||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான ஸ்லோகம் - 8
- மூகம் - வாய் பேசாதவரை
- கரோதி - செய்கிறது, மாற்றுகிறது
- வாசாலம் - சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவராக
- பங்கு³ம் - நடக்க முடியாதவரை
- லங்க⁴யதே - கடக்க வைக்கிறது, தாண்ட வைக்கிறது
- கி³ரிம் - மலையை
- யத் க்ருபா - யாருடைய கருணையானது, அருளானது
- தம் அஹம் - அவரை நான்
- வந்தே³ - வணங்குகிறேன், போற்றுகிறேன்
- பரமானந்த³ - எல்லையற்ற ஆனந்த வடிவமாக இருக்கும்
- மாத⁴வம் - அந்த மாதவனை, ஸ்ரீ கிருஷ்ணரை
யாருடைய கருணையானது, வாய் பேச முடியாதவனையும் சரளமாகப் பேச வைக்கிறதோ; நடக்க முடியாதவனையும் உயர்ந்த மலையைக் கடக்க வைக்கிறதோ; அந்த எல்லையற்ற ஆனந்த வடிவமாக இருக்கும் மாதவனை (ஸ்ரீ கிருஷ்ணரை) நான் மனதார வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்


No comments:
Post a Comment