின்
- ஸோ²சனம் - துக்கத்தை, சோகத்தை உடையவரை
- நமாமி - நான் வணங்குகிறேன்
- பத்³ம - தாமரை போன்ற
- லோசனம் - கண்களை உடையவரை
- கர - கைகளாகிய
- அரவிந்த³ - தாமரை மலரினால்
- பூ⁴த⁴ரம் - மலையைத் தாங்கியவரை, கோவர்த்தன கிரியைச் சுமந்தவரை
- ஸ்மித - புன்னகையுடனும்
- அவலோக - பார்க்கும் பார்வையினாலும்
- ஸுந்த³ரம் - அழகானவரை
- மஹேந்த்³ர - தேவேந்திரனுடைய
- மான - கர்வத்தை
- தா³ரணம் - பிளந்தவரை, அழித்தவரை
- நமாமி - நான் வணங்குகிறேன்
- க்ருஷ்ண - கிருஷ்ணனாகிய
- வாரணம் - மத யானையை
மன்மதனின் கர்வத்தை அடக்கியவனே, விசாலமான விழிகளைக் கொண்டவனே, நந்தகோபியர்களின் சோகத்தை அழித்தவனே, தாமரை மலரை ஒத்த நயனங்களைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். கோவர்த்தனகிரியை கரங்களில் தூக்கி விரலில் ஏந்தியவனே, காண்பவர் கவரும் காந்தப்பார்வையும், புன்னகையும் கொண்டவனே, இந்திரனின் கர்வத்தை அழித்தவனே, கஜராஜனின் உருக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment