About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label ஸ்ரீ ந்ருஸிம்ஹர். Show all posts
Showing posts with label ஸ்ரீ ந்ருஸிம்ஹர். Show all posts

Saturday, 23 December 2023

ருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யாநம்
வாகீ³ஸா யஸ்ய வத³நே 
லக்ஷ்மீர் யஸ்ய ச வக்ஷஸி|
யஸ்யாஸ்தே ஹ்ருதயே ஸம்வித் 
தம் ந்ருஸிம்ஹ மஹம் பஜே||

அத² ஸ்தோத்ரம்

1. தே³வதா காரிய ஸித்³த்⁴யர்த²ம் 
ஸ்பா⁴ஸ் தம்ப⁴  ஸமுத்³ப⁴வம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக, ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

2. லக்ஷ்மி ஆலிங்கி³த வாமாங்க³ம் 
ப⁴தாநாம் வரதா³யகம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

மஹாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை தருபவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

3. ஆந்த்ர மாலாத⁴ரம் ஸ²ங்க² 
சக்ராப்³ ஜாயுத⁴  தா⁴ரிணம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், ஸங்கம், சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்⁴நம் 
கத்³ரூஜம் விஷ நாஸ²நம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

நினைத்த உடனேயே அனைத்து பாவங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

5. ஸிம்ஹ நாதே³ந மஹதா 
தி³க்³த³ந்தி ப⁴ய நாஸ²நம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

மிகப் பயங்கரமான ஸிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசைகளிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

6. ப்ரஹ்லாத³ வரத³ம் ஸ்ரீஸ²ம் 
தை³த்யேஸ²்வர விதா³ரிணம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

பக்தனான ப்ரஹ்லாதனுக்கு அநுக்ரகம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும் அரக்கர் தலைவரான ஹிரண்யகசிபுவை ஸம்ஹரித்த மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

7. க்ரூரக்³ரஹை꞉ பீடி³தாநாம் 
ப⁴க்தாநாம ப⁴யப்ரத³ம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

உக்ரமும் கோரமும் உடைய க்ரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

8. வேத³ வேதா³ந்த யஜ்ஞேஸ²ம்
 ப்³ரம்ஹ ருத்³ராதி³ வந்தி³தம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்ஹா, ருத்ரன் முதலியோர்களால் வணங்கப்பட்டவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

9. ய: இத³ம் பட²தே நித்யம் 
ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம்| 
அந்ருணே ஜாயதே ஸத்யோ 
த⁴நம் ஸ²க்⁴ரம வாப்நுயாத்||

யார் இந்த ருண விமோசநம் என்ற பெயருடைய ந்ருஸிம்ஹ ஸ்லோகத்தை தினம் படிக்கின்றனோ அவர் விரைவிலயே பிறவி கடனிலிருந்து விடுபட்டவராகி, பெருவீடு என்ற செல்வத்தை அடைவார்.

||இதி  ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணே ருண மோசந ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

Saturday, 9 April 2022

ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹர் மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்|
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்||

கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரஸிம்மரை நான் வணங்குகிறேன்.

2. வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம் 
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்|
நிநாதத் ரஸ்த விஷ்வாண்டம் 
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்||

பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

3. ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் 
ஸபலோகம் திதே ஸுதம்|
நகாக்ரை சகலீ சக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்||

திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்.

4. பதா வஷ்டப்த பாதாளம் 
மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ் டபம்|
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திஸம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்||

விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரஸிம்மரை நான் வணங்குகிறேன்.

5. ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்|
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்||

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

6. ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா|
ஜாநாதி யோ நமாம் யாத்யம்
தமஹம் ஸர்வதோ முகம்||

சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

7. நரவத் ஸிம்ஹ வச்சைவ
ரூபம் யஸ்ய மஹாத்மநஹ|
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்||

பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரஸிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்..

8. யந்நாமஸ் மரணாத் பீதாஹ
பூத வேதாள ராக்ஷஸாஹ|
ரோகாத் யாஸ்ச ப்ரணஷ் யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்||

உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

9. ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மஷ்நுதே|
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்||

அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க லட்சுமி நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

10. ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்த்யும்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்|
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யோர் ம்ருத்யோ நமாம்யஹம்||

மரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்கு பவருமான நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

11. நமஸ்காரத் மகம் யஸ்மை
விதாயாத்ம நிவே தநம்|
த்யக்ததுக் கோகிலாந் காமாந்
அச்நுதேதம் தம் நமாம்யஹம்||

எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரஸிம்மரை வணங்குகிறேன்.

12. தாஸபூதா ஸ்வதஸ் ஸர்வே 
ஹ்யாத்மாந பாமாத்மநஹ|
அதோஹமபி தே தாஸந: 
இதி மத்வா நமாம்யஹம்||

இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரஸிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.

13. சங்கரேணா தராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்|
த்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ் ஸ்ரீஸ்ட வர்த்ததே||

ஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்.

||இதி ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹர் மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம் சம்பூரணம்||

மாதா நரசிம்ஹ! பிதா நரசிம்ஹ|
ப்ராதா நரசிம்ஹ! ஸகா நரசிம்ஹ|
வித்யா நரசிம்ஹ! த்³ரவிணம் நரசிம்ஹ|
ஸ்வாமி நரசிம்ஹ! ஸகலம் நரசிம்ஹ|
இதோ நரசிம்ஹ! பரதோ நரசிம்ஹ|
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ஹ|
நரசிம்ஹ தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||