||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 123 - தேவகியின் தோன்றல்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
செப்பு இள மென் முலைத்* தேவகி நங்கைக்குச்*
சொப்படத் தோன்றி* தொறுப் பாடியோம் வைத்த*
துப்பமும் பாலும்* தயிரும் விழுங்கிய*
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)
- செப்பு - ஸ்வர்ண கலசங்கள் போன்ற
- இள மெல் முலை - இளமையையும் மென்மையையுமுடைய முலைகளையுடைய
- தேவகி நங்கைக்கு - தேவகிப் பிராட்டிக்கு மகனாக
- சொப்பட தோன்றி - நன்றாகப் பிறந்து
- தொறுப்பாடியோம் - ஆய்ப்பாடியிலுள்ளவர்களாகிய நாங்கள் (தொறு - பசு)
- வைத்த - சேமித்து வைத்த
- துப்பமும் - நெய்யையும்
- பாலும் - பாலையும்
- தயிரும் - தயிரையும்
- விழுங்கிய - உட் கொண்ட
- அப்பன் - ஸ்வாமி (உபகாரகன்)
- வந்து அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
- அம்மனே - அம்மா!
- அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்
செம்பு போன்றதும், இளமையும் மிருதுவும் நிறைந்த ஸ்தனங்களை உடைய பெண்ணிற் சிறந்த தேவகிக்குப் பிறந்து, ஆயர்பாடிகளான எங்களுடைய நெய்யையும், பாலையும், தயிரையும் வயிறாரப் புசித்த ஸ்வாமி ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment