About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 12 November 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 151

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 151

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 13

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம் - பலஸ்²ருதி

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம்‌
ந லோபோ நாஸு²பா மதி:|
வந்தி க்ருத புண்யாநாம்‌
க்தாநாம்‌ புருஸோ²த்தமே|| 


அறம் சார்ந்த முதன்மையான மனிதர்களான அவர்களிடம் கோபமோ, பொறாமையோ, பேராசையோ, தீய புத்தியோ ஒரு போதும் தோன்றாது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.15 

கர்ம ப்³ரஹ்மோத்³ ப⁴வம் வித்³தி⁴ 
ப்³ரஹ்மா க்ஷர ஸமுத்³ப⁴வம்|
தஸ்மாத் ஸர்வ க³தம் ப்³ரஹ்ம 
நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம்||

  • கர்ம - செயல் 
  • ப்³ரஹ்ம - வேதங்களிலிருந்து 
  • உத்³ப⁴வம் - உண்டாகிறது 
  • வித்³தி⁴ - நீ அறிய வேண்டும் 
  • ப்³ரஹ்ம - வேதங்கள்  
  • அக்ஷர - பரபிரம்மனிலிருந்து (முழுமுதற் கடவுளிடமிருந்து)  
  • ஸமுத்³ப⁴வம் - நேரடியாகத் தோன்றுகின்றன 
  • தஸ்மாத் - எனவே 
  • ஸர்வ க³தம் - எங்கும் நிறைந்துள்ள 
  • ப்³ரஹ்ம - உன்னதம் 
  • நித்யம் - நித்தியமாக  
  • யஜ்ஞே - யாகத்தில் 
  • ப்ரதிஷ்டி²தம் - வீற்றுள்ளார்

செயல் வேதங்களில் இருந்து உண்டாகிறது. வேதங்கள் முழுமுதற் கடவுளிடம் இருந்து நேரடியாக தோன்றுகின்றன. எனவே, எங்கும் நிறைந்துள்ள அவர், யாகத்தில், உன்னதமாகவும், நித்யமாகவும் வீற்றுள்ளார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.8

ஶ்ரீ நாரத³ உவாச!
ப⁴வதாநுதி³த ப்ராயம்
யஸோ² ப⁴க³வதோ மலம்|
யேநைவா ஸௌ ந துஷ்யேத
மந்யே தத்³ த³ர்ஸ²நம் கி²லம்||

  • ஶ்ரீ நாரத³ உவாச! - நாரதர் சொல்கிறார் 
  • ப⁴க³வத - ஸ்ரீ பகவானான வாஸுதேவனின்
  • அமலம் யஸோ² - பரிசுத்தமான கீர்த்தியானது
  • ப⁴வதா - தங்களால்
  • அநுதி³த ப்ராயம் - சொல்லப்படாதது போல் தான் இருக்கிறது. (வெறும் வேதங்களாலும் கேவல தர்மாதிகளாலும் பிரயோஜனம் இல்லை)
  • யேந ஏவ - எந்த இறைவன் கீர்த்தியைச் சொல்லாத மற்ற தருமாதி ஞானத்தால்
  • அஸௌ - அந்த வாஸுதேவன்
  • ந துஷ்யேத - மகிழ்ச்சி அடைய மாட்டாரோ
  • தத்³ த³ர்ஸ²நம் - அப்படி அவரது கீர்த்தி சொல்லப்படாத ஸாஸ்திரத்தை 
  • கி²லம் மந்யே - மட்டமாகவே எண்ணுகிறேன்

நாரதர் கூறுகிறார் - பகவான் வாசுதேவனின் நிர்மலமான நாம ரூப லீலா குண மாதுர்யத்தைத் தாங்கள் பெரும்பாலும் வர்ணிக்கவில்லையே! ஆகவே பகவானும், தங்களுடைய சித்தமும் மகிழ்ச்சியுறவில்லை. எந்த சாஸ்திரத்தினால் பகவான் சந்தோஷம் அடையவில்லையோ, எந்த சாஸ்திரத்தில் பகவானுடைய நிர்மலமான நாமரூப லீலா குண மாதுர்யங்கள் விவரிக்கப் படவில்லையோ, அவையெல்லாம் ஏற்கத் தக்கவை அல்ல.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.86

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.86

தே³வ தாப்⁴யோ வரம் ப்ராப்ய 
ஸமுத்தா²ப்ய ச வாநராந்|
அயோத்⁴யாம் ப்ரஸ்தி²தோ ராம: 
புஷ்பகேண ஸுஹ்ருத்³ வ்ருத:|| 

  • ராம - ஸ்ரீ ராமர்
  • தே³வ தாப்⁴யோ - தேவர்களிடமிருந்து
  • வரம் - வரத்தை
  • ப்ராப்ய - பெற்றுக் கொண்டு
  • வாநராந் - வானரர்கள்
  • ச - அனைவரையும்
  • ஸமுத்தா²ப்ய - உயிர்பித்து
  • ஸுஹ்ருத்³ வ்ருத - ஸுஹ்ருத்துக்களால் சூழப்பட்டவராய்
  • புஷ்பகேண - புஷ்பக விமானத்தைக் கொண்டு
  • அயோத்⁴யாம் - அயோத்தியைக்கு
  • ப்ரஸ்தி²தோ - புறப்பட்டார்

இராமன்,  இறந்து போன வானரர்களைத் தேவர்களிடம் வரம் பெற்று உயிர்ப்பித்து, நல் இதயம் கொண்டவர்களால் சூழப்பட்டவராக, புஷ்பக விமானத்தில் அயோத்திக்குச் சென்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 127 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 127 - இலங்கை மலக்கிய வில்லாளன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

தரவு கொச்சகக் கலிப்பா

வல்லாள் இலங்கை மலங்கச்* சரந் துரந்த* 
வில்லாளனை* விட்டுசித்தன் விரித்த*
சொல் ஆர்ந்த அப்பூச்சிப்* பாடல் இவை பத்தும் 
வல்லார் போய்* வைகுந்தம் மன்னி இருப்பரே| (2)

  • வல்லாள் - பலசாலிகளான வீரர்களை யுடைய
  • இலங்கை - லங்கையானது
  • மலங்க - பாழாம்படி
  • சரம் துரந்த - அம்பைச் செலுத்திய
  • வில் ஆளனை - வில்லையேந்தி ஸ்ரீராமனாக முன்பு திருவவதரித்த கண்ணனைப் பற்றி
  • விட்டு சித்தன் - பெரியாழ்வார்
  • விரித்த - பரக்க கூறிய
  • சொல் ஆர்ந்த - சொல் நிரம்பிய
  • அப் பூச்சி பாடல் இவை பத்தும் - அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும்
  • வல்லார் - கற்க வல்லவர்
  • போய் - அர்ச்சிராதிமார்க்கமாகப் போய்
  • வைகுந்தம் - ஸ்ரீவைகுண்டத்திலே
  • மன்னி இருப்பர் - நித்ய வாஸம் பண்ணப் பெறுவர்

முன்பு இராமனாய் அவதரித்து, வில்லேந்தி, வீரர்கள் நிரம்பிய இலங்கையை தன்னுடைய அம்புச் சரங்களால் வீழ்த்தியவன் இன்று கண்ணனாய் பிறந்து அப்பூச்சி காட்டி பயமுறுத்தி விளையாடியதைக் கொண்டாடி பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பத்துப் பாசுரங்களை கற்பவர்கள், இறுதியில் வைகுந்தம் போய் அங்கு நித்யவாசம் செய்வர்! 

அடிவரவு: மெச்சு மலை காயும் இருட்டில் சேப்பூண்ட செப்பு தத்து கொங்கை பதகம் வல்லாள் - அரவணையாய் 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 039 - திரு பார்த்தன்பள்ளி - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||039 - திரு பார்த்தன்பள்ளி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1318 - 1327 - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
ஒத்து அமரர் ஏத்தும் ஒளி விசும்பும் பாற் கடலும்*
இத்தலத்தில் காண்பு அரிய என் நெஞ்சே சித்து உணர்ந்த*
தீர்த்தன் பள்ளிக்கு இருந்து செப்ப வெளி நின்றானைப்*
பார்த்தன் பள்ளிக்குள் பணி|

  • ஒத்து - என் நெஞ்சே! ஒன்று கூடி
  • அமரர் - நித்யசூரிகளும், தேவர்களும்
  • ஏத்தும் - துதிக்கின்ற
  • ஒளி விசும்பும் - பேரொளி வடிவமான பரமபதமும்
  • பால்கடலும் - திருப்பாற்கடலும்
  • இ தலத்தில் - இந்தப் பூமியில்
  • காண்பு அரிய - காணுதற்கு அரியனவாம்; ஆதலால், அவைகளை விட்டு
  • சித்து உணர்ந்த - ஜீவாத்மாவின் உண்மை நிலையை உணர்ந்த
  • தீர்த்தன் - பரிசுத்தனான பிரகலாதாழ்வான்
  • பள்ளிக்கு இருந்து - பள்ளிக் கூடத்திலிருந்து பள்ளிக்கூடத்திற் படிக்கின்ற சிறுவனாயிருந்தும்
  • செப்ப - தனது தந்தை வினவியதற்கு “எங்குமுளன்“ என்று மறுமொழிகூற
  • வெளி நின்றானை - அது கேட்டு வெகுண்டு இரணியன் தூணைத் தட்ட அதனினின்று நரஸிங்கமாகி வெளித் தோன்றிய திருமாலை
  • பார்த்தன் பள்ளிக்குள் - திருப்பார்த்தன் பள்ளி என்னும் திவ்ய ஸ்தலத்தில் சென்று
  • பணி - வணங்குவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 95

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 40

ஸ்கந்தம் 03

கர்பத்திலிருக்கும் ஜீவனுக்கு இறைவனின் நினைவு வந்து தொழத் தொடங்குகிறது.

என்னைப்போன்ற பாவி எவரும்‌ இலர். நான் எவ்வளவோ வாய்ப்புகள் கிடைத்தும் துர்மதியால் அவரது திருவடிகளைச் சரண்புகவில்லை.

தன்னைச் சரணடையும் உயிர்களைக் காக்கவே அவர் பல்வேறு அவதாரங்கள் செய்கிறார்.

கல்லும் முள்ளும் நிறைந்த நிலவுலகில் திருப்பாதங்கள் நோக அலைகிறார். அத்தகைய திருவடிகளை இப்போது சரணடைகிறேன்.

மாயைக்கு ஆட்பட்டு பஞ்ச பூதங்களாலும், பத்து பொறிகளாலும் கட்டப்பட்டு என் முன் வினைப் பயனால் கர்பவாசம் இருக்கிறேன்.

பகவானோ மாயைக்கு ஆட்படாதவர். பூரண ஞான வடிவானவர். ஆனாலும் என் இதயத்திலும்கூட வாசம் செய்பவர். அவரையே சரணமடைகிறேன்.

ஜீவனான நான் உண்மையில் தேகமற்றவன். ஆனால், எனக்கு உடல் இருப்பதுபோல் தோற்றம் கொண்டிருக்கிறேன்.

ப்ரக்ருதி புருஷனை ஆளும் அந்த பகவானை சரணமடைகிறேன்.

மாயையினால் என் உண்மை ஸ்வரூபம்‌ மறைக்கப்பட்டு ஜனன மரணச் சுழலில் சிக்கி கொண்டேன்.


உண்மையான ஸாதுக்களின் அல்லது பகவானின் அருளின்றி எப்படி மீண்டுவர இயலும்? அத்தகைய ஸாது சங்கம் எனக்குக் கிட்டுமோ கிட்டாதோ?

இப்போது எனக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கொடுத்திருப்பவர் அந்த பகவான் ஒருவரே.

என் மூன்று விதமான தாபங்களையும் போக்கி அமைதி பெற அவரையே வணங்குகிறேன்.

தாய் என்ற பெயரில் வேறொரு பெண்ணில் கருப்பையில் விழுந்து ஜாடராக்னியால் சுடப்பட்டு துன்புறுகிறேன்.

எனக்கு எப்போது விடுதலை கிட்டுமோ? பத்து மாதங்களே ஆன இந்த ஜீவனுக்கு இப்படிப்பட்ட ஞானத்தை இறைவா ! உங்களைத் தவிர வேறார் அளிக்க முடியும்?

தம்மைக் கைகூப்பி வணங்குகிறேன்.

பகுத்தறிவு கொண்டு, அனைத்தையும் தெரிந்த உம்மைச் சரணமடைகிறேன். இக்கருக்குழியில் எனக்கு மிகுந்த துன்பமாய் இருக்கிறது. ஆனாலும் வெளி உலகம்‌ இன்னும் அதிகமாக அச்சுறுத்துகிறது.

வெளியில் சென்றதும் மாயை சூழும். இவ்வுடலே நான் என்று தோன்றும்.

இந்த ஸம்சாரச் சுழல் எனக்கு மீண்டும்‌ நேராவண்ணம் விவேகத்தோடு பகவான் நாராயணனின் பதகமலங்களை ஹ்ருதயத்தில் நிறுத்துவேன்.

என்றெல்லாம் கருப்பையில் இருக்கும் ஜீவன் வேண்டுகிறது.

பத்து மாதங்கள் கழித்து சூதிகா வாயுவினால் தலைகீழாகத் தள்ளப்படுகிறது.

அப்போது அதன்‌ மூச்சு தடைபட்டு, உச்சந்தலையில் சடம்‌‌ என்ற‌ வாயுவினால்‌ தாக்கப்படுகிறது.

கர்பத்தில்‌ இருந்த சிசு மிகவும்‌ துன்பப்பட்டபோதிலும், ஞானம் இருந்தது. வெளியில்‌ வரும்போது அந்த ஆனந்தம்‌ சட்டென்று மறந்துவிடுவதால் 'தேகமே ஆன்மா' என்னும் மாயையினால் மூடப்பட்டு அழத் துவங்குகிறது.

க்வா க்வா என்று அழுதழுது ஆனந்தம் எங்கே எங்கே என்று கேட்கிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்