||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திரி பு⁴வந கமநீய ரூப மீத்³யம்
ரவி ஸ²த பா⁴ஸுர மீஹித: ப்ரதா³நம்|
ஸ²ர நாத³ மநிஸ²ம் ஸூராக³ மூலே
க்ருத நிலயம் ரகு⁴ நந்த³நம் ப்ரபத்³யே||
- திரி - மூன்று
- பு⁴வந - உலகங்கள்
- கமநீய - அழகான, கவர்ச்சியான
- ரூபம் - திருமேனி, உருவம்
- ஈத்³யம் - துதிக்கத் தகுந்தவர்
- ரவி - சூரியன்
- ஸ²த - நூறு
- பாஸுரம் - ஒளி வீசுகின்ற
- ஈஹித - விரும்பிய
- ப்ரதா³நம் - வழங்குபவர்
- ஸ²ர நாத³ - சரணடைந்தவர்களுக்கு
- அநிஸ²ம் - எப்பொழுதும்
- ஸூராக³ - தேவர்கள், சான்றோர்
- மூலே - அடியில்
- க்ருத - செய்த
- நிலயம் - இருப்பிடம்
- ரகு⁴ நந்த³நம் - ரகு குலத்தின் மகிழ்ச்சி, இராமர்
- ப்ரபத்³யே - சரணடைகிறேன்
மூன்று உலகங்களையும் கவரும் அழகிய திருமேனியைக் கொண்டவரும், தியானிக்கப்பட வேண்டியவரும், நூறு சூரியர்களைப் போன்ற பிரகாசமுடையவரும், தம்மை நாடுவோர் விரும்பியவற்றை அருளுபவரும், எப்பொழுதும் சரணடைந்தவர்களுக்கு அருள் புரிபவருமான ரகுநந்தனாகிய இராமரிடம் நான் சரணடைகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
