||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||017. திருக்கண்ணபுரம்||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்||
||பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 2
திருமங்கையாழ்வார்
026. திவ்ய ப்ரபந்தம் - 1660 - பெரிய திருமொழி - 8.2.3
அருவி சோர் வேங்கடம்* நீர்மலை என்று வாய் வெருவினாள்*
மெய்யம் வினவி இருக்கின்றாள்* பெருகு சீர்க்*
கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள்*
உள்மெலிந்தாள் இது என்கொலோ?
027. திவ்ய ப்ரபந்தம் - 1661 - பெரிய திருமொழி - 8.2.4
உண்ணும் நாள் இல்லை* உறக்கமும் தான் இல்லை*
பெண்மையும் சால* நிறைந்திலள் பேதை தான்*
கண்ணன் ஊர் கண்ணபுரம்* தொழும் கார்க் கடல் வண்ணர் மேல்*
எண்ணம் இவட்கு இது என்கொலோ?
028. திவ்ய ப்ரபந்தம் - 1662 - பெரிய திருமொழி - 8.2.5
கண்ணன் ஊர்* கண்ணபுரம் தொழும் காரிகை*
பெண்மை என்? தன்னுடை* உண்மை உரைக்கின்றாள்*
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட* வண்ணம் விளம்பினால்*
வண்ணமும்* பொன் நிறம் ஆவது ஒழியுமே|
029. திவ்ய ப்ரபந்தம் - 1663 - பெரிய திருமொழி - 8.2.6
வட வரை நின்றும் வந்து* இன்று கணபுரம் இடவகை கொள்வது*
யாம் என்று பேசினாள்* மடவரல் மாதர் என் பேதை*
இவர்க்கு இவள் கடவது என்*
கண் துயில் இன்று இவர் கொள்ளவே?
030. திவ்ய ப்ரபந்தம் - 1664 - பெரிய திருமொழி - 8.2.7
தரங்க நீர் பேசினும்* தண் மதி காயினும்*
இரங்குமோ?* எத்தனை நாள் இருந்து எள்கினாள்*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை*
ஊர் அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே|
031. திவ்ய ப்ரபந்தம் - 1665 - பெரிய திருமொழி - 8.2.8
தொண்டு எல்லாம் நின் அடியே* தொழுது உய்யுமா கண்டு*
தான் கண்ணபுரம்* தொழப் போயினாள்*
வண்டு உலாம் கோதை என் பேதை*
மணி நிறம் கொண்டு தான்* கோயின்மை செய்வது தக்கதே?
032. திவ்ய ப்ரபந்தம் - 1666 - பெரிய திருமொழி - 8.2.9
முள் எயிறு ஏய்ந்தில* கூழை முடிகொடா*
தெள்ளியள் என்பது ஓர்* தேசு இலள் என் செய்கேன்*
கள் அவிழ் சோலைக்* கணபுரம் கை தொழும் பிள்ளையை*
பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?
033. திவ்ய ப்ரபந்தம் - 1667 - பெரிய திருமொழி - 8.2.10
கார் மலி* கண்ணபுரத்து எம் அடிகளை*
பார் மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்*
சீர் மலி பாடல்* இவை பத்தும் வல்லவர்*
நீர் மலி வையத்து* நீடு நிற்பார்களே|
034. திவ்ய ப்ரபந்தம் - 1668 - பெரிய திருமொழி - 8.3.1
கரை எடுத்த சுரி சங்கும்* கன பவளத்து எழு கொடியும்*
திரை எடுத்து வரு புனல் சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்*
விரை எடுத்த துழாய் அலங்கல்* விறல் வரைத் தோள் புடைபெயர*
வரை எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரி வளையே|
035. திவ்ய ப்ரபந்தம் - 1669 - பெரிய திருமொழி - 8.3.2
அரி விரவு முகில் கணத்தால்* அகில் புகையால் வரையோடும்*
தெரிவு அரிய மணி மாடத்* திருக்கண்ணபுரத்து உறையும்*
வரி அரவின் அணைத் துயின்று* மழை மதத்த சிறு தறு கண்*
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு* இழந்தேன் என் கன வளையே|
036. திவ்ய ப்ரபந்தம் - 1670 - பெரிய திருமொழி - 8.3.3
துங்க மா மணி மாட* நெடு முகட்டின் சூலிகை போம்*
திங்கள் மா முகில் துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பைங் கண் மால் விடை அடர்த்துப்* பனி மதி கோள் விடுத்து உகந்த*
செங் கண் மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறி வளையே|
037. திவ்ய ப்ரபந்தம் - 1671 - பெரிய திருமொழி - 8.3.4
கணம் மருவும் மயில் அகவு* கடி பொழில் சூழ் நெடு மறுகின்*
திணம் மருவு கன மதிள் சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்*
மணம் மருவு தோள் ஆய்ச்சி* ஆர்க்க போய் உரலோடும்*
புணர் மருதம் இற நடந்தாற்கு* இழந்தேன் என் பொன் வளையே|
038. திவ்ய ப்ரபந்தம் - 1672 - பெரிய திருமொழி - 8.3.5
வாய் எடுத்த மந்திரத்தால்* அந்தணர் தம் செய் தொழில்கள்*
தீ எடுத்து மறை வளர்க்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
தாய் எடுத்த சிறு கோலுக்கு* உளைந்து ஓடி தயிர் உண்ட*
வாய் துடைத்த மைந்தனுக்கு* இழந்தேன் என் வரி வளையே|
039. திவ்ய ப்ரபந்தம் - 1673 - பெரிய திருமொழி - 8.3.6
மடல் எடுத்த நெடுந் தாழை* மருங்கு எல்லாம் வளர் பவளம்*
திடல் எடுத்து சுடர் இமைக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
அடல் அடர்த்து அன்று இரணியனை* முரண் அழிய அணி உகிரால்*
உடல் எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளி வளையே|
040. திவ்ய ப்ரபந்தம் - 1674 - பெரிய திருமொழி - 8.3.7
வண்டு அமரும் மலர்ப் புன்னை* வரி நீழல் அணி முத்தம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
எண் திசையும் எழு சுடரும்* இரு நிலனும் பெரு விசும்பும்*
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளி வளையே|
041. திவ்ய ப்ரபந்தம் - 1675 - பெரிய திருமொழி - 8.3.8
கொங்கு மலி கருங் குவளை* கண் ஆகத் தெண் கயங்கள்*
செங் கமலம் முகம் அலர்த்தும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
வங்கம் மலி தடங் கடலுள்* வரி அரவின் அணைத் துயின்ற*
செங்கமலநாபனுக்கு* இழந்தேன் என் செறி வளையே|
042. திவ்ய ப்ரபந்தம் - 1676 - பெரிய திருமொழி - 8.3.9
வார் ஆளும் இளங் கொங்கை* நெடும் பணைத் தோள் மடப் பாவை*
சீர் ஆளும் வரை மார்வன்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பேராளன் ஆயிரம் பேர்* ஆயிர வாய் அரவு அணைமேல்*
பேராளர் பெருமானுக்கு* இழந்தேன் என் பெய் வளையே|
043. திவ்ய ப்ரபந்தம் - 1677 - பெரிய திருமொழி - 8.3.10
தே மருவு பொழில் புடை சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை* மறி கடல் சூழ்* வயல் ஆலி வள நாடன்*
காமரு சீர்க் கலிகன்றி* கண்டு உரைத்த தமிழ் மாலை*
நா மருவி இவை பாட* வினை ஆய நண்ணாவே|
044. திவ்ய ப்ரபந்தம் - 1678 - பெரிய திருமொழி - 8.4.1
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலி புகழ் சேர்*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர் முடி மேல்*
வண்ண நறுந் துழாய்* வந்து ஊதாய் கோல் தும்பீ|
045. திவ்ய ப்ரபந்தம் - 1679 - பெரிய திருமொழி - 8.4.2
வேத முதல்வன்* விளங்கு புரி நூலன்*
பாதம் பரவிப்* பலரும் பணிந்து ஏத்தி*
காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம் பெருமான்*
தாது நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
046. திவ்ய ப்ரபந்தம் - 1680 - பெரிய திருமொழி - 8.4.3
விண்ட மலர் எல்லாம்* ஊதி நீ என் பெறுதி?*
அண்ட முதல்வன்* அமரர்கள் எல்லாரும்*
கண்டு வணங்கும்* கண்ணபுரத்து எம் பெருமான்*
வண்டு நறுந் துழாய்* வந்து ஊதாய் கோல் தும்பீ|
047. திவ்ய ப்ரபந்தம் - 1681 - பெரிய திருமொழி - 8.4.4
நீர் மலிகின்றது ஓர்* மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய்*
சீர் மலிகின்றது ஓர்* சிங்க உரு ஆகி*
கார் மலி வண்ணன்* கண்ணபுரத்து எம் பெருமான்*
தார் மலி தண் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
048. திவ்ய ப்ரபந்தம் - 1682 - பெரிய திருமொழி - 8.4.5
ஏர் ஆர் மலர் எல்லாம்* ஊதி நீ என் பெறுதி?*
பார் ஆர் உலகம்* பரவ பெருங் கடலுள்*
கார் ஆமை ஆன* கண்ணபுரத்து எம் பெருமான்*
தார் ஆர் நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
049. திவ்ய ப்ரபந்தம் - 1683 - பெரிய திருமொழி - 8.4.6
மார்வில் திருவன்* வலன் ஏந்து சக்கரத்தன்*
பாரைப் பிளந்த* பரமன் பரஞ்சோதி*
காரில் திகழ்* காயா வண்ணன் கதிர் முடி மேல்*
தாரில் நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
050. திவ்ய ப்ரபந்தம் - 1684 - பெரிய திருமொழி - 8.4.7
வாமனன் கற்கி* மதுசூதன் மாதவன்*
தார் மன்னு* தாசரதி ஆய தடமார்வன்*
காமன் தன் தாதை* கண்ணபுரத்து எம் பெருமான்*
தாம நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்