About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label ஸ்ரீ க்ரிஷ்ணன். Show all posts
Showing posts with label ஸ்ரீ க்ரிஷ்ணன். Show all posts

Sunday, 2 July 2023

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. ப⁴ஜே வ்ரஜைக மண்ட³னம்ʼ ஸமஸ்தபாபக²ண்ட³னம்ʼ
ஸ்வப⁴க்த சித்தரஞ்ஜனம்ʼ ஸதை³வ நந்த³னந்த³னம்|
ஸுபிச்ச²கு³ச்ச²மஸ்தகம்ʼ ஸுனாத³வேணுஹஸ்தகம்ʼ
அனங்க³ரங்க³ஸாக³ரம்ʼ நமாமி க்ருʼஷ்ணனாக³ரம்||

கோகுலத்தின் (வ்ரஜ பூமி) (நந்தகுலத்தின்) சர்வ ஆபரணமாக விளங்கும் கிருஷ்ணா, பக்தர்களின் சகல பாபங்களையும் அழித்து ரட்சிப்பவனே, பக்தர்களின் சித்தத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தி மகிழ்விப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். குழல் கற்றைகள் நெற்றியில் நடனமாட, மயிற்பீலி அசையும் கிரீடத்துடன், கைகளில் இனிய நாதம் எழுப்பும் புல்லாங்குழல் ஏந்தி காட்சி அருளுபவனே, ப்ரேமம் என்னும் காதல் சமுத்திரத்தின் (சாகரம்) உருக் கொண்டவனே, லீலா விநோதங்களால் மகிழ்விக்கும் கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

2. மனோஜக³ர்வமோசனம்ʼ விஸா²லலோலலோசனம்ʼ
விதூ⁴தகோ³பஸோ²சனம்ʼ நமாமி பத்³மலோசனம் |
கராரவிந்த³பூ⁴த⁴ரம்ʼ ஸ்மிதாவலோகஸுந்த³ரம்ʼ
மஹேந்த்³ரமானதா³ரணம்ʼ நமாமி க்ருʼஷ்ணவாரணம்||

மன்மதனின் கர்வத்தை அடக்கியவனே, விசாலமான விழிகளைக் கொண்டவனே, நந்தகோபியர்களின் சோகத்தை அழித்தவனே, தாமரை மலரை ஒத்த நயனங்களைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். கோவர்த்தனகிரியை கரங்களில் தூக்கி விரலில் ஏந்தியவனே, காண்பவர் கவரும் காந்தப்பார்வையும், புன்னகையும் கொண்டவனே, இந்திரனின் கர்வத்தை அழித்தவனே, கஜராஜனின் உருக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

3. கத³ம்ப³ஸூனகுண்ட³லம்ʼ ஸுசாருக³ண்ட³மண்ட³லம்ʼ
வ்ரஜாங்க³னைகவல்லப⁴ம்ʼ நமாமி க்ருʼஷ்ணது³ர்லப⁴ம் |
யஸோ²த³யா ஸமோத³யா ஸகோ³பயா ஸநந்த³யா
யுதம்ʼ ஸுகை²கதா³யகம்ʼ நமாமி கோ³பநாயகம்||

கதம்ப மலரினால் ஆன குண்டலங்களை காதில் அணிந்தவனே, அழகிய கன்னங்களைக் கொண்டவனே, கோகுலத்தில் வாழும் கோபிகைகளின் ப்ரேமையின் தலைவனே, ப்ரேம பக்தியை தவிர வேறெந்த மார்க்கத்தாலும் அடைய முடியாதவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். கோபர்கள், நந்தகோபர் மற்றும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் யசோதாவினால் எக்கணமும் சூழப்பட்டு இருப்பவனே, தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, கோபர்களின் பிரபுவான ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

4. ஸதை³வ பாத³பங்கஜம்ʼ மதீ³ய மானஸே நிஜம்ʼ
த³தா⁴னமுக்தமாலகம்ʼ நமாமி நந்த³பா³லகம் |
ஸமஸ்ததோ³ஷஸோ²ஷணம்ʼ ஸமஸ்தலோகபோஷணம்ʼ
ஸமஸ்தகோ³பமானஸம்ʼ நமாமி நந்த³லாலஸம்||

தன் கமலபாதங்களை பக்தர்களின் சித்தத்தில் (மனஸ் என்னும் சரோவரில்) ஸ்தாபிதம் செய்பவனே, அழகிய சுருண்ட கேசத்தைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். சகல தோஷங்களையும் நீக்குபவனே, அனைத்து லோகங்களையும் காத்து ரட்சிப்பவனே, கோகுலத்தின் கோபர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவனே, நந்தகோபனின் மைந்தனான சிவப்பு நிற திருமேனியையுடைய ஸ்ரீ கிருஷ்ண சந்த்ரா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

5. பு⁴வோ ப⁴ராவதாரகம்ʼ ப⁴வாப்³தி⁴கர்ணதா⁴ரகம்ʼ
யஸோ²மதீகிஸோ²ரகம்ʼ நமாமி சித்தசோரகம் |
த்³ருʼக³ந்தகாந்தப⁴ங்கி³னம்ʼ ஸதா³ ஸதா³லிஸங்கி³னம்ʼ
தி³னே தி³னே நவம்ʼ நவம்ʼ நமாமி நந்த³ஸம்ப⁴வம்||

கணக்கில்லா அரக்கர்களையும், தீயசக்திகளையும் அழித்து புவியின் பாரத்தை குறைப்பவனே, துக்கமயமான சம்சார சாகரத்தை கடக்க உதவுபவனே, யசோதையின் மைந்தனான நீ, அனைவரின் உள்ளங்களையும் கவருகின்றாய். உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். அருள் கடாக்ஷத்தை பொழியும் கவர்ச்சியான கண்களை கொண்டவனே, திவ்யமான தோழர்களால் (புனித பக்தர்களால்) சதா சூழப்பட்டு இருப்பவனே, நித்தம் நூதனமான லீலா விநோதங்களை நடத்தும் நந்தகுமாரா, (என்றும் புதிதாகத் தோன்றும் பரம்பொருளே!) ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

6. கு³ணாகரம்ʼ ஸுகா²கரம்ʼ க்ருʼபாகரம்ʼ க்ருʼபாபரம்ʼ
ஸுரத்³விஷன்னிகந்த³னம்ʼ நமாமி கோ³பனந்த³னம் |
நவீனகோ³பனாக³ரம்ʼ நவீனகேலிலம்படம்ʼ
நமாமி மேக⁴ஸுந்த³ரம்ʼ தடி³த்ப்ரபா⁴லஸத்படம்||

நற்குணங்கள், ஆனந்தம், கருணை இவற்றின் களஞ்சியமாக விளங்குபவனே, தேவர்களின் எதிரிகளை அழித்து கோபர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். நித்தம் குறும்புத்தனமான லீலைகளை நூதனமாக புரிபவனே, லீலா விநோதங்களின் விளைவுகளில் மகிழ்ச்சி கொள்ளும் இடையர் தலைவனே, கருமேக நிறத்தை கொண்ட உள்ளம் கவர் அழகிய கள்வனே, மின்னல் ஒளியை போல் ஜொலிக்கும் மஞ்சள் பட்டு பீதாம்பரத்தை அணிந்தவனே, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

7. ஸமஸ்தகோ³பனந்த³னம்ʼ ஹ்ருʼதாம்பு³ஜைகமோத³னம்ʼ
நமாமி குஞ்ஜமத்⁴யக³ம்ʼ ப்ரஸன்னபா⁴னுஸோ²ப⁴னம் |
நிகாமகாமதா³யகம்ʼ த்³ருʼக³ந்தசாருஸாயகம்ʼ
ரஸாலவேணுகா³யகம்ʼ நமாமி குஞ்ஜனாயகம்||

கோகுலத்தின் கோபியர் அனைவருக்கும் ஆனந்தம் அளிப்பவனே, பக்தர்களின் இதயக்கமலத்தை ஆனந்தத்தால் மலரச் செய்பவனே, உலகுக்கு ஒளியூட்டும் சூரியனைப் போன்று பிரகாசத்துடன், கவரும் புன்னகையுடன் தோன்றுபவனே, பிருந்தாவனம் என்னும் தோப்பின் மத்தியில் கோபியருடன் நடனமாடும் பிருந்தாவன கிருஷ்ணா, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். பக்தர்களின் ஆசைகளை முற்றிலும் நிறைவேற்றுபவனே, அம்பை ஒத்த, பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய பார்வையை கொண்டவனே, இனிய, மதுரமான கானத்தை புல்லாங்குழலில் இசைப்பவனே, ஸ்ரீகிருஷ்ணா, பிருந்தாவன நாயகா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

8. வித³க்³த⁴கோ³பிகாமனோமனோஜ்ஞதல்பஸா²யினம்ʼ
நமாமி குஞ்ஜகானனே ப்ரவ்ரத்³த⁴வன்ஹிபாயினம் |
கிஸோ²ரகாந்திரஞ்ஜிதம்ʼ த்³ருʼக³ஞ்ஜனம்ʼ ஸுஸோ²பி⁴தம்ʼ
க³ஜேந்த்³ரமோக்ஷகாரிணம்ʼ நமாமி ஸ்ரீவிஹாரிணம்||

நின்னை எக்கணமும் நினைத்து உருகும் சாதுர்யமான (புத்திசாலித்தனமான) கோபிகைகளின் மனதின் மென்மையான படுக்கையின் மீது உறங்குபவனே, பிருந்தாவனத்தில் (குஞ்ச்வன் - கொடிகளும், மரங்களும் நிறைந்த தோப்பு) கொழுந்து விட்டெரியும் அக்னியை (தாவானல்) விழுங்கி கோபர்களை காப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். பிள்ளைப்பருவ கவர்ச்சிகரமான தோற்றத்தில் ஜொலிக்கும் ஒளி நிரம்பிய விழிகளை உடையவனே, அந்த விழிகளுக்கு மை (அஞ்சனம்) மேலும் அழகு ஊட்டுகிறது. கஜேந்திரன் என்னும் கஜராஜனை முதலையின் பிடியில் இருந்து விடுவித்ததோடு மோட்சமும் அளித்தவனே, ஸ்ரீ என்னும் மஹாலட்சுமியின் மணாளா, கிருஷ்ணசந்த்ரா, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

9. யதா³ ததா³ யதா² ததா² ததை²வ க்ருʼஷ்ணஸத்கதா²
மயா ஸதை³வ கீ³யதாம்ʼ ததா² க்ருʼபா விதீ⁴யதாம் |
ப்ரமாணிகாஷ்டகத்³வயம்ʼ ஜபத்யதீ⁴த்ய ய​: புமான்
ப⁴வேத்ஸ நந்த³னந்த³னே ப⁴வே ப⁴வே ஸுப⁴க்திமான்||

என் மீது உங்கள் கருணை என்றும் நிலைத்து இருக்க அருள் புரியுங்கள். நான் எந்நிலையில் இருப்பினும், தங்களின் லீலா விநோதங்களின் புகழை எப்போதும் பாடிக் கொண்டிருக்க என்னை ஆசீர்வதியுங்கள். எவர் ஒருவர் இந்த ஸ்ரீகிருஷ்ண அஷ்டகத்தை பாராயணம் அல்லது ஜபம் செய்கிறாரோ, அவர் தன் அனைத்துப் பிறப்புகளிலும், கிருஷ்ணனின் மீது பக்தியுடன் பிறப்பர்.

||இதி ஸ்ரீமச் ச²ங்கராசார்ய க்ருʼதம்ʼ ஸ்ரீக்ருஷ்ணாஷ்டகம் ஸம்பூர்ணம்||
|| ஸ்ரீ க்ருʼஷ்ணார்பணமஸ்து||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

Sunday, 10 April 2022

ஸ்ரீ மதுராஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம்|
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • அத⁴ரம் - உதடு
  • மது⁴ரம் - இனிமையானது
  • வத³னம் - முகம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • நயனம் - கண்கள்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஹஸிதம் - சிரிப்பு, புன்னகை
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஹ்ருத³யம் - இதயம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • க³மனம் - நடை, அசைவு
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதே - இனிமைக்கு அதிபதி, மதுராவின் அரசன்
  • அகி²லம் - அனைத்தும், முழுமையும்
  • மது⁴ரம் - இனிமையானது 

மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.

2. வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம்|
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.

3. வேணுர் மது⁴ரோ ரேணுர் மது⁴ர꞉
பாணிர் மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ|
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

உனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.

4. கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம்|
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

உனது பாடல் அழகு. உன் பட்டாடை அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப் பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு..

5. கரணம் மது⁴ரம் தரணம் மது⁴ரம்
ஹரணம் மது⁴ரம் ஸ்மரணம் மது⁴ரம்|
வமிதம் மது⁴ரம் ஷமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

உனது குறும்பு செயல்கள் அழகு. நீ எதையும் கடந்து நிற்பது அழகு. பக்தர்களின் மனதை அபகரிப்பது அழகு. உன்னைப்பற்றி நினைப்பதே இனிமையானது. அணி அழகு, தோற்றம் அழகு, மதுராபுரியரசே, யாவும் நீயாக இருப்பதால் இவ்வுலகமே அழகானது.

6. கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா|
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

கதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. யமுனை நீர் அழகு. தாமரை மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.

7. கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம்|
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

தோழியர் அழகு, கொண்டாட்டம் அழகு, கூடல் அழகு, சிஷ்ட பரிபாலனம் அழகு, பார்வை அழகு, பாவனை அழகு, மதுராதிபனே சகலமும் நீயே என்பதால் அகிலமே அழகு.

8. கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர் மது⁴ரா ஸ்ருஷ்டிர் மது⁴ரா|
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

ஆயர் அழகு. பசுக்கள் அழகு, செண்டை அழகு, பிறவி அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.

||இதி ஸ்ரீ மதுராஷ்டகம் சம்பூர்ணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

Saturday, 9 April 2022

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. அந்த வகையில் ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். 

1. வஸுதே³வ ஸுதம் தே³வம் 
கம்ஸ சாணூர மர்த³னம்|
தே³வகீ பரமானந்த³ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • வஸுதே³வ ஸுதம் – வசுதேவரின் குமாரனும், மகனும் 
  • தே³வம்  – ஒளிமயமான இறைவனும்
  • கம்ஸ சாணூர மர்த³னம் – கம்சன், சாணூரன் ஆகிய அரக்கர்களை அழித்தவரும்
  • தே³வகீ பரமானந்த³ம் – தாய் தேவகிக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருபவரும்
  • க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாகிய

  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

2. அதஸீ புஷ்ப ஸங்காஸ²ம், 
ஹார நூபுர ஸோ²பிதம்|  
ரத்ன கங்கண கேயூரம் 
க்ருஷ்ணம் வந்தே³ஜக³த்³ கு³ரும்||

  • அதஸீ புஷ்ப – காயாம்பூ
  • ஸங்காஸ²ம் – போன்ற நிறம், ஒளி உடையவனை
  • ஹார – முத்து மாலைகள், கழுத்து மாலைகளாலும்
  • நூபுர – காலில் அணியும் சிலம்புகள், தண்டைகளாலும்
  • ஸோ²பிதம்  – அழகாக விளங்குபவனை, பிரகாசிப்பவனை
  • ரத்ன – நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட
  • கங்கண – கைகளில் அணியும் வளையல்களையும், காப்பு
  • கேயூரம் – தோள்களில் அணியும் தோள் வளைகளையும் பூண்டவனை
  • க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்

  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

3. குடிலாலக ஸம்யுக்தம் 
பூர்ண சந்த்³ர நிபா⁴னனம்| 
விலஸத் குண்ட³ல த⁴ரம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • குடில அலக - சுருட்டைத் தலை முடியுடன்
  • ஸம்யுக்தம் - கூடிய அழகு பொருந்தியவனை
  • பூர்ண சந்த்³ர - முழு நிலவைப் போன்ற
  • நிப⁴ ஆநநம் - ஒளிரும் திருமுகத்தை உடையவனை
  • விலஸத் - பளீர் என ஒளி வீசும், பிரகாசிக்கும்
  • குண்ட³ல - காதணிகளை
  • த⁴ரம் - தரித்திருப்பவனை, அணிந்திருப்பவனை
  • க்ருஷ்ணம் - கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்

  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

4. மந்தா³ர க³ந்த⁴ ஸம்யுக்தம் 
சாரு ஹாஸம் சதுர் பு⁴ஜம்|
ப³ர்ஹி பிஞ்சா²வ சூடா³ங்க³ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • மந்தா³ர - மந்தாரை மலர்களின்
  • க³ந்த⁴ - நறுமணத்தை
  • ஸம்யுக்தம் - கொண்டிருப்பவரை
  • சாரு - அழகான, கொள்ளை கொள்ளும்
  • ஹாஸம் - புன்னகையை உடையவரை
  • சதுர் - நான்கு
  • பு⁴ஜம் - தோள்களை, கரங்களை உடையவரை
  • ப³ர்ஹி - மயிலின்
  • பிஞ்சா² - தோகையை
  • அவசூடா³ - தலையில் சூடிய முடிக்கு
  • அங்க³ம் - ஆபரணமாகக் கொண்டவரை
  • க்ருஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ணரை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

5. உத்பு²ல்ல பத்³ம பத்ராக்ஷம் 
நீல ஜீமூத ஸன்னிப⁴ம்|
யாத³வானாம் ஸி²ரோரத்னம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • உத்பு²ல்ல – மலர்ந்த, விரிந்த
  • பத்³ம – தாமரை
  • பத்ர – இதழ்
  • அக்ஷம் – கண்களை உடையவரை
  • நீல – நீல நிறமுள்ள
  • ஜீமூத – மேகத்திற்கு
  • ஸன்னிப⁴ம் – ஒப்பானவரை, சமமானவரை
  • யாதவா³னாம் – யாதவ குலத்தில் பிறந்தவர்களுள்
  • ஸி²ரோ ரத்னம் – தலையாய ரத்தினம் போன்றவரை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

கு³ரும் - குருவாக இருப்பவரைமலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

6. ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் 
பீதாம்ப³ர ஸுஸோ²பி⁴தம்|
அவாப்த துலஸீ க³ந்த⁴ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • ருக்மிணீ - ருக்மிணியுடன்
  • கேளி - லீலைகள், விளையாட்டுகளில்
  • ஸம்யுக்தம் - இணைந்திருப்பவரை
  • பீதாம்ப³ர - மஞ்சள் நிற ஆடையும்
  • ஸுஸோ²பி⁴தம் - மிக அழகாக விளங்குபவரை
  • அவாப்த - பெற்ற, கொண்டிருப்பவரை
  • துலஸீ - துளசியின்
  • க³ந்த⁴ம் - நறுமணத்தை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

7. கோ³பிகானாம் குசத்³ வந்த³ 
குங்குமாங்கித வக்ஷஸம்|
ஶ்ரீநிகேதம் மஹேஷ் வாஸம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • கோ³பிகானாம் - கோபிகைகளின், ஆயர்பாடி பெண்களின்
  • குசத்³ வந்த³ - இரு தனங்களில், மார்பகங்களில் பூசப்பட்ட
  • குங்கும அங்கித - குங்குமக் குழம்பின் சுவடுகள் பதிந்த
  • வக்ஷஸம் - மார்பினை உடையவரை
  • ஶ்ரீநிகேதம் - மஹாலக்ஷ்மி தேவியின் நிரந்தர இருப்பிடமாக விளங்குபவரை
  • மஹேஷ் வாஸம் - சிறந்த வில்லாளியை, மஹா விஷ்ணுவின் பிரகாசமான வடிவத்தைக் கொண்டவரை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

8. ஶ்ரீவத் ஸாங்கம் மஹோரஸ்கம் 
வனமாலா விராஜிதம்|
ஸ²ங்க² சக்ர த⁴ரம் தே³வம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • ஶ்ரீ வத்ஸ அங்கம் - ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவை, அடையாளத்தை உடலில் கொண்டவர்
  • மஹா உரஸ்கம் - பரந்த, விசாலமான மார்பை உடையவர்
  • வனமாலா - காட்டு மலர்களால் ஆன மாலையினால், வைஜயந்தி மாலையினால்
  • விராஜிதம் - பிரகாசிப்பவர், அழகுடன் விளங்குபவர்
  • ஸ²ங்க - பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும்
  • சக்ர - சுதர்சனம் என்னும் சக்கரத்தையும்
  • த⁴ரம் - கைகளில் ஏந்தியிருப்பவர்
  • தே³வம் - தெய்வீக ஒளி பொருந்திய இறைவனை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

பலச்ருதி 

9. க்ருஷ்ணாஷ்டக மித³ம் புண்யம் 
ப்ராத ருத்தா²ய ய: படே²த்|
கோடி ஜன்ம க்ருதம் பாபம் 
ஸ்மரணேன வினஸ்²யதி||

  • க்ருஷ்ணாஷ்டகம் - கிருஷ்ணனைப் போற்றும் இந்த எட்டு ஸ்லோகங்கள் கொண்ட ஸ்லோகத்தை
  • இ³தம் - இந்த 
  • புண்யம் - புண்ணியத்தைத் தரக்கூடிய, தூய்மையான
  • ப்ராதஹ் - அதிகாலை வேளையில்
  • உத்தா²ய - படுக்கையிலிருந்து எழுந்து
  • யஹ் - எவர் ஒருவர்
  • படே²த் - படிக்கிறாரோ, பாராயணம் செய்கிறாரோ
  • கோடி - கோடி
  • ஜன்ம - பிறவிகளில்
  • க்ருதம் - செய்யப்பட்ட
  • பாபம் - பாவங்கள் அனைத்தும்
  • ஸ்மரணேன - இறைவனை நினைப்பதன் மூலமே
  • வினஸ்²யதி - அழிகிறது, நசித்துப் போகிறது

எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!

||இதி ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

Tuesday, 5 April 2022

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. அச்யுதம் கேஸவம் ராமநாராயணம் 
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம் 
ஜானகீ நாயகம் ராமச்சந்த்ரம் பஜேll

பக்தர்களை என்றும் காத்தருள்பவனே, அவர்களுடைய மனக்கவலையைப் போக்குகின்றவனே, யோகிகளால் வியந்து போற்றத்தக்கவனே,  என்றென்றும் பக்தர்களின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவனே, பக்தர்கள் மனதை ஈர்க்கும் தாமோதரனே, நமஸ்காரம். வாசுதேவருக்கு புத்திரனாக  அவதரித்தவனே, எல்லாவகை துக்கங்களையும் இல்லாது செய்பவனே, மஹாலக்ஷ்மியை மார்பில் தரித்திருப்பவனே, மஹாலக்ஷ்மிக்கு நாயகனாகவும்,  கோபிகைகளுக்கு நாதனாகவும் விளங்குபவனே நமஸ்காரம். ஜானகியின் துணைவனான ராமச்சந்திர மூர்த்தியே நமஸ்காரம். 

2. அச்யுதம் கேஸவம் ஸத்யபாமாதவம் 
மாதவம் ஸ்ரீதரம் ராதிகாராதிதம்
இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம் 
தேவகீநந்தனம் நந்தஜம் ஸந்ததேll

அழிவற்றவனே, மனத் துயரங்களைப் போக்குபவனே, சத்யபாமாவின் நாயகனே, மஹாலக்ஷ்மியை இதயத்தில் ஏற்றுக்கொண்ட அவளது பதியே, ராதையினால்  பூஜிக்கப்பட்டவனே, மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடம் அளித்தவனே, அழகுக்கே அழகு செய்பவனே, தேவகியின் மைந்தனே, நந் தகோபரின் பிள்ளையே, ஸ்ரீகோபாலா  உம்மை மனதால் தியானம் செய்து நமஸ்கரிக்கிறேன்.

3. விஷ்ணவே ஜிஷ்ணவே ஸங்கினே சக்ரிணே 
ருக்மிணீராகிணே ஜானகீஜானயே
வல்லவீ  வல்லபா யார்ச்சிதா யாத்மனே 
கம்ஸவித்வம்ஸினே வம்ஸினே தே நமஹll

எங்கும் வியாபித்திருப்பவனே, வெற்றி வீரனே, சங்கைத் தரித்தவனே, சக்ராயுதம் ஏந்தினவனே, ருக்மிணியின் நாயகனே, கோபிகைகளுக்குப் பிரியமானவனே,  பக்தர்களால் அர்ச்சிக்கப்படுபவனே, உலகிற்கே ஆத்மாவானவனே, கம்ஸனை அழித்தவனே, வேணுகானம் இசைப்பவனே கிருஷ்ணா நமஸ்காரம். ஜானகியின்  நாயகனே ராமச்சந்திர மூர்த்தியே நமஸ்காரம்.

4. க்ருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயண 
ஸ்ரீபதே வாஸுதேவாஜித ஸ்ரீநிதே
அச்யுதானந்த ஹே மாதவாதோக்ஷஜ 
த்வாரகாநாயக த்ரௌபதீரக்ஷகll

ஹரே கிருஷ்ணா, வேதங்களால் அறியத் தகுந்தவனே, ஹரே ராமா, பகவான் நாராயணா, ஸ்ரீபதியே, ஓ வாசுதேவனே, யாராலும் வெற்றிகொள்ள முடியாதவனே,  அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியே, அச்யுதா, அனந்தா, ஹே மாதவா, திவ்யஞானப் பிரகாசனே, து வாரகாநாதனே, திரௌபதியைக் காத்தவனே உனக்கு  நமஸ்காரம்.

5. ராக்ஷஸக்ஷோபித: ஸீதயா ஸோபிதோ 
தண்டகாரண்யபூ புண்யதாகாரண:
லக்ஷ்மணோனான்விதோ வானரை: 
ஸேவிதோ: கஸ்த்யஸம்பூஜிதோ ராகவll

பாதுமாம் விஸ்வாமித்திரரின் யாகத்துக்கு இடையூறு விளைவித்த அரக்கர்களைக் கலங்கடித்தவனே, சீதையின் நாயகனாகப் பரிமளிப்பவனே, தன் வருகையால்  தண்டகாரண்ய பூமியையே பரிசுத்தமாக்கியவனே, என்றும் லக்ஷ்மணனின் சேவையை அனுபவிப்பவனே, வானரர்களால் கொண் டாடப்பட்டவனே, அகஸ்தியரால்  பூஜிக்கப்பட்டவனே, ஸ்ரீராமா, நமஸ்காரம். என்னைக் காத்தருள்வாய் பரம்பொருளே.

6. தேனுகாரிஷ்டகோ நிஷ்டக்ருத் த்வேஷிணாம் 
கேஸிகா கம்ஸஹ்ருத்வம்ஸிகா வாதக
பூதனாகோபக ஸூரஜாகேலனோ 
பாலகோபாலக: பாதுமாம் ஸர்வதா ll

தேனுகாசுரனை அழித்தவனே, எதிரிகளை கலங்கச் செய்து சிதறடித்தவனே, கேசி என்ற அரக்கனை அடிபணிய வைத்தவனே, கம்ஸனை வதம் செய்தவனே,  வேணுகானம் செய்து எல்லோர் மனதையும் மயக்கி ஈர்க்கின்றவனே, பூதனையைக் கோபமுறச் செய்து லீலை புரிந்தவனே, யமுனையில் விளையாடி  மகிழ்கின்றவனே, பாலகோபாலனே, நமஸ்காரம். எப்பொழுதும் என்னைக் காத்தருள்வாய் பரம்பொருளே.  

7. வித்யுதுத்யோதவத் ப்ரஸ்புரத்வாஸஸம் 
ப்ராவ்ருடம் போதவத் ப்ரோல்லஸத்விக்ரஹம்
வன்யயா மாலயா ஸோபிதோரஸ்தலம் 
லோஹிதாங்க்ரித்வயம் வாரிஜாக்ஷம் பஜேll

மின்னலின் ஒளிபோல் பிரகாசிக்கும் பீதாம் பரத்தை அணிந்தவனே, மழைகாலத்து மேகம் போல் கம்பீரமான சரீரம் கொண்டவனே, வன மாலையால் ஒளிசிந்தும்  திருமார்புடையவனே, சிவந்த பாதங்களையுடையவனே, செந்தாமரைக் கண்ணா, நமஸ்காரம். 

8. குஞ்சிதை: குந்தலைர் பாஜமானானனம் 
ரத்ன மௌளிம் லஸத்குண்டலம் கண்டயோ:
ஹாரகேயூரகம் கங்கணப் ப்ரோஜ்வலம் 
கிங்கிணீமஞ்சுளம் ஸ்யாமளம் தம் பஜேll

சுருண்ட கேசம் அணிசெய்யும் மந்தஹாச முகமுடையவனே, ஒளிவீசும் ரத்னமயமான கிரீடம் தரித்தவனே, கன்னங்களில் இழையோடி பிரகாசிக்கின்ற  குண்டலங்கள் தரித்தவனே, ஹாரம், தோள்வளை ஆகிய அணிகலன்களைச் சூடியவனே, கங்கணங்கள் ஜொலிக்கத் திகழ்பவனே, இடுப்பில் சிறுசிறு மணிகள்  தரித்து அழகு பொலிந்தவனே, ச்யாமளா, கோபாலா, நமஸ்காரம்.

பலச்ருதி

9. அச்யுதஸ்யாஷ்டகம் ய: படேதிஷ்டதம் 
ப்ரேமத: ப்ரத்யஹம் பூருஷ: ஸஸ்ப்ருஹம்
வ்ருத்தத: ஸுந்தரம் கர்த்ரு விஸ்வம்பரம் 
தஸ்யவஸ்யோ ஹரிர்ஜாயதே ஸத்வரம்ll 

இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரம் வேண்டிய வற்றை வேண்டியபடியே கொடுக்கும் மகிமை வாய்ந்தது. அழகிய விருத்தம் கொண்டது. உலக த்தையே காக்கும்  வல்லமை படைத்தது. இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் யார் தினமும் படிக்கிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீமன்நாராயணன் விரைவில்  திருவருள் புரிந்து சகல மங்களங்களையும் அருள்வார்.

||இதி ஸ்ரீ அச்யுதாஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||