ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
1. அச்யுதம் கேஸ²வம் ராம நாராயணம்
க்ருஷ்ண தா³மோத³ரம் வாஸுதே³வம் ஹரிம்|
ஸ்ரீத⁴ரம் மாத⁴வம் கோ³பிகா வல்லப⁴ம்
ஜானகீ நாயகம் ராமச்சந்த்³ரம் ப⁴ஜே||
- அச்யுதம் - நழுவாதவன், அழிவில்லாதவன், தன் நிலையில் இருந்து என்றும் வீழாதவன்
- கேஸ²வம் - கேசி என்ற அரக்கனை அழித்தவன், அழகான தலைமுடி உடையவன்
- ராம நாராயணம் - ராமனாக அவதரித்த நாராயணன்
- க்ருஷ்ண - அனைவரையும் தன் பால் ஈர்க்கும் கிருஷ்ணன், கருமை நிறத்தவன்
- தா³மோத³ரம் - யசோதையால் வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்ட கண்ணன்
- வாஸுதே³வம் - வசுதேவரின் மைந்தன், எங்கும் நிறைந்திருப்பவன்
- ஹரிம் - பாவங்களைப் போக்குபவன், திருமால்
- ஸ்ரீத⁴ரம் - லட்சுமியை தன் மார்பில் தாங்கியவன்
- மாத⁴வம் - லட்சுமியின் மணாளன், அறிவுக்கு அதிபதி
- கோ³பிகா வல்லப⁴ம் - கோபியர் குலப் பெண்களின் அன்பிற்குரிய தலைவன்
- ஜானகீ நாயகம் - ஜனகரின் மகளான சீதையின் கணவன்
- ராமச்சந்த்³ரம் - சந்திரன் போன்ற குளுமையான முகமுடைய ராமபிரான்
- ப⁴ஜே - இப்படிப்பட்ட இறைவனை நான் வணங்குகிறேன், துதிக்கிறேன்
அழிவில்லாதவனும், கேசி அரக்கனை அழித்தவனும், ராமபிரானாக வந்த நாராயணனும், அனைவரையும் ஈர்க்கும் கிருஷ்ணனும், வயிற்றில் கயிறு கட்டப்பட்ட தாமோதரனும், வசுதேவர் மைந்தனும், பாவங்களை அழிக்கும் ஹரியும், லட்சுமியை மார்பில் தாங்கிய ஸ்ரீதரனும், மாதவனும், கோபிகைகளின் அன்பிற்குரியவனும், ஜானகியின் நாயகனுமாகிய ராமச்சந்திர மூர்த்தியை நான் எப்போதும் வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment