About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

ஸ்ரீமத் பாகவத புராணம் - 91

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 36

ஸ்கந்தம் 03

ஆத்ம ஸாக்ஷாத்காரம்‌ அடைந்தவனுக்குத் தன் உடல் பற்றிய நினைவு இருப்பதில்லை. உட்கார்ந்திருக்கிறானா, நிற்கிறானா, நடக்கிறானா, திரும்பி வந்து விட்டானா என்பதும் தெரியாது.

உடல் இருந்த போதிலும், அதிலிருந்து வேறுபட்டே நிற்கிறான்.

இவ்வுடல் முன்வினைக்கு அடிமைப்பட்டது. கர்மப் பயனை அனுபவித்து முடியும் வரை பொறி புலன்களுடன் தான் இருக்கும்.‌

ஆனால், பக்தி யோக ஸமாதியை அடைந்தவன், இறை தத்வத்தின் உண்மையை அறிந்தவன் இவ்வுடலையோ, அதைச் சார்ந்த உறவுகளையோ தனதென்று நினைப்பதில்லை.

கனவில் கண்ட உடல் கனவு உள்ள வரை‌ உண்மையென்று தோன்றும். கனவு கலைந்ததும் அவ்வுடலின் நினைவு மறைந்து விடும். உடலிலிருந்து கொண்டே சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பரமன் உடலிலிருந்து வேறுபட்டவனே. தனித்தவன்.


ஒரு கட்டை தீப்பற்றி எரியும் போது தீப்பொறி, புகை எல்லாம் உண்டாகிறது. ஆனால் அவை தீ இல்லை. கட்டையையும் தீ என்பதில்லை. தீ கட்டையைப் பற்றிக் கொண்டிருக்கிறது.

அது போலவே உடலில் குடியிருக்கும் ஜீவன் உடலில் இருக்கும் பஞ்ச பூதங்கள், பொறி, புலன்கள், அந்தக்கரணம் (புத்தி, மனம், சித்தம்) ஆகியவற்றை இயக்குகிறது. ஆனால் சாட்சியாகவே இருக்கிறான். அவற்றோடு சம்பந்தப்படுவதில்லை.

வளியை வாகனமாய்க் கொண்ட ஜீவனும் குடியேறிய காயமிது - உந்திப்பற, ஒரு நாள் பறந்திடும் - உந்திப்பற

அண்டஜம் (முட்டையிலிருந்து தோன்றியவை)

ஸ்வேதஜம் (வியர்வையிலிருந்து தோன்றியவை)

உத்பிஜம் (விதையிலிருந்து தோன்றியவை)

ஜராயுஜம் (கருவில் தோன்றியவை)

ஆகிய அனைத்து ஜீவராசிகளும் உடலால் வேறுபட்டவை. ஆனால், பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றியவை தாம். அதனால் எல்லா ஜீவன்களிலும் தன்னையும், தன்னுள் எல்லா ஜீவன்களையும் பார்க்க வேண்டும்.

எரியும் தீ அனைத்தும் ஒன்றே. ஆனாலும் அது பற்றியிருக்கும் பொருளின் நீள அகலத்தைப் பொறுத்து மாறுபாட்டுடன் தெரிகிறது. அது போல் ஜீவன், தான் அண்டியிருக்கும் குணம், உருவம் ஆகிய வேறுபாடுகளால் பலவாறாகத் தெரிகிறது.

வெல்லம் வார்க்கப்படும் அச்சைப் பொறுத்து தெரிவது போல், வளையல், தோடு, மாலை என்று விதம் விதமாக அலங்கரித்துக் கொள்கிறோம். ஆனால், அவற்றைத் திருட வருபவனுக்கு ரூபம் தெரிவதில்லை. அனைத்தும் தங்கம் என்று ஒரே விஷயமாகத் தெரிகிறது.

ப்ரக்ருதி என்பது பகவானின் ஒரு அம்சம். உண்மையான பகவத் தத்வத்தை மறைக்கும் திரை. அதுவே மாயை. அதுவே அனைத்திற்கும் காரணமாகவும் அதிலிருந்து தோன்றும் காரியமாகவும் இருக்கிறது. இவ்விதமானதென்று அறியவொண்ணாதது.

அதை பக்தன் பகவானின் அருளாலேயே வெற்றி கொண்டு ப்ரும்ம ஸ்வரூபமாகவே ஆகி விடுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment