About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 017 திருக்கண்ணபுரம். Show all posts
Showing posts with label 017 திருக்கண்ணபுரம். Show all posts

Sunday, 17 December 2023

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||017. திருக்கண்ணபுரம்||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்||
||பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 5

திருமங்கையாழ்வார்
101. திவ்ய ப்ரபந்தம் - 1735 - பெரிய திருமொழி - 8.9.8
கற்றார் பற்று அறுக்கும்* பிறவிப் பெருங் கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்த பின்னை*
வற்றா நீர் வயல் சூழ்* வயல் ஆலி அம்மானைப் பெற்றேன்* 
பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே|

102. திவ்ய ப்ரபந்தம் - 1736 - பெரிய திருமொழி - 8.9.9
கண் ஆர் கண்ணபுரம்* கடிகை கடி கமழும்*
தண் ஆர் தாமரை சூழ்* தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாண்மதியை* விரிகின்ற வெம் சுடரை*
கண் ஆரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்று கொலோ?

103. திவ்ய ப்ரபந்தம் - 1737 - பெரிய திருமொழி - 8.9.10
செரு நீர வேல் வலவன்* கலிகன்றி மங்கையர்கோன்*
கரு நீர் முகில் வண்ணன்* கண்ணபுரத்தானை*
இரு நீர் இன் தமிழ்* இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர்*
வரும் நீர் வையம் உய்ய* இவை பாடி ஆடுமினே|

104. திவ்ய ப்ரபந்தம் - 1738 - பெரிய திருமொழி - 8.10.1
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை* மண நோக்கம் உண்டானே! * 
உன்னை உகந்து உகந்து* உன் தனக்கே தொண்டு ஆனேற்கு* 
என் செய்கின்றாய்? சொல்லு * நால்வேதம் கண்டானே* 
கண்ணபுரத்து உறை அம்மானே|

105. திவ்ய ப்ரபந்தம் - 1739 - பெரிய திருமொழி - 8.10.2
பெரு நீரும் விண்ணும்* மலையும் உலகு ஏழும்*
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய* நின்னை அல்லால்*
வரு தேவர் மற்று உளர் என்று* என் மனத்து இறையும் கருதேன் நான் * 
கண்ணபுரத்து உறை அம்மானே|

106. திவ்ய ப்ரபந்தம் - 1740 - பெரிய திருமொழி - 8.10.3
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று* இருப்பாரோடு
உற்றிலேன்* உற்றதும்* உன் அடியார்க்கு அடிமை*
மற்று எல்லாம் பேசிலும்* நின் திரு எட்டு எழுத்தும் கற்று* 
நான் கண்ணபுரத்து உறை அம்மானே|

107. திவ்ய ப்ரபந்தம் - 1741 - பெரிய திருமொழி - 8.10.4
பெண் ஆனாள்* பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல்*
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை* உகந்தேன் நான் *
மண் ஆளா வாள் நெடுங் கண்ணி* மது மலராள் கண்ணாளா* 
கண்ணபுரத்து உறை அம்மானே|

108. திவ்ய ப்ரபந்தம் - 1742 - பெரிய திருமொழி - 8.10.5
பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன் நான்*
மற்று ஆரும் பற்று இலேன்* ஆதலால் நின் அடைந்தேன்*
உற்றான் என்று உள்ளத்து வைத்து* அருள் செய் கண்டாய் *
கற்றார் சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே|

109. திவ்ய ப்ரபந்தம் - 1743 - பெரிய திருமொழி - 8.10.6
ஏத்தி உன் சேவடி* எண்ணி இருப்பாரை*
பார்த்திருந்து அங்கு* நமன் தமர் பற்றாது*
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று* தொடாமை நீ காத்தி போல் * 
கண்ணபுரத்து உறை அம்மானே|

110. திவ்ய ப்ரபந்தம் - 1744 - பெரிய திருமொழி - 8.10.7
வெள்ளை நீர் வெள்ளத்து* அணைந்த அரவு அணை மேல்*
துள்ளு நீர் மெள்ளத்* துயின்ற பெருமானே*
வள்ளலே உன் தமர்க்கு என்றும்* நமன் தமர் கள்ளர் போல் * 
கண்ணபுரத்து உறை அம்மானே|

111. திவ்ய ப்ரபந்தம் - 1745 - பெரிய திருமொழி - 8.10.8
மாண் ஆகி* வையம் அளந்ததுவும் வாள் அவுணன்*
பூண் ஆகம் கீண்டதுவும்* ஈண்டு நினைந்து இருந்தேன்*
பேணாத வல்வினையேன்* இடர் எத்தனையும் காணேன் நான் * 
கண்ணபுரத்து உறை அம்மானே|

112. திவ்ய ப்ரபந்தம் - 1746 - பெரிய திருமொழி - 8.10.9
நாட்டினாய் என்னை* உனக்கு முன் தொண்டு ஆக*
மாட்டினேன் அத்தனையே கொண்டு* என் வல்வினையை*
பாட்டினால் உன்னை* என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் * 
கண்ணபுரத்து உறை அம்மானே|

113. திவ்ய ப்ரபந்தம் - 1747 - பெரிய திருமொழி - 8.10.10
கண்ட சீர்க்* கண்ணபுரத்து உறை அம்மானை*
கொண்ட சீர்த் தொண்டன்* கலியன் ஒலி மாலை*
பண்டமாய்ப் பாடும்* அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
அண்டம் போய் ஆட்சி* அவர்க்கு அது அறிந்தோமே|

114. திவ்ய ப்ரபந்தம் - 2067 - திருநெடுந்தாண்டகம் - 2.6 (16)
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்*
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்*
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும்*
வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்*
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்*
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்*
துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே|

115. திவ்ய ப்ரபந்தம் - 2078 - திருநெடுந்தாண்டகம் - 3.7 (27)
செங் கால மட நாராய் இன்றே சென்று*
திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு*
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்*
இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை*
நாளும் பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்*
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்* 
தந்தால் இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்*
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே|

116. திவ்ய ப்ரபந்தம் - 2707 - சிறிய திருமடல் - 4.4 (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்*

117. திவ்ய ப்ரபந்தம் - 2759 - பெரிய திருமடல் - 5.7 (47)
பேதையேன் கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்*
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே*
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்*
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்*
மன்னும் மலர் மங்கை மைந்தன்* கணபுரத்துப்*

118. திவ்ய ப்ரபந்தம் – 2782 - பெரிய திருமடல் - 7.10 (70)
மன்னும் மறை நான்கும் ஆனானை* 
புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை*
நாங்கூரில் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*
நல் நீர்த் தலைச்சங்க நாள் மதியை* 
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை* 
தென் நறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*

நம்மாழ்வார்
119. திவ்ய ப்ரபந்தம் - 3772 - திருவாய்மொழி - 9.10.1
மாலை நண்ணித்* தொழுது எழுமினோ வினை கெட* 
காலை மாலை* கமல மலர் இட்டு நீர்*
வேலை மோதும் மதிள் சூழ்* திருக் கண்ணபுரத்து*
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான்* அடி இணைகளே|

120. திவ்ய ப்ரபந்தம் - 3773 - திருவாய்மொழி - 9.10.2
கள் அவிழும் மலர் இட்டு* நீர் இறைஞ்சுமின்*
நள்ளி சேரும் வயல் சூழ்* கிடங்கின் புடை*
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ்* திருக் கண்ணபுரம்*
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே|

121. திவ்ய ப்ரபந்தம் - 3774 - திருவாய்மொழி - 9.10.3
தொண்டர் நும் தம்* துயர் போக நீர் ஏகமாய்*
விண்டு வாடா மலர் இட்டு* நீர் இறைஞ்சுமின்*
வண்டு பாடும் பொழில் சூழ்* திருக்கண்ணபுரத்து* 
அண்ட வாணன்* அமரர் பெருமானையே|

122. திவ்ய ப்ரபந்தம் - 3775 - திருவாய்மொழி - 9.10.4
மானை நோக்கி* மடப் பின்னை தன் கேள்வனை*
தேனை வாடா மலர் இட்டு* நீர் இறைஞ்சுமின்*
வானை உந்தும் மதிள் சூழ்* திருக்கண்ணபுரம்*
தான் நயந்த பெருமான்* சரண் ஆகுமே|

123. திவ்ய ப்ரபந்தம் - 3776 - திருவாய்மொழி - 9.10.5
சரணம் ஆகும்* தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்*
மரணம் ஆனால்* வைகுந்தம் கொடுக்கும் பிரான்*
அரண் அமைந்த மதிள் சூழ்* திருக்கண்ணபுரத்து* 
தரணியாளன்* தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே|

124. திவ்ய ப்ரபந்தம் - 3777 - திருவாய்மொழி - 9.10.6
அன்பன் ஆகும்* தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்*
செம் பொன் ஆகத்து* அவுணன் உடல் கீண்டவன்*
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ்* திருக்கண்ணபுரத்து 
அன்பன்* நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே|

125. திவ்ய ப்ரபந்தம் - 3778 - திருவாய்மொழி - 9.10.7
மெய்யன் ஆகும்* விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்*
பொய்யன் ஆகும்* புறமே தொழுவார்க்கு எல்லாம்*
செய்யில் வாளை உகளும்* திருக்கண்ணபுரத்து*
ஐயன்* ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே|

126. திவ்ய ப்ரபந்தம் - 3779 - திருவாய்மொழி - 9.10.8
அணியன் ஆகும்* தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்*
பிணியும் சாரா* பிறவி கெடுத்து ஆளும்*
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ்* திருக்கண்ணரம்*
பணிமின்* நாளும் பரமேட்டி தன் பாதமே|

127. திவ்ய ப்ரபந்தம் - 3780 - திருவாய்மொழி - 9.10.9
பாதம் நாளும்* பணியத் தணியும் பிணி*
ஏதம் சாரா* எனக்கேல் இனி என்குறை?*
வேத நாவர் விரும்பும்* திருக்கண்ணபுரத்து*
ஆதியானை* அடைந்தார்க்கு அல்லல் இல்லையே|

128. திவ்ய ப்ரபந்தம் - 3781 - திருவாய்மொழி - 9.10.10
இல்லை அல்லல்* எனக்கேல் இனி என் குறை?*
அல்லி மாதர் அமரும்* திருமார்பினன்*
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்* திருக்கண்ணபுரம்*
சொல்ல* நாளும் துயர் பாடு சாராவே|

129. திவ்ய ப்ரபந்தம் - 3782 - திருவாய்மொழி - 9.10.11
பாடு சாரா* வினை பற்று அற வேண்டுவீர்*
மாடம் நீடு* குருகூர்ச் சடகோபன்* சொல்
பாடலான தமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்*
பாடி ஆடி* பணிமின் அவன் தாள்களே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Saturday, 16 December 2023

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||017. திருக்கண்ணபுரம்||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்||
||பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 4

திருமங்கையாழ்வார்
076. திவ்ய ப்ரபந்தம் - 1710 - பெரிய திருமொழி - 8.7.3
புயல் உறு வரை மழை* பொழிதர மணி நிரை*
மயல் உற வரை குடை* எடுவிய நெடியவர்*
முயல் துளர் மிளை முயல் துள* வள விளை வயல்*
கயல் துளு கணபுரம்* அடிகள் தம் இடமே|

077. திவ்ய ப்ரபந்தம் - 1711 - பெரிய திருமொழி - 8.7.4
ஏதலர் நகை செய* இளையவர் அளை வெணெய்*
போது செய்து அமரிய* புனிதர் நல் விரை* 
மலர் கோதிய மதுகரம்* குலவிய மலர் மகள்*
காதல் செய் கணபுரம்* அடிகள் தம் இடமே|

078. திவ்ய ப்ரபந்தம் - 1712 - பெரிய திருமொழி - 8.7.5
தொண்டரும் அமரரும்* முனிவரும் தொழுது எழ*
அண்டமொடு அகல் இடம்* அளந்தவர் அமர் செய்து*
விண்டவர் பட* மதிள் இலங்கை முன் எரி எழ*
கண்டவர் கணபுரம்* அடிகள் தம் இடமே|

079. திவ்ய ப்ரபந்தம் - 1713 - பெரிய திருமொழி - 8.7.6
மழுவு இயல் படை* உடையவன் இடம் மழை முகில்*
தழுவிய உருவினர்* திருமகள் மருவிய*
கொழுவிய செழு மலர்* முழுசிய பறவை பண்*
எழுவிய கணபுரம்* அடிகள் தம் இடமே|

080. திவ்ய ப்ரபந்தம் - 1714 - பெரிய திருமொழி - 8.7.7
பரிதியொடு அணி மதி* பனி வரை திசை நிலம்*
எரி தியொடு என இன* இயல்வினர் செலவினர்*
சுருதியொடு அரு மறை* முறை சொலும் அடியவர்*
கருதிய கணபுரம்* அடிகள் தம் இடமே|

081. திவ்ய ப்ரபந்தம் - 1715 - பெரிய திருமொழி - 8.7.8
படி புல்கும் அடி இணை* பலர் தொழ மலர் வைகு*
கொடி புல்கு தட வரை* அகலம் அது உடையவர்*
முடி புல்கு நெடு வயல்* படை செல அடி மலர்*
கடி புல்கு கணபுரம்* அடிகள் தம் இடமே|

082. திவ்ய ப்ரபந்தம் - 1716 - பெரிய திருமொழி - 8.7.9
புல மனும் மலர்மிசை* மலர் மகள் புணரிய*
நிலமகள் என இன* மகளிர்கள் இவரொடும்*
வல மனு படையுடை* மணி வணர் நிதி குவை*
கல மனு கணபுரம்* அடிகள் தம் இடமே|

083. திவ்ய ப்ரபந்தம் - 1717 - பெரிய திருமொழி - 8.7.10
மலி புகழ் கணபுரம் உடைய* எம் அடிகளை*
வலி கெழு மதிள் அயல்* வயல் அணி மங்கையர்*
கலியன தமிழ் இவை* விழுமிய இசையினொடு*
ஒலி சொலும் அடியவர்* உறு துயர் இலரே|

084. திவ்ய ப்ரபந்தம் - 1718 - பெரிய திருமொழி - 8.8.1
வானோர் அளவும் முது முந்நீர்* வளர்ந்த காலம்* 
வலி உருவின் மீன் ஆய் வந்து வியந்து உய்யக் கொண்ட* 
தண் தாமரைக் கண்ணன்*
ஆனா உருவில் ஆன் ஆயன் * அவனை அம்மா விளை வயலுள்*
கான் ஆர் புறவில் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

085. திவ்ய ப்ரபந்தம் - 1719 - பெரிய திருமொழி - 8.8.2
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக* அங்கு ஓர் வரை நட்டு*
இலங்கு சோதி ஆர் அமுதம்* எய்தும் அளவு ஓர் ஆமை ஆய்*
விலங்கல் திரியத் தடங் கடலுள்* சுமந்து கிடந்த வித்தகனை *
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

086. திவ்ய ப்ரபந்தம் - 1720 - பெரிய திருமொழி - 8.8.3
பார் ஆர் அளவும் முது முந்நீர்* பரந்த காலம்* 
வளை மருப்பின் ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய்* 
எடுத்த ஆற்றல் அம்மானை*
கூர் ஆர் ஆரல் இரை கருதிக்* குருகு பாயக் கயல் இரியும்*
கார் ஆர் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே|

087. திவ்ய ப்ரபந்தம் - 1721 - பெரிய திருமொழி - 8.8.4
உளைந்த அரியும் மானிடமும்* உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*
விளைந்த சீற்றம் விண் வெதும்ப* வேற்றோன் அகலம் வெம் சமத்து*
பிளந்து வளைந்த உகிரானைப் * பெருந் தண் செந்நெல் குலை தடிந்து*
களம் செய் புறவில் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

088. திவ்ய ப்ரபந்தம் - 1722 - பெரிய திருமொழி - 8.8.5
தொழும் நீர் வடிவின் குறள் உருவு ஆய்* வந்து தோன்றி மாவலிபால்*
முழுநீர் வையம் முன் கொண்ட* மூவா உருவின் அம்மானை *
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப* ஒருபால் முல்லை முகையோடும்*
கழுநீர் மலரும் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

089. திவ்ய ப்ரபந்தம் - 1723 - பெரிய திருமொழி - 8.8.6
வடிவாய் மழுவே படை ஆக* வந்து தோன்றி மூவெழுகால்*
படி ஆர் அரசு களைகட்ட* பாழியானை அம்மானை *
குடியா வண்டு கொண்டு உண்ணக்* கோல நீலம் மட்டு உகுக்கும்*
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

090. திவ்ய ப்ரபந்தம் - 1724 - பெரிய திருமொழி - 8.8.7
வையம் எல்லாம் உடன் வணங்க* வணங்கா மன்னனாய்த் தோன்றி*
வெய்ய சீற்றக் கடி இலங்கை* குடிகொண்டு ஓட வெம் சமத்து*
செய்த வெம்போர் நம்பரனைச் * செழுந் தண் கானல் மணம் நாறும்*
கைதை வேலிக் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

091. திவ்ய ப்ரபந்தம் - 1725 - பெரிய திருமொழி - 8.8.8
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்* ஒருபால் தோன்றத் தான் தோன்றி*
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர்* விண்பால் செல்ல வெம் சமத்து*
செற்ற கொற்றத் தொழிலானைச் * செந்தீ மூன்றும் இல் இருப்ப*
கற்ற மறையோர் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

092. திவ்ய ப்ரபந்தம் - 1726 - பெரிய திருமொழி - 8.8.9
துவரிக் கனிவாய் நில மங்கை* துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்*
இவரித்து அரசர் தடுமாற* இருள் நாள் பிறந்த அம்மானை *
உவரி ஓதம் முத்து உந்த* ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
கவரி வீசும் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

093. திவ்ய ப்ரபந்தம் - 1727 - பெரிய திருமொழி - 8.8.10
மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய்* முன்னும் இராமன் ஆய்த்தான் ஆய்* 
பின்னும் இராமன் ஆய்த் தாமோதரன் ஆய்க்* கற்கியும் ஆனான் தன்னை* 
கண்ணபுரத்து அடியேன்* கலியன் ஒலிசெய்த*
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை* செப்ப பாவம் நில்லாவே|

094. திவ்ய ப்ரபந்தம் - 1728 - பெரிய திருமொழி - 8.9.1
கைம் மான மத யானை* இடர் தீர்த்த கரு முகிலை*
மைம் மான மணியை* அணி கொள் மரதகத்தை*
எம்மானை எம் பிரானை ஈசனை* என் மனத்துள் அம்மானை* 
அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே|

095. திவ்ய ப்ரபந்தம் - 1729 - பெரிய திருமொழி - 8.9.2
தரு மான மழை முகிலைப்* பிரியாது தன் அடைந்தார்*
வரும் மானம் தவிர்க்கும்* மணியை அணி உருவில்*
திருமாலை அம்மானை* அமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை* 
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே|

096. திவ்ய ப்ரபந்தம் - 1730 - பெரிய திருமொழி - 8.9.3
விடை ஏழ் அன்று அடர்த்து* வெகுண்டு விலங்கல் உற*
படையால் ஆழி தட்ட* பரமன் பரஞ்சோதி*
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ்* 
கண்ணபுரம் ஒன்று உடையானுக்கு* அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?

097. திவ்ய ப்ரபந்தம் - 1731 - பெரிய திருமொழி - 8.9.4
மிக்கானை* மறை ஆய் விரிந்த விளக்கை* 
என்னுள் புக்கானைப்* புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானைக் கடிகைத்* தடங் குன்றின்மிசை இருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே|

098. திவ்ய ப்ரபந்தம் - 1732 - பெரிய திருமொழி - 8.9.5
வந்தாய் என் மனத்தே* வந்து நீ புகுந்த பின்னை*
எந்தாய் போய் அறியாய்* இதுவே அமையாதோ?*
கொந்து ஆர் பைம் பொழில் சூழ்* குடந்தைக் கிடந்து உகந்த மைந்தா* 
உன்னை என்றும்* மறவாமைப் பெற்றேனே|

099. திவ்ய ப்ரபந்தம் - 1733 - பெரிய திருமொழி - 8.9.6
எஞ்சா வெம் நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேல் என்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே நீ நினையாது* இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
மஞ்சு ஆர் மாளிகை சூழ்* வயல் ஆலி மைந்தனையே|

100. திவ்ய ப்ரபந்தம் - 1734 - பெரிய திருமொழி - 8.9.7
பெற்றார் பெற்று ஒழிந்தார்* பின்னும் நின்று அடியேனுக்கு*
உற்றான் ஆய் வளர்த்து* என் உயிர் ஆகி நின்றானை*
முற்றா மா மதி கோள் விடுத்தானை* எம்மானை*
எத்தால் யான் மறக்கேன்?* இது சொல் என் ஏழை நெஞ்சே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Tuesday, 12 December 2023

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||017. திருக்கண்ணபுரம்||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்||
||பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 3

திருமங்கையாழ்வார்
051. திவ்ய ப்ரபந்தம் - 1685 - பெரிய திருமொழி - 8.4.8
நீல மலர்கள்* நெடு நீர் வயல் மருங்கில்*
சால மலர் எல்லாம்* ஊதாதே* வாள் அரக்கர் காலன்* 
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்*
கோல நறுந் துழாய்* கொண்டு ஊதாய் கோல் தும்பீ|

052. திவ்ய ப்ரபந்தம் - 1686 - பெரிய திருமொழி - 8.4.9
நந்தன் மதலை* நில மங்கை நல் துணைவன்*
அந்தம் முதல்வன்* அமரர்கள் தம் பெருமான்*
கந்தம் கமழ்* காயா வண்ணன் கதிர் முடிமேல்*
கொந்து நறுந் துழாய்* கொண்டு ஊதாய் கோல் தும்பீ|

053. திவ்ய ப்ரபந்தம் - 1687 - பெரிய திருமொழி - 8.4.10
வண்டு அமரும் சோலை* வயல் ஆலி நல் நாடன்*
கண்ட சீர் வென்றிக்* கலியன் ஒலி மாலை*
கொண்டல் நிற வண்ணன்* கண்ணபுரத்தானை*
தொண்டரோம் பாட* நினைந்து ஊதாய் கோல் தும்பீ|

054. திவ்ய ப்ரபந்தம் - 1688 - பெரிய திருமொழி - 8.5.1
தந்தை காலில் விலங்கு அற*  வந்து தோன்றிய தோன்றல் பின்* 
தமியேன் தன் சிந்தை போயிற்றுத்* 
திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை*
அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர்* அவை சுட அதனோடும்*
மந்தமாருதம் வன முலை தடவந்து* வலிசெய்வது ஒழியாதே|

055. திவ்ய ப்ரபந்தம் - 1689 - பெரிய திருமொழி - 8.5.2
மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன்* வரை புரை திருமார்வில்*
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்* தாழ்ந்தது ஓர் துணை காணேன்*
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது* ஒளியவன் விசும்பு இயங்கும்*
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன* செய்வது ஒன்று அறியேனே|

056. திவ்ய ப்ரபந்தம் - 1690 - பெரிய திருமொழி - 8.5.3
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில்* வளைகளும் இறை நில்லா*
பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை* நம் பெண் உயிர்க்கு இரங்குமோ?*
தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை* இணை முலை வேகின்றதால்*
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்* அஞ்சேல் என்பார் இலையே|

057. திவ்ய ப்ரபந்தம் - 1691 - பெரிய திருமொழி - 8.5.4
கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல்* 
கழல் மன்னர் பெரும் போரில்*
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்* 
வந்திலன் மறி கடல் நீர்*
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும்* 
தழல் முகந்து இள முலைமேல்*
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை* எனக்கு எனப் பெறலாமே|

058. திவ்ய ப்ரபந்தம் - 1692 - பெரிய திருமொழி - 8.5.5
ஏழு மா மரம் துளைபடச் சிலை வளைத்து*
இலங்கையை மலங்குவித்த ஆழியான்* 
நமக்கு அருளிய அருளொடும்* பகல் எல்லை கழிகின்றதால்*
தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை* சுடர் படு முதுநீரில்*
ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவது ஓர்* அந்தி வந்து அடைகின்றதே|

059. திவ்ய ப்ரபந்தம் - 1693 - பெரிய திருமொழி - 8.5.6
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட* முழங்கு அழல் எரி அம்பின்*
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்* வந்திலன் என் செய்கேன்?*
எரியும் வெம் கதிர் துயின்றது* பாவியேன் இணை நெடுங் கண் துயிலா*
கரிய நாழிகை ஊழியின் பெரியன* கழியும் ஆறு அறியேனே|

060. திவ்ய ப்ரபந்தம் - 1694 - பெரிய திருமொழி - 8.5.7
கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து* 
இலங்கையர் கோனது வரை ஆகம் மலங்க* 
வெம் சமத்து அடு சரம் துரந்த* எம் அடிகளும் வாரானால்*
இலங்கு வெம் கதிர் இள மதி அதனொடும்* விடை மணி அடும்* 
ஆயன் விலங்கல் வேயினது ஓசையும் ஆய்* இனி விளைவது ஒன்று அறியேனே|

061. திவ்ய ப்ரபந்தம் - 1695 - பெரிய திருமொழி - 8.5.8
முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும்* முனிவனும் முனிவு எய்தி*
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய* மைந்தனும் வாரானால்*
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை* அடங்க அம் சிறை கோலி*
தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர்* கொடு வினை அறியேனே|

062. திவ்ய ப்ரபந்தம் - 1696 - பெரிய திருமொழி - 8.5.9
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும்* கனவினில் அவன் தந்த*
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி* என் வளை நெக இருந்தேனை*
சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை* என் சிந்தையைச் சிந்துவிக்கும்*
அனந்தல் அன்றிலின் அரி குரல்* பாவியேன் ஆவியை அடுகின்றதே|

063. திவ்ய ப்ரபந்தம் - 1697 - பெரிய திருமொழி - 8.5.10
வார் கொள் மென் முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்து முன் உரை செய்த*
கார் கொள் பைம் பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி யொலி வல்லார்*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையரோடும் கூடுவரே|

064. திவ்ய ப்ரபந்தம் - 1698 - பெரிய திருமொழி - 8.6.1
தொண்டீர் உய்யும் வகை கண்டேன்* துளங்கா அரக்கர் துளங்க* 
முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச்* சிறிதே முனிந்த திருமார்வன்*
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை* வடிக் கண் மடந்தை மா நோக்கம் கண்டான்*
கண்டுகொண்டு உகந்த* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

065. திவ்ய ப்ரபந்தம் - 1699 - பெரிய திருமொழி - 8.6.2
பொருந்தா அரக்கர் வெம் சமத்துப்* பொன்ற அன்று புள் ஊர்ந்து*
பெருந் தோள் மாலி தலை புரளப்* பேர்ந்த அரக்கர் தென் இலங்கை*
இருந்தார் தம்மை உடன்கொண்டு* அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப*
கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

066. திவ்ய ப்ரபந்தம் - 1700 - பெரிய திருமொழி - 8.6.3
வல்லி இடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*
அல்லல் செய்து வெம் சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியை*
கல்விச் சிலையால் காத்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

067. திவ்ய ப்ரபந்தம் - 1701 - பெரிய திருமொழி - 8.6.4
மல்லை முந்நீர் அதர்பட* வரி வெம் சிலை கால் வளைவித்து*
கொல்லை விலங்கு பணிசெய்ய* கொடியோன் இலங்கை புகல் உற்று*
தொல்லை மரங்கள் புகப் பெய்து* துவலை நிமிர்ந்து வான் அணவ*
கல்லால் கடலை அடைத்தான் ஊர்* ண்ணபுரம் நாம் தொழுதுமே|

068. திவ்ய ப்ரபந்தம் - 1702 - பெரிய திருமொழி - 8.6.5
ஆமை ஆகி அரி ஆகி* அன்னம் ஆகி* 
அந்தணர் தம் ஓமம் ஆகி ஊழி ஆகி* உவரி சூழ்ந்த நெடும் புணரி* 
முன் சேம மதிள் சூழ் இலங்கைக் கோன்* சிரமும் கரமும் துணித்து* 
காமன் பயந்தான் கருதும் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

069. திவ்ய ப்ரபந்தம் - 1703 - பெரிய திருமொழி - 8.6.6
வருந்தாது இரு நீ மட நெஞ்சே* நம் மேல் வினைகள் வாரா* 
முன் திருந்தா அரக்கர் தென் இலங்கை* செந் தீ உண்ண சிவந்து ஒரு நாள்*
முன் பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து* பின்னை மணாளன் ஆகி* 
கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

070. திவ்ய ப்ரபந்தம் - 1704 - பெரிய திருமொழி - 8.6.7
இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய்* முதலை தன்னால் அடர்ப்புண்டு*
கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய* அதனுக்கு அருள் புரிந்தான்*
அலை நீர் இலங்கைத் தசக்கிரீவற்கு* இளையோற்கு அரசை அருளி* 
முன் கலை மாச் சிலையால் எய்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

071. திவ்ய ப்ரபந்தம் - 1705 - பெரிய திருமொழி - 8.6.8
மால் ஆய் மனமே அருந் துயரில்* வருந்தாது இரு நீ வலி மிக்க*
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும்* கத மாக் கழுதையும்*
மால் ஆர் விடையும் மத கரியும்* மல்லர் உயிரும் மடிவித்து*
காலால் சகடம் பாய்ந்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

072. திவ்ய ப்ரபந்தம் - 1706 - பெரிய திருமொழி - 8.6.9
குன்றால் மாரி பழுது ஆக்கி* கொடி ஏர் இடையாள் பொருட்டாக*
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த* வானோர் பெருமான் மா மாயன்*
சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய்த்* திரி கால் சகடம் சினம் அழித்து*
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|

073. திவ்ய ப்ரபந்தம் - 1707 - பெரிய திருமொழி - 8.6.10
கரு மா முகில் தோய் நெடு மாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை*
திரு மா மகளால் அருள்மாரி* செழுநீர் ஆலி வள நாடன்*
மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி* மங்கை வேந்தன் ஒலி வல்லார்*
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி* இமையோர் இறைஞ்ச வாழ்வாரே|

074. திவ்ய ப்ரபந்தம் - 1708 - பெரிய திருமொழி - 8.7.1
வியம் உடை விடை இனம்* உடைதர மட மகள்*
குயம் மிடை தட வரை* அகலம் அது உடையவர் *
நயம் உடை நடை அனம்* இளையவர் நடை பயில்*
கயம் மிடை கணபுரம் * அடிகள் தம் இடமே|

075. திவ்ய ப்ரபந்தம் - 1709 - பெரிய திருமொழி - 8.7.2
இணை மலி மருதினொடு* எருதிற இகல் செய்து*
துணை மலி முலையவள்* மணம் மிகு கலவியுள் *
மணம் மலி விழவினொடு* அடியவர் அளவிய*
கணம் மலி கணபுரம் * அடிகள் தம் இடமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Wednesday, 6 December 2023

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||017. திருக்கண்ணபுரம்||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்||
||பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 2

திருமங்கையாழ்வார்
026. திவ்ய ப்ரபந்தம் - 1660 - பெரிய திருமொழி - 8.2.3
அருவி சோர் வேங்கடம்* நீர்மலை என்று வாய் வெருவினாள்* 
மெய்யம் வினவி இருக்கின்றாள்* பெருகு சீர்க்* 
கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள்* 
உள்மெலிந்தாள் இது என்கொலோ?

027. திவ்ய ப்ரபந்தம் - 1661 - பெரிய திருமொழி - 8.2.4
உண்ணும் நாள் இல்லை* உறக்கமும் தான் இல்லை*
பெண்மையும் சால* நிறைந்திலள் பேதை தான்*
கண்ணன் ஊர் கண்ணபுரம்* தொழும் கார்க் கடல் வண்ணர் மேல்* 
எண்ணம் இவட்கு இது என்கொலோ?

028. திவ்ய ப்ரபந்தம் - 1662 - பெரிய திருமொழி - 8.2.5
கண்ணன் ஊர்* கண்ணபுரம் தொழும் காரிகை*
பெண்மை என்? தன்னுடை* உண்மை உரைக்கின்றாள்*
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட* வண்ணம் விளம்பினால்*
வண்ணமும்* பொன் நிறம் ஆவது ஒழியுமே|

029. திவ்ய ப்ரபந்தம் - 1663 - பெரிய திருமொழி - 8.2.6
வட வரை நின்றும் வந்து* இன்று கணபுரம் இடவகை கொள்வது* 
யாம் என்று பேசினாள்* மடவரல் மாதர் என் பேதை* 
இவர்க்கு இவள் கடவது என்* 
கண் துயில் இன்று இவர் கொள்ளவே?

030. திவ்ய ப்ரபந்தம் - 1664 - பெரிய திருமொழி - 8.2.7
தரங்க நீர் பேசினும்* தண் மதி காயினும்*
இரங்குமோ?* எத்தனை நாள் இருந்து எள்கினாள்*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை* 
ஊர் அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே|

031. திவ்ய ப்ரபந்தம் - 1665 - பெரிய திருமொழி - 8.2.8
தொண்டு எல்லாம் நின் அடியே* தொழுது உய்யுமா கண்டு* 
தான் கண்ணபுரம்* தொழப் போயினாள்*
வண்டு உலாம் கோதை என் பேதை* 
மணி நிறம் கொண்டு தான்* கோயின்மை செய்வது தக்கதே?

032. திவ்ய ப்ரபந்தம் - 1666 - பெரிய திருமொழி - 8.2.9
முள் எயிறு ஏய்ந்தில* கூழை முடிகொடா*
தெள்ளியள் என்பது ஓர்* தேசு இலள் என் செய்கேன்*
கள் அவிழ் சோலைக்* கணபுரம் கை தொழும் பிள்ளையை* 
பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?

033. திவ்ய ப்ரபந்தம் - 1667 - பெரிய திருமொழி - 8.2.10
கார் மலி* கண்ணபுரத்து எம் அடிகளை*
பார் மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்*
சீர் மலி பாடல்* இவை பத்தும் வல்லவர்*
நீர் மலி வையத்து* நீடு நிற்பார்களே|

034. திவ்ய ப்ரபந்தம் - 1668 - பெரிய திருமொழி - 8.3.1
கரை எடுத்த சுரி சங்கும்* கன பவளத்து எழு கொடியும்*
திரை எடுத்து வரு புனல் சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்*
விரை எடுத்த துழாய் அலங்கல்* விறல் வரைத் தோள் புடைபெயர*
வரை எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரி வளையே|

035. திவ்ய ப்ரபந்தம் - 1669 - பெரிய திருமொழி - 8.3.2
அரி விரவு முகில் கணத்தால்* அகில் புகையால் வரையோடும்*
தெரிவு அரிய மணி மாடத்* திருக்கண்ணபுரத்து உறையும்*
வரி அரவின் அணைத் துயின்று* மழை மதத்த சிறு தறு கண்*
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு* இழந்தேன் என் கன வளையே|

036. திவ்ய ப்ரபந்தம் - 1670 - பெரிய திருமொழி - 8.3.3
துங்க மா மணி மாட* நெடு முகட்டின் சூலிகை போம்*
திங்கள் மா முகில் துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பைங் கண் மால் விடை அடர்த்துப்* பனி மதி கோள் விடுத்து உகந்த*
செங் கண் மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறி வளையே|

037. திவ்ய ப்ரபந்தம் - 1671 - பெரிய திருமொழி - 8.3.4
கணம் மருவும் மயில் அகவு* கடி பொழில் சூழ் நெடு மறுகின்*
திணம் மருவு கன மதிள் சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்*
மணம் மருவு தோள் ஆய்ச்சி* ஆர்க்க போய் உரலோடும்*
புணர் மருதம் இற நடந்தாற்கு* இழந்தேன் என் பொன் வளையே|

038. திவ்ய ப்ரபந்தம் - 1672 - பெரிய திருமொழி - 8.3.5
வாய் எடுத்த மந்திரத்தால்* அந்தணர் தம் செய் தொழில்கள்*
தீ எடுத்து மறை வளர்க்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
தாய் எடுத்த சிறு கோலுக்கு* உளைந்து ஓடி தயிர் உண்ட*
வாய் துடைத்த மைந்தனுக்கு* இழந்தேன் என் வரி வளையே|

039. திவ்ய ப்ரபந்தம் - 1673 - பெரிய திருமொழி - 8.3.6
மடல் எடுத்த நெடுந் தாழை* மருங்கு எல்லாம் வளர் பவளம்*
திடல் எடுத்து சுடர் இமைக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
அடல் அடர்த்து அன்று இரணியனை* முரண் அழிய அணி உகிரால்*
உடல் எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளி வளையே|

040. திவ்ய ப்ரபந்தம் - 1674 - பெரிய திருமொழி - 8.3.7
வண்டு அமரும் மலர்ப் புன்னை* வரி நீழல் அணி முத்தம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
எண் திசையும் எழு சுடரும்* இரு நிலனும் பெரு விசும்பும்*
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளி வளையே|

041. திவ்ய ப்ரபந்தம் - 1675 - பெரிய திருமொழி - 8.3.8
கொங்கு மலி கருங் குவளை* கண் ஆகத் தெண் கயங்கள்*
செங் கமலம் முகம் அலர்த்தும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
வங்கம் மலி தடங் கடலுள்* வரி அரவின் அணைத் துயின்ற*
செங்கமலநாபனுக்கு* இழந்தேன் என் செறி வளையே|

042. திவ்ய ப்ரபந்தம் - 1676 - பெரிய திருமொழி - 8.3.9
வார் ஆளும் இளங் கொங்கை* நெடும் பணைத் தோள் மடப் பாவை*
சீர் ஆளும் வரை மார்வன்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பேராளன் ஆயிரம் பேர்* ஆயிர வாய் அரவு அணைமேல்*
பேராளர் பெருமானுக்கு* இழந்தேன் என் பெய் வளையே|

043. திவ்ய ப்ரபந்தம் - 1677 - பெரிய திருமொழி - 8.3.10
தே மருவு பொழில் புடை சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை* மறி கடல் சூழ்* வயல் ஆலி வள நாடன்*
காமரு சீர்க் கலிகன்றி* கண்டு உரைத்த தமிழ் மாலை*
நா மருவி இவை பாட* வினை ஆய நண்ணாவே|

044. திவ்ய ப்ரபந்தம் - 1678 - பெரிய திருமொழி - 8.4.1
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலி புகழ் சேர்*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர் முடி மேல்*
வண்ண நறுந் துழாய்* வந்து ஊதாய் கோல் தும்பீ|

045. திவ்ய ப்ரபந்தம் - 1679 - பெரிய திருமொழி - 8.4.2
வேத முதல்வன்* விளங்கு புரி நூலன்*
பாதம் பரவிப்* பலரும் பணிந்து ஏத்தி*
காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம் பெருமான்*
தாது நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|

046. திவ்ய ப்ரபந்தம் - 1680 - பெரிய திருமொழி - 8.4.3
விண்ட மலர் எல்லாம்* ஊதி நீ என் பெறுதி?*
அண்ட முதல்வன்* அமரர்கள் எல்லாரும்*
கண்டு வணங்கும்* கண்ணபுரத்து எம் பெருமான்*
வண்டு நறுந் துழாய்* வந்து ஊதாய் கோல் தும்பீ|

047. திவ்ய ப்ரபந்தம் - 1681 - பெரிய திருமொழி - 8.4.4
நீர் மலிகின்றது ஓர்* மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய்*
சீர் மலிகின்றது ஓர்* சிங்க உரு ஆகி*
கார் மலி வண்ணன்* கண்ணபுரத்து எம் பெருமான்*
தார் மலி தண் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|

048. திவ்ய ப்ரபந்தம் - 1682 - பெரிய திருமொழி - 8.4.5
ஏர் ஆர் மலர் எல்லாம்* ஊதி நீ என் பெறுதி?*
பார் ஆர் உலகம்* பரவ பெருங் கடலுள்*
கார் ஆமை ஆன* கண்ணபுரத்து எம் பெருமான்*
தார் ஆர் நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|

049. திவ்ய ப்ரபந்தம் - 1683 - பெரிய திருமொழி - 8.4.6
மார்வில் திருவன்* வலன் ஏந்து சக்கரத்தன்*
பாரைப் பிளந்த* பரமன் பரஞ்சோதி*
காரில் திகழ்* காயா வண்ணன் கதிர் முடி மேல்*
தாரில் நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|

050. திவ்ய ப்ரபந்தம் - 1684 - பெரிய திருமொழி - 8.4.7
வாமனன் கற்கி* மதுசூதன் மாதவன்*
தார் மன்னு* தாசரதி ஆய தடமார்வன்*
காமன் தன் தாதை* கண்ணபுரத்து எம் பெருமான்*
தாம நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
 
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்