||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய
ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 5
அத்ரி ஆதி³ ஸப்த ருஷயஸ் ஸ முபாஸ்ய ஸந்த்⁴யாம்
ஆகாஸ ஸிந்து⁴ கமலாநி மநோஹ ராணி|
ஆதா³ய பாத³யுக³ம் அர்ச்சயிதும் ப்ரபந்நாஹ்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ!⁴ தவ ஸுப்ரபா⁴தம்||
- அத்ரி - அத்ரி முனிவர்
- ஆதி³ - முதலான, போன்ற
- ஸப்த - ழு
- ருஷயஸ் - ரிஷிகள், முனிவர்கள்
- ஸ முபாஸ்ய - நன்கு வழிபட்டு, தியானித்து
- ஸந்த்⁴யாம் - சந்தியா கால வழிபாடு (காலை/மாலை சந்தி நேர பூஜை)
- ஆகாஸ - ஆகாயம், வானம்
- ஸிந்து⁴ - கடல்
- கமலாநி - தாமரை மலர்கள்
- மநோஹ ராணி - மனதைக் கவரும், அழகான
- ஆதா³ய - எடுத்துக் கொண்டு
- பாத³ யுக³ம் - இரு திருவடிகள்
- அர்ச்சயிதும் - அர்ச்சனை செய்ய, பூஜிக்க
- ப்ரபந்நாஹ் - சரணடைந்தவர்கள், வந்தடைந்தவர்கள்
- ஸேஷாத்³ரி - சேஷ மலை (திருமலை)
- ஸேக²ர - சிகரம், உச்சி
- விபோ⁴ - இறைவனே, பெருமானே
- தவ - உமது, உன்னுடைய
- ஸுப்ரபா⁴தம் - இனிய காலை வணக்கம், நல்விடியல்
ஆதிஸேஷ மலை ஸிகரத்தில் எழுந்தருளி இருக்கும் பரிபூரணனே! அத்ரி முதலான ஏழு முனிவர்களும் ஸந்த்யா வந்தனம் செய்த பின்னர், உன் திருவடிகள் இரண்டையும் மலரிட்டு அர்ச்சிப்பதற்காக, மனத்தை கவரக் கூடிய ஆகாஸ கங்கையில் முளைத்து எழுந்த தாமரை மலர்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். உனக்கு நற்பொழுது புலருக! வேங்கடவா எழுந்தருள்வாய்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment