About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 149

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 149

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 11

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ந வாஸு தே³வ பக்தாநாம்‌
அஸு² பம்‌ வித்³யதே க்வசித்‌|
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி
யம்‌ நைவோ பஜாயதே||


வாசுதேவனிடம் பக்தி கொண்டோர் ஒருபோதும் எத்தீங்கையும் அடைய மாட்டார்கள். அவர்கள், பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகிய அச்சங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.13 

யஜ்ஞ ஸி²ஷ்டாஸி² ந: ஸந்தோ 
முச்யந்தே ஸர்வ கில்பி³ஷை:|
பு⁴ஞ்ஜதே தே த்வக⁴ம் பாபா: 
யே பசந்த் யாத்ம காரணாத்||

  • யஜ்ஞ ஸி²ஷ்ட - யாக மீதியை  
  • அஸி²நஸ் - உண்போர் 
  • ஸந்தோ - பக்தர்கள் 
  • முச்யந்தே - விடுபடுகின்றனர் 
  • ஸர்வ - எல்லாவிதமான 
  • கில்பி³ஷைஹி - பாவங்களிலிருந்து 
  • பு⁴ஞ்ஜதே - அனுபவிக்கும் 
  • தே - அவர்கள் 
  • து - ஆனால் 
  • அக⁴ம் - கொடிய பாவங்கள்  
  • பாபாஹ - பாவிகள் 
  • யே - யார் 
  • பசந்தி - உணவு தயாரிப்பவர் 
  • ஆத்ம காரணாத் - புலனின்பத்திற்காக

யாக மீதியை உண்ணும் பக்தர்கள் தாங்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால், யார் புலனின்பத்திற்காக உணவு தயாரிக்கிறார்களோ அவர்கள் கொடிய பாவங்களை அனுபவிக்கும் பாவிகள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.6

ஸ வை ப⁴வாந் வேத³ ஸமஸ்த கு³ஹ்யம் 
உபாஸிதோ யத் புருஷ: புராண:|
பரா வரேஸோ² மநஸைவ விஸ்²வம்
ஸ்ருஜத் யவத் யத்தி கு³ணைர் அஸங்க³:||

  • ஸ ப⁴வாந - அப்படிப்பட்ட தாங்கள்
  • ஸமஸ்த கு³ஹ்யம் வை - எல்லா ரகசியங்களையும்
  • வேத³ - அறிகிறீர்
  • யத் - ஏனென்றால்
  • புராணஹ புருஷஃ - ஆதியான புருஷர்
  • உபாஸிதோ - உபாசிக்கப்பட்டார்
  • பரா வரேஸோ² - காரிய காரணங்களுக்கு நியந்தாவானவனும்
  • கு³ணைர் அஸங்க³ஹ - குணங்களால் தீண்டப்படாதவனுமான ஸநாதன புருஷர்
  • மநஸா ஏவ - தனது மனத்தினாலேயே
  • விஸ்²வம் - அகில உலகத்தையும்
  • ஸ்ருஜதி - உண்டாக்குகிறார்
  • அவதி - காப்பாற்றுகிறார்
  • அத்தி - நாசம் செய்கிறார்

ஜடவுலகைப் படைப்பவரும் அழிப்பவரும் ஆன்மீக உலகைப் பராமரிப்பவருமான மூல முழு முதற் கடவுளை நீங்கள் வழிபடுவதால், மர்மமான அனைத்தும் உங்களுக்குத் தெரியும், அவர் ஜட இயற்கையின் மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.84

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.84

கர்மணா தேந மஹதா 
த்ரை லோக்யம் ஸசராசரம்| 
ஸதே³ வர்ஷி க³ணம் துஷ்டம் 
ராக⁴வஸ்ய மஹாத்மந:||

  • மஹாத்மநஹ - மஹாத்மாவான 
  • ராக⁴வஸ்ய - ஸ்ரீராகவருடைய
  • தேந -  அந்த
  • மஹதா - பெரிய
  • கர்மணா -  காரியத்தாலே
  • ஸசராசரம் -  அசை பொருள் அசையா பொருள் இவைகளோடு கூடின
  • ஸ தே³வ ரிஷி க³ணம் - தேவ ரிஷி கணங்களுடன் கூடின
  • த்ரைலோக்யம் -  மூவுலகும் 
  • துஷ்டம் - ஸந்தோஷம் அடைந்தது

மஹாத்மாவான ஸ்ரீராமர் செய்த அருஞ்செயலின் மூலம் மூவுலகங்களும், அனைத்து உயிரினங்களும், தேவ கணங்களும், ரிஷி கணங்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 125 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 125 - பரதனுக்கு நாடு கொடுத்தவன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

கொங்கை வன்* கூனி சொற் கொண்டு* 
குவலயத் துங்கக் கரியும்* 
பரியும் இராச்சியமும்* 
எங்கும் பரதற்கு அருளி* வன் கான் அடை* 
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)

  • கொங்கை - முதுகில் முலையெழும்பினாற் போன்ற
  • வல் - பலிஷ்டமான
  • கூனி - கூனை யுடையளான மந்தரையினுடைய
  • சொல் - சொல்லை
  • கொண்டு - அங்கீகரித்து
  • எங்கும் - எல்லாவிடங்களிலுமுள்ள
  • குவலயம் துங்கம் - இப் பூமியில் (இருப்பவற்றுள்) சிறந்தனவான
  • கரியும் - யானைகளையும்
  • பரியும் - அங்ஙனொத்த குதிரைகளையும்
  • இராச்சியமும் - ராஜ்யத்தையும்
  • பரதற்கு - பரதாழ்வானுக்கு
  • அருளி - கொடுத்து விடல்
  • வல் கான் அடை - கொடிய காட்டை அடைந்த
  • அம் கண்ணன் - அழகிய கண்ணையுடையனான இவன்
  • அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

முதுகில் முலை முளைத்தாற் போலிருந்த கூனி மந்தரையின் சொல்லிற்கு இணங்க தனது இருப்பிலிருந்த சிறந்த யானைகள், குதிரைகள் மற்றும் ராஜ்யத்தை பரதனுக்கு தந்தருளி கொடிய காட்டிற்கு சென்ற அழகிய கண்களைக் கொண்டவன் ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்! இராமனும், கண்ணனும் வேறல்ல என்று காட்டும் பாசுரம் இது 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 038 - திருவெள்ளக் குளம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||038. திருவெள்ளக் குளம்||
||அண்ணன் கோயில் - திருநாங்கூர்||
||முப்பத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1308 - பெரிய திருமொழி - 4.7.1
கண் ஆர் கடல் போல்* திருமேனி கரியாய்*
நண்ணார் முனை* வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
திண் ஆர் மதிள் சூழ்* திருவெள்ளக் குளத்துள் அண்ணா* 
அடியேன் இடரைக் களையாயே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1309 - பெரிய திருமொழி - 4.7.2
கொந்து ஆர் துளவ* மலர் கொண்டு அணிவானே*
நந்தாத பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்*
செந்தாமரை நீர்த்* திருவெள்ளக் குளத்துள் எந்தாய்* 
அடியேன் இடரைக் களையாயே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1310 - பெரிய திருமொழி - 4.7.3
குன்றால் குளிர் மாரி* தடுத்து உகந்தானே*
நன்று ஆய பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்*
சென்றார் வணங்கும்* திருவெள்ளக் குளத்துள் நின்றாய்* 
நெடியாய் அடியேன் இடர் நீக்கே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1311 - பெரிய திருமொழி - 4.7.4
கான் ஆர் கரிக் கொம்பு* அது ஒசித்த களிறே*
நானா வகை* நல்லவர் மன்னிய நாங்கூர்*
தேன் ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக் குளத்துள் ஆனாய்* 
அடியேனுக்கு அருள்புரியாயே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1312 - பெரிய திருமொழி - 4.7.5
வேடு ஆர்* திருவேங்கடம் மேய விளக்கே*
நாடு ஆர் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்*
சேடு ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக் குளத்தாய்*
பாடா வருவேன்* வினை ஆயின பாற்றே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1313 - பெரிய திருமொழி - 4.7.6
கல்லால் கடலை* அணை கட்டி உகந்தாய்*
நல்லார் பலர்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வா* திருவெள்ளக் குளத்து உறைவானே*
எல்லா இடரும்* கெடுமாறு அருளாயே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1314 - பெரிய திருமொழி - 4.7.7
கோலால் நிரை மேய்த்த* எம் கோவலர் கோவே*
நால் ஆகிய* வேதியர் மன்னிய நாங்கூர்*
சேல் ஆர் வயல் சூழ்* திருவெள்ளக் குளத்துள் மாலே* 
என வல் வினை தீர்த்தருளாயே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1315 - பெரிய திருமொழி - 4.7.8
வாராகம் அது ஆகி* இம் மண்ணை இடந்தாய்*
நாராயணனே!* நல்ல வேதியர் நாங்கூர்*
சீர் ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக் குளத்துள்*
ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1316 - பெரிய திருமொழி - 4.7.9
பூ ஆர் திரு மா மகள்* புல்கிய மார்பா*
நா ஆர் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்*
தேவா* திருவெள்ளக் குளத்து உறைவானே*
ஆ ஆ அடியான்* இவன் என்று அருளாயே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1317 - பெரிய திருமொழி - 4.7.10
நல் அன்பு உடை* வேதியர் மன்னிய நாங்கூர்*
செல்வன்* திருவெள்ளக் குளத்து உறைவானை*
கல்லின் மலி தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லர் என வல்லவர்* வானவர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 93

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 38

ஸ்கந்தம் 03

கபிலர் கூறலானார். மனுவின் மகளே! என் அன்புத் தாயே!

இது வரை பக்தி யோகம்‌ அஷ்டாங்க யோகம் இரண்டையும் கூறினேன்.

இவற்றில்‌ ஏதாவதொன்றைக் கைக்கொண்டு சாதனை புரிந்து இறைவனை அடையலாம்.

வேதாந்தி பரப்ரும்மம்‌ என்கிறான். யோகி பரமாத்மா என்கிறான். பக்தன் பகவான் என்கிறான். இவன் தான் புருஷனும், ப்ரக்ருதியும். இறைவன் இவை இரண்டிற்கும் அப்பால் உள்ளவன்.

ஜீவனுக்கு அவரவர் கர்ம வினைக்கேற்ப பலனை அளிப்பதால் விதி என்றும்‌ கூறுவர்.

பகவானுக்கு காலம் என்ற பெயருண்டு. இது ஜீவன்களுக்கு பயத்தைக் கொடுக்கிறது.

தான் வேறு பகவான் வேறு என்ற பேத புத்தியுடன் அலைபவனுக்குத் தான் காலத்திடம் பயம்.

கால ஸ்வரூபனான பகவான் ஜீவன்களுக்குள் புகுந்து அவற்றைக் கொண்டே அவற்றை அழிக்கிறார்.

கால ரூபனான பகவானுக்கு நண்பன், பகைவன் எவரும்‌ இலர். காலம் மிகுந்த ஊக்கத்துடன், பகவானை மறந்து போகத்தில் திளைப்பவனுக்கு நோயாக உள் நுழைகிறார்.

காலத்திடம் பயம் கொண்டே சூரியன் உதிக்கிறான். மேகம்‌ மழை பெய்கிறது. நட்சத்திரங்கள்‌ ப்ரகாசிக்கின்றன. மரம் செடி கொடிகள், மூலிகைகள் அனைத்தும் அதனதன் பருவத்தில் பூத்துக் காய்க்கின்றன.

இவருடைய கட்டளைப்படியே நதிகள்‌ பாய்கின்றன. கடல் கரையைக்‌ கடக்காதிருக்கிறது. அக்னி சுடர் விட்டு எரிகிறது. மலைகளுடன் கூடிய பூமி கடலில்‌ மூழ்காதிருக்கிறது.

இவருடைய கட்டளையினாலேயே உண்டான பஞ்ச பூதங்கள்‌ ஒன்றையொன்று மிஞ்சாமல் கட்டுப்பாட்டோடு செயல்படுகிறது.

அவரே மரண தேவனான யமனையும் அழித்து ப்ரபஞ்சத்தையும் அழிக்கிறார்‌.

இவ்வளவு சக்தியுடன் இயங்கும் கால ரூபனைப் பல பிறவிகள் எடுத்தாலும் ஜீவன்கள் அறிந்து கொள்வதில்லை.

தன் சுகத்திற்காக ஜீவன் பல பொருள்களை சேகரித்து வைக்கிறான். பகவான் அனைத்தையும் தகுந்த காலத்தில் அழிக்கிறார். ஜீவன் துக்கப்படுகிறான்.

ஜீவன் நரகத்தில் வேதனை அடைந்தாலும், மாயையினால் மதி மயங்கி, உடல், மனைவி, மக்கள், செல்வம், உற்றார், உறவினர் என்று மனத்தை ஆழ ஊன்றி அனைத்து செல்வங்களையும் பெற்று விட்டதாக எண்ணுகிறான்.

குடும்பத்தைக் காக்கும் முயற்சியில் தோல்வி ஏற்படின், பேராசை கொள்கிறான். மன வலிமை தளர்கிறது. பிறர் செல்வத்தைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். இவனது சக்தி குறையும் போது மனைவி மக்கள் அலட்சியம்‌ செய்கிறார்கள்.

இவ்வளவு துன்பம் அனுபவித்தும்‌ உலக வாழ்வில் வெறுப்பு கொள்வதில்ல. மரியாதையின்றி போடப்படும் சோற்றை நாய் போல் உண்டு காலம் கழிக்கிறான். கடைசியில் கால பாசத்திற்கு ஆட்பட்டு மரணத்தை தழுவுகிறான். அப்போது சிவந்த கண்களை உடைய யம தூதர்களைக்‌ கண்டு பயந்து மல மூத்திரங்களைக் கழிக்கிறான். இறந்த அவனுக்கு யாதனா சரீரம்‌ ஏற்படுகிறது. அதைப் பிடித்துக் கொண்டு தான் ஸ்தூல உடலை விடுகிறான். யம தூதர்கள் யாதனா சரீரத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வெகு தூரத்திலுள்ள யம பட்டணம் செல்கிறார்கள்.

வழியில் யம தூதர்களின் பயமுறுத்தலால் நடுங்குகிறான். தன்‌ பாவச் செயல்களை நினைத்து வருந்துகிறான்.

வழியில் பசி தாகத்தால் தவிக்கிறான். கொளுத்தும் வெயில். நெருப்புக் காற்று வீசும்‌ வழி. நிற்க நிழலோ, தாகத்திற்குத் தண்ணீரோ கிடைக்காது. நடக்கத் திராணியின்றி விழும் போது யம தூதர்கள்‌ சாட்டையால் அடிப்பார்கள்.

தர்மத்தில் பற்றுள்ள ஸத்புத்ரனைப் பெற்று வளர்த்திருப்பானாகில் அவன் இவனைக் குறித்துச் செய்யும்‌ கர்மாக்களால் ஜீவனுக்கு வழிக்கு உணவும் நீரும் ‌கிடைக்கும்.‌


ஆங்காங்கே மூர்ச்சையாகி விழுந்து எழுந்து இருளடர்ந்த பாதையில் யம தூதர்களால் இழுத்துச் செல்லப்படுகிறான்.

யம லோக மார்கம் 7,92,000 மைல்கள் உடையது. இந்த தூரத்தை இரண்டு அல்லது மூன்று முஹூர்த்த காலத்தில் கடக்குமாறு இழுத்துச் செல்லப்படுகிறான்.

அங்கு அவனது பாவங்களுக்கேற்ப கட்டைகளை அடுக்கி தீ வைத்துக் கொளுத்தப்படுகிறான். சில சமயம் அவன் இடலையே யாரோ வெட்டித் தர, அதை அவனே உண்ணுமாறு நிர்பந்தப்படுத்தப்படுகிறான்.

யம புரியில் நாய்களும் கழுகுகளும் இவனது யாதனா சரீரத்தை உயிருடன் பிடுங்கித் தின்னும். உயிர் போகாது. தேள்கள் கொட்டும்.

அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டுவார்கள். மலையிலிருந்து உருட்டுவார்கள். கை கால்களைக் கட்டி நீரில் மூழ்கடிப்பார்கள்.

ஆணோ, பெண்ணோ யாராக இருப்பினும்‌ பாவத்தைன் பலனை அனுபவிப்பதற்கென்றே உண்டாக்கப்பட்ட தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், ரௌரவம் என்ற நரக வேதனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

தாயே! சிலரோ ஸ்வர்கமும் நரகமும் இந்நிலவுலகிலேயே இருக்கின்றன என்றும்‌ சொல்கிறார்கள். ஏனெனில்‌ இத்தகைய துன்பங்கள் பூமியிலேயே காணப்படுகின்றன.

மிகுந்த சுயநலத்தோடு பிறரைத் துன்புறுத்தி தன்னை மட்டும் பேணுபவன், இவ்வுலகிலேயே அவனால் ‌பேணப்பட்ட உடலை விட்டு விட்டு, குடும்பத்தையும்‌ விட்டு இறந்த பின் தன் பாவங்களையே அனுபவிக்கிறான்.

தன் பாவ மூட்டைகளே அவனுக்கு சோற்று மூட்டை. தனியொருவனாகவே நரகத்தை அனுபவிக்கிறான்.

நரகத்தில் பாவத்தின் பலனில் சிறிது அனுபவித்து, பின்னர் நாய், பன்றி, முதலிய பிறவிகளை எடுத்து பாவத்தைக் குறைத்துக் கொண்டு மீண்டும்‌ மனிதப் பிறவியை அடைகின்றான்.

ஆனால், இவ்வளவு துன்பங்களையும்‌ மறந்து மீண்டும் ‌பாவத்தைச் செய்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 148

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 148

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 10

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

வாஸுதே³வா ஸ்²ரயோ மர்த்யோ
வாஸுதே³வ பராயண:|
ஸர்வ பாப விஸு² த்³தாத்மா
யாதி ப்³ரஹ்ம ஸநாதநம்‌||


பராயண: - பராயணஹ

வாசுதேவனைப் புகலிடமாகக் கொண்டவனும், அவனிடம் பக்தி கொண்டவனுமான மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நித்திய பிரம்மத்தை அடைகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.12 

இஷ்டாந் போ⁴கா³ந் ஹி வோ தே³வா: 
தா³ஸ் யந்தே யஜ்ஞ பா⁴விதா:|
தைர் த³த் தாந ப்ரதா³யை ப்⁴யோ 
யோ பு⁴ங்க்தே ஸ்தேந ஏவ ஸ:||

  • இஷ்டாந் - ஆசைப்பட்ட 
  • போ⁴கா³ந் - வாழ்க்கைத் தேவைகள் 
  • ஹி - நிச்சயமாக 
  • வோ - உங்களுக்கு 
  • தே³வாஹ - தேவர்கள் 
  • தா³ஸ் யந்தே - அளிப்பர் 
  • யஜ்ஞ பா⁴விதாஹ - யாகங்களால் திருப்தியடைந்து 
  • தைர் - அவர்களால் 
  • த³த் தாந் - அளிக்கப்பட்டதை 
  • அப்ரதா³ய - படைக்காமல் 
  • ஏப்⁴யோ - அந்த தேவர்களுக்கு 
  • யோ - எவனொருவன்  
  • பு⁴ங்க்தே - அனுபவிக்கின்றானோ  
  • ஸ்தேந - திருடன் 
  • ஏவ - நிச்சயமாக  
  • ஸஹ - அவன்

வேள்வியால் மகிழ்ந்த தேவர்கள் உங்களுக்கு விருப்பமான போகங்களை தருவார்கள். அவர்களால் தரபட்டவற்றை அவர்களுக்கு கொடுக்காமல் யார் அனுபவிக்கிறானோ, அவன் கள்வர்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் 1.5.5

வ்யாஸ உவாச!
அஸ்த் யேவ மே ஸர்வமித³ம் த்வயோக்தம்
ததா²பி நாத்மா பரிதுஷ்யதே மே| 
தந் மூல மவ்யக்த மகா³த⁴ போ³த⁴ம்
ப்ருச்சா² மஹே த்வாத் மப⁴வாத்ம பூ⁴தம்||

  • வ்யாஸ உவாச - வியாசர் கூறினார்
  • த்வயா உக்தம் - உம்மால் சொல்லப்பட்ட
  • இத³ம் ஸர்வம் - மேற்கூறிய யாவும்
  • மே அஸ்தி ஏவ - எனக்கு பொருத்தமே
  • ததா² அபி - ஆன போதிலும்
  • மே ஆத்மா - எனது மனமானது
  • ந பரிதுஷ்யதே - மகிழ்ச்சி அடையவில்லை
  • ஹே - ஹே பிரபு!
  • அவ் யக்தம் - நன்கு புலப்படாத
  • தந் மூலம் - அந்த விசனத்திற்கு காரணமானதை
  • ஆத் ம பா⁴வாத்ம பூ⁴தம் - பிரம்ம புத்திரரும்
  • ஆகா³த⁴ போ³த⁴ம் - ஆழ்ந்த அறிவை உடையவருமான
  • த்வா - தங்களை
  • ப்ருச்சா²ம - கேட்கிறேன்

ஸ்ரீ வியாச தேவர் கூறினார்: நாரதரே! நீங்கள் என்னைப் பற்றிச் சொன்னது அனைத்தும் முற்றிலும் சரி. இவை அனைத்தையும் மீறி, என் மனம் அமைதி பெறவில்லை; மகிழவில்லை; காரணமும் தெரியவில்லை. எனவே, எனது அதிருப்திக்கான மூல காரணம் குறித்து நான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன். ஏனெனில் நீங்கள் இலௌகீக தந்தை மற்றும் தாய் இல்லாமல்,  சுயமாகப் பிறந்த, பிரம்மாவின் வரம் பற்ற ஆழ்ந்த அறிவைக் கொண்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.83

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.83

ததோக்³நி வசநாத் ஸீதாம் 
ஜ்ஞாத்வா விக³த கல்மஷாம்|
ப³ பௌ⁴ ராம: ஸம்ப்ர ஹ்ருஷ்ட: 
பூஜித: ஸர்வதை³ வதை:||

  • ததோ - பிறகு
  • அக்³நி வசநாத் -  அக்நியின் வார்த்தையால்
  • ஸீதாம் - ஸீதையை
  • விக³த கல்மஷாம் -  கல்மஷம் அற்றவளாக
  • ஜ்ஞாத்வா -  அறிந்து
  • ராமஸ் -  ஸ்ரீராமர்
  • ஸம்ப்ர ஹ்ருஷ்டஃ -  அதிக ஸந்தோஷம் அடைந்தவராய்
  • ப³ பௌ⁴ -  விளங்கினார்
  • ஸர்வ தை³வதைஃ -  ஸமஸ்த தேவதைகளாலும்
  • பூஜிதஹ -  பூஜிக்கப்பட்டார்

அக்நி சொன்ன சொல்லால், ஸீதை பாவமற்றவள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீராமர், அப்போது தேவர்களால் பூஜிக்கப்பட்டவராக ஒளிர்ந்து கொண்டிருந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 124 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 124 - கோபால கோளரி
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

தத்துக் கொண்டாள் கொலோ?* 
தானே பெற்றாள் கொலோ?* 
சித்தம் அனையாள்* அசோதை இளஞ்சிங்கம்*
கொத்து ஆர் கருங்குழல்* கோபால கோளரி* 
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)

  • தத்து கொண்டாள் கொல் ஓ - இந்தப் பிள்ளையை யசோதை புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ! அல்லது
  • தானே பெற்றாள் கொலோ - ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ!
  • சித்தம் அனையாள் - கண்ணனுடைய மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய
  • அசோதை - யசோதையினுடைய
  • இளஞ்சிங்கம் - சிங்கக்குட்டி போன்றவனும்
  • நந்தகோபன் குமாரன் யசோதை இளம் சிங்கம் -திருப்பாவை
  • கொத்து ஆர் கருங்குழல் - பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும்
  • கோபாலர் கோன் அரி - இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய
  • மீண்டும் சிங்கம் இங்கு
  • அத்தன் - ஸ்வாமியான இவன்
  • வந்து அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

தத்து புத்திரனாக கண்ணனை எடுத்து வளர்த்தாளோ? அல்லது, தானே தன் வயிற்றில் பெற்றெடுத்தாளோ? என்று பலரும் வியக்கும் படியாகவும், தன் திருவுள்ளத்தை அநுசரித்தே நடந்த யசோதையின் சிங்கக்குட்டி போன்றவனும், பூக்கொத்துக்களை சூடிய கரிய கூந்தலை உடையவனும், இடையர்களை அடக்கி ஆளும் சிங்கம் போன்றவனும், ஸ்வாமியுமான கண்ணன் ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 038 - திருவெள்ளக் குளம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||038. திருவெள்ளக் குளம்||
||அண்ணன் கோயில் - திருநாங்கூர்||
||முப்பத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1308 - 1317 - நான்காம் பத்து - ஏழாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
நான் அடிமை செய்ய, விடாய் நான் ஆனேன்*
எம்பெருமான் தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான்*
ஆனதற் பின், வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம்*
உள்ளம் குளம், தேனை ஒத்து|

  • நான் அடிமை செய்ய – எம்பெருமானுக்குத் திருத்தொண்டு செய்ய வேண்டும் என்று
  • நான் விடாய் ஆனேன் – நான் பேராவல் கொண்டவனானேன்
  • எம்பெருமான் தான் – தானும்  
  • அடிமை கொள்ள – என்னை அடிமையாகக் கொள்ள வேண்டும் என்று
  • தான் விடாய் ஆனான் – தான் பேராவல் கொண்டவனானான்
  • ஆனதன் பின் – இங்ஙனம் இருவரும் விடாய் கொண்ட பின்பு 
  • வெள்ளக் குளத்தே – திருவெள்ளக் குளம் என்னும் திருப்பதியில்,
  • இருவரும் – யாங்களிருவரும்
  • உள்ளம் குளம் தேனை ஒத்து – மனத்தில் சர்க்கரைப் பாகையும் தேனையும் போன்று ஒன்று சேர்ந்து 
  • விடாய் தணிந்தோம் – எங்கள் வேட்கை தணியப் பெற்றோம்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 92

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 37

ஸ்கந்தம் 03

தேவஹூதி கபில பகவானைப் பார்த்துச் சொன்னாள்.

ப்ரபோ! ஸாங்க்ய சாஸ்திரத்தில் கூறியவாறு மஹத் தத்வம், புருஷன், ப்ரக்ருதி ஆகியவற்றின் இலக்கணங்களையும், அவற்றைத் தனித்தனியே பிரித்தறியும் வழியையும் ஸாங்க்ய யோகத்தின் லட்சியமே பக்தி யோகம் தான் என்றும் கூறினீர்கள்.

ஜீவராசிகள் பிறப்பு, இறப்பு என்னும் பற்பல வழிகளில் உழல்கின்றனவே. எதனால் அப்படி?

இதைக்‌ கேட்டறிந்தால் உலக விஷயங்களில் வெறுப்பு தோன்றுமல்லவா?

ப்ரும்மா முதலியவர்களையும் கட்டுப்படுத்தும் உங்கள் கால ஸ்வரூபத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். காலனைப் பற்றிய பயத்தால் தான் மக்கள்‌ சிறிதளவாவது நற்காரியங்களைச் செய்கின்றனர்.

கபிலர் கூறலானார்.

பக்தி யோகத்தில் பல வழிகள் உண்டு. அவரவர் மன இயல்பிற்கேற்ப பல பிரிவுகளைக் கொண்டது.

படம், சிலை ஆகியவற்றில் என்னை நினைத்து பூஜை செய்வார்கள். உலகியல் இன்பங்கள், புகழ், செல்வம் வேண்டுமென்று பூஜை செய்வார்கள். பகவான் தனது அந்தராத்மா என்று அறியாமல் செய்யப்படும் பூஜை ராஜஸ பூஜையாகும். இவனது வேண்டுதலின் பலனுக்கேற்ப பக்தியும் குறையும்.

தன் பாவங்கள் தொலைய வேண்டும். செய்யும் பூஜையின் பயனையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து அதனால் பகவான் மகிழ வேண்டும். இது அறநெறி. இதைச் செய்வது நமது கடைமை என்று செய்யப்படும் பக்தி சாத்வீக பக்தி தான். ஆனால் ஒட்டுதல் இல்லை.


பெருக்கெடுத்து வரும் கங்கை வழியில் ஏற்படும் அத்தனை தடைகளையும் மீறிக் கொண்டு கடலைக் குறித்தே ஓடுகிறது. அது போல், பகவானின் கல்யாண குணங்களைக் கேட்டு ஹ்ருதய வாசியான என்னை நோக்கி, எவ்விதச் சலனமும் இன்று, பயனை எதிர்நோக்காமல் மனம் ஓடி வர வேண்டும்.

தைலதாரை போன்று இடையறாத இறைச் சிந்தனை இயல்பாக இருக்க வேண்டும். இதுவே பக்தி யோகத்தின் இலக்கணம்.

தாய்க்குக் குழந்தையைப் பற்றிய சிந்தனை இயல்பாகவே இடையறாது ஏற்படுவது போல் உள்ளம் பகவானிடம் ஓடி வருவதே பக்தி.

இவ்விதமாக பக்தி செய்யும் பக்தன் வைகுண்ட வாசத்தையும் கூட விரும்ப மாட்டான். எப்போதும் என் சேவையிலேயே த்ருப்தி அடைவான்.

இத்தகைய பக்தி தான் அடைய வேண்டியதாகும். இதனால் அவன் முக்குணங்களைத் தாண்டி அன்பே உருவான என் ஸ்வரூபத்தில் ஐக்கியமாகிறான்.

பகவானது கல்யாண குணங்களைக் கேட்டதும் எப்படி பக்தி வரும்? என்று கேட்டாள் தேவஹூதி.

கபிலர் சிரித்துக் கொண்டே கூறினார்.

ஒருவன் நித்ய கர்மாக்களை பயன்‌ கருதாமல் செய்ய வேண்டும். யாருக்கும் எவ்விதத் துன்பமும் தராத செயல்களையே செய்ய வேண்டும். சாஸ்திரங்களில் சொல்லியவாறு பூஜை செய்ய வேண்டும்.

எனது அர்ச்சாவதாரத்தை தரிசித்தல், தொட்டு நீராட்டுதல், அர்ச்சனை செய்தல், ஸ்துதி செய்தல், வணங்குதல்,
உலகப்பற்றை விடுதல், எல்லா ஜீவராசிகளிடமும் என்னை உணர்தல், தைரியமாகவும்,வைராக்யத்தோடும் இருத்தல்,
பெரியோர்களிடம்‌ மரியாதை, ஏழை எளியோரிடம்‌ கருணை,
எனது திருநாமங்களை உரக்கச் சொல்லி மகிழ்தல், மனத்தை ஒடுக்குதல், எப்போதும் ஸத்சங்கத்தில் இருத்தல். ஆகிய குணங்களை ஒருவன்‌ கைக்கொள்வானாயின் எவ்வித முயற்சியும் இன்றி அவன் மனத்தூய்மை பெற்று எளிதாக பக்தியும் பெறுவான்.

சிலையில் மட்டும் என்னைக் கண்டு, மற்ற ஜீவராசிகளிடம் என்னை உணராமல் வெறுப்பைக் காட்டுபவன் என்னை அவமதிப்பவனாகிறான். இதனால் அவனுக்கு மன அமைதி ஏற்படாது.

பிற உயிர்களை மதிக்காது எவ்வளவு தான் என்னை விதிப்படி பூஜித்தாலும், நான் உகப்பதில்லை.

பூஜையின் நோக்கமே நான் எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக இருக்கிறேன் என்பதை உணர்வது தான்.

பிற உயிர்களிடம் வேற்றுமை பாராட்டுபவனுக்கு மரண பயம்‌ உண்டு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 147

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 147

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 9

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
பலஸ்²ருதி

து³ர்கா³ண் யதிதர த்‌யாஸு²
புருஷ: புருஷோத்தமம்‌|
ஸ்துவந்‌ நாம ஸஹஸ்ரேண
நித்யம் ‌ப⁴க்தி ஸமந்வித:||


புருஷ: - புருஷஃ
ஸமந்வித: - ஸமந்விதஹ

அந்த முதன்மையானவனின் ஆயிரம் பெயர்களை உரைப்பதன் மூலம், அவனது புகழை பக்தியுடன் பாடும் மனிதன், சிரமங்கள் அனைத்தையும் விரைவாகக் கடப்பதில் வெல்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்