About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.20

இத³ம் ஹி விஸ்²வம் ப⁴க³வாந் இவேதரோ
யதோ ஜக³த் ஸ்தா²ந நிரோத⁴ ஸம்ப⁴வா:|
தத்³தி⁴ ஸ்வயம் வேத³ ப⁴வாம்ஸ் ததா²பி தே
ப்ராதே³ஸ² மாத்ரம் ப⁴வத: ப்ரத³ர்ஸி²தம்||

  • இத³ம் விஸ்²வம் ஹி - இவ்வுலகம் முழுவதும்
  • ப⁴க³வாந் இவ - பகவத் ஸ்வரூபமே
  • இதரோ - அவரோ இவ்வுலகத்தை காட்டிலும் வேறுபட்டவர்
  • யதோ - ஏனென்றால்
  • ஜக³த் ஸ்தா²ந நிரோத⁴ - உலகத்தின் ஸ்திதி லயம் சிருஷ்டி முதலான
  • ஸம்ப⁴வாஹ - காரியங்கள் அவனாலேயே ஏற்படுகின்றன
  • த³த்⁴ ஹி - அதையெல்லாம்
  • ஸ்வயம் வேத³ தே - தாங்கள் தனிப்பட்ட முறையில்
  • ப⁴வாம்ஸ் - அறிந்தது தான்
  • ததா² அபி - இருந்த போதிலும் 
  • ப்ராதே³ஸ² மாத்ரம் - ஏக தேசம் மட்டும்
  • ப⁴வதஃ - உமக்கு
  • ப்ரத³ர்ஸி²தம் - சுருங்க கூறப்பட்டது

இந்தப் பிரபஞ்சமே பகவத் ஸ்வரூபம் தானே? ஆனால், அவர் இதில் ஒட்டாது தனித்து நிற்கிறார். ஆக்கல், அளித்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் ஆற்றுபவர் அவர் தானே? இதெல்லாம் தாங்கள் அறிந்தது தான். இருப்பினும், இதை நான் நினைவுறுத்துகிறேன். அவ்வளவு தான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment