ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
5. பு⁴வோ ப⁴ராவ தாரகம்
ப⁴வாப்³தி⁴ கர்ண தா⁴ரகம்
யஸோ² மதீ கிஸோ²ரகம்
நமாமி சித்த சோரகம்|
த்³ரு க³ந்த காந்த ப⁴ங்கி³னம்
ஸதா³ ஸதா³லி ஸங்கி³னம்
தி³னே தி³னே நவம் நவம்
நமாமி நந்த³ஸம்ப⁴வம்||
- பு⁴வோ - பூமியின்
- ப⁴ர - பாரத்தை
- அவதாரகம் - இறக்கியவரை, குறைத்தவரை
- ப⁴வ - பிறவி என்னும்
- அப்³தி - கடலை கடக்க உதவும்
- கர்ண தா⁴ரகம் - மாலுமியை, கப்பலோட்டியை
- யஸோ² மதீ - யசோதை அன்னையின்
- கிஸோ²ரகம் - பாலனை, சிறுவனை
- நமாமி - நான் வணங்குகிறேன்
- சித்த - உள்ளத்தை, மனதை
- சோரகம் - திருடுபவரை, கள்ளனை
- த்³ரு க³ந்த - கடைக்கண் பார்வையில்
- காந்த - அழகான
- ப⁴ங்கி³னம் - வளைவுகளைக், லீலைகளைக் கொண்டவரை
- ஸதா³ - எப்போதும்
- ஸத்³ - நல்லவர்களான, பக்தர்களான, கோபியர்களான
- அலி - வண்டுகளின்
- ஸங்கி³னம் - கூட்டத்தோடு இருப்பவரை
- தி³னே தி³னே - நாளுக்கு நாள், ஒவ்வொரு நாளும்
- நவம் நவம் - புதிய புதிய வடிவமாய், புதுமையாக தோன்றுபவரை
- நமாமி - நான் வணங்குகிறேன்
- நந்த³ - நந்தகோபருக்கு
- ஸம்ப⁴வம் - மகனாகப் பிறந்தவரை
கணக்கில்லா அரக்கர்களையும், தீயசக்திகளையும் அழித்து புவியின் பாரத்தை குறைப்பவனே, துக்கமயமான சம்சார சாகரத்தை கடக்க உதவுபவனே, யசோதையின் மைந்தனான நீ, அனைவரின் உள்ளங்களையும் கவருகின்றாய். உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். அருள் கடாக்ஷத்தை பொழியும் கவர்ச்சியான கண்களை கொண்டவனே, திவ்யமான தோழர்களால் (புனித பக்தர்களால்) சதா சூழப்பட்டு இருப்பவனே, நித்தம் நூதனமான லீலா விநோதங்களை நடத்தும் நந்தகுமாரா, (என்றும் புதிதாகத் தோன்றும் பரம்பொருளே!) ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment