About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

திவ்ய ப்ரபந்தம் - 137 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 137 - கூத்தாடும் உத்தமன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்||

ஓட ஓடக் கிண் கிணிகள்* 
ஒலிக்கும் ஓசைப் பாணியாலே* 
பாடிப் பாடி வருகின்றாயைப்* 
பற்பநாபன் என்று இருந்தேன்*
ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு* 
அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி* 
ஓடி ஒடிப் போய் விடாதே* 
உத்தமா! நீ முலை உணாயே|

  • உத்தமா! - உத்தமனே! கண்ணா! 
  • ஓட ஓடக் - குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி ஓடும் போது
  • கிண்கிணிகள் - பாதச் சதங்கைகளில்
  • ஒலிக்கும் ஓசை - ஏற்படும் அந்த ஓசை
  • பாணியாலே - நயத்தாலே
  • பாடிப் பாடி - இடைவிடாது பாடிக் கொண்டு
  • அதனுக்கு ஏற்ற - அதற்கேற்ற கம்பீரமாக
  • ஆடி ஆடி அசைந்து - ஆடி ஆடி அசைந்து
  • அசைந்திட்டு - வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து ஆடும்
  • கூத்தை ஆடி - நடனத்தை ஆடியபடி
  • வருகின்றாயை - வரும் உன்னை
  • பற்பநாபன் என்று - இவன் ’பத்மநாபன் அன்றோ!
  • இருந்தேன் - என்றிருந்தேன்
  • ஓடி ஓடிப் போய் விடாதே - என் கைக்கு எட்டாதபடி ஓடிப் போய் விடாதே
  • நீ முலை உணாயே - பாலைப் பருகாயோ

ஓட ஓட நீ அணிந்திருக்கும் பாதச் சதங்கைகளின் ஒலியே பாட்டாக ஒலிக்க, அதற்க்கு தகுந்தாற்ப் போல் நீ ஆடி ஆடி அசைந்து நாட்டியமாடுவதைப் போல் நடந்தது பத்மநாபனே! நடந்து வருவதைப் போல் எண்ணியிருந்தேன்! என்னை விட்டு வெகு தூரம் ஓடிச் சென்று விடாதே! கண்ணா! என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை.*பத்ம கமலத்தை நாபியிலுடையவன். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment