About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 2 பகவத் கீதை த்யான ஸ்லோகம். Show all posts
Showing posts with label 2 பகவத் கீதை த்யான ஸ்லோகம். Show all posts

Thursday, 10 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 9

யம் ப்³ரம்ஹா வருணேந்த்³ர ருத்³ர மருதஸ், 
ஸ்துன் வந்தி தி³வ்யைஸ் ஸ்தவைஹி
வேதை³ஸ் ஸாங்க³ பத³ க்ரமோப நிஷதை³ர், 
கா³யந்தி யம் ஸாம கா³ஹ|
த்⁴யானா வஸ்தி² ததத்³ க³தேன மனஸா, 
பஷ்யந்தி யம் யோகி³ னஹ
யஸ் யாந்தம் ந விது³ஸ் ஸுரா ஸுர க³ணாஹ, 
தே³வாய தஸ்மை நமஹ|| 

  • யம் - எவரை
  • ப்³ரம்ஹா - பிரம்மன்
  • வருண இந்த்³ர ருத்³ர மருதஸ் - வருணன், இந்திரன், ருத்ரன் (சிவன்), மற்றும் மருத்துகள், தேவதைகள் 
  • ஸ்துன்வந்தி - துதிக்கிறார்களோ 
  • தி³வ்யைஸ் ஸ்தவைஹி - தெய்வீகமான துதிகளால் 
  • வேதை³ஸ் - வேதங்களாலும்
  • ஸ அங்க³ - வேதங்களின் ஆறு அங்கங்களோடும்
  • பத³ க்ரம உபநிஷதை³ர் - பத பாடம், க்ரம பாடம் மற்றும் உபநிஷத்துகளுடனும்
  • கா³யந்தி - பாடுகிறார்களோ
  • யம் - எவரை
  • ஸாம கா³ஹ - சாம வேதம் பாடுபவர்கள் 
  • த்⁴யான அவஸ்தி²த - தியான நிலையில் நிலைபெற்ற
  • தத் க³தேன - அவரிடத்தில் (இறைவனிடத்தில்) லயித்த
  • மனஸா - மனதால்
  • பஷ்யந்தி - காண்கிறார்களோ 
  • யம் - எவரை
  • யோகி³னஹ - யோகிகள்
  • யஸ்ய அந்தம் - எவருடைய எல்லையை, முடிவை 
  • ந விது³ஸ் - அறிய மாட்டார்களோ 
  • ஸுர அஸுர க³ணாஹ - தேவர்களும் அசுரர்களும் ஆகிய கூட்டத்தினர்
  • தே³வாய தஸ்மை - அந்த சுய பிரகாசமிக்க இறைவனுக்கு
  • நமஹ - நமஸ்காரம், வணக்கம் 

பிரம்மன், வருணன், இந்திரன், சிவன் மற்றும் தேவதைகள் எவரை தெய்வீகத் துதிகளால் போற்றுகிறார்களோ; சாம வேத கானம் பாடுபவர்கள் எவரை வேதாங்கங்கள், பதமுறை, கிரமமுறை மற்றும் உபநிஷத்துகளுடன் கூடி வேதங்கள் வாயிலாகப் பாடுகிறார்களோ; யோகிகள் தியானத்தில் நிலைத்து நின்று, எவரைத் தங்கள் ஒருமுகப்பட்ட மனதால் தரிசிக்கிறார்களோ; தேவர்களாலும் அசுரக் கூட்டங்களாலும் எவருடைய ஆதியும் அந்தமும் ஆகிய எல்லையை அறிய முடியவில்லையோ; அந்தப் பரம்பொருளாகிய பகவானுக்கு என் நமஸ்காரம்.

கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: 
ஸாஸ்த்ர ஸங்க் ரஹைஹி|
யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய, 
முகபத் மாத் விநி:ஸ்ருதா||

  • கீதா - பகவத் கீதை
  • ஸுகீதா - நன்றாகப் பாடப்பட, படிக்கப்பட
  • கர்தவ்யா - வேண்டியது கடமையாகும்
  • கிம் - என்ன பயன்?
  • அந்யையை - மற்ற பிற 
  • ஸாஸ்த்ர ஸங்க்ரஹைஹி = சாஸ்திரங்களின் தொகுப்புகளால், விரிவான நூல்களால்
  • யா - எது, எந்த ஒரு கீதை
  • ஸ்வயம் - நேரடியாக, தானாகவே
  • பத்ம நாபஸ்ய - தாமரையைத் தொப்புளில் உடைய மகாவிஷ்ணுவின் 
  • முக பத்மாத் - தாமரை போன்ற திருமுகத்திலிருந்து
  • விநிஸ் ஸ்ருதா -வெளி வந்ததோ

மகாவிஷ்ணுவின் (ஸ்ரீ கிருஷ்ணரின்) தாமரை போன்ற திருமுகத்திலிருந்து நேரடியாக வெளி வந்த பகவத் கீதையை மட்டும் நன்றாகவும் முறையாகவும் படித்தால் போதுமானது. அவ்வாறு இருக்கும் போது, மற்ற விரிவான சாஸ்திரங்களின் தொகுப்புகளைப் படிப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது? (அதாவது, கீதை ஒன்றே அனைத்து சாஸ்திரங்களின் சாரமாகும்)

ஸ்ரீ கீ³தா பூர்ண ஸ்லோகம்
பூர்ண மதஹ் பூர்ண மிதம், 
பூர்ணாத் பூர்ண முதச்யதே, 
பூர்ணஸ்ய பூர்ண மாதாய,
பூர்ண மேவ அவ சிஷ்யதே, 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!

  • பூர்ணம் - முழுமையானது, எல்லையற்றது (பிரம்மம்)
  • அதா - அது கண்ணுக்குப் புலப்படாத பரமாத்மா உலகம்
  • பூர்ணம் - முழுமையானது
  • இதம் - இது கண்ணுக்குப் புலப்படும் ஜீவாத்மா, பிரபஞ்ச உலகம்
  • பூர்ணாத் - அந்த முழுமையிலிருந்து
  • பூர்ணம் - இந்த முழுமையான பிரபஞ்சம்
  • உதச்யதே - வெளிப்படுகிறது, தோன்றுகிறது
  • பூர்ணஸ்ய -அந்த முழுமையின், இறைவனின் 
  • பூர்ணம் - முழுமையை
  • ஆதாய - எடுத்த பிறகும், நீக்கிய பின்பும்
  • பூர்ணம் ஏவ - முழுமை மட்டுமே
  • அவசிஷ்யதே - எஞ்சியிருக்கிறது
  • ஓம் - பிரணவ மந்திரம்
  • சாந்தி - அமைதி (உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் அமைதி நிலவட்டும்)

அந்தப் பரம்பொருளும் முழுமையானது; அவரிடமிருந்து தோன்றிய இந்த பிரபஞ்சமும் முழுமையானது. முழுமையிலிருந்து முழுமை தோன்றினாலும், அந்த மூல முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பிறகும், அது எக்காலத்திலும் குறையாமல் முழுமையாகவே எஞ்சியிருக்கும். (இதனை ஆன்மீகக் கணிதம் என்று கூறுவர்: முழுமை - முழுமை = முழுமை) 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 8

மூகம் கரோதி வாசாலம் 
பங்கு³ம் லங்க⁴யதே கி³ரிம்|
யத் க்ருபா தமஹம் வந்தே³ 
பரமானந்த³ மாத⁴வம்||

  • மூகம் - வாய் பேசாதவரை
  • கரோதி  - செய்கிறது, மாற்றுகிறது
  • வாசாலம்  - சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவராக
  • பங்கு³ம் - நடக்க முடியாதவரை 
  • லங்க⁴யதே - கடக்க வைக்கிறது, தாண்ட வைக்கிறது
  • கி³ரிம்  - மலையை
  • யத் க்ருபா - யாருடைய கருணையானது, அருளானது 
  • தம் அஹம் - அவரை நான் 
  • வந்தே³  - வணங்குகிறேன், போற்றுகிறேன்
  • பரமானந்த³ - எல்லையற்ற ஆனந்த வடிவமாக இருக்கும்
  • மாத⁴வம் - அந்த மாதவனை, ஸ்ரீ கிருஷ்ணரை 

யாருடைய கருணையானது, வாய் பேச முடியாதவனையும் சரளமாகப் பேச வைக்கிறதோ; நடக்க முடியாதவனையும் உயர்ந்த மலையைக் கடக்க வைக்கிறதோ; அந்த எல்லையற்ற ஆனந்த வடிவமாக இருக்கும் மாதவனை (ஸ்ரீ கிருஷ்ணரை) நான் மனதார வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Wednesday, 9 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 7

பாரா ஸ²ர்ய வச: ஸரோஜம் அமலம் 
கீ³தார்த² க³ந்தோ⁴த் கடம் 
நாநாக்²யாநக கேஸரம் ஹரி கதா² 
ஸம்போ³த⁴ன போ³தி⁴ தம்| 
லோகே ஸஜ்ஜன ஷட்பதை³ அஹரஹ: 
பேபீய மானம் முதா³ 
பூ⁴யாத்³  பா⁴ரத பங்கஜம் கலி மல 
ப்⁴ரத் வம்ஸி ந: ஸ்ரேயஸே||

  • பாரா ஸ²ர்ய – பராசர முனிவரின் குமாரனாகிய வேத வியாசரின்
  • வசஸ் – வார்த்தைகளிலிருந்து தோன்றிய 
  • ஸரோஜம்  – தாமரை மலரே!
  • அமலம் – அழுக்கற்ற, பரிசுத்தமான 
  • கீ³தார்த² – பகவத் கீதையின் தத்துவங்களாகிய 
  • க³ந்த⁴ – நறுமணம் 
  • உத்கடம் – மிகுதியாகக் கொண்ட, நிறைந்த 
  • நாநா – பலவிதமான
  • ஆக்²யாநக – துணைக் கதைகள், வரலாற்றுச் சம்பவங்கள் என்னும்
  • கேஸரம் – மகரந்தக் கேசரங்களை உடைய
  • ஹரி கதா² – ஸ்ரீஹரியின் (மகாவிஷ்ணுவின்) திவ்ய சரித்திரங்களை
  • ஸம்போ³த⁴ன – உபதேசிப்பதன் மூலம்
  • போ³தி⁴ தம் – மலரச் செய்யப்பட்டது 
  • லோகே – இந்த உலகத்தில்
  • ஸஜ்ஜன – நல்லோர்கள், சாதுக்கள் என்னும்
  • ஷட்பதை³ர் – ஆறு கால்களை உடைய வண்டுகளால்
  • அஹரஹஹ  – நாள்தோறும், தினமும்
  • பேபீய மானம் – மீண்டும் மீண்டும் ஆவலோடு பருகப்படும்
  • முதா³ – மகிழ்ச்சியுடன்
  • பூ⁴யாத்³ – உண்டாகட்டும், அருளட்டும்
  • பா⁴ரத பங்கஜம்– மகாபாரதம் என்னும் தாமரை மலர்
  • கலி மல – கலியுகத்தின் பாவங்களை, தோஷங்களை
  • பா⁴ரத வம்ஸி– வேரோடு அழிப்பது
  • நஸ் - நம் அனைவருக்கும்
  • ஸ்ரேயஸே – நன்மையை, மங்களத்தை

இந்த ஸ்லோகம் மொத்த மகாபாரதத்தையும் ஒரு அழகான தாமரை மலருக்கு உருவகப்படுத்துகிறது.
தடாகம் (குளம்): வேத வியாசரின் திருவாக்கு
மலர்: மகாபாரதம்
மணம்: பகவத் கீதையின் போதனைகள்
மகரந்தம் (இதழ்கள்): அதில் வரும் உபகதைகள் (நளவெண்பா, சாவித்திரி கதை போன்றவை)
சூரியன் (மலர வைப்பது): நாராயணனின் கதைகள்
வண்டுகள்: நல்ல நூல்களைத் தேடிப் படிக்கும் சாதுக்கள் 

கலியுகத்தின் பாவங்களைப் போக்கும் மகாபாரதம் என்னும் தாமரை மலர், நம் அனைவருக்கும் மங்களத்தையும் நன்மையையும் அளிக்கட்டும். இந்த தாமரை மலர், பராசரரின் குமாரனான வேத வியாசரின் சொற்கள் என்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி (பகவத் கீதை) என்னும் நறுமணம் வீசுகிறது. பல வரலாற்று கதைகளாகிய இதழ்களைக் கொண்டது; ஸ்ரீ ஹரியின் கதை என்ற சூரியனால் மலரச் செய்யப்பட்டது; இந்த தாமரையின் தேன் நல்லோர்களாகிய வண்டுகளால் தினமும் மகிழ்ச்சியுடன் பருகப்படுவது ஆகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Tuesday, 8 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 6

பீ⁴ஷ்ம த்³ரோண தடா ஜயத்³ரத² ஜலா, 
கா³ந்தா⁴ரனீ லோத் பலா
ஸல்ய க்³ராஹ வதீ க்ருபேண வஹனீ, 
கர்ணேன வேலா குலா|
அஸ்வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா 
து³ர்யோத⁴னா வர்தினீ
ஸோத் தீர்ணா க²லு பாண்ட³வை꞉ 
ரணனதீ³ கைவர்தக꞉ கேஸவ꞉||

  • பீ⁴ஷ்ம த்³ரோண தடா – பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகக் கொண்ட
  • ஜயத்³ரத² ஜலா – ஜயத்ரதனை நீராகக் கொண்ட
  • கா³ந்தா⁴ர நீலோத்பலா – காந்தார நாட்டு சகுனியை நீல நிற தாமரை மலராகக் கொண்ட
  • ஸல்ய க்³ராஹவதீ  – சல்யனை முதலையாகக் கொண்ட
  • க்ருபேண வஹனீ – கிருபாச்சாரியாரை நீரோட்டமாகக் கொண்டு பாய்கின்ற
  • கர்ணேன வேலா குலா – கர்ணனைப் பெரிய அலைகளாகக் கொண்ட
  • அஸ்வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா – அஸ்வத்தாமாவையும் விகர்ணனையும் கொடிய நீர் விலங்குகளாகவும் முதலைகளாகவும் கொண்ட
  • து³ர்யோத⁴ன ஆவர்தினீ – துரியோதனனை ஆபத்தான நீர்ச் சுழலாகக் கொண்ட
  • ஸா – அந்த
  • ரண நதீ³ – யுத்தக் களம் என்னும் நதியானது
  • பாண்ட³வைஹி – பாண்டவர்களால்
  • உத்தீர்ணா க²லு – நிச்சயமாகக் கடந்து செல்லப்பட்டது
  • கைவர்தகஹ கேஸவஹ – ஏனெனில், அதற்குப் படகோட்டியாகக் கிருஷ்ணர் (கேசவன்) இருந்தார் 

இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப் படுகிறது. இதில், கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப் படுத்துவதால், பீஷ்மரும் துரோணரும் கரைகள். ஜெயத்ரதனை நதியின் நீர் என்று கூறுகிறார். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும். அதனால் சகுனி நீல தாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். சல்லியன் முதலையாகவும், கிருபர் நதியின் வேகமாகவும், கர்ணன் அந்த நதியின் அலை போலவும், அஸ்வத்தாமன், விகர்ணன் இவர்கள் சுறா மீன்கள் எனவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்கள். துரியோதனன் நீர்ச் சுழலுக்கு ஒப்பானவன். ஏனென்றால் அவன் தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக் கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது, பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது. கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம் பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்கு உதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 5

வஸுதே³ வஸுதம் தே³வம், 
கம்ஸ சாணூர மர்த³னம்|
தே³வகீ பரமானந்த³ம், 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • வஸுதே³வ ஸுதம் - வசுதேவரின் குமாரனான
  • தே³வம் - திவ்ய பிரகாசம் பொருந்திய இறைவனை
  • கம்ஸ - கம்சனையும்
  • சாணூர: சாணூரன் என்ற அரக்கனையும்
  • மர்த³னம் - வதம் செய்தவனை, அழித்தவனை
  • தே³வகீ - தேவகி தேவிக்கு
  • பரமானந்த³ம் - அளவற்ற மட்டற்ற மகிழ்ச்சியைத் தருபவனை
  • க்ருஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ கு³ரும் - அகில உலகத்திற்கும் குருவானவனை

வசுதேவரின் புத்திரனும், கம்சன் மற்றும் சாணூரனை அழித்தவனும், தேவகி தேவிக்கு பேரானந்தத்தை அளிப்பவனுமாகிய அகில உலகத்திற்கும் குருவான திவ்ய பிரகாசம் பொருந்திய இறைவனை, ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 4

ஸர்வோ பனிஷதோ³ கா³வோ, 
தோ³க்³தா⁴ கோ³பால னந்த³ன꞉|
பார்தோ² வத்ஸ꞉ ஸுதீ⁴ர் போ⁴க்தா, 
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||

  • ஸர்வோ - எல்லா
  • உபநிஷதோ³ - உபநிடதங்களும்
  • கா³வோ - பசுக்கள்
  • தோ³க்³தா⁴ - பால் கறப்பவர்
  • கோ³பால நந்த³னஹ - கோபாலனின் மகனான கிருஷ்ணர்
  • பார்தோ² - அர்ஜுனன்
  • வத்ஸஸ் - கன்றுக்குட்டி
  • ஸுதீ⁴ர் - தூய புத்தியுடையவர்கள், அறிஞர்கள்
  • போ⁴க்தா - அதனை அருந்துபவர்கள்
  • து³க்³த⁴ம் - கறந்த பால்
  • கீ³தா அம்ருதம் - கீதையாகிய அமிர்தம்
  • மஹத் - மிக உயர்ந்தது, மகத்தானது

எல்லா உபநிடதங்களும் பசுக்கள் போன்றவையாகும். பால் கறப்பவர் நந்தகோபனின் மகனான ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். அர்ஜுனன் கன்றுக்குட்டி ஆவார். தூய புத்தியுடைய அறிஞர்கள் அந்தப் பாலை அருந்துபவர்கள் ஆவர். கறக்கப்பட்ட மகா உன்னதமான பால், கீதையாகிய அமிர்தம் ஆகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Monday, 7 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 3

ப்ரபன்ன பாரிஜா தாய, 
தோத்ர வேத் ரைக பாணயே|
ஜ்ஞான முத்³ராய க்ருஷ்ணாய, 
கீ³தாம் ருத து³ ஹே நம꞉||

  • ப்ரபன்ன - தன்னைச் சரணடைந்தவர்களுக்கு
  • பாரிஜாதாய - கேட்டதைத் தரும் பாரிஜாத மரத்தைப் போன்றவர்
  • தோத்ர வேத்ர - குதிரையைச் செலுத்தும் சாட்டை அல்லது கோலை
  • ஏக பாணயே - ஒரு கையில் ஏந்தியிருப்பவர்
  • ஜ்ஞான முத்ரா - சின்முத்திரை எனப்படும் ஞானத்தைக் குறிக்கும் கை முத்திரையைக் காட்டுபவர்
  • க்ருஷ்ணாய - ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு
  • கீதா அம்ருத - பகவத் கீதை என்னும் அமிர்தத்தை
  • துஹே - பசும் பாலாகக் கறந்து கொடுத்தவர்
  • நமஹ - என்னுடைய நமஸ்காரங்கள்

தன்னைச் சரணடைந்தவர்களுக்குக் கேட்ட வரங்களை அள்ளித் தரும் பாரிஜாத மரம் போன்றவரான, அர்ஜுனனின் தேரோட்டியாக, பார்த்தசாரதியாக ஒரு கையில் குதிரையை ஓட்டும்சாட்டைக் குச்சியையும் கடிவாளத்தையும் ஏந்தி கொண்டு, மற்றொரு கையில் ஞான முத்திரையைத் தாங்கியிருப்பவரான, பகவத் கீதை என்னும் ஞான அமிர்தத்தைக் கறந்து உலகிற்கு அளித்தவரான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

த்⁴யான ஸ்லோகம் - 2

நமோ அஸ்து தே வ்யாஸ விஸால பு³த்³தே⁴ 
பு²ல்லார விந்தா³ யத பத்ர னேத்ர|
யேன த்வயா பா⁴ரத தைல பூர்ண꞉
ப்ரஜ் வாலிதோ ஜ்ஞான மய꞉ ப்ரதீ³ப꞉||

  • நமோ – வணக்கம், நமஸ்காரம்
  • அஸ்து – உண்டாகட்டும், உரித்தாகட்டும்
  • தே – உமக்கு
  • வ்யாஸ – வியாச முனிவரே
  • விஸால பு³த்³தே⁴ – பரந்த விசாலமான அறிவைக் கொண்டவரே
  • பு²ல்ல – மலர்ந்த
  • அரவிந்தா³ – தாமரை மலரின்
  • ஆயத – நீண்ட
  • பத்ர – இதழ்கள் போன்ற
  • னேத்ர – கண்களை உடையவரே
  • யேன – எவரொருவரால் 
  • த்வயா – உம்மால்
  • பா⁴ரத – மகாபாரதம் என்கிற
  • தைல – எண்ணெயால்
  • பூர்ணஹ் – நிரப்பப்பட்ட
  • ப்ரஜ் வாலிதோ – ஏற்றி வைக்கப்பட்டு, பிரகாசிக்கச் செய்யப்பட்ட
  • ஜ்ஞான மயஹ் – அறிவு, ஞான வடிவிலான 
  • ப்ரதீ³பஹ் – விளக்கு

அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக் கண்களை உடைய வ்யாச குருவே, உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளி வீசுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

த்⁴யான ஸ்லோகம் - 1

பார்த்தா²ய பிரதி போ³தி⁴தாம் 
ப⁴க³வதா நாராயணேன ஸ்வயம் 
வ்யாஸேன க்³ரதிதா²ம் புராண முனினா 
மத்⁴யே மஹாபா⁴ரதம்| 
அத்³வைதாம் ருத வர்ஷிணீம் 
ப⁴க³வதீம் அஷ்டாத³ ஸாத்⁴யாயிநீம்
அம்ப³ த்வாம் அனுஸந்த³ தா⁴மி 
ப⁴க³வத் கீ³தே ப⁴வத்³ வேஷிணீம்||

  • பார்த்தா²ய – அர்ஜுனனுக்கு
  • ப்ரதி போ³தி⁴தாம் – உபதேசிக்கப்பட்ட, விழிப்புணர்வு ஊட்டப்பட்ட
  • ப⁴க³வதா – பகவானால்
  • நாராயணேன – நாராயணனால்
  • ஸ்வயம் – தானாகவே
  • வ்யாஸேன – வியாசரால்
  • க்³ரதி²தாம் – கோர்க்கப்பட்ட, தொகுக்கப்பட்ட 
  • புராண முனினா – பழமையான முனிவரான
  • மத்⁴யே – நடுவே
  • மஹாபா⁴ரதம் – மகாபாரதத்தின்
  • அத்³வைதாம் ருத வர்ஷிணீம் – அத்வைதம் என்னும் அமுதத்தை பொழிபவள்
  • ப⁴க³வதீம் – தெய்வீக குணங்கள் பொருந்தியவள்
  • அஷ்டாத³ ஸாத்⁴யாயினீம் – பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவள்
  • அம்ப³ – தாயே
  • த்வாம் – உன்னை
  • அனுஸந்த³ தா⁴மி – தியானிக்கிறேன், தொடர்ந்து சிந்திக்கிறேன்
  • ப⁴க³வத்³ கீ³தே – பகவத் கீதையே
  • ப⁴வத்³ வேஷிணீம் – பிறவித் துயரை, சம்சாரத்தை அழிப்பவள்

புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்