About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 147

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 147

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 9

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
பலஸ்²ருதி

து³ர்கா³ண் யதிதர த்‌யாஸு²
புருஷ: புருஷோத்தமம்‌|
ஸ்துவந்‌ நாம ஸஹஸ்ரேண
நித்யம் ‌ப⁴க்தி ஸமந்வித:||

  • து³ர்கா³ணி - துன்பங்கள், கடினமான இடர்கள்
  • அதிதரதி - கடந்து செல்கிறான்
  • ஆஸு² - விரைவாக
  • புருஷஃ - மனிதன்
  • புருஷோத்தமம் - புருஷோத்தமனாகிய இறைவனை
  • ஸ்துவந் - துதித்துக் கொண்டு
  • நாம - திருநாமங்களால்
  • ஸஹஸ்ரேண - ஆயிரத்தால், ஆயிரம் திருநாமங்களால்
  • நித்யம் - தினமும், எப்போதும்
  • ப⁴க்தி - பக்தியுடன்
  • ஸமந்விதஹ - கூடியவன்

தினமும் பக்தியுடன் புருஷோத்தமனுடைய ஆயிரம் திருநாமங்களை உரைப்பதன் மூலம், அவனது புகழை பாடும் மனிதன், வாழ்க்கையில் ஏற்படும் கடினமான இடர்களை விரைவாகக் கடந்து செல்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment