||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 162||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 24||
||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||
ஶ்ரீ ப⁴க³வாநுவாச|
யோ மாம் நாம ஸஹஸ்ரேண
ஸ்தோது மிச்ச²தி பாண்ட³வ|
ஸோ ஹமேகேந ஸ்²லோகேன
ஸ்துத ஏவ ந ஸம்ஸ²ய꞉||
ஸ்துத ஏவ ந ஸம்ஸ²ய ஓம் நம இதி|
- ஶ்ரீ - திரு, மங்களம் பொருந்திய
- ப⁴க³வான் உவாச - பகவான் கூறினார்
- யஃ - எவன், யார்
- மாம் - என்னை
- நாம - திருநாமங்களால்
- ஸஹஸ்ரேண - ஆயிரத்தால், ஆயிரம் திருநாமங்களால்
- ஸ்தோதும் - துதிக்க, போற்ற
- இச்ச²தி - விரும்புகிறான்
- பாண்ட³வ - பாண்டுவின் மகனே!, அர்ஜுனனே!
- ஸஃ - அவன்
- அஹம் - நான்
- ஏகேந - ஒன்றினால், ஒரு
- ஸ்²லோகேன - ஸ்லோகத்தால்
- ஸ்துதஃ - துதிக்கப்பட்டான், போற்றப்பட்டான்
- ஏவ - நிச்சயமாக
- ந - இல்லை
- ஸம்ஸ²யஃ - சந்தேகம்
- ஸ்துதஃ - துதிக்கப்பட்டான்
- ஏவ - நிச்சயமாக
- ந - இல்லை
- ஸம்ஸ²யஃ - சந்தேகம்
- ஓம் - பரம் பொருளைக் குறிக்கும் பிரணவ மந்திரம்
- நமஃ - வணக்கம், சரணடைதல்
- இதி - என்று
பகவான் கூறினார் 'அர்ஜுனா, ஒருவருக்கு என்னுடைய ஆயிரம் நாமங்களைச் சொல்லி என்னை வழிபட ஆசை இருக்கும் போது, அவர் முதல் ஸ்லோகத்தைச் சொல்லும் போது கூட நான் என்னை வணங்குவதாகக் கருதுகிறேன், இதில் எந்த சந்தேகமும் இல்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment