||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||038. திருவெள்ளக் குளம்||
||அண்ணன் கோயில் - திருநாங்கூர்||
||முப்பத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1308 - 1317 - நான்காம் பத்து - ஏழாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|
அந்தாதி
நான் அடிமை செய்ய, விடாய் நான் ஆனேன்*
எம்பெருமான் தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான்*
ஆனதற் பின், வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம்*
உள்ளம் குளம், தேனை ஒத்து|
- நான் அடிமை செய்ய – எம்பெருமானுக்குத் திருத்தொண்டு செய்ய வேண்டும் என்று
- நான் விடாய் ஆனேன் – நான் பேராவல் கொண்டவனானேன்
- எம்பெருமான் தான் – தானும்
- அடிமை கொள்ள – என்னை அடிமையாகக் கொள்ள வேண்டும் என்று
- தான் விடாய் ஆனான் – தான் பேராவல் கொண்டவனானான்
- ஆனதன் பின் – இங்ஙனம் இருவரும் விடாய் கொண்ட பின்பு
- வெள்ளக் குளத்தே – திருவெள்ளக் குளம் என்னும் திருப்பதியில்,
- இருவரும் – யாங்களிருவரும்
- உள்ளம் குளம் தேனை ஒத்து – மனத்தில் சர்க்கரைப் பாகையும் தேனையும் போன்று ஒன்று சேர்ந்து
- விடாய் தணிந்தோம் – எங்கள் வேட்கை தணியப் பெற்றோம்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment