||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஈசனும் உமையும்||
||ஓம் நமோ நாராயணா||
பிரம்மனின் போக்குப் பிடிக்காத பிருகு
பிரம்மலோகத்தை விட்டுச் சென்றார்
அடுத்துச் சென்றார் கயிலை மலைக்கு
அங்கும் ஆனார் சிவபூஜையில் கரடியாக
தனிமையில் இனிமை கண்டிருந்தவரின்
தனிமையைக் குலைத்தார் பிருகுமுனிவர்
கவனம் வேறிடத்தில் இருந்ததால் ஈசன்
கவனிக்கவில்லை முனி பிருகுவின் வரவை
பெண்ணுக்கு உண்டு அதிக உள்ளுணர்வு
கண்டு விட்டாள் உமை முனிவர் வரவை
விலகிச் செல்லுமாறு ஈசனுக்குணர்த்த
விலகிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த
முனிவர் மேல் கொண்டான் சீற்றம் சிவன்
முனிவரும்கொண்டார் சீற்றம் சிவனிடம்
தேடி வந்தவரைக் காக்க வைத்தது ஒன்று
தேடி வந்தவரை வரவேற்காதது இரண்டு
நாடி வந்த காரணத்தை வினவாதது மூன்று
நாடி வந்தவரிடம் சினம் கொள்வது நான்கு
தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்த
சிவபெருமான் மேல் சீற்றம் பொங்கியது
கோபத்தின் மிகுதியால் பிருகு முனிவர்
சாபத்தை அளித்தார் சிவ பெருமானுக்கு
உலகில் இனிக் கிடையாது உனக்கு
உருவ வழிபாடு என்ற ஒன்று என்றார்
நின்று விட்டது சிவனுக்கு உருவ வழிபாடு
இன்றும் எங்கும் நடப்பது லிங்க வழிபாடே
சத்வ குணம் இல்லாதவன் சிவன் என பிருகு
உத்தம குணனைத் தேடினார் வைகுந்தத்தில்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment