About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 037 திருமணிக்கூடம். Show all posts
Showing posts with label 037 திருமணிக்கூடம். Show all posts

Friday, 26 September 2025

108 திவ்ய தேசங்கள் - 037 - திருமணிக்கூடம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||037. திருமணிக்கூடம்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1288 - பெரிய திருமொழி - 4.5.1
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி* 
மன்னும் காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ட எங்கும்*
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1289 - பெரிய திருமொழி - 4.5.2
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து* 
இலங்கை வவ்விய இடும்பை தீரக்* கடுங் கணை துரந்த எந்தை* 
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்* குங்குமம் கழுவிப் போந்த*
தெய்வ நீர் கழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1290 - பெரிய திருமொழி - 4.5.3
மாத் தொழில் மடங்கச் செற்று* மருது இற நடந்து* 
வன் தாள் சேத் தொழில் சிதைத்துப்* 
பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*
நாத் தொழில் மறை வல்லார்கள்* நயந்து அறம் பயந்த வண் கைத்*
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1291 - பெரிய திருமொழி - 4.5.4
தாங்கு அரும் சினத்து வன் தாள்* தடக் கை மா மருப்பு வாங்கி*
பூங் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து* எருது அடர்த்த எந்தை*
மாங்கனி நுகர்ந்த மந்தி* வந்து வண்டு இரிய* 
வாழைத் தீங் கனி நுகரும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1292 - பெரிய திருமொழி - 4.5.5
கரு மகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து* 
தன் மேல் வரும் அவள் செவியும் மூக்கும்* வாளினால் தடிந்த எந்தை*
பெரு மகள் பேதை மங்கை* தன்னொடும் பிரிவு இலாத*
திருமகள் மருவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1293 - பெரிய திருமொழி - 4.5.6
கெண்டையும் குறளும் புள்ளும்* கேழலும் அரியும் மாவும்*
அண்டமும் சுடரும் அல்லா* ஆற்றலும் ஆய எந்தை*
ஒண் திறல் தென்னன் ஓட* வட அரசு ஓட்டம் கண்ட*
திண் திறலாளர் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

007 .திவ்ய ப்ரபந்தம் - 1294 - பெரிய திருமொழி - 4.5.7
குன்றமும் வானும் மண்ணும்* குளிர் புனல் திங்களோடு*
நின்ற வெம் சுடரும் அல்லா* நிலைகளும் ஆய எந்தை*
மன்றமும் வயலும் காவும்* மாடமும் மணங் கொண்டு* 
எங்கும் தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1295 - பெரிய திருமொழி - 4.5.8
சங்கையும் துணிவும் பொய்யும்* மெய்யும் இத் தரணி ஓம்பும்*
பொங்கிய முகிலும் அல்லாப்* பொருள்களும் ஆய எந்தை*
பங்கயம் உகுத்த தேறல்* பருகிய வாளை பாய*
செங் கயல் உகளும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1296 - பெரிய திருமொழி - 4.5.9
பாவமும் அறமும் வீடும்* இன்பமும் துன்பம் தானும்*
கோவமும் அருளும் அல்லாக்* குணங்களும் ஆய எந்தை*
மூவரில் எங்கள் மூர்த்தி* இவன் என முனிவரோடு*
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1297 - பெரிய திருமொழி - 4.5.10
திங்கள் தோய் மாட நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானை*
மங்கையர் தலைவன் வண் தார்க்* கலியன் வாய் ஒலிகள் வல்லார்*
பொங்கு நீர் உலகம் ஆண்டு* பொன் உலகு ஆண்டு* 
பின்னும் வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்* விளங்குவாரே|
 
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Saturday, 13 September 2025

108 திவ்ய தேசங்கள் - 037 - திருமணிக்கூடம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||037. திருமணிக்கூடம்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1288 - 1297 - நான்காம் பத்து - ஐந்தாம் திருமொழி

------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
சேராது முன் செய்த தீ வினை பின் செய்ததுவும்*
வாராது இனி நீ மட நெஞ்சே நேராக்*
குருமணிக் கூடத்து ஆனைக் கொம்பு பறித்தானை*
திரு மணிக் கூடத்தானைச் செப்பு|

  • மடம் நெஞ்சே – அறியாமையை உடைய எனது மனமே!
  • நேரா – எதிர்த்து
  • குரு மணி கூடத்து – சிறந்த இரத்தினங்கள் இழைத்துச் செய்யப் பெற்ற கூடத்தில் இருந்த
  • ஆனை – குவலயா பீடம் என்னும் பட்டத்து யானையினது
  • கொம்பு – தந்தங்களை
  • பறித்தானை – வேரோடு பிடுங்கி அதனால் அதனை அடித்து அழித்தவனும்
  • திருமணிக்கூடத்தானை – திருமணிக்கூடம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமாகிய திருமாலை
  • நீ செப்பு – நீ இடைவிடாது துதி செய்ய உதவுவாய். அவ்வாறு செய்வாயாயின்
  • முன்செய்த தீ வினை – நீ முற்பிறப்பில் செய்து சேர்த்து வைத்துள்ள ஸஞ்சிதம் அநப்யுபகத ப்ராப்தம் என்ற இரண்டு வகைப் பாவமும்
  • சேராது – தன் பயனை ஊட்டுமாறு உன்னை அணுகாது
  • பின்செய்வதுவும் – இனி அபுத்தி பூர்வகமாகச் செய்கின்ற ஆகாம்யம் எனப்படும் பாவமும்
  • இனி வாராது – இனிமேல் உன்னை அணுகாது  


||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Friday, 12 September 2025

108 திவ்ய தேசங்கள் - 037 - திருமணிக்கூடம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||037. திருமணிக்கூடம்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ திருமாமகள் தாயார் ஸமேத ஸ்ரீ மணிகூட பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - வரதராஜர்
  • பெருமாள் உற்சவர் - கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன் 
  • தாயார் மூலவர் - திருமாமகள் நாச்சியார்
  • தாயார் உற்சவர் - ஸ்ரீதேவி, பூதேவி 
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - நின்ற
  • புஷ்கரிணி/தீர்த்தம் - சந்திர, ப்ரஹ்ம
  • விமானம் - கனக, ப்ரஸந்த
  • ஸ்தல விருக்ஷம் - மா
  • ப்ரத்யக்ஷம் - பெரிய திருவடி, சந்திரன்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் மூலஸ்தானத்தில் வரதராஜர் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு சக்கரமும், முன் கைகளில் அபய, ஊரு முத்திரை காட்டியபடி சேவை சாதிக்கிறார். பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்றபடி இடதுகரத்தில் தாமரை மலரும், வலது கரத்தினை தொங்க விட்ட படியும் ஸ்ரீதேவி காட்சியளிக்கிறாள். இடது புறத்தில் பூமா தேவி வலது கரத்தில் தாமரை மொட்டும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள்பாலிக்கிறாள். அருகிலேயே உற்சவ மூர்த்திகள் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன், "உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்,' என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாக சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாக காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாப விமோசனம் கிடைத்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்